photo

photo
Venkatesh.A.S

Sunday, 13 October 2013

Psycho Gang (மூடர் கூட்டம்)


வொய்  திஸ் கொலைவெறி ?

ஒரு பெண் தன் தாயினுடைய இறுதிச்சடங்கின் போது 
ஒரு இளைஞனை கண்டாள். 
அவனது உருவம் அவளை வசீகரிக்கவே அவனை விரும்பினாள். 
துரதிர்ஷ்டவசமாக அன்று அவனுடைய கைபேசி எண்ணை அவள் பெற 
இயலவில்லை. 
சில நாள் கழித்து அவள் தன் சகோதரியை கொலை செய்தாள்.
காரணம் ..............


தன் சகோதரியின் இறுதிசடங்கில் அந்த இளைஞனை மீண்டும் 
பார்க்க முடியும் என்று நம்பினாள். 
(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது)

2020 ஆம் ஆண்டில் உலகில் மனிதர்களின் இறப்பிற்கு பெரும்பாலான காரணம் மன அழுத்தமாக இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதற்க்கு முக்கிய காரணம் மனிதர்களின் மிக வேகமான வாழ்க்கை முறை தான். மிக வேகம் பின்னர் மிகவும் சோகம். மிக வேகமான மன நிலையில் யாருக்கும் சரியான முடிவு எடுக்க வராது. எடுக்க கூடாது. 


மோகம் அது வேகமானால் பின்னர் கோபம் அதி வேகமாகும். ஆசை அதி வேகமானால் பின்னர் சலிப்பு படு வேகமாகும். காமம் படு வேகமானால் பின்னர் ரோகம் படுக்க வைக்கும் வேகமாகும். 

மன நோய் எல்லா நோய்களுக்கும் வாசலாகும். ஆகவே எல்லோருக்கும் சுய பரிசோதனை அவசியமாகும் இவ்வுலகினில் தற்பொழுது. 

சந்திரனும், புதனும் ஒருவருடைய ஜாதகத்தில் பலம் இழந்தால் அவர்   மன நோயாளியாக மாற வாய்ப்பிருக்கும். இன்னும் ஒரு சில அமைப்புகளை பொறுத்து அதன் தீவிரம் தெரியும். 

