photo

photo
Venkatesh.A.S

Monday, 28 October 2013

Saturation Sustainability ( திகட்டலை தாங்குவது Thigattalai thaanguvathu )


அளவுக்கு மிஞ்சினால்... 

"போ நீ போ ...
தனியாக தவிக்கின்றேன். துணை வேண்டாம் அன்பே போ..
பிணமாக நடக்கின்றேன். உயிர் வேண்டாம் தூரம் போ ..."

- இது "3" திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் ஆரம்ப வரிகள்.  



ஒரு கிண்ணத்தில் ஒரு அளவு தண்ணீர் ஊற்றி பின்னர் அதில் காலளவு சர்க்கரையை போட்டால் அது கரைந்து விடும். மேலும் காலளவு சர்க்கரையை போட்டால் அதுவும் கரையும். இப்படியே போட்டுக்கொண்டே போனால் ஒரு அளவுக்கு மேல் சர்க்கரை கரையாது அல்லவா ? 

அது தான் திகட்டும் நிலை (Saturation) 

இப்போது அடிப்படையை பார்ப்போம். வாழ்க்கையில் எல்லாமே கணக்குதான் என்னும் தத்துவத்தில் இங்கு தண்ணீர் ஒரு பங்கு என்றால் சர்க்கரையின் கரையும் அளவு என்பது ஒரு அளவோ , இரண்டு அளவோ இருக்கலாம். மேலும் ஆழமாக பார்த்தால், இதில் தண்ணீர் - சர்க்கரை கரையும் அளவு வேதியல் ரீதியாக ஒரு அர்த்தம் (அணுக்கள் , மூலக்கூறுகள் மாறுபாடு பொறுத்து) இருக்கும். 

இது போலத்தான் காற்றில் ஒளிந்திருக்கும் ஈரப்பதம் என்பது. இந்த ஈரப்பதமானது கூட காற்றில் ஒரு அளவுக்கு மேல் சேராது. நீர் மூலங்கள் (water sources) தான் ஈரப்பததை அதிகரிக்கின்றன. காற்றின் வெப்ப நிலை, வளி மண்டல அழுத்தம் பொறுத்து  ஈரப்பதம் மாறுபடும்.  இது 100% எட்டியதும் , இந்த திகட்டிய ஈரக்காற்றால் மிகவும் புழுக்கம் ஏற்படும். 

மனித மனங்களில் "திகட்டல்" வருவதன் காரணம் பல்வேறாக இருக்கலாம். ஆனால் அடிப்படை என்று பார்த்தால் "எதிர்பார்ப்புகள்" அதிகமானால் (பேராசை) எல்லாமே விரைவில் அலுத்துவிடும். அப்பொழுது திகட்டல் எட்டிப் பார்க்கும் . இந்த திகட்டலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன...?

1. இனம் புரியாத கோபம் எல்லோர் மீதும் ஏற்படலாம். 
2. காரணமே இல்லாமல் எதன் / எவர் மீதும் எளிதில் விருப்பமோ / வெறுப்போ                ஏற்படலாம். 
3. புதிது புதிதான பழக்க வழக்கங்கள் ஏற்படலாம். 
4. நடை முறைக்கு ஒத்து வராத விஷயங்களில் ஆர்வம் ஏற்படலாம். 
5. எவரையும் ஒரு பொருட்டாக மதிக்காத போக்கு வரலாம்.  

தற்போதைய உலகில் "மாற்றங்கள்" தான் பீடு நடை போடுகின்றன. மாற்றங்கள் தேவை தான்.தேவையானவற்றில் மட்டுமே. எல்லாவற்றிலும் அல்ல. இப்பொழுது "கோபம்" பற்றிய ஒரு கதை .....

****************

ஒரு சாது தன் சீடர்களிடம் 'கோபப்படும்போது ஏன் ஒருவர் மற்றவரைப் பார்த்து கத்துகிறார்?' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தந்தார்கள். ஒரு சீடன் 'நாம் நம்முடைய பொறுமையை இழந்து விடுகிறோம். அதனால் சத்தம் போட்டு கத்துகிறோம்' என்றான். அதற்கு சாது, 'ஏன், அவர்கள் பக்கத்தில் தானே இருக்கிறார்கள்? பின் ஏன் கத்த வேண்டும்' என்று மீண்டும் கேட்டார்.
.
சீடர்கள் ஒவ்வொரு பதிலை கொடுத்தார்கள். அதில் ஒன்றிலும் திருப்தி
அடையாத சாது சொன்னார், 'ஏன் கோபம் வரும்போது கத்துகிறார்கள்
தெரியுமா? கோபம் வரும்போது அவர்களின் இருவரின் இருதயமும்
ஒருவரையொருவர் விட்டு, தூர போய் விடுகிறது. அவர்களையுமறியாமல்,
தாங்கள் மற்ற நபரோடு தூர போய் விட்டோம் என்கிற எண்ணத்தினால்
சத்தமாய் கத்துகிறார்கள்' என்றார்.
.
.
 அப்போது ஒரு சீடன், 'கோபம் வரும்போது கத்துகிறார்கள், ஆனால் அன்பு
வரும்போது?' என்று கேட்டான். 'அன்பு வரும்போது அவர்கள் மெதுவாக
பேசுகிறார்கள். காதில் கிசுகிசுப்பாய் பேசினாலும் அது நன்கு கேட்கும்,
ஏனெனில் அவர்கள் இருதயம் மிகவும் அருகில் இருப்பதால். கடைசியில்
அவர்கள் பேசக்கூட வேண்டாம். ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்டாலே போதும், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று விளங்கிக்
கொள்ளும்' என்றுக் கூறினார். அது எத்தனை உண்மை!
.
திருமணமான புதிதில் மற்றவர்கள் கேட்காத வண்ணம் மெதுவாக பேசிக்
கொள்ளும் தம்பதியர், நாளாக நாளாக ஒருவர் ஏன் பேசுகிறார் என்று
நினைக்கும் வண்ணம் மிகவும் சத்தமாக கத்தி, பேசி சண்டைப் போட்டுக்
கொள்ளுகிறார்கள்.
.
அதே தம்பதியர், நாளாக நாளாக எதுவும் பேசாமலே கண்களினாலே
பார்த்து ஒருவரை யொருவர் புரிந்துக் கொள்ளும் காலக்கட்டத்திற்குள்ளும்
வருகின்றனர். புது தம்பதியினர் போல பழைய தம்பதிகள் அதிகம் பேசிக்
கொள்ளாவிட்டாலும், இருவரும் இருதயம் ஒத்திருப்பதால் அதிகமாய்
பேசாவிட்டாலும், ஒருவரையொருவர் புரிந்துக் கொள்கின்றார்கள்.
.
சில வேளைகளில் பழைய தம்பதியராயிருந்தாலும், கோபம் அளவு கடந்து
வரும்போது, எதையுமே நினைக்காமல் ஒருவரையொருவர் வார்த்தைகளால்
தாக்கி, புண்பட்டு, அன்று முழுவதும் சாப்பிடாமலும், அப்படியே
ஜெபிக்காமலும் தூக்கத்திற்கு செல்கின்றனர்;. பசியினாலும்,
கோபத்தினாலும் தூக்கமும் வராமல், எழுந்துப்போய் சாப்பிடவும் வறட்டு
கௌரவம் விட்டுக் கொடுக்காமல், பாடுபடுவார்கள். ஏன் இந்தப்பாடுகள்?
சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக மன்னித்து மறந்து, ஜெபித்துவிட்டு
படுத்தால், அடுத்தநாள் புதிய நாளாக, அன்றலர்ந்த மலராக
புத்துணர்ச்சியோடு எழுந்தரிக்கலாமில்லையா?
.
தம்பதியர் மட்டுமல்ல, மற்றவர்களும் மனதில் கோபத்தை வைத்துக்
கொண்டிருப்பது சரியல்ல, எந்த புதிய புண்களையும் சீக்கிரம்
ஆற்றிவிடலாம். ஆனால் அது சீழ்வைத்து, வீக்கம் கட்டிப் போனால் அதை
ஆற்றுவது கடினம். அதுப்போல கோபம் கொண்டாலும் மனதில் வஞ்சம்
வைத்து பழிவாங்கத் துடிக்காமல், அதை அன்றே மன்னித்து,
மறந்தோமானால், அதனால் நமக்கு பின் விளைவுகள் இராது. ஆனால்
மனதில் வைத்து எப்போதும் பழிவாங்க வேண்டும் என்ற வெறியோடு
செயல்பட்டால், அதனால் நம் உடல் நலம் கெடுவதுடன், அதிலிருந்து
விடுபட்டு வருவது கடினமாகலாம்.

