photo

photo
Venkatesh.A.S

Monday 21 October 2013

Known Devil (தெரிந்த பிசாசு)


கண்ணாமூச்சி 

மனிதர்களுக்கு மனம் என்பது  பெரும்பாலும் நிலையாக இருப்பதில்லை. காரணம் மனம் என்பது எண்ணங்கள் ஆகும். எண்ணங்கள் அலை போல் வந்து வந்து செல்லும். இவைகளை அடக்க நினைத்தால் அடங்காது. மாறாக கவனிக்க வேண்டும்.




தற்போதைய அவசர உலகில் மனிதர்களுக்கு எதையும் அறிந்து கொள்வதற்கு கூட நேரம் இருப்பதில்லை. அறிந்து வைத்திருந்தாலும் நெடு நாள் வரை நினைவில் இருப்பதில்லை. ஒருவேளை நினைவிருந்தாலும் அது போல நடக்க மனம் இடம் கொடுப்பதில்லை.

****************

தன் மனைவியின் பிறந்த நாளுக்காக ஒரு கணவன் அவளுக்கு ஒரு காரைப் பரிசளித்தான். முதலில் காரின் சாவியையும், பின்னர், அவளது ஓட்டுனர் உரிமம் உட்பட, தேவையான ஆவணங்கள் அடங்கிய ஒரு சிறு பையையும் அவளிடம் கொடுத்துவிட்டு, அவனை ஆரத் தழுவினான். பின் அவளிடம், குழந்தைகளைத் தான் பார்த்து கொள்வதாகவும், அவள் விரும்பினால் நீண்ட தூரம் காரை ஓட்டிச் சென்று வரலாம் என்றும் கூறினான். 

அவள் ஒரு முத்தத்தால் அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தன புதிய காரை ஓட்டுச் சென்றாள். ஒரு கிலோமிட்டர் தூரம்  செல்வதற்கு உள்ளாகவே, சாலையை இரண்டாக வகுக்கும் நடுபகுதியில் காரை மோதிவிட்டாள். அவளுக்குக் காயம் ஏதும் ஏற்படாவிட்டாலும் கார் ஒடுக்காகிவிட்டது. குற்றஉணர்வு  அவளைப் பற்றிக் கொண்டது.” அவளிடம் என்ன சொல்வது? அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார்” போன்ற கவலைகள் அவளை மொய்த்தன. விபத்துப் பகுதிக்குக் காவல்துறை விரைந்து வந்து சேர்ந்தது. காவலர், நான் உங்கள் ஓட்டுனர் உரிமத்தைப் பார்க்கலாமா?” என்று கேட்டார். நடுங்கும் கைகளுடன் தன கணவர் கொடுத்த சிறு பையை அவள் திறந்தாள். கண்களில் கண்ணீர் தாரைதாரையாக ஓடிக் கொண்டிருக்க, ஓட்டுனர் உரிமத்தை அவள் எடுத்தாள். அதன் மீது அவளது கணவரின் கையெழுத்தில் ஒரு துண்டுக் காகிதம் ஒட்டபட்டிருந்தது. அதில், என் அன்பே ஒரு வேளை நீ ஏதாவது விபத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால், இதை நினைவில் வைத்துக்கொள் – நான் நேசிப்பது உன்னைத்தான்; காரை அல்ல – அன்புடன்!” என்று எழுதப்பட்டிருந்தது.

பொருட்களை நேசிக்க வேண்டும். மக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றில்லாமல், மக்களை நேசிக்க வேண்டும். பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்து வைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்.

*************

இந்த கதையில்அவள்  காரை விபத்துக்குள்ளாகியதும் அவளுக்கு ஏன் குற்ற உணர்வு ஏற்பட்டது? 

காரணம் அதுவரை அவள் தன் கணவனை சரியாக அறிந்து / புரிந்து கொள்ளாததால் தான். 

வாழ்க்கையில் எதையும் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். அறிந்ததை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நினைவில் வைத்து கொண்டதை மதித்து நடக்க நடக்க வேண்டும்.  மாறாக எதையும் சரியாக அறிந்து கொள்ளாமல் அறிந்து  கொண்டது போல் நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும்.

வாழ்க்கையில் கண்ணாமூச்சி விளையாடலாம். ஆனால் கண்ணாமூச்சி விளையாட்டில் வாழ்க்கை இருக்க கூடாது. அதாவது ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டது போலவும் , அறிந்து கொள்ளாதது போலவும் நடந்து கொள்ளக் கூடாது. 

சில சமயங்களில் அனேக குடும்பங்களில் ஒருவரையொருவர் குறை கூறிக்கொள்வார். நான் உனக்காக  இதைச் செய்தேன். அதைச்செய்தேன், நீ என்ன செய்தாய் ? என்கிற அளவில் வாழ்க்கை இருக்கும். இதுவும் கண்ணாமூச்சி விளையாட்டுதான்.

பொதுவாக ஒன்று சொல்வார்கள், ஒருவரை குறை கூறி அவர் மேல் ஆட்காட்டி விரலை காண்பிக்கும் போது , அதற்க்கு கீழே உள்ள மூன்று விரல்கள் எதிர்திசையில் நம்மையே காண்பிப்பதை கவனிக்க மாட்டார். மேலே காணப்படும் படத்தில் உள்ளது போல குறை கூறுவது நம்மை மறுபுறம் மறைத்து கொள்வதாக அர்த்தமாகும்.

ஜாதகரீதியாக ஒருவரின் குடும்ப வாழ்க்கையின் நலனை நிர்ணயிக்கும் இடங்கள் : 2 (குடும்பம், தனம், வாக்கு), 4 (தாயார், சுகம் , வீடு , வாகனம் , படிப்பு அறிவு) , 5 (பூர்வ புண்ணியம் , புத்திரப்பேறு , நுண்ணறிவு), 7 (வாழ்க்கைத்துணை , கூட்டு தொழில்), 8 (மாங்கல்யம் -பெண்களுக்கு , ஆயுள், அவமானம்), 9 (பாக்கியம் , புகழ் , தர்ம சிந்தனை), 12 (சயனம் , போகம், விரையம்) - இவைகளில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு உள்ளதோ , அவ்வளவுக்கு நிலைமை இருக்கும்.


எதையும் எவரையும் எதிலும் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்கும் (தவறான) இந்த நவீன யுகத்தில் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். ஒரு நல்ல நண்பரை நண்பராக ஏற்றுக்கொள்ள 3 முறை யோசித்தால், அவரையே கழற்றி விட (ஏதேனும் தவறு நேரிடின்) 9 முறை யோசிக்க வேண்டும். அதாவது நன்மையானதை ஏற்றுக்கொள்ள ஒரு முறை யோசித்தால் , விலக்கி (விதி வசத்தால் விலக்கத்தான் வேண்டும் எனும் போது)  விட மூன்று  முறை யோசிக்க வேண்டும். 

அதே போல தவறான ஒருவரை நண்பராக (விதிவசத்தால்) ஏற்றுக்கொள்ள 9 முறை யோசித்தால் , அவரையே கைவிட 3 முறை யோசித்தாலே போதும். அதாவது தீமையானதை ஏற்றுக்கொள்ள மூன்று முறை யோசித்தால் , விலக்கி விட ஒரு முறை யோசித்தாலே போதும். 

இதைதான் இப்படி சொல்வார் :

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல். 

*****பகுதி*****
நன்றி : http://tamilastrology.yourastrology.co.in/உங்கள்-வாழ்வில்-உங்களை/





1 comment: