photo

photo
Venkatesh.A.S

Sunday, 1 December 2013

கன்னி சுக்கிரன் (Venus in Virgo) updated Aug 10, 2014

Dated August 10th, 2014
இன்னமும் இந்த கட்டுரை தான் மிகவும் அதிகமாக பார்வையிடப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் வேகம் அதிகமாகிறது (மற்ற கட்டுரைகளை ஒப்பிடும் போது).

இந்த சுக்கிரன் கன்னியில் இருப்பது எப்பொழுதுமே தவறாகாது.
ஜாதகர் கன்னி லக்னத்தில் பிறந்திருந்தால் சரி.
சுப கிரகங்களின் (குருவோ  / சந்திரனோ ) பார்வை இருந்தால் சரி.
(சில சமயங்களில் இது கூட பிரச்சனையாகும் !)

மேலும் இந்த இடத்தில் உள்ள சுக்கிரன் அசுப கிரகங்களின் சேர்க்கையோடு, பார்வையோடு, சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைந்து விட்டால் அல்லது புதன் பலவீனம் பெற்று விட்டால்  நிலைமையை சரி செய்ய மிகவும் சிரமப்பட வேண்டும்.

48. சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து, நெஞ்சில் இடரும் தவிர்த்து இமைப்போதருப்பார், பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே? 
Read More at: bhakthiplanet.com/2012/06/abirami-andhadhi-lyrics/ © BHAKTHIPLANET.COM


மேலே காணும் "அபிராமி அந்தாதியின்" பாடல் வரிகளை மனனம் பண்ணி சொல்லி வர (ஒரு நாளைக்கு 108 முறை என 1 வருட காலம்) அம்பிகை யின் அருளுக்கு நாம் பாத்திர மாகி விட்டால் நாம் நலம் பெறலாம்.  அதற்கு நாம் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மேலே காணப்படும் வரிகளை மட்டுமல்ல "அபிராமி அந்தாதி" 100 பாடல்களையும் அனுதினமும் தவறாது சொல்லி வர தோஷங்கள் நிச்சயம் கட்டுப்படும். 

