photo

photo
Venkatesh.A.S

Thursday 15 February 2024

Frequencies of Human Life

Japanese surprising research...
1. *Acidity* not only caused by diet errors, but more dominated because of *stress*.
2. *Hypertension* not only caused by too much consumption of salty foods, but mainly because of errors in *managing emotions*.
3. *Cholesterol* is not only caused by fatty foods, but the *excessive laziness* or sedentary lifestyle is more responsible.
4. *Asthma* not only because of the disruption of oxygen supply to lungs, but often *sad feelings* make lungs unstable.
5. *Diabetes* not only because of too much consumption of glucose, but selfish & *stubborn attitude* disrupts the function of the pancreas.
6. *Kidney stones* : .Not only Calcium Oxalate deposits, but pent up *emotions and hatred*
7. *Spondylitis* : not only L4L5 or cervical disorder; but over burdened or *too much worries* about future
If we want to be healthy then first 
1) *Fix your Mind*
2) Do regular *Exercises*, 
2) *Move* around, 
3) Do *Meditation*
4) *Laugh* and make others laugh too.
5) *Make Friends*
These activities will help you to strengthen your soul, mind and body...
*Be Healthy And Enjoy Your Life.*
*VIBRATE HIGHER*
The Spiritually inclined will understand:
The covid virus has a vibration of 5.5hz and dies above 25.5hz.
For humans with a higher vibration, infection is a minor irritant that is soon eliminated!
The reasons for having low vibration could be:
Fear, Phobia, Suspicion
Anxiety, Stress, Tension.
Jealousy, Anger, Rage
Hate, Greed
Attachment or Pain
*And so......we have to understand to vibrate higher, so that the lower frequency does not weaken our immune system.*
The frequency of the earth today is 27.4hz. but there are places that vibrate very low like:
Hospitals
Assistance Centers.
Jails
Underground etc.
It is where the vibration drops to 20hz, or less.
For humans with low vibration, the virus becomes dangerous.
Pain 0.1 to 2hz.
Fear 0.2 to 2.2hz.
Irritation 0.9 to 6.8hz.
Noise 0.6 to 2.2hz.
Pride 0.8 hz.
Superiority 1.9 hz.
A higher vibration on the other hand is the outcome of the following behaviour :-
Generosity 95hz
Gratitude 150 hz
Compassion 150 hz or more.
The frequency of Love and compassion for all living beings is 150 Hz and more.
Unconditional and universal love from 205hz..
So...Come on ...
*Vibrate Higher!!!*
What helps us vibrate high?
Loving, Smiling, Blessing, Thanking, Playing, Painting, Singing, Dancing, Yoga, Tai Chi, Meditating,  Walking in the Sun, Exercising, Enjoying nature, etc.
Foods that the Earth gives us: seeds-grains-cereals-legumes-fruits and vegetables-
Drinking water: help us vibrate higher ..... !!!
*The vibration of prayer alone goes from 120 to 350hz*
So sing, laugh, love, meditate, play, give thanks and live ! 
_*Let's vibrate high ...!!!*_ 
This information is  compiled & edited by *Naturotherapist  Dr. Vinod Kothari, (MUMBAI)* .

Monday 20 November 2023

Pitifulness of the country

Today I got the very good article by Whatsapp from one of our classmate. 
🎯 OPINION - Author Unknown

A Very thought provoking message.

I never understood one thing that what do these film actors or actresses do that they get 50 crores or 100 crores for each film?

In a country where top scientists, doctors, engineers, professors, officers, etc. get 10 lakh to 20 lakh rupees per year, in the same country a film actor earns 10 crores to 100 crores of rupees per year!

What does he do after all?

What is their contribution in the development of the country?  After all, what do they do to earn so much in just one year that it might take 100 years for the top scientists of the country!

Today, the three areas which have fascinated the new generation of the country are cinema, cricket and politics.

The earning and prestige of the people belonging to these three fields is beyond all limits.

These three areas are the ideals of modern youth, while their credibility is currently under question.

So it is useless for the country and the society.

Drugs and prostitution in Bollywood, match fixing in cricket, hooliganism and corruption in politics.  Money is the main reason behind all this and it is we who bring this money to them.

We are doing our own harm by burning our own money.  This is the height of stupidity.

Till 70-80 years back, famous actors used to get normal salary.

30-40 years ago, the earnings of cricketers were also not special.

30-40 years ago, there was not so much loot in politics.

Slowly they started robbing us and we went on to let them  rob ourselves happily.
 
By getting caught in the clutches of these mafia, we are destroying the future of our children and our country.
 
50 years back, movies were not made so vulgar and sloppy.  Cricketers and politicians were not so arrogant.  Today they have  become our God (?).  Now there is a need to lift them from the head and slap them so that they can know their status.

Once , when the then Vietnamese President, Ho-Chi-Minh, came to India for a meeting with Indian ministers, he asked, "What do you guys do?"

These people said - "We do politics."

He could not understand this answer, so he asked again - "I mean, what is your profession?"

These people said - "Politics is our profession."

Ho-Chi Minh got a little annoyed and said - "Maybe you people do not understand my meaning. I do politics too, but by profession , I am a farmer and I do farming. Farming makes my livelihood. In the morning and evening I go to my fields.  I work. I do my responsibility for the country as President during the day."

When Ho-Chi-Minh asked the same thing again, a member of the delegation shrugged and said - "Politics is our profession."

It is clear that Indian leaders had no answer to this.  Later, a survey revealed that the livelihood of more than 6 lakh people in India was supported by politics.  Today this number has reached in crores.

Just  few years back, when Europe was being devastated by Corona, the doctors were not getting even a little rest for several months in a row, then a Portuguese doctor said angrily - "Go to Ronaldo, to whom you would give millions of dollars to watch. I only get a few thousand dollars."

I firmly believe that in a country where the idols of young students are not scientists, researchers, educationists, but actors, politicians and sportsmen, they may have their own economic progress, but the country will never progress.  

Socially, intellectually, culturally, strategically the country will always remain backward.  The unity and integrity of such a country will always be in danger.

The country in which the dominance of unnecessary and irrelevant sector continues to grow, that country will be weakening day by day.  The number of corrupt and anti-nationals will continue to increase in the country.  Honest people will be marginalized and forced to lead a difficult life.

We need to create an environment to groom and promote talented, honest, conscientious, social workers, belligerent & patriotic citizens.

Tuesday 6 October 2015

ஜோதிட நண்பன்: பன்னிரண்டாம் வீட்டு அதிபதி

ஜோதிட நண்பன்: பன்னிரண்டாம் வீட்டு அதிபதி: பன்னிரண்டாம் வீட்டு அதிபதி இரண்டில் அமர்ந்தால்  அந்த ஜாதகருக்கு வரவு எட்டணா செலவு பத்தணா குறிப்புதவி ஜோதிடஸ்ரீ ஏ.பி.வேணுகோபால்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: காரஹோ பாவ நாஸ்தியும் காதலைத் தூண்டும் ராகு,கேதுக்...

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: காரஹோ பாவ நாஸ்தியும் காதலைத் தூண்டும் ராகு,கேதுக்...: ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடர்களுக்கு என்றென்றும் விவாதப் பொருளாகவும், விளங்காப் பொருளாகவும் இருப்பது நிழல் கிரகங்களான ராகு கேதுக்கள்தான். ...

Monday 22 September 2014

Know the Unknown ! அறியாமையை அறிந்திடுங்கள் !


ஒரு நொடி, ஒரு நிமிடம், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம், ஒரு ஜென்மம் ! 



Ignorance doesn't kill you, but it makes you sweat a lot.







இந்தப்பகுதியில் வரும் கட்டுரைகளை எனக்கு அறிமுகமான / அறிமுகமில்லாத எத்தனையோ பேர் படித்திருப்பார்கள் / படித்துக்கொண்டிருப்பார்கள் / படிக்கப்போக இருக்கிறார்கள். 