*******************

மனநோய்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். அதுபோலவேதான் அதற்கான தோற்றக் காரணிகளும் அமைந்திருக்கின்றன. தனியாள் வேற்றுமைகள் மனநோயின் பரிமாணத்தை மாற்றி விடுகின்றன.
ஹிட்லர் போன்ற சில அதிகார வர்க்கத்தினரை கூட மனநோய் பாதித்திருந்தாலும் அவர்களை மக்கள் ஒதுக்கி விடவில்லை. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், சூழ்நிலை, மனவாகு, உடல் அமைப்பு என்கிற பல்வேறு கூறுகள் மனநோயின் வித்துகளாக உள்ளன. அன்பு மனைவியை பறிகொடுத்த ஒருவன் பித்தனாகி விடுகிறான். ஆனால் மற்றொருவன், மனைவி இறந்தால்தான் புது மாப்பிள்ளை என்றாகி விடுகிறான்.
நெருக்கடியான காலங்கள் ஒருவரை மனநோயாளியாக மாற்றி விடுகிறது. தவறான போதனைகள், போலியான முன் மாதிரிகள் இன்றைய இளைஞர்களைத் தடுமாறச் செய்கின்றன. நல்லதையும், கெட்டதையும் பாகுபடுத்த தெரியாதபடி அறியாமை தடுத்து விடுகிறது. 
மன இறுக்கங்களும், இன்னல்களும் மனிதனைத் தனித்துவிட்டு தற்காப்பு மாயைக்குள் தள்ளிவிட்டு விடுகிறது. மனக் கவசங்களை அணிந்துகொண்டு தற்காலிகமாக நிம்மதிகளை தேடிக்கொள்ள வகை செய்து விடுகிறது. எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தன் முன்னேற்றத்திற்கு தானே தடைகளை ஏற்படுத்திக் கொள்கிறான். தன்னம்பிக்கை, முயற்சி ஆகியவற்றை அடகு வைத்துவிட்டு பிறரை சார்ந்திருக்கும் கையாலாகாத்தனத்திற்கு தன்னை தாழ்த்திக் கொள்கிறான்.
மது அடிமைக்கு தன்னை உள்ளாக்கி கொள்ளாமல் இருந்திருந்தால் எனது நண்பர் ஒருவர் தற்சமயம் ஸ்டேட் வங்கியில் தலைமைப் பொது மேலாளராக வீற்றிருந்திருப்பார். குடிப்பழக்கம் எனும் நோய் பீடித்தமைக்கு அவர் கூறும் காரணம் தன் மனைவியின் நடத்தை சரியில்லை என்பதுதான். அவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் நியூயார்க்கில் மற்றொருவர் கனடாவில் இருக்கின்றனர். அவர், "நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன். என் வேலைக்காரர்கள் கூட என்னை மதிக்கவில்லை" என்று கூறி கதறி அழுகிறார். இவரும் மனதில் தற்காப்பு உத்தியில் தன்னை சிக்க வைத்துக்கொண்டு தன் இயலாமைக்கு ஒரு காரணத்தை கூறிக் கொண்டு சுகம் காண்கிறார். இவருக்கு மனப் போராட்டங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லை. இத்தகைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள பயிற்சியை தருவதன் மூலம் மனநோயை விரட்டலாம். மனதின் தற்காப்பு இயக்கம் அல்லது சக்தி இங்கு தேவைப்படுகிறது. காரணங்களைச் சொல்லிக் கொண்டு காரியங்களை விட்டு விடுகிறோம்.
ஒருவன் தன்னை பற்றிய கருதுகோளை, நல்ல அபிப்ராயத்தை பெற்றிருக்க வேண்டும். இதனைப் பெற்றோர்களும், மற்ற சமூக அங்கத்தினரும் உருவாக்கவேண்டும். மனவெழுச்சிகளான சிரிப்பு, மகிழ்ச்சி, கோபம், ஆவேசம், பயம், இரக்கம், அழுகை போன்றவற்றை எப்படி எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்கிற சூட்சுமங்களை சொல்லித்தர வேண்டும். இது நல்ல கட்டுக்கோப்பான ஆளுமையை வளர்த்துக்கொள்ள உதவும். மனவெழுச்சிக் கட்டுப்பாடுகள் இல்லாமை மனநோய்க்கு வித்தாக அமைந்துவிடும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும். அதுபோலவே நல்ல உடற்கட்டு, ஆரோக்கியம் இருக்க வேண்டும். வலிமையான உடல் தெளிவான சிந்தனைக்கு ஆதாரமாக அமையும். பிறரோடு இணக்கமாக செயலாற்ற வேண்டிய சமூகத் திறமைகளை சொல்லித்தர வேண்டும்.
