photo

photo
Venkatesh.A.S

Monday, 7 October 2013

Life is an accident- Recover it. வாழ்க்கை ஒரு விபத்து- மீட்டெடுங்கள் !



எங்கேயும் எப்போதும் 

வாழ்க்கையில் விபத்து இருக்கலாம். ஆனால் விபத்தில் வாழ்க்கை இருக்க கூடாது.

 ஒரு ஆணும் ஒரு பெண்ணும் விபத்தாக மோதிக்கொள்ளும் போது இன்னொரு ஆணோ / பெண்ணோ வேறு ஒரு ஆணிடமோ / பெண்ணிடமோ விபத்து ஏற்படுத்தப்போகும் அடித்தளம் அமைகிறது. 

இங்கே மனித உடல்களை உயிருள்ள வாகனங்களாக கற்பனை செய்து பாருங்கள். இந்த கண்ணுக்கு தெரியும் வாகன உடல்களின் அதன் ஓட்டுனராக ஆத்மா திகழ்கிறது ! 

ஒரு ஓட்டுனரின் நடத்தையில் தான் அவன் வாகனத்தின் ஆரோக்கியம் இருப்பது போல, ஆத்மாவின் ஆரோக்கியத்தில் தான் உடலெனும் வாகனத்தின் திறனும் இருக்கும். 

தூய எண்ணங்கள் தான் உடலெனும் வாகனத்திற்கு எரி பொருளாகிறது. எண்ணங்கள் போன்ற எரி பொருள் தூய்மையானால் உடல் வாகனம் சரியான திறனுடன் இறக்கும் அதிக பட்சம். 



எண்ணங்கள் கலப்பட மானால், எரிபொருள் கலப்படம் போல விளைவு வாகனம் சீர்கேடாகும். 

ஒரு விபத்தில் வந்த 

ஒரு உயிருள்ள வாகனம் 

மற்றொரு விபத்தினை நிகழ்த்த

ஒரு உயிரற்ற வாகனத்தின்

மீது அமர்ந்து செல்கிறது! 


அடியார்
குருதேவா, முன்பு இருந்ததை விட தற்போது வாகன விபத்துக்கள் நிறைய ஏற்படுகின்றனவே. இதை எப்படித் தவிர்ப்பது என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

சற்குரு
மனித சமுதாயத்தின் மேல் உனக்குள்ள ஆர்வத்தைக் குறித்து மிக்க மகிழ்ச்சி. தற்காலத்தில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் மக்களின் உயிர் இழப்பும் அதிகமாகி வருகின்றது என்பது உண்மைதான். வாகனங்களின் எண்ணிக்கை, சாலை அமைப்பு, இரவு நேரப் பயணங்கள், ஓட்டுநர்களின் அசிரத்தை, தூக்கம், மது போன்ற பல காரணங்களால் வாகன விபத்துக்கள் அதிகமாகி இருந்தாலும் அடிப்படைக் காரணங்களைப் பற்றி நாம் ஆராய்வோம்.

வாகனம் என்பதற்குப் பொருள் என்ன? ’வாகனம்’ என்பதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் ஒரு காரியத்தில் உதவியாக இருப்பதும், ஒருவருக்குத் துணையாக இருப்பதும் வாகனமாகும். கோயிலில் மூலவருக்கு வாகனம் அமைந்திருப்பது இந்தக் காரணத்திற்காகத்தான். மூலவரின் அனுகிரக சக்திகளை வழிபடுவோரின் தகுதிக்கு ஏற்ப முறைப்படுத்தித் தருவதே வாகனமாகும். எம்பெருமான் சிவபெருமானுக்கு ஒரு கோடி வாகனங்கள் உண்டு. ஒரு கோடி என்பது வெறும் வாகனங்களின் எண்ணிக்கை அல்ல. ஒரு கோடி விதமான வாகனங்கள். காளை, தேர், ன்னம் என்று ஒவ்வொரு வகையிலும் உள்ள வாகனங்களோ கோடி கோடி. மனிதர்கள் எதிர்காலத்தில் வாகனங்களால் அனுபவிக்கும் துன்பங்களைக் கோடிட்டுக் காட்டி, அவர்கள் அத்துன்பங்களிலிருந்து மீள்வதற்காகவே சிவபெருமான் கோடிக் கணக்கான வாகனங்களில் பயணம் செய்து அந்த வாகனங்களை எல்லாம் தூய்மைப்படுத்தி உள்ளார்.

