மாமுனி
இவ்வுலகில் அவதரித்த மகாபுருஷர்களுள் மஹா முனிவர் "அகஸ்தியர்" சிறந்தவர் ஆவார். சகல வித்தைகளையும் அறிந்த அவர் இவ்வுலக மக்களுக்கு அளவற்ற நன்மைகளை அளித்து கொண்டிருக்கிறார்.
சாதாரண மனிதர் ஒருவர் ஏதோ ஒரு காவல் துறை ஆய்வாளரையோ / எழுத்தரையோ தெரிந்து வைத்திருந்து, ஒரு வேளை அவருடன் வேறொருவர் ஏதேனும் சிறு வாக்குவாதம் செய்து விட்டாலே போதும் , உடனே முதலாமவர் வெகுண்டு "நான் யார் தெரியுமா? என் background தெரியுமா ? எனக்கு அந்த காவலரை தெரியும் / இவரை தெரியும் / அவரை தெரியும்" என்று பாடாய் படுத்தி விடுவார்- தவறு தன் பக்கமே இருந்தாலும்.
இவ்வுலகில் பிறந்து விட்டாலே அந்த அவதார புருஷனே ஆனாலும், உலகின் சட்ட திட்டங்களை மதித்தே ஆகவேண்டும். எவருமே இதில் தப்ப முடியாது. அதிஜாக்கிரதையாக இருந்தாலும் சிறு தவறு ஏற்பட்டு விட்டால் எப்படி நம்மை பாதிக்கும் , அதனால் நாம் கொடுக்க வேண்டிய "இழப்பீடு"(Compensation) என்னவாக இருக்கும் என்று யாரறிவார்?
இங்கே மாமுனி அகஸ்தியரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பாருங்கள் .....
************
பிரம்மரிஷி வசிஷ்டரும் , மகரிஷி அகஸ்தியரும் வருணபகவான் மூலமாக விழுந்த விதையிலிருந்துதோன்றினார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன .சாஸ்திரங்கள், வேதங்கள் , யோகா ஆகியவற்றில் திறமைசாலியான அகஸ்தியர் தர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்று சொல்லலாம் . அகஸ்தியர் சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். சிவபெருமானை நினைத்து தவமிருந்தார் . அகஸ்தியருடைய தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவர் முன் தோன்றி லிங்கமாக உறைந்தார் . இன்று மக்கள் அந்த சிவலிங்கத்தை அகஸ்தியேஸ்வர் என்று அழைக்கிறார்கள் .
மகரிஷி அகஸ்தியர் விஷ்வாமித்திரருக்கு சகல வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். விதர்ப்ப நாட்டு இளவரசி லோபமுத்ராவை மணந்து கொண்டார். அழகையும் அறிவையும் கொண்ட லோபமுத்ரா அகஸ்தியர் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அகஸ்தியர் லோபமுத்ரா தம்பதியர் குஞ்ச மலைத்தொடரை விட்டு தென் மாநிலத்தை நோக்கிப் பயணத்தை தொடர்ந்தார்கள் . அதன்பிறகு தெற்கு திசை ஆகாயத்தில் நட்சத்திரமாகத் தோன்றினார்கள் என்று புராணங்கள் சொல்லுகின்றன . அகஸ்தியரின் சிறப்பைப் பற்றி அகஸ்திய புராணம் சொல்கின்றது.
*************
உலகில் ஏற்படும் விபத்துக்கள் யாவுமே ஒரு கண நேர அசிரத்தையால் விளைபவையே என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, நாம் எப்போதுமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வாத்யார் அவர்கள் அடிக்கடி நினைவுறுத்துவார். ஒரு சிறிது அஜாக்கிரதையாக இருந்தால் கூட அது மிகப் பெரிய வேதனையை, ஆபத்தை அளித்து விடும் என்று அடிக்கடி அடியார்களை எச்சரித்துக் கொண்டே இருப்பார். சாதாரண மனிதர்களை விட இறை நம்பிக்கை கொண்டுள்ள சத்சங்க அடியார்களுக்கு சமுதாயத்திற்காக சேவை ஆற்ற வேண்டிய மிகப் பொறுப்பு இருப்பதால் அவர்கள் எல்லா விஷயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.
நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மற்ற மகான்களும், மகரிஷிகளும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நமக்குப் பாடமாகப் புகட்டியுள்ளார்கள். அவற்றில் ஒன்றே ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் அமுத நீர் பாய்ச்சிய வரலாறாகும்.
சென்னை அருகே உள்ள திருநீர் மலையில் மருத்துவ முகாம் நடந்து கொண்டிருந்தபோது இடைவேளை உணவருந்துவதற்கு முன் வாத்யார் சிறுநீர் கழிக்க வேண்டி வெளியே சில அடியார்களுடன் சென்றார். அவர் பெரும்பாலும் சாதாரண மனிதர்களைப் போல் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிப்பது கிடையாது. வெகுநேரம் தேடி அலைந்து யாரும் எதிர்பார்க்காத ஓரிடத்தில் சிறுநீர் கழிப்பது வழக்கம்.
இதற்கான ஆன்மீக காரணங்கள் ஆயிரம் இருக்கும் என்பதை உடனிருந்த அடியார்கள் உணர்ந்திருந்தாலும் யாரும் இதைப் பற்றி வாத்யாரிடம் கேட்டது கிடையாது. இதற்கான தெய்வீக காரணத்தை அப்போது வாத்யாரே வெளியிட்டார். நாங்கள் எப்போதும் எந்த விஷயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எங்களுக்கு இது சின்ன விஷயம், அது பெரிய விஷயம் என்ற பாகுபாடு கிடையாது.எல்லாம் அருணாசல ஈசனின் திருஉள்ளப்படி நடப்பதால் நாங்கள் எல்லா உயிரினங்களையும், எல்லா விஷயத்தையும் ஒன்றாகவே பாவிக்கிறோம். இதில் சிறிது தவறு ஏற்பட்டால் கூட அதனால் பெரும் குழப்பங்கள் ஏற்படும். இது சம்பந்தமாக ஸ்ரீஅகஸ்திய மகாபிரபுவே தன்னுடைய அனுபவத்தால் எல்லோருக்கும் ஒரு நல்ல படிப்பினையைப் புகட்டியுள்ளார்.
சிலர் சிறு வயது முதல் வறுமையிலேயே உழன்று கொண்டிருப்பது உண்டு. பின்னாட்களில் போதுமான பொருள் வசதி கிடைத்தாலும் நேரத்திற்கு உணவோ, உறக்கமோ கிடைக்காமல் நல்ல உடல் சுகத்தை அனுபவிக்காமலே அல்லல்பட நேரிடும். இவ்வாறு தொடர்ந்து துன்பத்தையே அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் நன்னிலை அடைய ஆன்மீக வழிகாட்டுதல் உண்டு. இவர்கள் அனைத்து கிரகங்களும் சூரியனை தரிசித்து நிற்கும் கோலத்தில் உள்ள சூரிய சக்தித் தலங்களில் (லால்குடி ஸ்ரீசப்ரிஷீஸ்வரர் திருக்கோயில், லால்குடி அருகே நகர் திருத்தலம்போன்றவை), சூரியன் வானில் ஆரஞ்சு வண்ணத்தில் பிரகாசிக்கும் நேரத்தில் ஆரஞ்சு பழ ரசத்தை சர்க்கரை சேர்க்காமல் தானம் செய்து வந்தால் வாழ்வில் சுகம் நாடி, தேடி வரும்.
ஒரு முறை ஸ்ரீஅகஸ்தியர் வயல்கள் சூழ்ந்த ஒரு சிற்றூர் வழியே சென்று கொண்டிருந்தார். பஞ்ச பூதங்களும் அதன் தேவதைகளும், அந்த தேவதைகளின் அதிதேவதைகளுமே ஸ்ரீஅகஸ்தியரின் அருளாணைக்கு உட்பட்டவையே. ஸ்ரீஅகஸ்தியர் மேல் தென்றல் வீச வேண்டும் என்றால் கூட அது ஸ்ரீஅகஸ்தியரின் உத்தரவு இருந்தால்தான் நிகழும். மழை அவர் மேல் பொழிய நினைத்தால் ஸ்ரீஅகஸ்தியர் எத்தனை மழைத் துளிகள் தன் திருமேனியைத் தழுவ வேண்டும் என்று நினைக்கிறாரோ அத்தனை மழைத் துளிகள் மட்டுமே அவர் திருமேனி மேல் துõவ இந்திரன் ஆணை இடுவார். இத்தகைய மகா வல்லமை பெற்ற மகரிஷி அந்த ஊர் வழியே சென்று கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிக்க நினைத்தார்.