இந்நிலையில் ஒரு நாள் (6 மாதத்திற்கு முன்னர்) என் மாணவன் ராஜேஷ் என்னிடம் வந்து “சார், இது போன்று என்னென்னமோ எழுதுகிறீர்களே, ஒரு வேளை இவைகளைப்படித்து விட்டு யாரவது தூக்குபோட்டுக் கொண்டு செத்து விட்டால் என்ன ஆவது ? என்றான். அப்பொழுது நான் அவனது அறியாமையை நினைத்து சிரித்தேன். நான் சொன்னேன் “உலகில் சாவதற்கு எத்தனையோ வழிகள் / காரணங்கள் இருக்கும் போது இதனைப்படித்து விட்டா சாவார்கள்? போடா வேலையைப்பாரடா என்றேன். அப்பொழுது இன்னொரு மாணவன் சரவணன் எழுந்து தன் மொபைல் போனில் இந்தப்பகுதியை திறந்து மற்ற சக மாணவர்களிடம்  “இங்க பாருங்கடா சார் எழுதின ஒரு கட்டுரை “பார்த்தாலே பரவசம் இன்னாதான் பரவசம்னு ஒண்ணும் தெரியலியே என்றான். ஒரு நாள் உங்களுக்கே எல்லாமே தெரியும் பாருங்கடா என்றேன். அது தான் நேரம் என்பது.

பொதுவாக எத்தனையோ துன்பங்கள் ஒருவருக்கு ஏற்பட்டாலும் உயிரை போக்கிக் கொள்வதென்பது மிகவும் வருந்தத் தக்கது. நடுநிலையில் இருந்து பார்த்தால் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஏனெனில் கர்மத்தால் ஏற்படும் இந்த வாழ்க்கைத் துன்பங்களை முழுமையாக ஏற்றுக் கழித்தால் தான் இவைகள் முற்றுப்பெறும். இல்லையெனில் தற்காலிக விடுதலை ஏற்பட்டு பின்னர் உயிரை போக்கிக் கொண்ட செயலுக்காகவும் சேர்த்து இன்னும் அதிகமான துன்பம் அனுபவிக்க நேரிடும். இது பேயிடம் இருந்து தப்பித்து பிசாசிடம் மாட்டிக்கொண்ட கதையாகி விடும்.

இவைகள் மனிதர்களது அறியாமையால் ஏற்படுவதாகும். ஏனெனில் அறியாமை எதையும் செய்யும். யாரை வேண்டுமானாலும் கொல்லும். இதற்க்கு மானம், சூடு, சொரணை, அசிங்கம், அவமானம், வெட்கம் என்று எதுவுமே இருக்காது. அறியாமை எவ்வளவுக்கு எவ்வளவு உள்ளதோ மேலே சொல்லப்பட்ட உணர்ச்சிகளும் இருக்கும்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு சாகும் தருவாயிலும் தன் பிதாவிடம் “இவர்கள் செய்வது இன்னதென்று அறியார்களே, அதனால் இவர்களை மன்னியும் என்று தனக்கு துன்பம் இழைத்தவர் குறித்து மன்றாடினாராம்.

உலகில் அறியாமையைப்போன்ற ஒரு பரிதாபம் இல்லை.
அறியாதவர்,
அறிந்தவர்,
உணர்ந்தவர்,
தெளிந்தவர்
போன்ற பிரிவுகளில் மனிதர்களைக் காணலாம்.
   
அதாவது நெருப்பு சுடும் என்று ஒரு குழந்தைக்குத் தெரியாது (ஒரு வேளை அதற்க்கு தீயினால் பாதிப்பு ஏற்பட்டிருக்காதவரை). ஆனால் அதுவே சற்று வளர்ந்த பின்னர் பள்ளிக்குப் போன பின்னர் அல்லது வேறொருவர் மூலமாகவோ அறிந்து விடும்.
ஆனால் அக்குழந்தைக்கு அறியும் வயது வந்து விட்ட பின்னர் ஏதோ ஒரு சூழ்நிலையில் அதற்க்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டால் அது அப்பொழுது உணர்ந்த தாகிவிடும். விதி வசத்தால் அக்குழந்தைக்கு  மீண்டும் மீண்டும் தீக்காயம் ஏற்பட்டால் அது அப்பொழுது தெளிந்ததாகி விடும்.

மனிதர்களது வாழ்க்கை முறை “ஒரு நொடி, ஒரு நிமிடம், ஒரு மணி, ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம், ஒரு ஜென்மம்  என்கிற விதத்தில் எல்லாமே மாறிப்போகும்.