கசப்பு மனப்பான்மை, குற்றம் கண்டு பிடிக்கும் நோக்கம், பிறர் மனதை புண்படுத்துதல், வஞ்சக புத்தி ஆகியவை தூய அன்பென்னும் மரத்தில் உற்பத்தியாகுபவை அல்ல.

****************

ஆரம்பத்தில் காணப்படும் "3" திரைப்பட பாடல் வரிகளுக்கும் இந்த பதிவிற்கும் என்ன சம்மந்தம் ?

இதுவும் ஒரு திகட்டலின் வெளிப்பாடு தானே ! ஒருவருக்கு விரும்பியது எல்லாம் உடனுக்குடன் கிடைக்க ஆரம்பித்து விட்டால், இனம் புரியாத வெறுப்பும் , விரக்தியும் , கோபமும் உண்டாவது சிலருக்கு இயற்கை. ஆரோக்கியமற்ற இந்த நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மனநல மருத்துவம் செய்து கொண்டால் மிகப்பெரிய நன்மையை அடையலாம்.

இல்லாவிடின் இந்த திரைப்படத்தில் வரும் கதாநாயகனின் இறுதி நிலையை அடைய நேரிடும்.

(அழகான கதையம்சம், ஆழமான உட்கருத்தை இந்த சமூகத்திற்கு எடுத்துரைத்த  இந்த திரைப்படத்தை உருவாக்க உழைத்த அனைவரையும் பாராட்டலாம்.)

***பகுதி***
நன்றி : http://anudhinamanna.net/

Wednesday, 23 October 2013

Ego does matters (அகங்காரத்தின் செயல்கள்)


பயங்கர ஆயுதம் 

"கத்தியின்றி ரத்தமின்றி"  என்கிற வார்த்தையை நாம் கேட்டிருப்போம், பார்த்திருப்போம். நம் பாரத நாட்டினை ஆங்கிலேய சர்வாதிகார பிடியிலிருந்து விடுவிக்க எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் உயிர், உடைமை , இருப்பிடம் இவை எவற்றையும் பாராது காந்திய வழியில் "கத்தியின்றி ரத்தமின்றி" நீண்ட அறப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதால் தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.  

கத்தியும் ரத்தமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.அதாவது கத்தி போன்ற ஆயுதத்தால் தான் ரத்தத்தை வரவழைக்க முடியும். அப்படி கத்தியும் ரத்தமும் சேர்ந்தால் என்ன ஏற்படும் ? 

வலி, வேதனை, காயம் 

போன்ற  இதே உணர்வுகளை ஏற்படுத்தும் , 
ஆனால் இதை விட ஒரு பயங்கர ஆயுதம் அதுவும் கண்ணுக்கு தெரியாத ஆயுதம் ஒன்று இருக்குமென்றால் அது என்ன ? 

அகங்காரம் 

************
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என் மீது தன் பாரத்தைப் போடுகிறானோ,அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா




**************

இந்த அகங்காரமானது மனிதர்களிடையே சர்வ சாதாரணமானது. அது எப்படிப்பட்ட ஆயுதம் என்று அவர்களுக்கே புரியாதது. இந்த அகங்காரம் எப்படி வருகிறது ?

அதிக பணத்தினால் ,
பெரிய பதவியினால் , 
அளவுக்கதிகமான பெருமையினால் ,
அபரிமிதமான தன்னம்பிக்கையினால் ,
கட்டுப்பாடற்ற சுயநலத்தினால் ,
தேவையற்ற அலட்சியத்தால்.........

- இப்படியே சொல்லிக்கேண்டே போகலாம்.  


அதிக பணம் அதை வைத்துள்ளவரை, எவரையும் பணத்தால் விலைக்கு வாங்கி தன் காரியத்தை சாதித்து கொள்ளலாம் என்கிற அகங்காரம் ஆட்கொள்கிறது.

பெரிய பதவியிலிருப்பவரை, தனக்கு பிடிக்காத எவரையும் பதவியால் வீழ்த்தி தன் விருப்பத்தை நிறைவேற்றி கொள்ளலாம் என்கிற அகங்காரம் ஆட்கொள்கிறது.

அளவுக்கு அதிகமான பெருமையுடையவரை, தன்னைச் சுற்றியுள்ளவரிடம்  பெருமையை பேசி தன் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்கிற அகங்காரம் ஆட்கொள்கிறது.

அபரிமிதமான தன்னம்பிக்கையால், எவரையும் துச்சமாக எண்ணி மனம் போன படி  நடக்கலாம் என்கிற அகங்காரம் வருகிறது.

கட்டுப்பாடற்ற சுயநலத்தால் , எவர் சொல்லும் கேளாமல் தான் செய்வதே  நியாயம் என்கிற அகங்காரம் வருகிறது.

தேவையற்ற அலட்சியத்தால் , எவருக்கும் பணியாமல் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற அகங்காரம் வருகிறது.

மேற்கூறிய எல்லாவும் ஒன்று சேர்ந்து விட்டால் ...? நிலைமை மிகவும் துன்பமாகும்.

ஜாதகரீதியாக ஒருவர் லக்னத்தில் சனி , செவ்வாய் , ராகு இவர்களில் இருவரோ , மூவரோ இருந்து விட்டால் ஆணவமாக நடப்பார். அது எந்த லக்னம் , கிரகங்கள் நின்ற நட்சத்திரம் , பெறுகின்ற சுபர் பார்வை , நடக்கின்ற தசை இவைகள் பொறுத்து ஆணவத்தின் அளவு மாறுபடும். இவர்களே நான்காம் இடத்திலோ,எட்டாம் இடத்திலோ அமர்ந்து விட்டால் நிலைமை வேறு விதமாகும் .எட்டாம் இடமானால் அவர் உயிருக்கே உலை வைத்து விடுவார்கள். (நாம் சரியாக / நியாயமாக  நடந்து கொண்டால் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.)  

இதோ இதைப்பற்றிய ஒரு கதை...

மலையேறுவதில் ஆர்வம் மிக்க ஒரு சராசரி இளைஞன் , ஒரு நாள் தான் இதுவரை செய்யாத சாதனை செய்ய விரும்பி ஒரு உயரமான மலையை தேர்ந்தெடுத்து அதில் தனியாக  ஏற முற்பட்டான். பாதுகாப்பு உபகரணங்களை (கயிறு, கண்ணாடி, கையுறைகள், உலோக கொக்கிகள், கத்தி போன்றன) பயன்படுத்தி அவன் அடிவாரத்திலிருந்து ஏற துவங்கினான்.

முதலில் எளிதாக இருந்தாலும் போகப்போக சற்று கடினமாக மாறியது. அது பனிக்காலம் என்பதால் குளிரும் உறைபனியும் சேர்ந்து அவனை வாட்டியது. மேலும் மலை உச்சியை தொடுவதற்கு ஆகும் நேரத்திற்கு முன்பாகவே இருள் சூழ துவங்கியது. அவனுக்கு மிகவும் களைப்பும் வலியும் ஏற்பட்டது. ஆனால் உச்சியை அடைய சில நிமிடங்கள் இருக்கும் போது துரதிர்ஷ்ட வசமாக தான் இடுப்பில் கட்டியிருந்த கயிறு வழுக்கி தன் பிடியை விட நேரிட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருளில் அந்த இளைஞன் "ஓ" என்று அலறிக்கொண்டு கீழே விழுந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் திடீரென்று கையில் ஏதோ ஒன்று தட்டு பட அதை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.

அவனுக்கு சராசரி கடவுள் நம்பிக்கை இருந்ததால் அப்பொழுது கடவுளிடம் ஒரு கணம் தோன்றி  தம்மை காப்பாற்ற வேண்டினான். அவனுக்கு நிறைய வியர்த்திருந்தது. அப்பொழுது கடவுள் சிறு ஒளி வடிவில் அவன் முன்னே தோன்றி "என்னிடம் உனக்கு நம்பிக்கை உண்டென்றால் இப்பொழுது பற்றியுள்ள கைகளை எடுத்து விடு தப்பித்து விடுவாய் " என்று கூறி விட்டு மறைந்தார். . ஆனால் அவனோ இந்த இருளில் தான் பார்த்தது பிரமையா என நினைத்து கையை எடுத்து விட்டால் மறுபடியும் எங்கே போய் விழுவோம் என்று தெரியாததால் கொஞ்ச நேரம் தாக்கு பிடித்து வெளிச்சம் வந்ததும் தப்பி விடலாம் என்றெண்ணி அப்படியே இருந்து மிக்க பயத்தினாலும் களைப்பினாலும் இறந்தே போனான்.

மறு நாள் அவனை சடலமாக கண்ட மலை வாழ் மக்கள் மிகவும் வேதனை அடைத்தனர். காரணம் .....

அவன் பிடித்து கொண்டிருந்தது ஒரு உறுதியான மரக்கிளை. 

அந்த மரகிளைக்கும் தரைப்பகுதிக்கும் இடையே உள்ள தூரம் 10 அடி தான்." 

இந்த கதையில் எது அவனை உயிர் பிழைக்க விடாமால் தடுத்தது?

அபரிமிதமான தன்னம்பிக்கையால், காப்பாற்ற வந்த கடவுளையும் துச்சமாக எண்ணி சந்தேகம் கலந்த அகங்காரம் தான் அவன் உயிர் பிரிய காரணமானது. 



Tuesday, 22 October 2013

Slavery of Life (வாழ்க்கையில் அடிமைத்தனம்)


ஒரு அடிமை சிக்கிட்டான் !

"அப்பாடி ஒரு அடிமை சிக்கிட்டாண்டா" 

என்று சிலர் சில விஷயங்களுக்காக சொல்வதுண்டு. அது என்ன என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். இதில் சில பேர் விதி விலக்காக இருக்கலாம். அவர்கள் மன்னிக்கவும் . ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் நண்பன் கிடைத்து விட்டால் , ஒரு அரசியல் வாதிக்கு ஒரு தொண்டன் கிடைத்து விட்டால் , ஒரு மருத்துவமனைக்கு மருத்துவருக்கு ஒரு நோயாளி கிடைத்து விட்டால் , ஒரு அலுவலக முதலாளிக்கு ஒரு ஊழியர் கிடைத்து விட்டால், ஒரு வக்கீலுக்கு ஒரு கட்சிக்காரர் கிடைத்து விட்டால் இப்படித்தான் நினைக்க தோன்றும்.

இதில் யாரோ யார் யாருக்கோ அடிமையாய் இருக்கிறார் பாருங்கள். மேற்கூறியவற்றில் ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு அடிமையாய் இருக்கிறது. ஆனால் இதில் சிறிது வித்தியாசமாக ஒரு உயிர் ஒரு உயிரில்லாதவற்றிற்கு அடிமையாகவும் உள்ளது. உதாரணமாக சிலர் பணத்துக்கு அடிமையாகவும், சிலர் புகழுக்கு அடிமையாகவும், சிலர் பதவிக்கு அடிமையாகவும், சிலர் மண்ணுக்கு அடிமையாகவும், சிலர் பொன்னுக்கு அடிமையாகவும், சிலர் போதைக்கு அடிமையாகவும் இருப்பார்.



மொத்தத்தில் அடிமைத்தனமே ஒரு போதை தான். சில போதை சில காலம் வரை தான் இருக்கும். சில போதை உயிரை எடுக்கும் வரை தொடரும். இது போன்ற  அடிமைத்தனம் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் அடிமைத்தனமாகும். ஜாதக ரீதியாக உணர்வை மழுங்கடிக்கும் கிரகமான "ராகு" சில தவறான இடங்களில் நல்லவர்களோடு இணைந்து காணப்பட்டால், அதன் நேரம் வரும் போது ஜாதகர் எவ்வளவு தான் படித்தவர் / மேதை / அறிஞர் என்றாலும் அவர் புத்தியை மிக சுலபமாக மழுங்கடித்து தகாத வேலைகளை செய்ய வைத்து அவமானங்கள் ஏற்படுத்தி நிலை குலைய வைத்து விடுவார். இதில் தப்புவது மிகவும் கடினம்.

இன்னொரு அடிமைத்தனம் என்பது மற்றவரின் கட்டாயத்தினால் வருவது. அதாவது பணத்திலும் பதவியிலும் வலியவர் ஒரு எளியவரை கட்டாயபடுத்தி தனது வேலைகளை நிறைவேற்றி கொள்வது. இந்த அடிமைத்தனம் மிகவும் கொடுமையானதாகும். இந்த அடிமைத்தனத்தில் சிக்குபவர்கள் சென்ற ஜென்மத்தில் சர்வாதிகாரம் செய்து பிறரை இம்சித்தவர்களாவர். ஜாதகரீதியாக ஒருவருக்கு 5 வது, 6 வது , 8 வது, 10 வது  இடங்கள் , இதன் அதிபதிகள் இந்த நிலையை நிதர்சனமாக காண்பிப்பார்கள்.



*******************
நாம் அனைவரும் தினந்தோறும் ஏராளமான செயல்களைச் செய்கிறோம். 

இவ்வாறு தினமும் செய்யும் செயல்களில், சில செயல்களை மட்டும் நாம் மிகவும் விரும்பிச் செய்வோம். சிலவற்றை செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்வோம். இவ்வாறு செய்யும் செயல்களை நமது விருப்பத்தேர்வின் அடிப்படையில் மூன்று வகைகளில் அடக்கலாம்.

* கடமைக்காகச் செய்பவை: பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்துக்காக இதனைச் செய்வோம்.

* நமக்காகச் செய்பவை: நமக்குத் தேவையான பிடித்தமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து நேர்த்தியாகச் செய்வோம்.

* நம்மையறியாமல் செய்பவை: தேவையிருந்தாலும், தேவையில்லாவிட்டாலும், இவ்விஷயத்தை நாம் நம்மையறியாமல் செய்திருப்போம் அல்லது செய்து கொண்டிருப்போம். அதுவும் எப்போது தொடங்கினோம் என்று நமக்கே தெரியாது. அப்படியாயின், இச்செயல்களுக்கு நாம் அடிமையாக இருக்கிறோம் என்று பொருள்.


இப்படி பலர் தெரியாமல், சில விஷயங்களுக்கு அடிமையாவிடுகின்றனர். இப்போது இங்கு உலகமெங்கும் மேற்கொண்ட கணக்கெடுப்புகளின் வாயிலாக, அனைவரையும் அடிமைப்படுத்தும் சில ஆச்சரியமான செயல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம்

பொழுதைக் கழிப்பதற்கு இனிமையான வழிகளில் ஒன்று தான் இணையதளத்தில் உலாவுதல் என்று தான் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, மதுவும், போதைப்பொருட்களும் மனதை எப்படி அடிமைப்படுத்துகின்றனவோ, அதே போல் இணையதளத்தில் உலாவுதலும் மனதை அடிமைப்படுத்துகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் உலாவுதலுக்கு அடிமையானவர்கள் (Internet addiction disorder (IAD)), இதர வகை அடிமைத்தனங்களுக்கு ஆட்பட்டவர்களைப் போலவே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காதல் வயப்படுதல்

உறவு விட்டு உறவு தேடுபவர்கள் ஒரு ஐந்து நிமிடம் கூட தனித்திருப்பதை கண்டிருக்கமாட்டோம். அத்தகையவர்களை காதல் வயப்படுவதற்கு அடிமையானவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதயம் படபடக்க, உணர்வுகள் ஊற்றெடுக்க, காதலில் விழுதல் என்பதும் ஒரு போதை தான். அதற்கு அடிமையாவது என்பது எளிது. மேலும் காதலுக்கு அடிமையாவதைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட ஆர்தர் ஆரோன் எனப்படும் உளவியலாளரது கூற்றுப் படி, காதலில் விழுவதும் கூட இதர வகை போதை மருந்துகளுக்கு அடிமையாவதைப் போலவே மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு காதலுக்கு அடிமையானவர்கள், ஒரு காதல் மறையத் தொடங்கும் போது, மற்றொரு உறவைத் தேடி ஏங்கத் தொடங்குவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சர்க்கரை