ஸ்ரீஅகஸ்தியர் போன்ற மகரிஷிகள் மலம், மூத்திராதிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருப்பவர்கள். இருந்தாலும் அவர்கள் பூலோகத்தில் சஞ்சரிக்கும்போது பூலோக ஜீவன்களில் குறிப்பிட்டவர்களின் கர்ம வினைகளை ஏற்று வருவதால் அத்தகையோருக்காக மலம், மூத்திராதிகளைக் கழிக்கும் நிலை ஏற்படுகிறது என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உண்பதும், உறங்குவதும், நடப்பதும், நிற்பதும் மக்களின் நன்மைக்காகவே என்பதைப் புரிந்து கொண்டால்தான் அவர்கள் செய்கைகளின் தன்மை ஓரளவிற்காவது நம்முடைய குருவி மூளைக்கு எட்டும்.
வழக்கம்போல் மிகவும் ஜாக்கிரதையாக ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து இறைவனை வேண்டி சிறுநீர் கழித்து விட்டு அவ்வூரை விட்டுச் சென்று விட்டார் ஸ்ரீஅகஸ்தியர். சில மாதங்கள் கழித்து ஒரு நாள் தேவ தூதன் ஒருவன் ஸ்ரீஅகஸ்தியர் முன் தோன்றி அவருக்கு முறையாக வணக்கம் தெரிவித்து விட்டு, “சுவாமி, அடியேன் சித்ரகுப்த லோகத்திலிருந்து வருகிறேன். ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குத் தெரிவிக்க எனக்கு அனுமதி கொடுங்கள்”, என்று வேண்டி நின்றான். ஸ்ரீஅகஸ்தியர் அனுமதி வழங்கவே வந்தவன் தொடர்ந்தான், “சுவாமி, தங்களுக்குத் தெரியாத விஷயம் இப்பூவுலகிலும், ஈரேழுலகிலும் இல்லை. இருந்தாலும் இந்த விஷயத்தை எங்கள் மகாராஜா, சித்ரகுப்த மகாபிரபுவின் உத்தரவின்படி தங்களுக்குச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்,” என்று மிகவும் பணிவுடன் பேசி மேற்கொண்டு பேசுவதற்கு தயக்கம் காட்டினான் அந்த தூதுவன். அந்த அளவிற்கு ஸ்ரீஅகஸ்தியர் மேல் அனைத்து லோக வாசிகளும் மரியாதை கொண்டிருந்தனர்.
மரணம் என்பதற்கு சித்தர்கள் அளிக்கும் எளிய விளக்கம் இதோ.
தினமும் கண், காது, மூக்கு என ஒன்பது ஓட்டைகள் வழியாக காற்று உள்ளே வருகிறது, வெளியே போகிறது. ஒரு நாள் வெளியே சென்ற காற்று உள்ளே வருவதில்லை.
தினமும் கண், காது, மூக்கு என ஒன்பது ஓட்டைகள் வழியாக காற்று உள்ளே வருகிறது, வெளியே போகிறது. ஒரு நாள் வெளியே சென்ற காற்று உள்ளே வருவதில்லை.