Dated 05-05-14 
இந்தக் கட்டுரை தான் மிக அதிக அளவில் பார்வையிடப்பட்ட பட்டியலில் தற்போது முன்னிலையில் உள்ளது. அதுவும் குறுகிய காலத்தில் எனும் போது இதன் பாதிப்பு எத்தனை பேரிடத்தில் உள்ளது என்பதை யோசிக்கும் சற்று வருத்தமாகவே இருந்தாலும், அதற்க்கான தீர்வு என்ன என்பதை பார்க்கவே விரும்புகிறேன்.
சத்ய யுக ஆரம்பத்தில் தர்மம் நான்கு கால்கள் கொண்ட அரியணையில் இருந்தது. அந்த யுகத்தில் வாழ்ந்தவர் மனதில் துளியளவு களங்கம் இல்லை.
பின்னர் வந்த த்ரேதா யுகத்தில் தர்மம் ஒரு காலை இழந்து மூன்று கால்கள் கொண்டிருந்தது. அப்போது வாழ்ந்தவர் மனதில் களங்கம் (25 %) மெல்ல புகுந்தது. அது ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்தியின் காலமாகும்.
அதன் பின்னர் வந்த துவாபர யுகத்தில் தர்மம் மீண்டும் ஒரு காலை இழந்து இரண்டு கால்களில் மட்டுமே நின்றிருந்தது. அப்போது வாழ்ந்தவர் பாதி நல்லவராகவும் பாதி நல்லவரல்லாதவராகவும் இருந்தனர் (50 : 50).  அது சாட்சாத் கிருஷ்ண பரமாத்வாவின் காலமாகும்.
அதன் பின்னர் வந்த இப்போதைய கலியுகத்தில் தர்மம் தன் மூன்று கால்களை இழந்து இப்போது ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கிறது. இந்த யுகம் ஆரம்பத்தில் அண்ணனும் தம்பியும் போன்ற காமமும், கோபமும் ஒருவர் ஒருவரை பார்த்து சவால் விட்டாராம், காமம் சொன்னதாம் “இந்த யுகத்தில் என்னால் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் அவரவர் விதிப்படி சீரழிப்பேன். இதில் முதலிடம் எனக்கே என்றதாம்”. அதற்கு கோபம் சொன்னதாம் “உன்னால் சிறு குழந்தைகளையும் வயோதிகர்களையும் நோயாளிகளையும் அவ்வளவு எளிதில் வசப்படுத்த முடியாது. ஆனால் நான் மேற்படி எல்லோரையும் என் வசப்படுத்தி அவரவர் விதிப்படி சீரழிப்பதில் எனக்குத் தான் முதலிடம் கிடைக்கும் என்றதாம்”. 
இந்த நிலை மெல்ல மெல்ல முன்னேறி இந்த யுக முடிவில் தர்மம் தன் நான்கு கால்களையும் இழந்து விடும் நிலையில் எங்கு பார்த்தாலும் காமமும் குரோதமும் நிறைந்து மனிதர் கிட்டத்தட்ட மிருகங்கள் போன்று மாறும் நிலையில் உலகில் பெரும் மாற்றம் நிகழும் என்று நம்பப்படுகிறது. அதற்க்கு இன்னும் நிறைய பல ஆயிரம் வருடங்கள் ஆகும் என தெரிகிறது. 
அது போலவே இன்று சூழ்நிலை நிலவுகிறது. மிகவும் அதிகமாக கோபம் கொண்டவரிடம் காமமும் எளிதில் பற்றிக்கொள்ளும். அதே போல மிகவும் அதிகமாக காமம் கொண்டோரிடம் கோபமும் கண்டிப்பாக பற்றிக் கொள்ளும்.
காமத்தை சுக்கிரன் ஆட்சி செய்கிறான். கோபத்தை செவ்வாய் ஆட்சி செய்கிறான். மேற்படி ஒருவர் ஜாதகத்தில் இருவரும் சேர்ந்து விட்டாலோ / ஒருவரை ஒருவர் பார்த்து விட்டாலோ / இருவரும் பரிவர்த்தனை ஆகி விட்டாலோ / இருவரும் ராகுவின் சாரத்தில் இருந்து விட்டாலோ / இருவரும் சனியின் வீட்டில் இருந்து விட்டாலோ / இருவரும் சனியுடனோ, ராகுவுடனோ சேர்ந்தாலும் நிலைமையை நன்றாக கவனிக்க வேண்டும்.
பொதுவாக சுக்கிரன் ஒருவருக்கு மிகவும் பலம் பெறுவது கூடாது. அமுதமாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான்.
சரி, நம்முடைய நிலைமையை நாம் அறிந்து விட்டாலும் பாதிப்பு இருந்தால் நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் இது போன்று வேறு ஒருவருக்கு நடப்பதை தடுக்க முடியுமல்லவா?
நமக்கு பின்னர் வரும் ஆத்மாக்களை மேற்படி தோஷம் (கோள்சார நிலையில்) ஏற்படும் நாளில் பிறக்காமல் தடுக்க வேண்டும். உதாரணமாக இந்த சுக்கிரனோ செவ்வாயோ கூடி இருக்கும் கால கட்டங்களில் குழந்தை பிறப்பதை தடுக்க அதற்கு ஏற்ற படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
எதுவும் வருமுன் காப்பதே நல்லது.


Dated 27-04-2014
இதுவரை நான் இங்கு பதிவு செய்த கட்டுரைகளில் "மூல நட்சத்திரத்திற்கு" அடுத்தபடியாக இந்த கட்டுரை மிக அதிக அளவில் வாசிக்க பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இது முன்னணியில் வந்து விடும் எனும் போது மேலும் இது பற்றிய தகவல்களை சேர்த்திட எண்ணி இன்று கூடுதல் தகவல்களை சேர்த்துள்ளேன். இதில் யாருக்கேனும் ஒருவருக்கு பயன் ஏற்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நானாகவே இருக்கும்.

