கனவு காணும் வாழ்க்கை யாவும்....
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் !
துடுப்பு கூட பாரம் என்று
தரையை தேடும் ஓடங்கள் !
நீங்கள் கேட்டவை திரைப்படத்தில் கே.ஜே.யேசுதாசின் இனிய குரலில் அமைந்த பொருளாழம் கொண்ட பாட்டினை கேட்டிருப்பீர்கள். இப்படி வாழ்க்கையில் பல பேர் பலப்பல கனவுகளோடு உலா வந்து கொண்டிருப்பார். ஆனால் எல்லோரது கனவு நனவாகிறதா என்றால் அதற்க்கு சரியான விடை கிடைக்காது. ஆனால் இன்னமும் கனவு பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று தான் வருகின்றன.
கனவுகளை பற்றிய பலன்களை விஞ்ஞான பூர்வமாக இன்னமும் யாரும் நிரூபிக்கவில்லை. நம்முடைய பழங்கால ஏடுகளில் காணப்படும் "சொப்பன சாஸ்திரம்" எனும் நூல்களும் இதில் உதவுகின்றன.
நமது இந்திய இளைஞர்களை "கனவு காணுங்கள்" என்று கூறினார் நம் முன்னாள் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள். அவர் கூறியது நம் நாட்டு நலனுக்காக. நம் நாட்டை மேம்படுத்த இன்றைய இளைஞர்களுக்கு கூறிய அறிவுரை. அதாவது கனவு வர வேண்டுமென்றால் எண்ணங்கள் ஊடுரவ வேண்டும். எந்த அளவுக்கு இந்த எண்ணங்கள் நமக்குள் பதிகிறதோ அதுவே நல் எண்ணமானால் நல்ல கனவும், கெட்ட எண்ணமானால் கெட்ட கனவும் வருவது இயற்கை.
உறக்கம் என்பது உயிரினங்களுக்கு இயற்கை அளித்த மாபெரும் புத்துணர்வு நடத்தை. இது நம் அன்றாட அலுவலால் நம் உடல் அடையும் களைப்பினை போக்கவும் புத்துணர்வு பெறவும் உறக்கம் பெரும் உதவி செய்கிறது. பொதுவாக மன அழுத்தத்தில் இருப்பவர்களும், மன நிலை சரி இல்லாதவருக்கும் உறக்கம் வருவதில்லை. மேலும் ஒருவரது ஜாதகத்தில் 12வது வீடு சயன போக ஸ்தானமாகும். இந்த இடமோ இதன் அதிபதியோ பாதிக்க படும் போது அதன் பலனும் பாதிக்கும்.
பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வருவதில்லை என்பார். சற்றே குழப்ப மனதுடன் உறங்க செல்லும் போது (பெரும்பாலோனோர் இன்று அப்படித்தான் உள்ளனர்) இப்படி அப்படி என்று கனவுகள் வருவது உண்டு. ஆனால் உறங்குவதற்கு முன் சில பயிற்ச்சிகளை (நம்முடைய ஒவ்வோர் அசைவையும் / உறுப்புகளையும் நாமாகவே படிப்படியாக நிறுத்தி இறுதியாக கண்களை நிறுத்துவது போன்ற) செய்தால் ஆழ்ந்த உறக்கம் வரும். இந்த ஆழ்ந்த உறக்கம் என்பது அடர்த்தியான உறக்கம் எனலாம். அதாவது 2 மணிநேர ஆழ்ந்த உறக்கம் 4 அல்லது 5 மணி நேர சாதாரண (கனவு காணும்) உறக்கத்திற்கு சமமாகும். அதனால் தான் யோகிகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தான் உறக்கம் கொள்வார்.
எப்பொழுதும் போல இப்பொழுதும் கூற நினைப்பது "எண்ணங்களை நன்றாக வைத்து கொள்ள வேண்டும். எண்ணங்கள் ஆனாலும், ஆசைகள் ஆனாலும் அடக்கவோ அழிக்கவோ முற்பட்டால் அது அதிகமாகுமே தவிர குறையாது. மாறாக அவற்றை திசை திருப்பலாம்."
