எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
"வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன் !
வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன் !
கண்ணில் நீரை காணாமல், கவலை ஏதும் கூறாமல்,
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன் !"
- இது "நெஞ்சிருக்கும் வரை" திரைப்படத்திற்காக மேல் கண்ட தலைப்பில் ஆரம்பிக்கும் பி. சுசீலாவின் இனிய குரலில் அமைந்த (கவியரசர் எழுதிய?) மிக அருமையான பாடல்.
இந்த படத்தில் என்ன விசேஷம் தெரியுமா?
இதில் வரும் எல்லா கதா பாத்திரங்களும் "make up" இல்லாமல் நடித்துள்ளார்கள். அதாவது உருவம் உள்ளது உள்ளபடி !
இந்த பாடலின் வரிகள் ஒரு மனைவி தன் அன்பு கணவனின் மேல் கொண்டுள்ள விசுவாசத்தை பிரதிபலிக்கிறது. தற்போதைய உலகில் நன்றி, விசுவாசம் இவைகள் சொற்கள் வரையில் வெறும் ஏடுகளில் மட்டுமே காணப்படும் அவலமாகி விட்டது. ஏனெனில் சுயநலம் மேலோங்க ஆரம்பித்து விட்டால் அது மற்ற எல்லாவற்றையும் (விசுவாசம் உட்பட) குழி தோண்டி புதைத்து விடும். அதுபோலவே இந்த திரைப்படத்திலும் அன்பு மனைவியாக வரும் கே. ஆர் . விஜயா வின் கதா பாத்திரமும், சந்தேகமே உருவான கொடூர குணம் கொண்ட கணவனாக வரும் முத்துராமனின் கதா பாத்திரமும் எவ்வளவு வித்தியாசம் ! துரதிர்ஷ்டவசமாக உண்மையான விசுவாசம் அந்த விசுவாசத்துக்கு உரியவரின் கண்ணுக்கு தெரியாமல் போவது அவரவர் தலைவிதி. இறைவனின் பாகுபாடு- ஈடு இணையற்ற, மிக நேர்த்தியான கட்டைளைகளை புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
உண்மையான விசுவாசம் உண்மையையே பார்க்கும். உள்ளதை உள்ளபடியே நோக்கும். இங்கே "உண்மையான விசுவாசம்" என குறிப்பிடுவது ஏனெனில் இப்பொழுது எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. குடிக்கும் குடிநீர், பால் உட்பட. அதனால் தான் சில தயாரிப்புகளில் "Original" என்று அச்சிட பட்டிருக்கும். போலியாக மாறிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் போலிகளே மிகவும் கவர்ச்சியாக தெரிய ஆரம்பிக்கும். ஆனால் முடிவில் வேறு மாதிரி இருக்கும். ஆனால் உண்மையான விசுவாசம் என்றென்றும் ஒரேமாதிரி இருக்கும்.
இந்த விசுவாசம் எல்லா இடத்திலும் இருக்கும். அதாவது கணவன் - மனைவி , முதலாளி - தொழிலாளி , ஆசிரியர் - மாணவன் , தலைவன் - தொண்டன் , நண்பன் - நண்பன் இப்படி. இவர்களுக்கு இடையே உள்ள விசுவாசம் உண்மையானதா, போலியானதா என்பது அவரவர் நேரம், காலம், கர்மா இவற்றை பொறுத்தது.
விசுவாசம் பெரிதாக எதையும் எதிர் பார்க்காது, உண்மையான அன்பை தவிர.
இந்த விசுவாசத்திற்கு என்ன விலை ? இதற்க்கு விலை மதிப்பில்லை .
சில இடங்களில் விசுவாசம் மிக்கோருக்கு இறைவன் வெகுமதி அளிக்கிறான். ஒரு உண்மையான விசுவாசமான வேலைக்கரருக்கு இறைவன் தந்த வரத்தை பாருங்கள்.
மேற்கொண்டு கதையை படியுங்கள்....