பார்வையிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அதே சமயத்தில் இங்கு எவ்வளவோ கட்டுரைகள் பதிவு செய்திருந்தாலும் குறிப்பிட்ட கட்டுரைகளுக்கு தான் அதிக "Page Views" கிடைப்பது சமூகத்தில் அதன் பாதிப்புகள் இருப்பதை அறிய முடிகிறது. இப்படி பாதிக்க பட்டவரை ஏதேனும் ஒருவிதத்தில் (ராமாயணத்தில் ஸ்ரீ ராமனுக்கு உதவின அணில் போல) அவர் துன்பம் தீர இந்த கட்டுரை மிகவும் சிறிதளவேனும் உதவினால் நான் மிகவும் பேறுபெற்றவனாவேன். 

காதலுக்கு கண் இல்லை 

"கன்னி ராசி என் ராசி 
காளை ராசி என் ராசி , ரிஷப காளை ராசி என் ராசி 
பொருத்தம் தானா நீ யோசி 
அது பொருந்தாவிட்டால் சந்நியாசி" 

-இது ஒரு பழைய திரைப்பட (குமார சம்பவம்? ) பாடல். கே.ஜே. யேசுதாசும், சுசீலாவும் பாடின இனிய பாடல் இது.  

நிறைய பேர் ஒரு பேச்சுக்காக "டேய் இவனுக்கு கன்னி ராசி போலிருக்கிறது . இப்படி நிறைய (கன்னி) பேர் இவனையே சுத்தி சுத்தி வருகிறார்களே " என்று கிண்டலாக சொல்வார். உண்மையில் இது உண்மையா ? 

பேச்சு வழக்கில் இருக்கும் நிறைய விஷயங்களை அதன் பின்னணியில் உள்ள உண்மையான உண்மைகளை நான் என்றென்றும் கவனிக்க தவறியதில்லை. 
காதல் வயப்படும் நிறைய பேர் மேல்கண்ட பாடல் வரிகள் போன்று தெரிந்தோ / தெரியாமலோ ஒருவரோடு ஒருவர் உரையாடுவார். (உண்மையில் இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் ஜோதிடம் அறிந்திருப்பார் என நினைக்கிறேன். ஏனெனில் கன்னி ராசிக்கு ரிஷபம் ஒன்பதாவது இடம் , அதே போல ரிஷபத்திற்கு கன்னி ஐந்தாமிடம் . ஜோதிடத்தில் 1, 5, 9 ஆம் இடங்கள் தான் மிகவும் முக்கியமானவை . ) 

கன்னி ராசி என்றால் சந்திரன் கன்னியில் (உத்திரம் , ஹஸ்தம் , சித்திரை) இருப்பதாக அர்த்தம். இது சந்திரனின் நிலை , அதாவது மனோகாரகனின் நிலை . ஆனால் காதல் காரகன் எங்கே என்று பார்க்க வேண்டும். அது தான் சுக்கிரனின் நிலை . ஆனால் (கன்னியில்) இங்கே சுக்கிரன் இருப்பது மிகவும் கவனிக்க பட வேண்டிய ஒன்று. ஏனெனில் எல்லோருக்கும் பலம் , பலவீனம் என்று இருப்பது போல நவ கிரகங்களில் சுக்கிரன் "மீனத்தில்" பலம் பெறுவதும்,  ரிஷபம் துலாமில் ஆட்சி பெறுவதும், கன்னியில் நீசம் பெறுவதும் காலத்தின் சுழற்ச்சியில் ஏற்படுவது. 

ஒரு காரகத்திர்க்குரிய கிரகம் பலம் பெறும் போது அந்த காரகத்தில் பலமான எண்ணங்கள் ஏற்படும். அதுவே பலவீனம் பெறும் போது அதே காரகத்திலே பலவீனமான (நேர்மாறான) எண்ணங்களும் ஏற்படுவது இயற்கையின் விதி.  
(இப்பொழுது சில பேருக்கு புரியலாம் இங்கே சுக்கிரன் இருந்தால் எவ்வாறு இருக்கும் என்று) 