இதைபடிக்கும் போது புரிவது போல் இருந்தாலும் நிறையப்  பேருக்கு முழுமையாகப் புரியாது.
அதாவது எல்லாமே அறிந்தால் உணர்தவர்களாக இருக்க வேண்டும். பின்னர் தெளிந்தவர்களாக வேண்டும். இது தான் வாழ்கையில் உண்மையான முன்னேற்றம் என்பது. உயிரின் வளர்ச்சி என்பது.

ஒரு நொடியின் அருமை, அந்த ஒரு நொடியில் விபத்தில் சிக்கி உடல் / மனம் ஊனமானவரிடம் கேட்டால் தெரியும்.

ஒரு நிமிடத்தின் அருமை, அந்த ஒரு நிமிடத்தில் முக்கியமான பயணத்தில் ஒரு பேருந்தையோ / ரயிலையோ / விமானத்தையோ தவற விட்டவருக்குத் தெரியும்.

ஒரு மணி நேரத்தின் அருமை, அந்த ஒரு மணி நேரத்தில் முக்கியமான பரிட்சையில் தவறான விடை எழுதியவருக்குத் தான் தெரியும்.

ஒரு வாரத்தின் அருமை, அந்த ஒரு வாரத்தில் முக்கியமான செய்திகளை திரட்ட முடியாத பட்சத்தில்  ஒரு வார இதழ் ஆசிரியருக்குத் தான் தெரியும்.

ஒரு மாதத்தின் அருமை, அந்த ஒரு மாத விடுமுறையில் அயல் நாட்டிலிருந்து வர முடியாமல் போகும் போது அந்த நபருக்குத் தெரியும்.

ஒரு வருடத்தின் அருமை, அந்த ஒரு வருடத்தில் கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி தோல்வியடைந்த ஒருவருக்குத் தான் தெரியும்.

ஒரு ஜென்மத்தின் அருமை, அந்த ஜென்மத்தில் அறியாமையினால் பல தவறுகள் செய்து உடலும் / மனமும் சேர்ந்து சோர்ந்து போகிற நேரத்தில் அத்துன்பத்தை அனுபவிக்கும் உயிருக்குத் தெரியும்.

கோள்களின் கதிர்வீச்சுப்படி குருவும், புதனும் ஒருவரது ஜெனன காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் 

(அதற்க்கு மாறாக ராகுவின் சாரத்தில் இருப்பது, ராகுவின் சம்மந்தம் பெறுவது, ராகுவோடு இணைந்திருப்பது, நான்காம் ஐந்தாம் அதிபதிகள் ராகுவின் சம்மந்தம் பெறுவது மற்றும் சில அறிகுறியுடன்) 

எல்லாவற்றையும் நன்றாக அறிந்து கொள்ளலாம், பின்னர் உணர்ந்து கொள்ளலாம். 

அப்படியில்லை என்றால், மேல்கண்ட அறிகுறியுடன் காணப்பட்டால் குரு மற்றும் புதன் தசா / புக்திகளில் மிகவும் எச்சரிக்கை தேவை. இல்லையெனில் ஒரு நொடி, ஒரு நிமிடம், ஒரு நாள், ஒரு வாரம் , ஒரு வருடம் என்று ஒரு ஜென்மம் வீணாகும். 













Tuesday 19 August 2014

October Attempt (அக்டோபர் முயற்சி)



5 வீடா ? 5 ஆம் வீடா ?




“மணமகன் Software Engineer (மென் பொருள் பொறியாளர்) ஆக இருக்க வேண்டும்.

பையன் வெளிநாட்டில் (அமெரிக்கா, கனடா) வேலை பார்பவராக இருத்தல் நல்லது.

மாப்பிளைக்கு 5 சொந்த வீடு இருக்க 

வேண்டும்.”

-    இவையெல்லாம் ஒரு திருமண அமைப்பாளரின் மணமகளின் சுய குறிப்பு (Bio data) பக்கங்களில் பார்த்தது.
இவையெல்லாம் அவரவர் எதிர்பார்ப்பு என்கிற பெயரில் அவரவர் வாழ்க்கை பாதுகாப்பு (Life Security) பற்றிய கண்ணோட்டத்தைக் காட்டுகிறது.