இனிப்பை விரும்பாதவர்கள் எவருமே இருக்க முடியாது. நினைவு தெரிந்த நாள் முதல், அனைவரும் சர்க்கரை சேர்த்த இனிப்பான பொருட்களை ஆர்வத்தோடு சாப்பிட்டு வந்திருக்கிறோம். ஆனால் அவற்றில் குறிப்பிட்ட சில வகையான சாக்லெட் அல்லது பிஸ்கெட் போன்றவற்றிற்கு அடிமையாகியிருப்போம் என்று நினைத்திருப்போமா? சர்க்கரை சேர்த்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பொழுது, ஓபியாட் எனப்படும் வேதிப்பொருள் மூளையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த வேதிப்பொருள் மட்டற்ற இன்பமான உணர்வை உண்டாக்கும். ஆகவே தான் இனிப்புகள் இல்லாத பொழுது, இந்த இன்பமான உணர்வுக்கு ஏங்குகிறோம் என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. அதிலும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஒரு குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் படி, சர்க்கரையானது, ஆல்கஹால் மற்றும் சிகரெட் ஆகியவற்றைப் போல, தீமையை உண்டாக்கும் மற்றும் அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது ஆகும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பச்சை குத்திக் கொள்ளுதல்

பச்சை குத்திக் கொள்ளுதலும் ஒருவிதமான அடிமைப்படுத்தும் செயல்களுள் ஒன்றாகும். ஏனெனில் பச்சை குத்திக் கொள்ளும் போதோ அல்லது வேறு இடங்களில் ஊசியால் குத்திக் கொள்ளும் போதோ வெளியிடப்படும், என்டார்ஃபின்கள் வலியை மறக்க உதவுவதோடு, மனதில் அதற்கு அடிமையாகும் எண்ணங்களையும் ஊன்றிவிடுகிறது. இது ஒரு உண்மையான அடிமைப்படுதலா என்பதில் விவாதங்கள் இருந்தாலும், உலகெங்கும் இலட்சக்கணக்கானவர்கள் உடலெங்கும் தோடுகளைக் குத்திக் கொண்டும், பச்சை குத்திக் கொண்டும் திரிகிறார்கள் என்பது உண்மை தானே?

வேலை

பெரும்பாலானோர் வார இறுதி விடுமுறை நாட்களுக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் போது, வேலை வேலை என்று வேலைக்கு அடிமையாகிக் கிடப்பவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியில் இருந்தால் மிகவும் ஏங்கிப் போவார்கள். இம்மாதிரி வேலையே கதியென்று வேலைக்கு அடிமையாகியவர்களுக்கு, ஒர்க்கஹாலிக் (workaholic) என்று ஜாலியாகப் பெயரிட்டு அழைக்கிறோம். இது கடின உழைப்பு மட்டுமல்ல. உடல் ஆரோக்கியம் மற்றும் உறவு ஆகியவற்றைப் பாதிக்கும் ஒருவித மனநிலையுமாகும். மேலும் ஸ்பெயினில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, ஸ்பெயினில் உள்ள 12% பேர் வேலையே கதி என்று இருக்கிறார்கள் என்றும், ஜப்பானில் ஆண்டுக்கு 1000 பேர் அதிகமான வேலையால் மரணமடைகிறார்கள் என்றும் சொல்கிறது.

டேன்னிங் (Tanning)

டேன்னிங் எனப்படுவது சருமத்தின் நிறத்தை பொலிவுபடுத்த செய்யப்படும் ஒரு அழகு சிகிச்சையாகும். இதற்கென சூரியப்படுக்கை (sun beds), டேன்னிங் படுக்கை (tanning beds) ஆகியவைகள் உள்ளன. சூரிய ஒளி அல்லது டேன்னிங் படுக்கை மூலம், புற ஊதாக் கதிர்களை சருமத்தின் மேல் பாய்ச்சுவதால், போதை மருந்துக்கு அடிமையாவது போன்ற மாற்றத்தினை, அவை மூளையில் ஏற்படுத்துகிறது என்று அடிக்சன் பயாலஜி எனப்படும் மாத இதழில் வெளியான கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் தொடர்ந்து இந்த சிகிச்சை முறையை செய்து வந்தால், அது டேன்னிங்கிற்கு அடிமைப்படச் செய்துவிடும். அதிலும் டாக்டர். பிரையன் அடினாஃப் என்னும் டேன்னிங் ஆராய்ச்சியாளர், மூளையின் பகுதிகளில் புற ஊதாக் கதிர்கள் படுவதால், டேனொரெக்ஸியா (Tanorexia) எனப்படும் டேன்னிங் போதைக்கு நம்மை அடிமைப்படச் செய்து விடுகிறது என்று சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், டேன்னிங் செய்து கொள்வது உடலுக்கு மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என்பது மற்றொரு ஆபத்து ஆகும்.

வீடியோ விளையாட்டுக்கள்

உலகமெங்கும் உள்ள இளைஞர்களும், சிறார்களும், வீட்டிலோ வெளியிலோ கணிப்பொறி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டு, வீடியோ விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு சாதாரணமானதாக இருந்தாலும், அவை மிகவும் தீவிரமான தீமையை உண்டாக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 2006 ஆம் ஆண்டு பிபிசி-யால் ஒளிபரப்பப்பட்ட ஒரு சொற்பொழிவின் படி, ஆன்லைனில் வீடியோ விளையாட்டு விளையாடும் 12% பேர் அதற்கு அடிமையாகியிருப்பதோடு, இவ்வாறு வளர்ந்து வரும் அடிமைத்தனத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக, பல நாடுகள், சிகிச்சை மையங்களை அமைத்துள்ளன. மேலும் மற்ற போதைகளைப் போலவே, இந்த மாதிரியான விளையாட்டுக்களை விளையாடுவது, உறவுகளையும், வேலையையும் கெடுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. குறிப்பாக இந்த செயலால் உயிரை விட்டவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங் செய்வது

நம்மில் பெரும்பாலானோர் புதிய பொருட்களை வாங்குவதற்கு விரும்புவோம். அதிலும் அன்பிற்குரியவர்களுக்குப் பரிசுகள் வாங்குவதையும், புதிய மின்னணுப் பொருட்களையும் வாங்க பெரிதும் ஆசைப்படுவோம். ஆனால் சிலருக்கு புதிய பொருட்களை ஷாப்பிங் செய்வது மிகப்பெரிய போதையாக மாறிவிடுகிறது. உடலில் என்டோர்பின்கள் மற்றும் டோபமைன்கள் அதிகமாகச் சுரப்பதால், இவ்வாறு ஷாப்பிங் செய்யும் போதை ஏற்படுகிறதாம். மேலும் வாழ்வில் எதிர்மறை எண்ணங்களை மறக்கவும், எதிர்மறை சூழ்நிலைகளிலிருந்து தப்பிக்கவும், ஷாப்பிங்கை ஒரு காரணியாக அடிமைப்பட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் இப்போதையானது நிதி ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

லிப் பாம்

ஆல்கஹால் அல்லது சிகரெட் போன்ற வேதிப்பொருட்களால் ஆனது இல்லை என்றாலும், லிப் பாம்( Lip balm) எனப்படும் உதட்டுச் சாயம் அடிமைப்படுத்தும் ஒரு விஷயமாகும். லிப் பாமை உதட்டில் தடவும் போது, தற்காலிகமாக ஒரு ஈரத்தன்மையை உண்டாகுகிறது. வறண்டு போன உதடுகளுக்கு, இது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், லிப் பாம் தடவுவதால், இயற்கையான ஈரத்தன்மை உருவாவது பாதிக்கப்பட்டு, ஈரத்தன்மையைப் பேணுவதற்கு மேலும் மேலும் லிப் பாம் தடவும் எண்ணத்தை உண்டாக்குகிறது. இது உயிருக்கு ஆபத்தைத் தரும் போதை அல்ல என்றாலும், செலவு அதிகம் பிடிக்கும் இந்த போதையைத் தடுப்பதற்கென நிறைய ஃபேஸ்புக் குழுக்கள் உருவாகியுள்ளன.

இசை

அனைவருமே இசையை ரசிப்போம். ஒவ்வொருவருக்கும் பிடித்தமான சில பாடல்கள் இருக்கும். அவற்றைத் திரும்பத்திரும்ப கேட்டு ரசிப்போமல்லவா? ஆனால் அவ்வாறு பிடித்த அப்பாடல்களுக்கு அடிமையாகிவிட்டோம் என்று என்றாவது நினைத்தது உண்டா? மெக்கில் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, இசைக்கு அடிமையாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளனவாம். இந்த ஆய்வின்படி, பிடித்தமான பாடல்களைக் கேட்கும் போது, உடலுக்குள் ஒரு போதை உண்டாகி, உடலில் உள்ள டோபமைன்களானது அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. டோபமைன் என்பது மனிதர்கள் போதைப் பொருளட்களை உட்கொள்ளும் போது, உடலில் அதிகமாகச் சுரக்கும் ஒரு வேதிப்பொருள். மனம் உணரும் போதைக்கு இதுதான் காரணம். ஆராய்ச்சியாளர்களின் கருத்துப் படி, ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்ய விரும்புவதற்கு டோபமைன் தான் காரணமாம்.