*************
உறங்கியவுடன் தோன்றக்கூடிய கனவுகள் பெரும்பாலும் கடந்த கால வாழ்க்கை நிகழ்சிகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
நள்ளிரவு நேரத்தில் வரும் கனவு நிகழ்கால வாழ்க்கை அமைப்புகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
விடியற்காலை வரும் கனவு எதிர்காலம் பற்றியவையாக இருக்கும்
பகல் கனவு பலிப்பதில்லை. இனி நமக்கு ஏற்படுகிற கனவுகளுக்கு நமது முன்னோர்களின் வழிகாட்டி சாஸ்திர விதி முறைப்படி என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
ஒரு பிரம்மாண்டமான ஆலயம் கனவில் வந்தால் கூடிய விரைவில் கடவுள் அருளால் நமக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நிகழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.
ஆலயத்தின் தலை வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வது போல கனவு கண்டால் தீவிரமான புது முயற்சி ஒன்றில் ஈடுபட போகிறோம் என்று அர்த்தம்.
ஆலயத்தின் தலை வாசல் கதவு மூடப்பட்டது போன்று கனவு வந்தால் நமது முயற்சி தேக்க நிலை அடைய கூடும். ஆனால் கடவுள் அனுகிரகத்தால் தொல்லைகள் தானாக விலகி விடும்.
பெரிய காண்டாமணி ஓசை எழுப்புவது போல் கனவு வந்தால் நாம் செய்த சில தவறு காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் விலகி விடும். அதே நேரம் திரும்ப அதே தவறை செய்ய கூடாது என்பதற்கு எச்சரிக்கையாகவும் அந்த மணியோசையை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
அடர்த்தியான பசும் இலைகளை கனவிலே பார்த்தல் புத்திர பேறு உண்டாவதற்கு வழி ஏற்படும்.
ஒருவர் மேஜைமேல் அமர்ந்து எழுதி கொண்டு இருப்பது போல் கனவிலே பார்த்தால் உங்களுக்கு சாதகமா வழக்கு முடிவுகள் அமையும்.
அல்லது பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவையும் ஏற்படும்.
காவல் நிலையத்தை கனவில் காண நேர்ந்தால் நீங்கள் செய்து கொண்டு இருக்கும் முயற்சி தொடர்பாக சட்ட சிக்கல் ஏதோ ஒரு குழப்பம் ஏற்பட வழி இருக்கிறது என்று அர்த்தம்.
சிறு குழந்தை ஒன்று மலர்கொத்து ஒன்றை உங்களுக்கு பரிசளிப்பது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எந்த தொந்தரவும் இன்றி திருமணத்தில் முடியும்.
அல்லது காதலியின் பதிலுக்கு காத்திருந்தீர்கள் ஆனால் சாதகமான பதில் கிடைக்கும்.
ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் பூ சூட்டுவது போல் கனவு வந்தால் கணவன் மனைவி இடையே மனக்கசப்பு மறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள்.
கன்னி பெண் ஒருத்தி மங்கள பொருள்களை ஏந்தியபடி உங்கள் வீட்டுக்கும் நுழைவது போல கனவு வந்தால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடை பெற வாய்ப்பு உள்ளது.
நீங்கள் பிச்சை எடுப்பது போல கனவு வந்தால் எதிர்பாராத நிலையில் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வீட்டில் சாதாரணமாக வளர்க்கும் கோழி கிளி மைனா புற போன்ற பறவைகளை கனவிலே கண்டால் உங்களுக்கு திறமை இருந்தும் சோம்பேறிகளாக வளம் வருகிறீர்கள் என்று அர்த்தம்.
கழுகு வல்லூறு போன்ற கொடிய இயல்பு படைத்த பறவைகளை பார்த்தால் உங்களை யாரோ கவிழ்த்து விடுவதற்கு சதி செய்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்த கனவுக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு,உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி காரணமாக மற்றவர்களின் வளர்ச்சி கண்டு பொறமை படுவீர்கள்.
நீங்கள் வலை வீசியோ கண்ணி வைத்தோ பறைவைகளை பிடிப்பது போல் கனவு வந்தால் நீங்கள் தேவை இல்லமால் மற்றவர்கள் விசயத்தில் தலை இடுகிறீர்கள் என்று அர்த்தம்.
சிறைப் படுத்தப் பட்ட பறவை தப்பி ஓடுவதுபோல் கனவு வந்தால் உங்கள் மனதில் காரணமில்லாமல் இருந்து வந்த கலக்கமும் குழப்பமும் அகன்று விடும்.