இந்த சுக்கிரனை (கன்னி ) மற்ற சுப கிரகங்கள் பார்த்தாலோ , அஷ்டவர்கத்தில் சுக்கிரனுக்கு மூன்று / அதற்கும் குறைவான புள்ளிகள் கிடைத்தால் ஓரளவு தப்பித்து கொள்ளலாம். இந்த நிலைமையில் ராகுவின் சேர்க்கை , சம்மந்தம் ஏற்பட்டு விட்டால் , அஷ்டவர்கத்தில் சுக்கிரனுக்கு ஐந்து / அதற்கும் மேலே புள்ளிகள் கிடைத்து விட்டால் கடவுளையே சரணடைய வேண்டியது தான்.
அப்படியே சரணடைந்தாலும் துன்பங்களை தாங்குகின்ற சக்தி தான் கிடைக்குமே ஒழிய, வருகின்ற அதற்கேற்ற தசா பத்திகளில் வினைகளை அனுபவித்தே தாங்க வேண்டி வரும். ஏதேனும் சிலருக்கு சிறு துன்பத்தோடு போய் விடுவதும் நடக்கலாம் (அது அவர்கள் பூர்வ புண்ணிய பலன்களை பொறுத்து மாறுபடும்)

If anybody wants to know more GO here....

இவற்றில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் தெரிய படுத்துங்கள் . மறுப்புகள் இருந்தால் மன்னியுங்கள் . 

மேலே பார்ப்போம் ......