*****************

***பகுதி***
நன்றி : http://kathiravan.com/newsview.php?mid=41&id=14225

Monday, 21 October 2013

Known Devil (தெரிந்த பிசாசு)


கண்ணாமூச்சி 

மனிதர்களுக்கு மனம் என்பது  பெரும்பாலும் நிலையாக இருப்பதில்லை. காரணம் மனம் என்பது எண்ணங்கள் ஆகும். எண்ணங்கள் அலை போல் வந்து வந்து செல்லும். இவைகளை அடக்க நினைத்தால் அடங்காது. மாறாக கவனிக்க வேண்டும்.




தற்போதைய அவசர உலகில் மனிதர்களுக்கு எதையும் அறிந்து கொள்வதற்கு கூட நேரம் இருப்பதில்லை. அறிந்து வைத்திருந்தாலும் நெடு நாள் வரை நினைவில் இருப்பதில்லை. ஒருவேளை நினைவிருந்தாலும் அது போல நடக்க மனம் இடம் கொடுப்பதில்லை.

****************

தன் மனைவியின் பிறந்த நாளுக்காக ஒரு கணவன் அவளுக்கு ஒரு காரைப் பரிசளித்தான். முதலில் காரின் சாவியையும், பின்னர், அவளது ஓட்டுனர் உரிமம் உட்பட, தேவையான ஆவணங்கள் அடங்கிய ஒரு சிறு பையையும் அவளிடம் கொடுத்துவிட்டு, அவனை ஆரத் தழுவினான். பின் அவளிடம், குழந்தைகளைத் தான் பார்த்து கொள்வதாகவும், அவள் விரும்பினால் நீண்ட தூரம் காரை ஓட்டிச் சென்று வரலாம் என்றும் கூறினான். 

அவள் ஒரு முத்தத்தால் அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தன புதிய காரை ஓட்டுச் சென்றாள். ஒரு கிலோமிட்டர் தூரம்  செல்வதற்கு உள்ளாகவே, சாலையை இரண்டாக வகுக்கும் நடுபகுதியில் காரை மோதிவிட்டாள். அவளுக்குக் காயம் ஏதும் ஏற்படாவிட்டாலும் கார் ஒடுக்காகிவிட்டது. குற்றஉணர்வு  அவளைப் பற்றிக் கொண்டது.” அவளிடம் என்ன சொல்வது? அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார்” போன்ற கவலைகள் அவளை மொய்த்தன. விபத்துப் பகுதிக்குக் காவல்துறை விரைந்து வந்து சேர்ந்தது. காவலர், நான் உங்கள் ஓட்டுனர் உரிமத்தைப் பார்க்கலாமா?” என்று கேட்டார். நடுங்கும் கைகளுடன் தன கணவர் கொடுத்த சிறு பையை அவள் திறந்தாள். கண்களில் கண்ணீர் தாரைதாரையாக ஓடிக் கொண்டிருக்க, ஓட்டுனர் உரிமத்தை அவள் எடுத்தாள். அதன் மீது அவளது கணவரின் கையெழுத்தில் ஒரு துண்டுக் காகிதம் ஒட்டபட்டிருந்தது. அதில், என் அன்பே ஒரு வேளை நீ ஏதாவது விபத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால், இதை நினைவில் வைத்துக்கொள் – நான் நேசிப்பது உன்னைத்தான்; காரை அல்ல – அன்புடன்!” என்று எழுதப்பட்டிருந்தது.

பொருட்களை நேசிக்க வேண்டும். மக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றில்லாமல், மக்களை நேசிக்க வேண்டும். பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்து வைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்.

*************

இந்த கதையில்அவள்  காரை விபத்துக்குள்ளாகியதும் அவளுக்கு ஏன் குற்ற உணர்வு ஏற்பட்டது? 

காரணம் அதுவரை அவள் தன் கணவனை சரியாக அறிந்து / புரிந்து கொள்ளாததால் தான். 

வாழ்க்கையில் எதையும் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். அறிந்ததை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நினைவில் வைத்து கொண்டதை மதித்து நடக்க நடக்க வேண்டும்.  மாறாக எதையும் சரியாக அறிந்து கொள்ளாமல் அறிந்து  கொண்டது போல் நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும்.

வாழ்க்கையில் கண்ணாமூச்சி விளையாடலாம். ஆனால் கண்ணாமூச்சி விளையாட்டில் வாழ்க்கை இருக்க கூடாது. அதாவது ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டது போலவும் , அறிந்து கொள்ளாதது போலவும் நடந்து கொள்ளக் கூடாது. 

சில சமயங்களில் அனேக குடும்பங்களில் ஒருவரையொருவர் குறை கூறிக்கொள்வார். நான் உனக்காக  இதைச் செய்தேன். அதைச்செய்தேன், நீ என்ன செய்தாய் ? என்கிற அளவில் வாழ்க்கை இருக்கும். இதுவும் கண்ணாமூச்சி விளையாட்டுதான்.

பொதுவாக ஒன்று சொல்வார்கள், ஒருவரை குறை கூறி அவர் மேல் ஆட்காட்டி விரலை காண்பிக்கும் போது , அதற்க்கு கீழே உள்ள மூன்று விரல்கள் எதிர்திசையில் நம்மையே காண்பிப்பதை கவனிக்க மாட்டார். மேலே காணப்படும் படத்தில் உள்ளது போல குறை கூறுவது நம்மை மறுபுறம் மறைத்து கொள்வதாக அர்த்தமாகும்.

ஜாதகரீதியாக ஒருவரின் குடும்ப வாழ்க்கையின் நலனை நிர்ணயிக்கும் இடங்கள் : 2 (குடும்பம், தனம், வாக்கு), 4 (தாயார், சுகம் , வீடு , வாகனம் , படிப்பு அறிவு) , 5 (பூர்வ புண்ணியம் , புத்திரப்பேறு , நுண்ணறிவு), 7 (வாழ்க்கைத்துணை , கூட்டு தொழில்), 8 (மாங்கல்யம் -பெண்களுக்கு , ஆயுள், அவமானம்), 9 (பாக்கியம் , புகழ் , தர்ம சிந்தனை), 12 (சயனம் , போகம், விரையம்) - இவைகளில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு உள்ளதோ , அவ்வளவுக்கு நிலைமை இருக்கும்.


எதையும் எவரையும் எதிலும் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்கும் (தவறான) இந்த நவீன யுகத்தில் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். ஒரு நல்ல நண்பரை நண்பராக ஏற்றுக்கொள்ள 3 முறை யோசித்தால், அவரையே கழற்றி விட (ஏதேனும் தவறு நேரிடின்) 9 முறை யோசிக்க வேண்டும். அதாவது நன்மையானதை ஏற்றுக்கொள்ள ஒரு முறை யோசித்தால் , விலக்கி (விதி வசத்தால் விலக்கத்தான் வேண்டும் எனும் போது)  விட மூன்று  முறை யோசிக்க வேண்டும். 

அதே போல தவறான ஒருவரை நண்பராக (விதிவசத்தால்) ஏற்றுக்கொள்ள 9 முறை யோசித்தால் , அவரையே கைவிட 3 முறை யோசித்தாலே போதும். அதாவது தீமையானதை ஏற்றுக்கொள்ள மூன்று முறை யோசித்தால் , விலக்கி விட ஒரு முறை யோசித்தாலே போதும். 

இதைதான் இப்படி சொல்வார் :

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல். 

*****பகுதி*****
நன்றி : http://tamilastrology.yourastrology.co.in/உங்கள்-வாழ்வில்-உங்களை/





Saturday, 19 October 2013

Compensation given by Agasthiya (அகஸ்தியர் தந்த இழப்பீடு)


மாமுனி 

இவ்வுலகில் அவதரித்த மகாபுருஷர்களுள் மஹா முனிவர் "அகஸ்தியர்" சிறந்தவர் ஆவார். சகல வித்தைகளையும் அறிந்த அவர் இவ்வுலக மக்களுக்கு அளவற்ற நன்மைகளை அளித்து கொண்டிருக்கிறார்.