கணவனைப் பிரிந்து பாதுகாப்பின்றி வாழும் பெண்கள் தஞ்சை பெரிய கோயிலில் கருவூர் சித்தர் ஜீவாலயத்தின் பின் அருள்புரியும் பத்தினி தெய்வத்தை வணங்கி வந்திடில் நல்ல பாதுகாப்புடன் வாழ சித்தர்கள் துணை நிற்பர்.
சிவபெருமானுக்கு அமைந்த வாகனங்கள் எல்லாம் நாம் நினைப்பது போல சாதாரணமான பசு, மான், மயில் என்பவை அல்ல. பல ஆண்டுகள், பற்பல யுகங்கள் தவம் இயற்றி எம்பெருமானுக்கு வாகனமாக வேண்டும் என்று வேண்டிய தவசீலர்களையே சிவபெருமான் வாகனமாக ஏற்று அருள்பாலித்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று உலகில் நாம் காணும் அனைத்து வாகனங்களும் சிவன் சொத்தே என்ற எண்ணத்தை ஒரு மனிதன் கொண்டாலே போதும் அதுவே வாகன விபத்துக்களை பெருமளவில் குறைத்து விடும். இதைத்தான் நமது குருநாதரும் சித்த குரு வேத சூக்த மாமந்திரமாக ’எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதே, அருளாளா அருணாசலா’ என்று உரைத்துள்ளார். கோயிலில் நாம் வணங்கும் நந்தி மூர்த்திகள் உணர்த்தும் பல உண்மைகளில் இதுவும் ஒன்று.
திருவீழிமிழலை ஈசனைச் சுமக்கும்
பூத வாகனம்
வருடத்திற்கு ஒரு முறை வரும் ஆயுத பூஜை திருநாளில் வாகனங்களைக் கழுவித் துடைத்து வணங்குவதைப் போல, தினமுமே வாகனங்களைத் துடைத்து, அடிக்கடி கழுவி சுத்தப்படுத்தி, அதையும் நமக்குத் தேவையான விதங்களில் துணை புரியும் ஒரு ஜீவனாக, உற்ற தோழனாகக் கருதி வணங்கி வந்தால் வாகனங்களும் நமக்கு றுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாகனப் பராமரிப்பைச் சிறுவயதிலேயே கற்றுத் தந்தவர்கள் நம் முன்னோர்கள்.

சிறு குழந்தைகளை முதுகில் ஏற்றி விளையாடும் உப்பு மூட்டை விளையாட்டு மூலமாகப் பெற்றோர்கள் பல நல்ல எண்ணங்களை குழந்தைகள் மனதில் முற்காலத்தில் விதைத்து வந்தனர். குழந்தையை அப்பா, அம்மா முதுகில் சுமப்பது மனிதனே மனிதனைச் சுமப்பது என்ற நிலையாகும். இது குபேர தத்துவத்தை விளக்குகிறது. குபேரனுக்கு மனிதனே வாகனமாக அமைந்திருக்கிறான். ’தந்தைதான் உனக்கு வழிகாட்டும் குபேரன்’ என்ற உண்மையையும் குழந்தைகளுக்கு இந்த உப்பு மூட்டை விளையாட்டு சொல்லித் தருகிறது. மனிதனைக் குபேரனுக்கு வாகனமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியவரே சித்ர குப்தர் ஆவார்.

பலரும் தற்காலத்தில் சித்ர குப்தரை ஒரு சாதாரண கணக்குப் பிள்ளை என்று நினைத்து விட்டார்கள். மனிதர்களுடைய நல்வினை, தீவினை அனைத்தையும் முழுமையாகக் குறித்து வைப்பது என்பது சாதாரண விஷயம் அல்லவே. மிகவும் கடினமான ஒரு பணி. இந்தக் கடினமான பணியில் அவர் இதுவரையில் ஒரு சிறு தவறு கூடச் செய்ததில்லை என்று நீங்கள் உணர்ந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஒரு நொடிப் பொழுது கவனக் குறைவு, சின்னஞ் சிறு தவறுகள்தான் பெருத்த வாகன விபத்துகளுக்குக் காரணமாகின்றன. ஓட்டுநர்களும், வாகனத்தில் பயணம் செய்பவர்களும் தவறே இழைக்காத சித்ரகுப்த மூர்த்தியை வணங்கி வந்தால் வாகன விபத்துகள் குறைய ஏதுவாகும்.

வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, தாங்கள் எடுக்கும் முடிவுகள் பல நுõறு, ஆயிரம் பேருக்கு நன்மையோ தீமையோ விளைவிக்கும் பொறுப்பில் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், எல்லாத் துறைகளிலும் உள்ள உயர் அதிகாரிகள் இவர்கள் அனைவரும் சித்ர குப்த மூர்த்தியை வணங்கி வந்தால் தங்கள் தவறுகளால் மக்களுக்கு எந்தவித துன்பமும் நேராமல் காத்துக் கொள்ளலாம். வருடம் ஒரு முறை சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே சித்ர குப்தரை வழிபடும் முறை தற்போது நிலவி வருகிறது. உண்மையில் மக்கள் னைவரும் தினமும் வழிபட வேண்டிய மூர்த்திகளுள் சித்ர குப்தர், எம மூர்த்தி, வாஸ்து மூர்த்திகளும் முக்கிய இடத்தை வகிக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தன்னுடைய அன்றாட தவறுகளைத் திருத்திக் கொண்டு தான் யார் என்ற ஆத்ம விசாரத்திற்கு வித்திடுவதே ஸ்ரீசித்ர குப்தர் வழிபாடு.
ஸ்ரீஆயுர்தேவியை வழிபடும்
ஸ்ரீபாலினன் சித்ர குப்த மூர்த்தி
சித்ரகுப்தரின் அருளைப் பெற விரும்புவோர் பௌர்ணமி தினங்களில் மலைத் தலங்களில் கிரிவலம் வந்து தேங்காய் புட்டு தானம் அளித்தல் சிறப்பாகும். புட்டு மேல் தேங்காய் ஏறி நிற்பது மனிதனை வாகனமாகக் கொண்ட குபேரனுக்கு ப்ரீதியாக அமைந்து இது குபேரனுடைய அனுகிரகத்தையும், சித்திரகுப்தரின் அனுகிரகத்தையும் ஒருங்கே பெற்றுத் தரும் சிறப்பான வழிபாடாக அமைகிறது.

சிலருக்கு அடிக்கடி நன்றாக பசிக்கும். ஆனால், ஒரு உருண்டை உணவு ஏற்றவுடன் பசி அடங்கி விடும். சிலருக்கு எவ்வளவு நேரமானாலும் பசியே இருக்காது. அதே சமயம் அளவுக்கு மீறிய சோர்வும், மயக்கமும் ஏற்படும். உணவு சாப்பிடுவதற்கும் ஆர்வம் இருக்காது. இத்தகைய துன்பங்களுக்கு காரணம் வயிற்றில் சுரக்கும் கங்கண நீர் என்னும் தீர்த்தமாகும். இந்தக் கங்கண நீருக்கு அதிபதியே சித்திர குப்தர் ஆவார். இவ்வாறு வயிற்றுக் கோளாறு, பசி மயக்கத்தால் துன்பம் அடைபவர்கள் வெள்ளிக் கிழமைகளிலும், பௌர்ணமி நாட்களிலும் தேங்காய் புட்டு தானம் செய்து வந்தால் நலம் அடைவர். சமைத்த உணவை ஸ்ரீஆயுர் தேவி படத்தின் முன் வைத்து ஸ்ரீஆயுர் தேவி மூல மந்திரத்தை 108 முறைக்குக் குறையாமல் ஓதி தானம் செய்து வந்தால் தானத்தின் பலன்கள் பன்மடங்காக விருத்தியாகும்.\

குழந்தைவேல், கூத்தப்பன், குமரன் என்று ’கு, கூ’ என்ற எழுத்துக்களை முதல் எழுத்தாக தன்னுடைய பெயரில் கொண்டவர்கள் அவசியம் வணங்க வேண்டிய மூர்த்தியே சித்திர குப்தர் ஆவார். திருச்சி லால்குடி அருகே உள்ள கூகூர் என்னும் சிற்றுõரில் உள்ள சுயம்பு சிவலிங்க மூர்த்திக்கு ஒரு யுகத்தில் சித்திரை மாத சதய நட்சத்திர தினத்தன்று சந்தனம் அரைத்துத் தந்து கூகூர் சிவத்தல மகிமையை உலகிற்கு முதன் முதலில் உணர்த்தியவரே சித்திர குப்த மூர்த்தி ஆவார். தன்னுடைய பணியில் தவறுகளே ஏற்படாத அனுகிரகத்தைப் பெற சித்திர குப்த மூர்த்தி தொடர்ந்து பல யுகங்களுக்கு கூகூர் சிவலிங்க மூர்த்திக்கு கையால் சந்தனம் அரைத்துத் தரும் கைங்கர்யத்தை ஏற்று நடத்தி வந்தார்.