*******

ன்ன தான் உறுதியாக இருந்தாலும் உண்மையாக காதலித்தாலும் சில காதல்கள் வெற்றியடையாமல் போய்விடுகின்றன. அந்தஸ்து, ஜாதி, மொழி, கௌரவம் என்ன பலப் பல காரணங்களால் சம்பந்தப்பட்ட ஜோடிகள் சேரமுடியாமல் பிரிந்து விடுகின்றனர். அதில் சிலர் தவறான முடிவும் எடுத்து பெறுவதற்கரிய இந்த மானிட பிறவியை முடித்துக் கொள்கின்றனர். இருந்து சாதிப்பதற்கு வழிகள் இருக்க எதற்கு தவறான முடிவு?
காதலை நிறைவேற்றுவதில் நவக்கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் சுக்கிரனின் பங்கு இதில் மகத்தானது. காதலுக்குரிய கிரகம் இவரே.
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பது மிக மிக அவசியம். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் அவசியம் தேவை. சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தால்தான் ஒருவன் பூமியில் சொகுசான வாழ்க்கையை வாழமுடியும். நமக்கு அழகை, வசீகரத்தை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் கிரகமும் இது தான். அதிர்ஷ்டத்தை வழங்குவதும் சுக்கிரனின் பார்வையே. அதை குறிக்கும் வகையில் ‘சுக்ர தசை’ என்ற ஒரு சொல்லே வழக்கில் உண்டு.
சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைவார். அவ்வாறு அமைப்பு பெற்ற ஜாதகர்கள், சுக்கர தசை நடப்பில் உள்ளவர்கள், J,P,V போன்ற எழுத்துக்கள் நடப்பு எழுத்தாக உள்ளவர்கள் சுக்கிரனை வழிபாட்டு தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
பிரம்மாவின் மானசீக புத்திரராக கருதப்படும் பிருகு முனிவருக்கு பிறந்தவர் தான் சுக்கிர பகவான். இவர் காசிக்கு சென்று அங்கு ஒரு சிவலிங்கத்தை படைத்து, நீண்டகாலம் தியானம் செய்ததன் விளைவாக சிவ பெருமானின் அருளால் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை கற்று இறந்தவரை உயிர்பிக்க செய்தார். மேலும் அசுரர்களால் குருவாக போற்றப்பட்டார். சுக்கிரரின் பக்தியால் நெகிழ்ந்த சிவபெருமான் இவரை நவக்கிரகங்களில் ஒருவராக நியமித்தார்.
காதலுக்கு ஏன் கண்  இல்லை என்று சொல்கிறார்கள் தெரியுமா?
அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.
வாமன அவதாரத்தில் மஹாபலி சக்கரவர்த்தி தன் யாகத்தை நிறைவு செய்ய தானம் கொடுக்கும் போது, மகா விஷ்ணு வாமனராக உருவம் கொண்டு தானம் பெற வேண்டி வந்திருந்த சமயம், தமது ஞான திருஷ்டியால் வந்திருக்கும் சிறுவன் வேறு யாருமல்ல சாட்ச்சாத் மகாவிஷ்ணுவே என்பதை உணர்ந்துகொண்ட சுக்கிராச்சாரியர் “வேண்டாம் தானம் செய்யக் கூடாது” என மஹாபலியை தடுத்தார். இருந்தும் தானம் கொடுக்க முன்வருகிறார் மஹாபலி.
எனவே அத்தானத்தை தடுக்கும் பொருட்டு – நீரை தாரை வார்த்துக் கொடுக்கும் சமயம் – அந்த கமண்டலத்தின் துவாரத்தை வண்டு உருவில் சுக்கிராச்சாரியார் சென்று அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது வாமனராக உள்ள பகாவன் விஷ்ணு இது சுக்கிராச்சாரியாரின் லீலை என்பதை புரிந்துகொண்டு கமண்டலத்தின்  துவாரத்தில் உள்ள அடைப்பை நீக்கும் பொருட்டு தர்பை புல்லினால் குத்தும்போது சுக்கிராச்சாரியார் கண்களில் தரப்பை புல் குத்த சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழக்கிறார்.
கண்ணை இழந்து வாடும் சுக்கிராச்சாரியார் பூலோகத்துக்கு சென்று மாங்காடு எனும் இடத்தில் சிவபெருமானை நோக்கி தவமிருக்கிறார். அவரின் கடுந்தவத்திற்க இறங்கி இறைவன் மீண்டும் கண் பார்வையை வழங்குகிறார். சுக்கிராச்சாரியாரின் வேண்டுகோலுக்கிணங்கி இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு வெள்ளீசுவரர் என பெயர் பெற்று அருள்பாலிக்கிறார். எனவே இத்தலம் சுக்கிரனுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது.
காதலுக்குரிய கிரகமான சுக்கிரன் இவ்வாறு கண்களை இழந்ததால் தான காதலுக்கு கண் இல்லை என்று வழக்கு தோன்றியது.
இத்திருத்தலம் மாங்காட்டில் உள்ளது. குன்றத்தூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் மாங்காடு அமைந்துள்ளது.
இறைவனின் திருப்பெயர் : வெள்ளீஸ்வரர்
ஆலய தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 1 மணிவரை | மாலை 4.30 முதல் 9 மணிவரை
சுக்கிர துதி
சுக்கிர மூர்த்தி சுபமிகத் ஈவாய் வக்கிர மின்றி வரமிகத்
தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக்
கொடுப்பாய் அடியார்க் கருளே
காதல் ஈடேறி விரும்பியவரை மணமுடிக்க விரும்புகிறவர்கள் வெள்ளிதோறும் சுக்கிர காயத்ரி கூறி சுக்கிரனுக்கு வெண் தாமரை மலர்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
சுக்கிர காயத்ரி
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்
பட்டாடை, மொச்சை பயிர், தயிர், பாலாடை கட்டி, வாசனைப் பொருட்கள், சர்க்கரை,, சூடம், ஆடை, அரிசி போன்றவற்றை வெள்ளியன்று மாலை வேளையில் ஏழைப் பெண்ணுக்கு தானம் செய்தல் வேண்டும். பசுவுக்கு அகத்திக் கீரை கொடுப்பது சாலச் சிறந்தது.
காதல் கைகூட – விரும்பியவருடன் மண வாழ்க்கை அமைய – மேலும் சில எளிய பரிகாரங்கள் :
வெள்ளிக்கிழமை தோறும் மகாலக்ஷ்மி வழிபாடு செய்தால் காதலில் மகத்தான வெற்றி கிடைக்கும். மாலையில் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் ஆகியவற்றை சொல்லவேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்வது காதலர்களை சேர்த்து வைக்கும்.
காதல் கைகூட சுந்தர காண்ட பாராயணம்
ராமாயணத்தில் மிகுந்த விசேஷம் அனுமனின் பராக்கிரமங்களை கூறும் சுந்தர காண்டம் தான். சுந்தர காண்டத்தை படித்துவந்தாலே வீட்டில் சுபகாரியங்கள் சீக்கிரம் நடந்து தரித்திரங்கள் விலகி ஓடும்.
காதல் கைகூடி விரும்பியவரை கரம் பிடிக்க எண்ணுபவர்கள் சுந்தரகாண்டத்தில் உள்ள 36 வது ஸர்க்கத்தை காலை மற்றும் மாலை வேளைகளில் பக்தியுடன் படித்து வந்தாலும் காதலில் வெற்றி கிடைக்கும். அனுமன் சீதைக்கு கணையாழி கொடுத்த சம்பவத்தை விவரிக்கும் ஸர்க்கம் இது. (சுந்தர காண்ட பாராயணத்துக்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. கூடுமானவரை அவற்றை பின்பற்றி பாராயணம் செய்தால் முழு பலன்கள் கிடைக்கும்.)
மேலும் சில சுக்கிர பரிகாரத் தலங்கள் :
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
* சூரியனார் கோயில் அருகில் உள்ள கஞ்சனூர். சூரியனார் கோயிலில் சுக்கிரனுக்கு தனி சந்நிதி உள்ளது.
* பண்ருட்டி அருகில் உள்ள திருநாவலூர்
* திருத்தணி முருகன் கோயில் ஆகியவை சுக்கிரனுக்கு உரியவை.
* சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் என்ற கோயில் சுக்கிரனுக்கு உரிய ஸ்தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் தோஷங்கள், தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
ஜாதகத்தில் சுக்கிரன் பாதகமாக அமைந்தவர்கள், சுக்கிரப் பரிகாரத் தலங்களை வெள்ளிக்கிழமை தரிசிப்பது நல்லது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்களும் சுக்கிர வழிபாட்டால் மீண்டும் ஒன்று கூடுவார்கள்.
- See more at: http://rightmantra.com/?p=2791#sthash.EhC6blcS.dpuf