சாதாரண மனிதர் ஒருவர் ஏதோ ஒரு காவல் துறை ஆய்வாளரையோ / எழுத்தரையோ தெரிந்து வைத்திருந்து, ஒரு வேளை அவருடன் வேறொருவர் ஏதேனும் சிறு வாக்குவாதம் செய்து விட்டாலே போதும் , உடனே முதலாமவர் வெகுண்டு "நான் யார் தெரியுமா? என் background தெரியுமா ? எனக்கு அந்த காவலரை தெரியும் / இவரை தெரியும் / அவரை தெரியும்" என்று பாடாய் படுத்தி விடுவார்- தவறு தன் பக்கமே இருந்தாலும்.

இவ்வுலகில் பிறந்து விட்டாலே அந்த அவதார புருஷனே ஆனாலும், உலகின் சட்ட திட்டங்களை மதித்தே ஆகவேண்டும். எவருமே இதில் தப்ப முடியாது. அதிஜாக்கிரதையாக இருந்தாலும் சிறு தவறு ஏற்பட்டு விட்டால் எப்படி நம்மை பாதிக்கும் , அதனால் நாம் கொடுக்க வேண்டிய "இழப்பீடு"(Compensation) என்னவாக இருக்கும் என்று யாரறிவார்?

இங்கே மாமுனி அகஸ்தியரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பாருங்கள் .....




************

பிரம்மரிஷி வசிஷ்டரும் , மகரிஷி அகஸ்தியரும் வருணபகவான் மூலமாக விழுந்த விதையிலிருந்துதோன்றினார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன .சாஸ்திரங்கள், வேதங்கள் , யோகா ஆகியவற்றில் திறமைசாலியான அகஸ்தியர் தர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்று சொல்லலாம் . அகஸ்தியர் சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். சிவபெருமானை நினைத்து தவமிருந்தார் . அகஸ்தியருடைய தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவர் முன் தோன்றி லிங்கமாக உறைந்தார் . இன்று மக்கள் அந்த சிவலிங்கத்தை அகஸ்தியேஸ்வர் என்று அழைக்கிறார்கள் .


மகரிஷி அகஸ்தியர் விஷ்வாமித்திரருக்கு சகல வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். விதர்ப்ப நாட்டு இளவரசி லோபமுத்ராவை மணந்து கொண்டார். அழகையும் அறிவையும் கொண்ட லோபமுத்ரா அகஸ்தியர் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அகஸ்தியர் லோபமுத்ரா தம்பதியர் குஞ்ச மலைத்தொடரை விட்டு தென் மாநிலத்தை நோக்கிப் பயணத்தை தொடர்ந்தார்கள் . அதன்பிறகு தெற்கு திசை ஆகாயத்தில் நட்சத்திரமாகத் தோன்றினார்கள் என்று புராணங்கள் சொல்லுகின்றன . அகஸ்தியரின் சிறப்பைப் பற்றி அகஸ்திய புராணம் சொல்கின்றது.

*************

உலகில் ஏற்படும் விபத்துக்கள் யாவுமே ஒரு கண நேர அசிரத்தையால் விளைபவையே என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, நாம் எப்போதுமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வாத்யார் அவர்கள் அடிக்கடி நினைவுறுத்துவார். ஒரு சிறிது அஜாக்கிரதையாக இருந்தால் கூட அது மிகப் பெரிய வேதனையை, ஆபத்தை அளித்து விடும் என்று அடிக்கடி அடியார்களை எச்சரித்துக் கொண்டே இருப்பார். சாதாரண மனிதர்களை விட இறை நம்பிக்கை கொண்டுள்ள சத்சங்க அடியார்களுக்கு சமுதாயத்திற்காக சேவை ஆற்ற வேண்டிய மிகப் பொறுப்பு இருப்பதால் அவர்கள் எல்லா விஷயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.

நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மற்ற மகான்களும், மகரிஷிகளும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நமக்குப் பாடமாகப் புகட்டியுள்ளார்கள். அவற்றில் ஒன்றே ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் அமுத நீர் பாய்ச்சிய வரலாறாகும்.

சென்னை அருகே உள்ள திருநீர் மலையில் மருத்துவ முகாம் நடந்து கொண்டிருந்தபோது இடைவேளை உணவருந்துவதற்கு முன் வாத்யார் சிறுநீர் கழிக்க வேண்டி வெளியே சில அடியார்களுடன் சென்றார். அவர் பெரும்பாலும் சாதாரண மனிதர்களைப் போல் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிப்பது கிடையாது. வெகுநேரம் தேடி அலைந்து யாரும் எதிர்பார்க்காத ஓரிடத்தில் சிறுநீர் கழிப்பது வழக்கம்.

இதற்கான ஆன்மீக காரணங்கள் ஆயிரம் இருக்கும் என்பதை உடனிருந்த அடியார்கள் உணர்ந்திருந்தாலும் யாரும் இதைப் பற்றி வாத்யாரிடம் கேட்டது கிடையாது. இதற்கான தெய்வீக காரணத்தை அப்போது வாத்யாரே வெளியிட்டார். நாங்கள் எப்போதும் எந்த விஷயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எங்களுக்கு இது சின்ன விஷயம், அது பெரிய விஷயம் என்ற பாகுபாடு கிடையாது.எல்லாம் அருணாசல ஈசனின் திருஉள்ளப்படி நடப்பதால் நாங்கள் எல்லா உயிரினங்களையும், எல்லா விஷயத்தையும் ஒன்றாகவே பாவிக்கிறோம். இதில் சிறிது தவறு ஏற்பட்டால் கூட அதனால் பெரும் குழப்பங்கள் ஏற்படும். இது சம்பந்தமாக ஸ்ரீஅகஸ்திய மகாபிரபுவே தன்னுடைய அனுபவத்தால் எல்லோருக்கும் ஒரு நல்ல படிப்பினையைப் புகட்டியுள்ளார்.
சிலர் சிறு வயது முதல் வறுமையிலேயே உழன்று கொண்டிருப்பது உண்டு. பின்னாட்களில் போதுமான பொருள் வசதி கிடைத்தாலும் நேரத்திற்கு உணவோ, உறக்கமோ கிடைக்காமல் நல்ல உடல் சுகத்தை அனுபவிக்காமலே அல்லல்பட நேரிடும். இவ்வாறு தொடர்ந்து துன்பத்தையே அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் நன்னிலை அடைய ஆன்மீக வழிகாட்டுதல் உண்டு. இவர்கள் அனைத்து கிரகங்களும் சூரியனை தரிசித்து நிற்கும் கோலத்தில் உள்ள சூரிய சக்தித் தலங்களில் (லால்குடி ஸ்ரீசப்ரிஷீஸ்வரர் திருக்கோயில், லால்குடி அருகே நகர் திருத்தலம்போன்றவை), சூரியன் வானில் ஆரஞ்சு வண்ணத்தில் பிரகாசிக்கும் நேரத்தில் ஆரஞ்சு பழ ரசத்தை சர்க்கரை சேர்க்காமல் தானம் செய்து வந்தால் வாழ்வில் சுகம் நாடி, தேடி வரும்.
ஒரு முறை ஸ்ரீஅகஸ்தியர் வயல்கள் சூழ்ந்த ஒரு சிற்றூர் வழியே சென்று கொண்டிருந்தார். பஞ்ச பூதங்களும் அதன் தேவதைகளும், அந்த தேவதைகளின் அதிதேவதைகளுமே ஸ்ரீஅகஸ்தியரின் அருளாணைக்கு உட்பட்டவையே. ஸ்ரீஅகஸ்தியர் மேல் தென்றல் வீச வேண்டும் என்றால் கூட அது ஸ்ரீஅகஸ்தியரின் உத்தரவு இருந்தால்தான் நிகழும். மழை அவர் மேல் பொழிய நினைத்தால் ஸ்ரீஅகஸ்தியர் எத்தனை மழைத் துளிகள் தன் திருமேனியைத் தழுவ வேண்டும் என்று நினைக்கிறாரோ அத்தனை மழைத் துளிகள் மட்டுமே அவர் திருமேனி மேல் துõவ இந்திரன் ஆணை இடுவார். இத்தகைய மகா வல்லமை பெற்ற மகரிஷி அந்த ஊர் வழியே சென்று கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிக்க நினைத்தார்.