பேச்சாற்றல், எழுத்தாற்றல், உரையாடல், நட்பு பாராட்டல், குழுவோடு இணங்கி செயல்படல் போன்ற ஆற்றல்களை பெருக்கிக்கொள்ள வேண்டும். இத்தகைய ஆற்றல்களில் உள்ள குறைபாடுகள் மனநோயை தோற்றுவிக்கின்றன. உயிரியல் ரீதியான பல காரணங்கள் மனநோய்களின் வேர்களாக உள்ளன. பாரம்பரிய மரபு அணுக்களில் உள்ள குறைபாடுகள், தைராய்டு, பாரா தைராய்டு, தைமஸ், பியூட்டரி, அட்ரினல், பாலினச் சுரப்பிகள், பான்கிரியாஸ் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்க நீர்களின் மாற்றங்கள் மனநோய் தோற்றத்தில் பங்கு கொள்கின்றன. இதைப் போலவே ஊனங்களும் வித்துகளாக உள்ளன. பிறவி ஊனம், வியாதிகளினாலும், விபத்துகளினாலும் உண்டாகும் ஊனங்கள் மனக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. உடல்வாகுகளும், அமைப்புகளும் ஒருவரின் ஆளுமைப் பண்புகளை நிர்ணயம் செய்கின்றன. அதிகமான செல்லம், கண்டிப்பின்மை, புறக்கணிப்பு, அதிகமான கண்டிப்பு, அளவுக்கதிகமான பாதுகாப்பு, தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பு, குடும்ப சச்சரவுகள், குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கின்றன. இவை நாளடைவில் மனநோய்க்கான வாயிலை திறந்து விடுகின்றன. ஏழ்மை, வறுமை, இல்லாமை போன்ற கொடுமைகளும், பிறழ்வான மனநிலைகளை உருவாக்குகின்றன. சமூக தொழில்நுட்ப வளர்ச்சிகளும், மாற்றங்களும், நிதி நெருக்கடிகளும், தொழில் சார்ந்த பிரச்சினைகளும் மனநோய்களைத் துரிதப்படுத்தும் கருவிகளாகும். எனவே மனநோயின் ஆணிவேரைக் கிள்ளி எறிய வேண்டும். இல்லையென்றால் ஆல் போல் வளர்ந்துவிட்ட பிறகு அதனை சாய்ப்பது சிரமமான செயலாகி விடும். நடைபிணமாக்கி உற்றாருக்கும், பெற்றோருக்கும் சுமையாகி விடும்.
விழிப்புணர்வை ஏற்படுத்த எய்ட்ஸை விட முன்னுரிமை பெற வேண்டியது மனநோய் என்பதை அனைவரும் உணர வேண்டும். இதிலிருந்தே மனநோயின் தீவிரம் எவ்வளவு என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி மருத்துவத்தில் மனநோய்களை மாற்றக் கூடிய மருந்துகள் உள்ளனவா? என்று கேட்டால் நிறைய உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆங்கில மருந்துகள்:
மனநோயின் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகளைக் கொடுப்பார்கள். கடுமையான மன இறுக்கம், மன உளைச்சல், மனச்சோர்வு, பிறழ்வு போன்ற நோய்களுக்கேற்ப மருந்துகளை முடிவு செய்வார்கள். நோய் மிதமானது, கடுமையானது, மிகக் கடுமையானது, கொடுமையானது என்று வகைப்படுத்தி மருந்துகளை முடிவு செய்வார்கள்.
மனச் சோர்வை அகற்றும் மருந்து, பதட்ட நீக்கிகள், மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும் மருந்துகள், தூக்க மாத்திரைகள் போன்றவற்றை கொடுப்பார்கள. சிலருக்கு ஷாக் டிரீட்மென்ட் கூட கொடுப்பதுண்டு.
ஹோமியோபதி மருந்துகள்:
ஹோமியோபதி எப்போதுமே மனிதனை முழுப் பொருளாக பார்க்கிறது. மனிதனிலிருந்து அவன் உறுப்புக்கு வைத்தியமே தவிர, உறுப்பிலிருந்து அவனுக்கு வைத்தியமில்லை. மூன்று கோணமான முக்கோணத்தில் மன, உடல், சமூக நலனில் ஹோமியோபதி மருந்துகள் அக்கறை செலுத்தும். இதனால் தனி மனிதனின் தனிப்பட்ட சிக்கல்கள் மருந்துகளால் சிதறுண்டு போகும். மேற்சொன்ன எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், மனநல பாதிப்பாக வெளிப்பட்டாலும் ஹோமியோபதியில் Antianxiey, Anxiolytic, Antidepressant போன்ற தொந்தரவுகளுக்கு அகோனைட், இக்னீஷியா, பல்சட்டிலா, பிளம்பம் போன்ற மருந்துகள் உள்ளன. இவை நோயை முழுமையாக குணப்படுத்தி மனதை மகிழ செய்யும்.
********************
****பகுதி****
நன்றி : http://www.koodal.com/health/interview_guide.asp?id=616&title=psychological-treatment-for-stress

No comments:

Post a Comment