பொதுவாக "சுக்கிரன்" (Venus) உயிர்களில் காதல் உணர்வு (உண்மையான) , காம உணர்ச்சி (நேர்மையான) , வாழ்க்கைத் துணை ,செல்வ நிலை (Wealth), அந்தரங்க உறுப்புகள் ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாகிறார். 

இந்த சுக்கிரன் திருமணம் செய்யப்போகும் தம்பதியர் ஜாதகத்தில் ஒருவர் மற்றவருக்கு (1-6, 1-8, 1-12) நேர் எதிரான நிலைகளில் இருக்கக்கூடாது. 


அதாவது ஒருவருக்கு சுக்கிரன் மேஷத்தில் (Aries) (1 ) இருந்து மற்றவருக்கு கன்னியில் (Virgo) (6 ) இருப்பது அடிக்கடி சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தும். அதற்க்கு முக்கிய காரணம் "மனநலம்" (Psychology) ஆகத்தான் இருக்கும். அதே போல ஒருவருக்கு சுக்கிரன் அதே மேஷத்தில் (1) இருந்து மற்றவருக்கு விருச்சிகத்தில் (8) இருப்பது வேறுமாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்க்கு காரணம் தீவிர "உடல் சுகமாக " இருந்து ஒருவருக்கு (விருச்சிகத்தில் சுக்கிரன் அமைந்தவருக்கு) அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு செல்லலாம். இது போன்ற  பட்சத்தில் உடனடியாக பரிகாரங்களை மேற்கொள்ள அல்லது ஒரு கைதேர்ந்த மன மருத்துவரை ஆலோசிப்பது (பாதிக்கும் கால கட்டத்தை அறிந்து கொண்டு) நல்லது.    


மேலும் இது குறித்து அறிய   இங்கே   செல்லவும்


2 comments:

  1. நான் ரிஷப லக்கினம் கடகராசி.கன்னியில் சுக்கிரன் நீச்சம்.துலாத்தில் புதன் சூரியன் இணைந்து புதன் பரிவர்த்தனை,வர்கோத்தமம்.எனக்கு நீச்சபங்கம் உண்டா?தயவுசெய்து ஜோதிடம் கற்றவர்கள் சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள் மிக்க மகிழ்ச்சி....

    ReplyDelete