நீங்கள் உடம்பு முழுவதும் மணம் மிக்க சந்தனம் பூசி கொள்வது போல கனவு வந்தால் பெரும் புகழ் அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
குடை ஒன்றை தலைக்கு மேல் பிடிப்பது போல் கனவு வந்தால் நிரந்தரமான பாதுகாப்பான வாழ்க்கை சூழல்
அமைய போகின்றது என்று அர்த்தம்.
உங்களுக்கு அறிமுகம் இல்லாதவரை சந்தித்து உரையாடுவது போன்று கனவு வந்தால் உயர்ந்த நிலை உங்களை வந்தடைய இருக்கிறது என்று அர்த்தம்.
உதாரணமாக விரோதியாக கருதியவர்கள் கூட வலிய வந்து உதவி செய்வார்கள்.
உங்கள் உடலில் உள் காயம் ஏற்பட்டிருப்பதாக கனவு வந்தால் வெளிப்படையா நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ குறைபாட்டுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் உடலில் நெருப்பு சுட்ட புண் இருப்பது போல் கனவு வந்தால் உங்களிடம் நெருக்கமாக பழகும் ஒருவரே தலை மறைவாக உங்களுக்கு எதிராக செயல் படுகின்றார் என்று அர்த்தம்.
உங்கள் உடலில் இருந்து இரத்தம் பீறிடுவது போன்று கனவு வந்தால் உங்கள் திறமை மற்றவர்களால் அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு புகழும் பணவருவாயும் கிடைக்க இருக்கிறது என்று அர்த்தம்.
உங்கள் உடலில் காயத்துக்கு கட்டு போட்டு இருப்பதுபோல் கனவு வந்தால் பொருளாதார விசயத்தில் மற்றவர்களால் ஏமாற்ற பட இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
புதிதாக கம்பளம் ஒன்றை கனவில காண நேர்ந்தால் உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருத்தர் மரணம் அடைய கூடும்.
கிழிந்து போன கம்பளம் கனவிலே வந்தால் சூதாட்டம் குதிரைபந்தயம் போன்றவற்றில் பணம் இழப்பு ஏற்படும்.
உங்களுடைய நிழல் படம் கனவிலே கண்டால் உங்கள் புகழுக்கு இழுக்கு வர கூடும் .
பெரிய மாளிகை கனவிலே காண நேர்ந்தால் பெரிய மனிதர் தொடர்பு உங்களுக்கு ஏற்படும்.
சிறிய குடிசை ஒன்றை கனவிலே கண்டால் பொருளாதார சிக்கலில் இருந்து விடு படுகிறீர்கள் என்று அர்த்தம்.
மனதிற்கு அச்சமூட்டும் வினோதமான உருவம் உங்கள் கனவிலே வந்தால் இது நாள் வரை இருந்து வந்த சிக்கலும் சங்கடங்களும் கவலைகளும் அகன்று நிம்மதி அடைவீர்கள்.
வாய் விட்டு அழுவது போன்று கனவு வந்தால் தீராத வியாதி ஒன்று தீர்வது ஆகும்.
நீங்கள் யாருக்காவது புத்தி மதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்களிடையே மனக்கசப்பு தோன்றும்.
இரண்டு பேர் சண்டை போட்டு கொண்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை குலையும்.
உங்கள் குடும்பத்தினர் ஒருவரிடம் சண்டை போடுவதாக இருந்தால் உங்கள் குடும்பத்தினர் ஒருவரால் தொந்தரவும் கஷ்டங்களும் உருவாக்கலாம்.
சின்னஞ்சிறுவர்கள் சண்டை போடுவதாக கனவு வந்தால் நீங்கள் அவசியம் இல்லாத விசயத்தில் தலை இடுவதாக அர்த்தம்.நீங்கள் யாரையாவது அடிக்க செல்வது போல் கனவு வந்தால் உங்களை பற்றி அதிகம் எண்ணி கொண்டு இருக்கிறீர்கள் அன்று அர்த்தம் இந்த மனப்பாங்கை மாற்றி கொள்வது அவசியம்.