இதைக்கேட்டால் சில பேர் வசதியாக வாழவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். அதெல்லாம் சரி 

வசதியாக வாழவேண்டும் என்கிற எதிர் பார்ப்பில் தவறில்லை. ஆனால் வசதியாக வாழ நமக்கு கொடுப்பினை உள்ளதா என்று பார்க்க வேண்டும். 

அதற்க்கு முதலில் நாம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதைப்  பார்க்க வேண்டும்? 

ஒரு வேளை மேற்கூறிய மூன்று தகுதியும் நாம் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கு இருந்து விட்டால் வாழ்க்கை சிறக்குமா ? இதற்கு எப்படி பதில் கூற முடியும்.

சில பேர் தனக்கு தெரிந்த சில பேருக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்துள்ளதால் தமக்கும் கிடைக்கும் என்கிற ஒரு நம்பிக்கையில் (அசட்டு) இப்படிப்பட்ட எதிர்பார்ப்பை விரும்புவார்கள்.

மேலும் சில பேர் தங்களுடைய நெருங்கின உறவினர் குடும்பத்தில் இப்படிப்பட்ட தகுதியுடன் பெண்ணோ / மாப்பிளையோ இருப்பதால் தாமும் இதனையே விரும்புவதாக சொல்வார்கள்.

இன்னும் சில பேர் தமக்கு ஏற்கனவே மேற் கூறிய தகுதி இருப்பதால் தமக்கு வாழ்க்கை துணையாக வருபவரும் இதே போன்ற தகுதியுடன் வந்தால் தான் சரியாக இருக்கும் என்று வாக்கு வாதம் செய்வார்கள்.

இதெல்லாம் சரி, ஒரு வேளை இப்படி ஏன் எதிர்பார்க்கக் கூடாது ?

“மணமகன் Reputed Job (கண்ணியமான வேலை) இல்  இருக்க வேண்டும்.

பையன் பாதுகாப்பான இடத்தில் (Secured Place) இல் வேலை பார்ப்பவராக இருத்தல் நல்லது.

மாப்பிளைக்கு 5 ஆம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.”

அதாவது மணமகன் நம் அந்தஸ்துக்கு தக்க படி ஒரு கண்ணியமான (உடுத்தும் உடை அழுக்கு படாத) வேலையில் இருக்க வேண்டும்.

பையன் வேலை பார்க்கும் இடம் எந்த வித தீவிரவாத ஆபத்தும் இல்லாத இடமாக (உதாரணமாக காஷ்மீர் அதை சார்ந்த இடங்கள்),  இயற்கை சீற்றம் அபாயம் இல்லாத இடமாக  (அந்தமான் மற்றும் அதை சார்ந்த இடங்கள்) இருப்பது நல்லது.

மாப்பிளையின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய / புத்திர / நுண்ணறிவு ஸ்தானமான 5 ஆம் இடம் / 5 ஆம் இடத்து அதிபதி பலமாக இருத்தல் வேண்டும்.

இதில் முதல் இரண்டு எதிர்பார்ப்புகள் மாறலாம் / மாற்றலாம்.

ஆனால் 5 ஆம் வீடு மாறக்கூடியதல்லவே ? இதைத்தான் வாங்கி வந்த வரம் என்பார்கள்.

அது மட்டுமல்ல, 5 ஆம் வீடு நன்றாக இருந்தாலும், அதற்க்கு 5 ஆம் வீடான 9 ஆம் வீடும் நன்றாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். 5 ஆம் வீடு கைக்கு எட்டுவதை சொல்வது 9 ஆம் வீடு வாய்க்கு எட்டுவதை சொல்வது. 
















Monday 21 July 2014

Nandini - (minus) one Kidney (நந்தினி மைனஸ் ஒரு கிட்னி)



வித்தியாசத்தை உணருங்கள் ! 



