ஓநாயும் மனித வாழ்க்கையும்
அடியார்
குருதேவா, எல்லா மிருகங்களுக்கும் தெய்வீகச் சிறப்புகள் உண்டு என்று பலமுறை அருளியுள்ளீர்கள். ஓநாய்க்கு என்ன தெய்வீக இயல்புகள் உண்டு என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
குருதேவா, எல்லா மிருகங்களுக்கும் தெய்வீகச் சிறப்புகள் உண்டு என்று பலமுறை அருளியுள்ளீர்கள். ஓநாய்க்கு என்ன தெய்வீக இயல்புகள் உண்டு என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
சற்குரு
எல்லாவற்றையும் அடியேனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதை விட நீங்களே முயன்று ஆத்ம விசாரம் செய்து பார்த்த பின்னர் ஒன்றுமே உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் அதன் பிறகு ஆசானை நாடுவதே முறை. இருந்தாலும் நீங்கள் கேட்டதால் இப்போது உங்களுக்குச் சொல்லக் கடமைபட்டுள்ளேன்.
எல்லாவற்றையும் அடியேனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதை விட நீங்களே முயன்று ஆத்ம விசாரம் செய்து பார்த்த பின்னர் ஒன்றுமே உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் அதன் பிறகு ஆசானை நாடுவதே முறை. இருந்தாலும் நீங்கள் கேட்டதால் இப்போது உங்களுக்குச் சொல்லக் கடமைபட்டுள்ளேன்.
உலகில் உள்ள எல்லா மிருகங்களுக்கும், ஏன் ஒவ்வொரு செடி, கொடி, தாவரம், புல், பூண்டிற்கும் கூட சிறப்பான இறைத் தன்மை உண்டு. நாம்தான் அந்த இறை இயல்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்பதில்லை.
பலவிதமான கோர்ட் வழக்குகளால் துன்புறுவோர் திருவாசி ஸ்ரீமாற்றுவாதீஸ்வர சுவாமியை வெள்ளை நிற முழுத் தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்கி வந்தால் சுமுகமான நிலை ஏற்படும்.
ஸ்ரீவித்யா லோகத்தில் உறையும் 43 கோடி தேவிகளில் ஒரு தேவியே கோடரி மாதேவி என்ற ஓர் அற்புதமான தேவி ஆவாள். எந்நேரமும் பஞ்ச கன்யா தோத்திரத்தை ஓதி அதை பெண் குலத்திற்காக அர்ப்பணித்து பெண்களின் தீர்க்க சுமங்கலித்துவம், மாங்கல்யத்துவம், மங்களத்துவம் இவற்றிற்கு வழி வகுப்பவள். கணவன் மனைவி உறவு, கணவன் வீட்டாரிடம் நன்னடத்தை, சமுதாயத்தில் பாதுகாப்பு, நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்க்கை இது போன்ற பல வரப் பிரசாதங்களை பெண் குலத்திற்காக அள்ளி வழங்குபவளே கோடரி மாதேவி. இந்தத் தேவியின் வாகனம் ஓநாய். ஓநாயை முறையாக வழிபட்டால் கோடரி மாதேவியின் அருளைப் பெற்று பெண் குலம் பாதுகாப்புடன் வாழ முடியும்.
சீதா பிராட்டி அசோக வனத்தில் சிறைப்பட்டிருந்தபோது அவளுடைய காவலுக்காக இராவணன் வைத்திருந்த அரக்கிகள் எப்போதும் கடுமையான வார்த்தைகளையும், வசைச் சொற்களையும் சீதா தேவியிடம் சொல்லி வந்தார்கள். இதனால் மிகவும் மனம் வருந்திய சீதா தேவி அரக்கிகள் நல்வார்த்தை சொல்வதற்காக கோடரி தேவியின் வாகனமான ஓநாயை வழிபட்டு வந்தாள். இதுவே நாளடைவில் அரக்கிகளுக்கு நல்ல மனமாற்றத்தைக் கொடுத்து, பல அரக்கிகள் சீதா தேவியுடன் நட்புடன் பழக வழிவகுத்தது.