உங்கள் காதலருடன் காதலியுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொது முரட்டுக்காளை ஒன்று முட்ட வருவது போல் கனவு வந்தால் உங்கள் காதலுக்கு பெரும் இடையுறு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
உங்களை யாரோ அடிப்பது போல கனவு வந்தால் உங்கள் திறமமையை விளங்கி கொள்ளாமல் இருந்த ஒருவர் வலிய வந்து உதவி பண்ணுவார்.
இசை நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் ரசிப்பது போல் கனவு வந்தால் பெரிய மனிதர் நட்பு உங்களுக்கு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
நீங்களே இசை நிகழ்ச்சியில் பாடுவது போல் கனவு வந்தால் பெரும் புகழ் அடைய இருகின்றீர்கள் என்று அர்த்தம்.
பலர் ஒன்று சேர்ந்து பாடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு தெரியாமல் உங்களை கவிழ்க்க சூழ்ச்சி செய்வதாக அர்த்தம்.
ஒரு புல்லங்குழல் கனவில வந்தால் உங்கள் மனம் உறுதி அற்றது என்று அர்த்தம்
நாதஸ்வரம் கனவிலே வந்தால் உங்களுக்கு தொலைவில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்
மிருதங்கம் தபேலா மேளம் போன்ற தோல் கருவிகள் கண்டால் நீங்கள் முதல் மனிதனாக ஆசை படுகிறீர்கள் என்று அர்த்தம் அந்த ஆசை நிறைவேறும்.
ஒரு இனிமையற்ற சங்கீதம் கனவிலே வந்தால் உங்கள் புகழுக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
ஒரு கைப்பெட்டி சாலையில் கிடக்க கனவு வந்தால் உங்கள் மீது வீண் பழி ஏற்பட வாய்புள்ளது.
யாராவது ஒருவர் கைபெட்டியை உங்களுக்கு தருவது போல் கனவு வந்தால் உங்களுக்கு எதிர்பாரத உதவி கிடைக்கும்.
ஒரு கைப்பெட்டி திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி காணப்பட்டால் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
நல்ல பாம்பு படம் எடுப்பது போல் கனவு வந்தால் கடவுள் அருள் உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம்.
மலைப்பாம்பு கனவிலே வந்தால் உங்கள் தொல்லைகள் பிணிகள் எல்லாம் அகலும் வாய்ப்புள்ளது.
தண்ணிப்பாம்பை கனவிலே பார்த்தல் உங்களை பயமுறுத்தியே மற்றவர் காரியம் சாதித்து கொள்வர்.
ஒரு சுண்டெலி ஓடிகொண்டிருபது போல் கனவு வந்தால் உங்கள் முயற்சி தாமதமாக நடை பெற்று கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்
பெருச்சாளியை கனவிலே கண்டால் உங்கள் குடும்பத்தில் ஒருவர் நோய் வாய்பட நேரிடும்.
பெருச்சாளியை நீங்கள் கையாலே எடுப்பது போல் கனவு வந்தால் உங்கள் தொழிலில் தவறான நடைமுறைகளை கையாளுகிறீர்கள் என்று அர்த்தம்
பெருச்சாளி கடிப்பது போல் கனவு வந்தால் உங்குகு நெருக்கமான உறவினரிடமிருந்து பல தொல்லைகள் வர வாய்ப்புள்ளது.
ஒரு தவளையை கையால் பிடிப்பது போல் கனவு வந்தால் உங்களுடைய அருமையான சந்தர்ப்பம் கை நழுவி போகின்றது என்று அர்த்தம்.
ஒரு தேரையை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் விரோதிகள் செய்யும் முயற்சி அவர்களுக்கே பாதகமான பலன்கிடைக்கும்.
ஒரு தேள் கொட்டி விட்டது போல் கனவு வந்தால் ஒரு பெரிய விபத்திலிருந்து மீண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.
பல்லி ஒன்றை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் பதவி ஆட்டம் காண போகின்றது என்று அர்த்தம்.
முட்செடி ஒன்றை கனவிலே காண நேர்ந்தால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுகிறீர்கள் என்று அர்த்தம்.
மலர்செடிகள் பூந்தோட்டம் கனவிலே வந்தால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய போகின்றது என்று அர்த்தம்.
மருதாணி கனவிலே கண்டால் உங்கள் உடல் நலம் சீராகும்.