ஸ்ரீஅகஸ்தியரும், “தூதுவனே சொல்ல வந்த விஷயத்தைத் தைரியமாக எடுத்துச் சொல்,” என்று அவனுக்கு ஆறுதலாகச் சொல்லவே அவன் தொடர்ந்து, “சுவாமி, தாங்கள் சில மாதங்களுக்கு முன் ஒரு கிராமத்தில் அமுத நீர் பாய்ச்சினீர்கள் அல்லவா? (மகான்கள், யோகிகள் சிறுநீர் கழிப்பதை அமுத நீர் என்று தேவலோகத்தில் குறிப்பிடுவது வழக்கம்.) அந்த அமுத நீரில் ஒரு துளி தவறிப் போய் அங்குள்ள ஒரு சிறு நீரோடை வழியாகச் சென்று அருகில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து விட்டது. அந்த கிணற்று நீரை இறைத்து ஒரு ஏழை விவசாயி தன்னுடைய நிலத்தில் பாய்ச்சிவிட்டான். பேராற்றல் மிக்க தங்களுடைய அமுத நீர் பிரவாகத்தால் பத்து ஆண்டுகளில் விளையக் கூடிய நெல்மணிகள் ஒரே பருவத்தில் அந்த ஏழை விவசாயிக்குக் கிடைத்து விட்டன. இப்போது தகுதி இல்லாமல் அந்த ஏழை விவசாயிக்குக் கிடைத்த அதிகப் படியான நெற்மணிகளை எப்படி கணக்கில் வைப்பது என்று தெரியாமல் எங்கள் சித்ரகுப்த ராஜா குழப்பம் அடைந்துள்ளார். இந்தக் குழப்பத்திற்கு ஏற்ற தக்க தீர்வை நீங்கள் ஒருவர்தான் தரவல்லவர் என்பதால் தங்களை சரணடைந்துள்ளோம்,” என்று அந்தத் துõதுவன் பணிவுடன் கூறி விட்டு ஸ்ரீஅகஸ்தியரின் பதிலை எதிர்பார்த்து நின்றான்.
ஸ்ரீஅகஸ்தியர் ஒரு கணம் மலைத்து விட்டார். எவ்வளவோ கவனமுடன் இருந்தாலும் நம்மையும் அறியாமல் ஒரு சிறு தவறு மிகப் பெரிய விபரீதத்தைத் தோற்றுவித்து விட்டதே என்று நினைத்து மனம் வருந்தினார். பின் சற்று யோசித்து விட்டு அந்தத் துõதுவனிடம், “நீ உங்கள் சித்ரகுப்த ராஜாவிடம் சென்று அந்த ஏழை விவசாயினுடைய கர்மத்தை அடியேன் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிடு,” என்று சொல்லவே அந்த துõதுவன் அதைக் கேட்டு மனக் குழப்பம் நீங்கப் பெற்றவனாய் ஸ்ரீஅகஸ்தியருக்கு நன்றியைத் தெரிவித்து விட்டு உடனே அங்கிருந்து சித்ரகுப்த லோகத்திற்குத் திரும்பி விட்டான்.
இப்போது பத்து ஆண்டுகளில் விளையக் கூடிய நெல்மணிகள் ஒரே ஆண்டில் விளைந்து விட்டதால் அந்த ஒன்பது ஆண்டுகளின் அதிகப்படி மகசூலை அந்த ஏழை விவசாயிடமிருந்து திரும்பப் பெறுவது முறையாகாது அல்லவா? எனவே அந்த அதிகப் படியான ஒன்பது வருட உழைப்பால் விளையக் கூடிய கர்மாவை ஸ்ரீஅகஸ்தியரே ஏற்றுக் கொண்டு ஸ்ரீலோபாமாதாவுடன் அந்த வயலில் ஒன்பது வருடங்கள் ஒரு சாதாரண பூலோக மனிதனைப் போல கலப்பை கொண்டு நிலம் உழுது, நீர் பாய்ச்சி, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, அறுவடை செய்து அயராது பாடுபட்டார். ஒன்பது வருடங்கள் அந்த வயலில் நெல் பயிரிட்டு அறுவடை செய்து அந்த நெல்லை சித்ரகுப்தரிடம் அளித்து விட்டுத்தான் தன்னுடைய இருப்பிடம் திரும்பினார் ஸ்ரீஅகஸ்தியர்.
நமக்குப் பாடம் புகட்டுவதற்காக எவ்வளவு சிரமத்தையும், துன்பத்தையும் மகான்கள் ஏற்று அனுபவிக்கிறார்கள் பார்த்தீர்களா? இதை உணர்ந்தாவது நாம் நம்முடைய காரியங்களில், அதுவும் இறை நம்பிக்கையை வளர்க்கும் சத்சங்கத்தில் உள்ளவர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பது ஸ்ரீஅகஸ்தியர் வரலாறு நமக்குப் புகட்டும் நீதியாகும்.
************
****பகுதி****
நன்றி : http://www.kulaluravuthiagi.com/vithai.htm
No comments:
Post a Comment