தற்காலத்தில் கடுமையான வார்த்தைகள் பேசும் முதலாளிகள், மேலதிகாரிகள், மாமனார், மாமியார், நண்பர்கள், உறவினர்களிடையே வாழ வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள், குறிப்பாக பெண்கள் கோடரி மாதேவியின் வாகன மூர்த்தியான ஓநாயை வழிபட்டு வந்தால் கடுஞ் சொல், தகாத வார்த்தைகள், வசை பாடுவோர் மனம் திருந்தி சுமுகமாகப் பழகும் நிலை உருவாகும்.
அட்லாண்டிக் நாகரீகத்தில் ஸ்ரீஆயுர்தேவி வழிபாடு மேலோங்கி விளங்கிய காலத்தில் எகிப்திய நாகரீகத்தில் ஓநாய் வழிபாடு சிறப்புற்று விளங்கியது. காலப் போக்கில் எகிப்திய நாகரீகத்தில் ஓநாய் வழிபாட்டுப் பலன்கள் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டøமையால் அதன் வழிபாடும் குன்றியது.
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எவ்வாறு தங்களுக்குள் பரஸ்பர அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதை கோடரி தேவி வழிபாடு உணர்த்துகிறது. உதாரணமாக சிரிப்பு என்ற குணத்தை எடுத்துக் கொள்வோம். தாவரம், மிருகம் என எந்தக் குலத்திற்கும் இல்லாத ஓர் அற்புத பரிசே இறைவன் மனித குலத்திற்கு அளித்துள்ள சிரிப்பு என்ற வரப் பிரசாதமாகும். இதை மனித குலம் சரியாகப் பயன்படுத்தி வந்தாலே போதும். வேறு எந்த உபாயமும் இல்லாமலேயே குடும்பத்திலும் சமுதாயத்திலும் அமைதி பெருக்கெடுக்கும்.
காலையில் எழுந்தவுடன் கணவன் மனைவியைப் பார்த்து தன்னுடைய ஆறு பற்கள் தெரியும்படி சிரிக்க வேண்டும். மனைவி தன்னுடைய பற்களைக் காட்டாமல் கணவனைப் பார்த்து புன்முறுவல் பூக்க வேண்டும். தற்போது மோனாலிசா சிரிப்பு என்று சொன்னால் நீங்கள் உடனே புரிந்து கொள்வீர்கள். ஓநாய் தான் சந்தோஷமாக இருக்கும்போது ஆறு பற்களைக் காட்டும். எனவே, கணவன் மனைவியைப் பார்த்து தன்னுடைய ஆறு பற்கள் தெரியுமாறு சிரிக்கும்போது கோடரி மாதேவியின் அனுகிரகத்தால் கணவன் மனைவியரின் அன்புப் பரிமாற்றம் அங்கே பரிணமிக்கின்றது. குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் இந்தக் காலைச் சிரிப்பை இனி நீங்கள் பரிமாறிக் கொண்டு அதன் பயனை உணர்ந்து பாருங்கள். கலியுக பெண்கள் கணவன்மார்களின் ஆசீர்வாதத்தையும், அன்பையும் பெறுவதற்காக இன்றும் கோடரி மாதேவி தன் கணவனை சிரித்த முகத்துடன் எப்போதும் நோக்குகிறாள் என்பதே சித்தர்கள் உணர்த்தும் ரகசியம்
இரவில் உறங்குவதற்கு முன் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்க்கும் வண்ணம் எதிர் எதிரே படுக்கையிலோ அல்லாது தர்பை, மாம்பலகை போன்ற ஆசனங்களிலோ அமர்ந்து கொள்ள வேண்டும். எவ்வித உரையாடலும் இன்றி அமைதியாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரமேனும் இந்த இல்லற பூஜையை நிகழ்த்தி வந்தால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெருக ஏதுவாகும். குடும்ப ஒற்றுமையை பேணிக் காக்கும் அற்புத வழிபாடு.
No comments:
Post a Comment