துளசி செடி கனவிலே கண்டால் உங்கள் துன்பம் எல்லாம் கடவுள் ஆசீர்வாதத்தால் பறந்தோடும்.
தானிய மணிகளை எலி கொறிப்பது போல் கனவு வந்தால் உங்கள் வீட்டிலோ வியாபாரத்திலோ சில்லறை திருட்டுகள் போய் கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.
பாத்திரம் நிறைய எள் இருப்பது போல் கனவு வந்தால் செலவு ஏற்படும், மனசஞ்சலமும் உண்டாகும்.
சுமங்கலி பெண் விளக்கு ஏற்றுவது போல் கனவு வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடை பெற உள்ளது என்று அர்த்தம்
நீங்கள் குதிரையின் மீது சவாரி செய்வது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
ஒரு கழுதையின் மீது சவாரி செய்தால் உங்கள் தகுதிக்கு குறைவானவர்களிடம் நட்பு வைத்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்
குலுங்க குலுங்க சிரித்து கொண்டு இருக்கும் குழந்தையை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் வாழ்கையில் பணவரவு உயரும்.வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ஒரு குழந்தை அழுது கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் திட்டத்தில் எதோ குழப்பம் இருக்கின்றது என்று அர்த்தம்.
ஒரு குழந்தை அழுகும் மண்ணும் படிந்து காணப்பட்டால் உங்கள் நல்ல வாய்ப்பை பயன் படுத்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள் என்று அர்த்தம்.
குழந்தையை தாய் நீராட்டுவது போல் கனவு வந்தால் உங்கள் கடன் எல்லாம் வசூல் ஆகும்.
தொட்டிலில் குழந்தை உறங்கி கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை நிம்மதியும் சந்தோசமும் நிறைந்ததாக அமையும்.
ஒரு சிறைச்சாலை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் மீது யாரோ வழக்கு தொடர இருகின்றார்கள் என்று அர்த்தம்
சிறைச்சாலைக்குள் யாரோ அடைக்கப்பட்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக தவறு செய்து விட்டு மறைக்கப் பார்கிறீர்கள்
நீங்களே சிறைச்சாலைக்குள் அடைக்கப் பட்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் மீது தொடரப்பட்டு இருக்கும் வழக்குகளில் இருந்து விடுதலை ஆவீர்கள்.
உங்கள் கைகளில் விலங்கு மாட்டபடுவது போல் கனவு வந்தால் அளவுக்கதிகமாக ஊதாரித்தனமாக செலவு செய்கிறீர்கள் என்று அர்த்தம்.பல லட்சங்களை இழக்க வேண்டி வரும்.
இதற்கு இன்னுமொரு அர்த்தமும் உண்டு.
அளவுக்கு அதிகமான சிக்கனம் கடைபிடிக்கிறீர்கள் என்றும் அர்த்தம்.
ஒரு காவல் நிலையம் கனவிலே வந்தால் சட்ட சிக்கலில் l மாட்ட போகிறீர்கள் என்று அர்த்தம்
கப்பலில் பயணம் செய்து கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்கையில் அபாயகரமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
மூடப்பட்டு இருக்கும் கதவை கனவிலே பார்த்தல் உங்கள் தொழிலில் இடையுறாக இருந்தவர் விலகுகிறார் என்று அர்த்தம்
திறந்த கதவு மூடப்படும் கனவு வந்தால் உங்கள் தொழிலில் மறை முக எதிர்ப்பு கிளம்புகின்றது என்று அர்த்தம்.
பெரிய புத்தகம் ஒன்றை படிப்பது போல் கனவு வந்தால் இல்லற நாட்டம் குறைந்து ஆன்மீக பிரச்சாரம் செய்ய போகின்றீர்கள்
ஒரு மண்டை ஓடு கனவிலே வந்தால் உங்கள் முயற்சி வெற்றி அடைய போகின்றது.
ஒரு புற்றை கனவிலே காண நேர்ந்தால் நீங்கள் ஏமாற்றப் பட உள்ளீர்கள்
இடி மழை கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பண செலவு ஏற்படும்.
யாரோ உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் உங்களுக்கு யாரோ துர்போதனை செய்கிறார்கள் என்று அர்த்தம்.
****************
****பகுதி**** :
நன்றி : http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=11243.0
No comments:
Post a Comment