*********************
ஒரு பணக்கார தகப்பனும் மகனும் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வியட்நாம் போர் நடைபெறவே, மகன் அந்த போருக்கு போக வேண்டியதாயிருந்தது. அவன் அந்தப் போரில் மிகவும் நன்றாக போரிட்டு, மற்றும் அநேக போர் வீரர்களை காப்பாற்றினான். அப்படி ஒரு வீரனை காப்பாற்றும்போது, அவன் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது. தகப்பனுக்கு அந்த செய்தி போய் தனது ஒரே மகன் இறந்த துக்கத்திலே இருந்தார். ஒரு மாதம் கழித்து அவர் வீட்டு கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த போது ஒரு வாலிபன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் சொன்னான், ‘உங்கள் மகன் காப்பாற்றிய போர் வீரரில் நானும் ஒருவன். உங்கள் மகன் உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவான். நீங்கள் ஓவியங்களை சேர்த்து வைத்துள்ளீர்கள் என்று. நான் ஒரு பெரிய ஓவியன் அல்ல, ஆனால் உங்கள் மகனை நான் வரைந்துள்ளேன். தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று வேண்டிக் கொணடான். தகப்பன் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, ‘இல்லை இல்லை உங்கள் மகனால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்’ என்று கூறி படத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். அவர் அந்த படத்தை வீட்டில் மாட்டி வைத்து, வருகிற ஒவ்வொருவருக்கும் காட்டினார்.
.
சில மாதங்கள் கழித்து அவரும் மரித்தார். அவருடைய ஓவியங்கள் ஏலத்திற்கு வந்தன. புகழ்பெற்ற ஓவியங்களாக இருந்தபடியால் அவற்றை வாங்க அநேகர் வந்திருந்தனர். ஏலத்தை நடத்துபவர், முதலாவது அவருடைய மகனின் அந்தப் படத்தைக் காட்டி ‘யார் இதை வாங்க முன்வருகிறீர்கள்’ என்று ஏலத்தை ஆரம்பித்தார். அங்கு அமைதி நிலவியது. திரும்பவும் அவர் 'யார் வாங்குகிறீர்கள்? 200 டாலர் அல்லது 300 டாலர்? எவ்வளவு?' என்று கேட்டார். பின்னாலிருந்து ஒரு குரல் ‘நாங்கள் அவருடைய மகனின் படத்தை வாங்க வரவில்லை. மற்ற ஓவியங்களை ஏலமிட ஆரம்பியுங்கள் என்று கேட்டது. ஏலமிடுபவரோ, ‘அவருடைய மகன்; அவருடைய மகன் ஓவியத்தை யார் வாங்க முன்வருகிறீர்கள் ’ என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் பின்னாலிருந்து ஒரு குரல், அந்த வீட்டில் பரம்பரை வேலைக்காரறாய் இருந்தவர் , 10 டாலர் எனக் குரல் கொடுத்தார். உடனே ஏலமிடுபவர் யாராவது 10 டாலருக்கு மேலே தர தயாராக உள்ளீர்களா என்றுக் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. பின்னர் 10 டாலர் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்’ என்று ஏலமிட்டு அந்த படத்தை அந்தத் தோட்டக்காரனுக்குக் கொடுத்தார். மற்றவர்கள் பொறுமையை இழந்து, ‘மற்ற ஓவியங்களை ஆரம்பியுங்கள்’ என்றுக் கத்தினார்கள். அப்பொழுது ஏலமிடுபவர், ‘மன்னிக்கவும் ஏலம் முடிந்தது’ என்று கூறினார். மற்றவர்கள் ‘ஏன்’ என்றதற்கு ‘எனக்கு முன்னமே இரகசிய உயிலைப் பற்றி சொல்லப்பட்டது. அதாவது யார் அவருடைய மகனுடைய ஓவியத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு அவருடைய எல்லா சொத்துக்களும் ஓவியங்களும் சொந்தம் என்று அவர் உயிலில் எழுதி வைத்துள்ளார். ஆகையால் விசுவாச மிகுதியால் அவருடைய மகனுடைய ஓவியத்தை வாங்கிய அந்த வீட்டு வேலைக்காரருக்கே எல்லாம் சொந்தம் என்று கூறி ஏலத்தை முடித்தார். இதைக்கேட்ட மற்றவர்கள் வாயடைத்து போயினர்.
*************************
***பகுதி ***
நன்றி : anudhinamanna.net
No comments:
Post a Comment