முதலில் ஒரு கதையை பார்ப்போம் :
அதற்க்கு முன்னர் சில நாட்களுக்கு முன்னர் நெதர்லாந்தில் இருந்து மலேசியா புறப்பட்டு ரஷ்ய நாட்டு எல்லையில் நடந்த கோர விமான விபத்தில் இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
இந்த கட்டுரை அவர்களுக்கு சமர்ப்பணம்.
 *******
ஒரு விமானம் நிறைய பயணிகளுடன் ஒரு இலக்கை நோக்கி புறப்பட்டது. விமானத்திலிருந்த பெரும்பாலான பயணிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அதிலும் முதன் முதலில் பயணத்தை மேற்கொண்டவர் மனதில் மகிழ்ச்சியும் சற்று என்னவென்று புரியாத துயரமும் காணப்பட்டது.
அப்பொழுது விமானத்திலிருந்த ஒலி பெருக்கி (Speaker Box) பேழையில் ஒரு செய்தி சொல்லப்பட்டது. அதாவது இப்பொழுது விமானம் கிட்டத்தட்ட முப்பதாயிரம் (30000) அடி உயரத்தில் பறந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் அது இறங்க வேண்டிய இடத்தில் தரையிறக்கம் செய்யப்படும் என்றும் கனிவான குரலில் தகவல் கூறப்பட்டது. எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சியும் பொலிவும் காணப்பட்டது.
சில மணி நேரங்கள் கடந்தன. அப்பொழுது மீண்டும் அந்த ஒலி பெருக்கி அலறியது. அதாவது இப்பொழுது விமானம் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் சில மணித்துளிகளில் நாம் தரையிறங்கி விடுவோம் என்பதையும் அதே கனிவான குரல் கூறியது. எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் காணப்பட்டது (வழக்கமாக அடிக்கடி பயணம் மேற்கொள்வோரினைத் தவிர்த்து).
மீண்டும் அடுத்த சில நொடிகளில் அதே குரல் அதே தகவலை சொல்லி எல்லாமே சரியாக உள்ளதாகவும் ஆனால் விமானி இருக்கும் அறைக்குள் எதிர்பாராமல் சில தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாகவும் விமானம் இப்போது அவர்கள் வசம் இருப்பதாகவும் சொல்லி பேச்சை துண்டித்துக்கொண்டது.
இப்பொழுது கிட்டத்தட்ட அனைவரது முகத்திலும் பேரதிர்ச்சி !
காரணம் விமானம் கடத்தப்படுவதால் ! உண்மையான காரணம் இனி இந்த விமானம் எங்கே இறக்கப்படும் / எப்பொழுது இறக்கப்படும் / எந்த நிலையில் இறக்கப்படும் என்பதே !

இப்பொழுது ஏன் எல்லோரும் கவலை கொள்ள வேண்டும் ? 