எனவே, ’கு, கூ’ என்று ஆரம்பிக்கும் பெயரை உடையவர்களும், தங்கள் பணியில், தொழிலில், வியாபாரத்தில் வறுகள் ஏற்படா வண்ணம் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் கூகூர் சிவலிங்க மூர்த்திக்கு மாதந்தோறும் சதய நட்சத்திர நாட்களிலும், வளர் பிறையில் வரும் வெள்ளிக் கிழமைகளிலும் கையால் அரைத்த சந்தனத்தைச் சார்த்தி வழிபடுதலால் நல்ல முன்னேற்றத்தை அடைவர்.

அரசமரம், ஆலமரம், வேப்ப மரம் போன்ற தெய்வீக மரங்களை சாலை ஓரங்களில் வளர்த்து, பராமரித்து வந்தால் இவற்றிலிருந்து வெளியாகும் நற்குண கதிர்கள் பரவெளியைத் தூய்மைப்படுத்தி வாகன விபத்துக்கள் ஏற்படா வண்ணம் காக்கும்.
காலத்தின் அருமையை உணர வைப்பதும் வாகனமாகும். நாம் தினமும் அலுவலகம், பள்ளி, விழா நிகழ்ச்சிகள், திருமண வைபவங்கள், தேர்வுகள் போன்ற முக்கியமான இடங்களுக்கு, பணிகளுக்கு கால தாமதம் ஆகாமல் குறித்த நேரத்திற்குள் செல்ல நாம் முழுவதுமாக நம்பி இருப்பது வாகனங்களைத்தானே. ஒரு பஸ் ரிப்பேர் ஆகிவிட்டால் எத்தனை பிரயாணிகள் அடுத்து ஒன்றும் செய்ய முடியாமல் திண்டாடி விடுகிறார்கள் என்பதை தினமும் கண் கூடாகக் காண்கிறோமே. நாம் காலத்தைச் சரியாகப் பயன்படுத்த உதவுவதில் வாகனங்களுக்கு உள்ள பங்கை நன்கு புரிந்து கொண்டு வாகனங்களை இனியாவது மதித்து நடந்தால் அவை நம்மைப் பல ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றும் உற்ற ண்பனாக பணியாற்றும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அடியேனுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஒரு முறை முக்கியமான அலுவல் காரணமாக தாம்பரத்திலிருந்து மைலாப்பூர் நோக்கி ஒரு பழைய காலத்து பியட் காரில் வந்து கொண்டிருந்தேன். குரோம்பேட்டை தாண்டி பல்லாவரம் நெருங்கிக் கொண்டிருக்கும்போது கார் நிற்கும்போல தோன்றியது. காரணம் என்னவென்று பார்த்தால் காரில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. அடியேன் அவசரமாக உடனே மைலாப்பூர் செல்ல வேண்டிய நிலை. அந்தச் சூழ்நிலையில் கார் பகவானிடம் வேண்டிக் கொண்டேன். ’கபாலி, எப்படியாவது நீதான் காப்பாற்ற வேண்டும். மைலாப்பூர் வரை ங்களை கொண்டு போய்ச் சேர்த்து விடு.’ என்று மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லியபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் கார் மைலாப்பூர் கபாலி கோயில் தெப்பக்குளம் வரை வந்து அங்கே நின்று விட்டது. எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.

ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாமல் பல்லாவரத்திலிருந்து மைலாப்பூர் வரை ஒரு பழைய பியட் கார் நம்மைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்றால் வாகனங்கள் நமக்காக எந்த அளவுக்குச் சேவை புரியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இனியாவது வாகனங்களை ஜடப் பொருள்கள் என்று எண்ணாதீர்கள். அவையும் உயிருள்ள ஜீவன்களே. நமக்குச் சேவை செய்ய அல்லும் பகலும் காத்திருக்கும் பைரவ மூர்த்திகள்.



Thanks : www.kulaluravuthiagi.com

No comments:

Post a Comment