விமானம் முந்தைய உயரத்தை விட தாழ்ந்து பறந்து கொண்டிருக்கிறது. இயந்திரத்தில் எந்த பழுதும் இல்லை. எல்லாவற்றையும் விட தகவல் சொல்லும் அதே கனிவான குரலில் எந்த தடுமாற்றமில்லை.
^
^
^
சரியான காரணம் “சூழ்நிலை வித்தியாசம் என்பதே. என்னதான் மற்ற சூழ்நிலைகள் (விமானத்தின் பறக்கும் உயரம், இயந்திரத்தின் நிலை, தகவல் சொல்லும் குரலின் தொனி) மாறாமல் இருந்தாலும் முக்கியமான சூழ்நிலை (இலக்கு – Destination) மாறியதால்.
இன்னும் சரியாக சொன்னால் மற்ற சூழ்நிலைகள் என்பது தற்காலிகமானது. முக்கியமான சூழ்நிலையான “இலக்கு என்பதே நிலையானது. இந்த சூழ்நிலை வித்தியாசத்தை எல்லோரும் சரியாக புரிந்து கொண்டால் வாழ்கையில் பிரச்சினைகள் மிகவும் குறையும்.
இப்படி நடக்கும் என்று விமானம் புறப்படும் முன்னர் அதில் பயணம் செய்ய போவோருக்கு தெரிந்திருந்தால் எவரேனும் அதில் ஏறி இருப்பார்களா (விமானி உட்பட) ? ஆனால் சில பேர் ஏறி இருப்பார்கள், கண்டிப்பாக. அவர்கள் விமானம் கடத்தப்படுவதை அறிவார்கள். ஏனெனில் அவர்கள் தான் அந்த காரியத்தை செய்யப்போகும் துஷ்டர்கள்.
நாம் நினைக்காமல் விட்டாலும் சில சூழ்நிலைகள் நம் வாழ்க்கைப்பாதையில் குறுக்கிடும் போது இந்த சூழ்நிலை வித்தியாசங்களை எதிர் கொள்ள பழகிட வேண்டும்.
உதாரணமாக இந்த சூழ்நிலையில் நாம் ஒருவர் இருந்தால் என்ன செய்யலாம் ?
முதலில் நம்மூர் சினிமாவில் வருவது போல் கழிவறைக்கு செல்வது போல நடித்து அங்கு ஏதேனும் செய்ய முடியுமா என்று பார்ப்பது. அல்லது வீரம் உள்ளதாக நினைத்துக்கொண்டு சில பேர் துஷ்டர்களை தாக்க முயற்சிப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். முதலில் அவர்கள் கடத்தலின் பின்னணியில் உள்ள கோரிக்கைகள் என்ன என்பதை நன்றாக கவனிக்க வேண்டும். நிச்சயமாக அவர்களுக்கு ஒத்துழைப்பது போல கவனமாக நடிக்க வேண்டும். ஏனெனில் இந்த சூழ்நிலை நம் ஒருவர் சம்மந்தப்பட்டதல்ல என்று நன்றாக உணர வேண்டும். இங்கு ஒருவர் செய்யும் ஒரு தவறு இன்னொருவருக்கோ அல்லது அவருக்கே ஆபத்தாக முடியலாம். இந்த கோரிக்கையில் அரசாங்கம் சம்மந்தப்பட்டிருந்தால் நாம் நிச்சயமாக ஏதும் செய்ய இயலாது. அதனால் நாம் பொறுமை காக்க வேண்டும்.

ஒருவேளை அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால்

 எல்லோரும் ஒரு குறையின்றி வெளியே வந்து விடலாமல்லவா ? 


இப்பொழுது இந்த விமானம் பற்றிய ஒரு வித்தியாசத்தை பார்ப்போம். அதாவது இந்த கதையில் வரும் விமான கடத்தலின் நிலைமை வேறு ஆனால் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட நிஜமான விமான விபத்து வேறு. முன்னது வேண்டுமென்றே நடத்தப்படுவது. பின்னது எதிர்பாராமல் நடந்தது. நடந்ததாக சொல்லப்படுவது. முழுவதுமான விசாரணை முடிந்த பின் தான் உண்மை தெரியும். நிகழ்ச்சி எப்படியோ நடந்தது , நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் பல விலை மதிப்பில்லா உயிர்களை பலி வாங்கி காலம் பழி வாங்குகிறது என்பதே நிதர்சனம். என்னை பொறுத்தவரை இந்த கால கட்டத்தில் வான்வெளி கோள்களின் நிலையில் “துலா ராசி மண்டலத்தில் செவ்வாயும் சனியும் சேர்ந்து காணப்படுகிறது – இன்று இவைகள் 3 : 22 டிகிரி வித்தியாசத்தில் உள்ளன. செவ்வாய் சனியை விட வேகமாக சுழல்வதால் அடுத்த மாதம் இந்த (25) தேதியில் இருவரும் 23 : 23 டிகிரியில் இணையும் போது சற்று கவனமுடன் இருக்க வேண்டும். 
சனீஸ்வரன் கர்மகாரகன், இரும்புக்கு அதிபதி, மேற்கு திசையை பார்ப்பவர். செவ்வாய் சகோதாக காரகன், நெருப்பை பிரதிபலிப்பவர், சனீஸ்வரனுக்கு எதிரானவர். இன்றைய சூழ்நிலையில் உச்ச பலம் பெற்ற சனியுடன் செவ்வாய் சேரும்போது இதுபோன்று இரும்பு, நெருப்பு, மேற்கு திசை, ஆபத்துகள் உருவாவது காலத்தின் கர்மம்.  பிறப்பு ஜாதகத்தில் சனி – செவ்வாய் சேர்க்கை பெற்றவர் அதிக பட்ச கவனம் கொள்ள வேண்டும்.
மேலும் மேற்கண்ட விமான விபத்தில் இறந்த அனைவரது ஜாதகமும் கிட்டதட்ட (ஆயுள் பாகத்தில் மட்டும்) ஒரே மாதிரியாகவே இருக்கும்.
ஏனெனில் 
மரணத்திற்கு நல்லவன், கெட்டவன், படித்தவன், பாமரன், பணக்காரன், ஏழை, வயதானவன், வயது குறைந்தவன், ஆண், பெண், உயர்ந்த குலத்தவன், தாழ்ந்த குலத்தவன் போன்ற வித்தியாசங்களெல்லாம் இல்லை. அது ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டும் பார்க்கும். அது (மரணம்) நெருங்குபவன் ஆயுள் பாகத்தை மட்டுமே பார்க்கும். ஆயுள் பாகமென்பது ஒருவரின் ஆயுள் பிரியும் காலம், இடம், பிரிக்கப்படும் நிலை என்பது.

சரி இப்பொழுது முக்கிய தலைப்புக்கு வருவோம் ! 



ஆம்,  பாரதியின் கருத்து மிக்க பாடலின் பல்லவி இது. இந்த தலைப்பை தாங்கி வெளிவந்த பாலச்சந்தரின் அருமையான காவியம் இது.

சுஹாசினியின் கதா பாத்திரத்தின் பெயர் தான் "நந்தினி". 

உண்மையில் போற்றுதற்குரிய செவிலியர் பணியில் இருக்கும் நந்தினி விதியால் ஒருவனை மணந்து தன் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு பின்னர் அவனையும் துறந்து  எத்தனையோ அவஸ்தையில் வாழ்க்கையை கடக்கும் இந்த நந்தினிக்கு  மீண்டும் விதி வசத்தால் மற்றொரு துணை இவரை நாடி வருகிறது.

பல நிகழ்ச்சிகளுக்குப்பின் இருவரும் திருமணத்தால் இணைந்திட முடிவு செய்திடும் போது காலத்தின் கோலத்தால் முன்னவனுக்கு (முதல் கணவனுக்கு) உடல் நலம் குன்றியதால் தன் சிறுநீரகம் (கிட்னி ) தந்து அவனை காப்பாற்றி அதே சமயத்தில் அவனது தகப்பனாரிடம் (மாமனாரிடம்) ஒரு நிலைமையில் தான் வாங்கியிருந்த ஒரு லட்சம் ரூபாயை அதற்க்கு ஈடாக நேர் கணக்கு செய்வார்.

அதன் பின்னர் இரண்டாமவனை பார்க்கும் போது அவனது கடினமான வார்த்தையான "முதல் கணவன் சொன்னதற்காக ஒரு கிட்னியை தந்த நீ மற்றொரு நாள் மீண்டும் அவன் சொன்னான் என்பதற்காக ஒரு முறை அவனிடம் செல்வாயா ?" என்பதை மனதை உறுதியுடன் வைத்து தாங்குகிறாள். .

பின்னர் அவன் தன் தவறை உணர்ந்து பழைய படி நந்தினியை ஏற்றுகொள்வதாக கூற  அதற்க்கு சுகாசினி சொல்லும் வசனம் தான்
"நந்தினி மைனஸ் ஒரு கிட்னி"  

பின்னர் சராசரி மனிதனாக இருந்த அவனையும் துறந்து தன் பாதை நோக்கி தொடர்கிறாள். 

அதாவது தற்போதைய தன் நிலையை எவ்வளவு தெளிவாக விளக்குகிறாள் பாருங்கள்.

இது தான் இந்தக்கட்டுரையின் உப தலைப்பான "வித்தியாசத்தை உணர்வது"

இந்த கட்டுரையின் பொருள் என்னவென்றால் வாழ்கையில் எத்தனையோ சூழ்நிலை வித்தியாசங்கள் ஏற்பட்டாலும் தன் நிலை மாறவே கூடாது என்பதே. 

நன்றி - வாசித்த அனைவருக்கும்.