ஸ்ரீஅகஸ்தியர் போன்ற மகரிஷிகள் மலம், மூத்திராதிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருப்பவர்கள். இருந்தாலும் அவர்கள் பூலோகத்தில் சஞ்சரிக்கும்போது பூலோக ஜீவன்களில் குறிப்பிட்டவர்களின் கர்ம வினைகளை ஏற்று வருவதால் அத்தகையோருக்காக மலம், மூத்திராதிகளைக் கழிக்கும் நிலை ஏற்படுகிறது என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உண்பதும், உறங்குவதும், நடப்பதும், நிற்பதும் மக்களின் நன்மைக்காகவே என்பதைப் புரிந்து கொண்டால்தான் அவர்கள் செய்கைகளின் தன்மை ஓரளவிற்காவது நம்முடைய குருவி மூளைக்கு எட்டும்.

வழக்கம்போல் மிகவும் ஜாக்கிரதையாக ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து இறைவனை வேண்டி சிறுநீர் கழித்து விட்டு அவ்வூரை விட்டுச் சென்று விட்டார் ஸ்ரீஅகஸ்தியர். சில மாதங்கள் கழித்து ஒரு நாள் தேவ தூதன் ஒருவன் ஸ்ரீஅகஸ்தியர் முன் தோன்றி அவருக்கு முறையாக வணக்கம் தெரிவித்து விட்டு, “சுவாமி, அடியேன் சித்ரகுப்த லோகத்திலிருந்து வருகிறேன். ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குத் தெரிவிக்க எனக்கு அனுமதி கொடுங்கள்”, என்று வேண்டி நின்றான். ஸ்ரீஅகஸ்தியர் அனுமதி வழங்கவே வந்தவன் தொடர்ந்தான், “சுவாமி, தங்களுக்குத் தெரியாத விஷயம் இப்பூவுலகிலும், ஈரேழுலகிலும் இல்லை. இருந்தாலும் இந்த விஷயத்தை எங்கள் மகாராஜா, சித்ரகுப்த மகாபிரபுவின் உத்தரவின்படி தங்களுக்குச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்,” என்று மிகவும் பணிவுடன் பேசி மேற்கொண்டு பேசுவதற்கு தயக்கம் காட்டினான் அந்த தூதுவன். அந்த அளவிற்கு ஸ்ரீஅகஸ்தியர் மேல் அனைத்து லோக வாசிகளும் மரியாதை கொண்டிருந்தனர்.

மரணம் என்பதற்கு சித்தர்கள் அளிக்கும் எளிய விளக்கம் இதோ.
தினமும் கண், காது, மூக்கு என ஒன்பது ஓட்டைகள் வழியாக காற்று உள்ளே வருகிறது, வெளியே போகிறது. ஒரு நாள் வெளியே சென்ற காற்று உள்ளே வருவதில்லை.
ஸ்ரீஅகஸ்தியரும், “தூதுவனே  சொல்ல வந்த விஷயத்தைத் தைரியமாக எடுத்துச் சொல்,” என்று அவனுக்கு ஆறுதலாகச் சொல்லவே அவன் தொடர்ந்து, “சுவாமி, தாங்கள் சில மாதங்களுக்கு முன் ஒரு கிராமத்தில் அமுத நீர் பாய்ச்சினீர்கள் அல்லவா? (மகான்கள், யோகிகள் சிறுநீர் கழிப்பதை அமுத நீர் என்று தேவலோகத்தில் குறிப்பிடுவது வழக்கம்.) அந்த அமுத நீரில் ஒரு துளி தவறிப் போய் அங்குள்ள ஒரு சிறு நீரோடை வழியாகச் சென்று அருகில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து விட்டது. அந்த கிணற்று நீரை இறைத்து ஒரு ஏழை விவசாயி தன்னுடைய நிலத்தில் பாய்ச்சிவிட்டான். பேராற்றல் மிக்க தங்களுடைய அமுத நீர் பிரவாகத்தால் பத்து ஆண்டுகளில் விளையக் கூடிய நெல்மணிகள் ஒரே பருவத்தில் அந்த ஏழை விவசாயிக்குக் கிடைத்து விட்டன. இப்போது தகுதி இல்லாமல் அந்த ஏழை விவசாயிக்குக் கிடைத்த அதிகப் படியான நெற்மணிகளை எப்படி கணக்கில் வைப்பது என்று தெரியாமல் எங்கள் சித்ரகுப்த ராஜா குழப்பம் அடைந்துள்ளார். இந்தக் குழப்பத்திற்கு ஏற்ற தக்க தீர்வை நீங்கள் ஒருவர்தான் தரவல்லவர் என்பதால் தங்களை சரணடைந்துள்ளோம்,” என்று அந்தத் துõதுவன் பணிவுடன் கூறி விட்டு ஸ்ரீஅகஸ்தியரின் பதிலை எதிர்பார்த்து நின்றான்.

ஸ்ரீஅகஸ்தியர் ஒரு கணம் மலைத்து விட்டார். எவ்வளவோ கவனமுடன் இருந்தாலும் நம்மையும் அறியாமல் ஒரு சிறு தவறு மிகப் பெரிய விபரீதத்தைத் தோற்றுவித்து விட்டதே என்று நினைத்து மனம் வருந்தினார். பின் சற்று யோசித்து விட்டு அந்தத் துõதுவனிடம், “நீ உங்கள் சித்ரகுப்த ராஜாவிடம் சென்று அந்த ஏழை விவசாயினுடைய கர்மத்தை அடியேன் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிடு,” என்று சொல்லவே அந்த துõதுவன் அதைக் கேட்டு மனக் குழப்பம் நீங்கப் பெற்றவனாய் ஸ்ரீஅகஸ்தியருக்கு நன்றியைத் தெரிவித்து விட்டு உடனே அங்கிருந்து சித்ரகுப்த லோகத்திற்குத் திரும்பி விட்டான்.

இப்போது பத்து ஆண்டுகளில் விளையக் கூடிய நெல்மணிகள் ஒரே ஆண்டில் விளைந்து விட்டதால் அந்த ஒன்பது ஆண்டுகளின் அதிகப்படி மகசூலை அந்த ஏழை விவசாயிடமிருந்து திரும்பப் பெறுவது முறையாகாது அல்லவா? எனவே அந்த அதிகப் படியான ஒன்பது வருட உழைப்பால் விளையக் கூடிய கர்மாவை ஸ்ரீஅகஸ்தியரே ஏற்றுக் கொண்டு ஸ்ரீலோபாமாதாவுடன் அந்த வயலில் ஒன்பது வருடங்கள் ஒரு சாதாரண பூலோக மனிதனைப் போல கலப்பை கொண்டு நிலம் உழுது, நீர் பாய்ச்சி, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, அறுவடை செய்து அயராது பாடுபட்டார். ஒன்பது வருடங்கள் அந்த வயலில் நெல் பயிரிட்டு அறுவடை செய்து அந்த நெல்லை சித்ரகுப்தரிடம் அளித்து விட்டுத்தான் தன்னுடைய இருப்பிடம் திரும்பினார் ஸ்ரீஅகஸ்தியர்.

நமக்குப் பாடம் புகட்டுவதற்காக எவ்வளவு சிரமத்தையும், துன்பத்தையும் மகான்கள் ஏற்று அனுபவிக்கிறார்கள் பார்த்தீர்களா? இதை உணர்ந்தாவது நாம் நம்முடைய காரியங்களில், அதுவும் இறை நம்பிக்கையை வளர்க்கும் சத்சங்கத்தில் உள்ளவர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பது ஸ்ரீஅகஸ்தியர் வரலாறு நமக்குப் புகட்டும் நீதியாகும்.

************

உங்களுக்கு அகஸ்திய தரிசனம் வேண்டுமா? கீழ்க்கண்ட முறையை

பின்பற்றுங்கள் என்று... ... எனக்கு மிகவும் தெரிந்த நண்பர்ஒருவர் இதைச்

செய்ய ஆரம்பித்தார். அவருக்கு அகஸ்திய தரிசனம் கிடைத்ததா இல்லையா

என்று தெரியவில்லை. அதைப் பற்றி கூற மறுத்துவிட்டார்.. ஆனால் அவரது

நடவடிக்கையில் நிறையவே நல்ல மாற்றங்களை உணர முடிகிறது.

விருப்பம் உள்ள அன்பர்கள் பின்பற்றிப் பாருங்கள்

ழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை

ஜபிக்கவும்.

ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும்

காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30

அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி

நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை

நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45

நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.

நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த

கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம்

செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.

மந்திரம்:

ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே

என் குருவே வா வா வரம் அருள்க

அருள் தருக அடியேன் தொழுதேன்.

இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது

கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை

முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற

உறவைத்தவிர்க்க வேண்டும்.

கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக

தியானம் செய்ய வேண்டும்.

பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5

நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை

கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து

ஆசிர்வாதம் வாங்கவேண்டும். 

ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற

தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில்

அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.

முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு

கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும்,

ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம்

கிட்டும் என்பது நிஜம்.

அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்

குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;
Read more: http://www.penmai.com/forums/saints/4664-a.html#ixzz2iETu0nAJ


****பகுதி****
நன்றி : http://www.kulaluravuthiagi.com/vithai.htm

Life is a Dream - Realize it. (வாழ்க்கை ஒரு கனவு - நனவாக்குங்கள்)


கனவு காணும் வாழ்க்கை யாவும்....




- மேற்கண்ட தலைப்பில் ஆரம்பிக்கும் ஒரு பாடல் இதோ ....

கனவு காணும் வாழ்க்கை யாவும் 
கலைந்து போகும் கோலங்கள் ! 
துடுப்பு கூட பாரம் என்று 
தரையை தேடும் ஓடங்கள் ! 

நீங்கள் கேட்டவை திரைப்படத்தில் கே.ஜே.யேசுதாசின் இனிய குரலில் அமைந்த பொருளாழம் கொண்ட பாட்டினை கேட்டிருப்பீர்கள். இப்படி வாழ்க்கையில் பல பேர் பலப்பல கனவுகளோடு உலா வந்து கொண்டிருப்பார். ஆனால் எல்லோரது கனவு நனவாகிறதா என்றால் அதற்க்கு சரியான விடை கிடைக்காது. ஆனால் இன்னமும் கனவு பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று தான் வருகின்றன. 

கனவுகளை பற்றிய பலன்களை விஞ்ஞான பூர்வமாக இன்னமும் யாரும் நிரூபிக்கவில்லை. நம்முடைய பழங்கால ஏடுகளில் காணப்படும் "சொப்பன சாஸ்திரம்" எனும் நூல்களும் இதில் உதவுகின்றன. 

நமது இந்திய இளைஞர்களை "கனவு காணுங்கள்" என்று கூறினார் நம் முன்னாள் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள். அவர் கூறியது நம் நாட்டு நலனுக்காக. நம் நாட்டை மேம்படுத்த இன்றைய இளைஞர்களுக்கு கூறிய அறிவுரை. அதாவது கனவு வர வேண்டுமென்றால் எண்ணங்கள் ஊடுரவ வேண்டும். எந்த அளவுக்கு இந்த எண்ணங்கள் நமக்குள் பதிகிறதோ அதுவே நல் எண்ணமானால் நல்ல கனவும், கெட்ட எண்ணமானால் கெட்ட கனவும் வருவது இயற்கை. 

உறக்கம் என்பது உயிரினங்களுக்கு இயற்கை அளித்த மாபெரும் புத்துணர்வு நடத்தை. இது நம் அன்றாட அலுவலால் நம் உடல் அடையும் களைப்பினை போக்கவும் புத்துணர்வு பெறவும் உறக்கம் பெரும் உதவி செய்கிறது. பொதுவாக மன அழுத்தத்தில் இருப்பவர்களும், மன நிலை சரி இல்லாதவருக்கும் உறக்கம் வருவதில்லை. மேலும் ஒருவரது ஜாதகத்தில் 12வது வீடு சயன போக ஸ்தானமாகும். இந்த இடமோ இதன் அதிபதியோ பாதிக்க படும் போது அதன் பலனும் பாதிக்கும். 

பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வருவதில்லை என்பார். சற்றே குழப்ப மனதுடன் உறங்க செல்லும் போது (பெரும்பாலோனோர் இன்று அப்படித்தான் உள்ளனர்) இப்படி அப்படி என்று கனவுகள் வருவது உண்டு. ஆனால் உறங்குவதற்கு முன் சில பயிற்ச்சிகளை (நம்முடைய ஒவ்வோர் அசைவையும் / உறுப்புகளையும் நாமாகவே படிப்படியாக நிறுத்தி இறுதியாக கண்களை நிறுத்துவது போன்ற) செய்தால் ஆழ்ந்த உறக்கம் வரும். இந்த ஆழ்ந்த உறக்கம் என்பது அடர்த்தியான உறக்கம் எனலாம். அதாவது 2 மணிநேர ஆழ்ந்த உறக்கம் 4 அல்லது  5 மணி நேர சாதாரண (கனவு காணும்) உறக்கத்திற்கு சமமாகும். அதனால் தான் யோகிகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தான் உறக்கம் கொள்வார். 

எப்பொழுதும் போல இப்பொழுதும் கூற நினைப்பது "எண்ணங்களை நன்றாக வைத்து கொள்ள வேண்டும். எண்ணங்கள் ஆனாலும், ஆசைகள் ஆனாலும் அடக்கவோ அழிக்கவோ முற்பட்டால் அது அதிகமாகுமே தவிர குறையாது. மாறாக அவற்றை திசை திருப்பலாம்." 

*************

கனவுகள் தோன்றும் நேரம் மூன்று பகுப்புகளாக அமைவதுண்டு.
உறங்கியவுடன் தோன்றக்கூடிய கனவுகள் பெரும்பாலும் கடந்த கால வாழ்க்கை நிகழ்சிகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
நள்ளிரவு நேரத்தில் வரும் கனவு  நிகழ்கால வாழ்க்கை அமைப்புகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
விடியற்காலை வரும் கனவு எதிர்காலம் பற்றியவையாக இருக்கும்
பகல் கனவு பலிப்பதில்லை. இனி நமக்கு ஏற்படுகிற கனவுகளுக்கு நமது முன்னோர்களின் வழிகாட்டி சாஸ்திர  விதி முறைப்படி என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
 

ஒரு பிரம்மாண்டமான ஆலயம் கனவில் வந்தால் கூடிய விரைவில் கடவுள் அருளால் நமக்கு அதிர்ஷ்டம்  தரக்கூடிய  நிகழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.
ஆலயத்தின் தலை வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வது போல கனவு கண்டால் தீவிரமான புது முயற்சி ஒன்றில் ஈடுபட போகிறோம் என்று அர்த்தம்.
ஆலயத்தின் தலை வாசல் கதவு மூடப்பட்டது போன்று கனவு வந்தால் நமது முயற்சி தேக்க நிலை அடைய கூடும். ஆனால் கடவுள் அனுகிரகத்தால் தொல்லைகள் தானாக விலகி விடும்.

பெரிய காண்டாமணி ஓசை எழுப்புவது போல் கனவு வந்தால் நாம் செய்த சில தவறு காரணமாக ஏற்பட்ட  இடையூறுகள் விலகி விடும். அதே நேரம் திரும்ப அதே தவறை செய்ய கூடாது என்பதற்கு எச்சரிக்கையாகவும் அந்த மணியோசையை நாம்  எடுத்துகொள்ள வேண்டும்.

அடர்த்தியான பசும் இலைகளை கனவிலே பார்த்தல் புத்திர பேறு உண்டாவதற்கு வழி ஏற்படும்.

ஒருவர் மேஜைமேல் அமர்ந்து எழுதி கொண்டு இருப்பது போல் கனவிலே பார்த்தால் உங்களுக்கு சாதகமா வழக்கு முடிவுகள் அமையும்.
அல்லது பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவையும்  ஏற்படும்.
காவல் நிலையத்தை கனவில் காண நேர்ந்தால் நீங்கள் செய்து கொண்டு இருக்கும் முயற்சி தொடர்பாக சட்ட சிக்கல் ஏதோ ஒரு குழப்பம் ஏற்பட வழி இருக்கிறது என்று அர்த்தம்.

சிறு குழந்தை ஒன்று மலர்கொத்து ஒன்றை உங்களுக்கு பரிசளிப்பது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எந்த தொந்தரவும் இன்றி திருமணத்தில் முடியும்.
அல்லது காதலியின்  பதிலுக்கு  காத்திருந்தீர்கள்   ஆனால் சாதகமான பதில் கிடைக்கும்.

ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் பூ சூட்டுவது போல் கனவு வந்தால் கணவன் மனைவி இடையே மனக்கசப்பு மறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள்.

கன்னி பெண் ஒருத்தி மங்கள பொருள்களை ஏந்தியபடி உங்கள் வீட்டுக்கும் நுழைவது போல கனவு வந்தால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடை பெற வாய்ப்பு உள்ளது.

நீங்கள் பிச்சை எடுப்பது போல கனவு வந்தால் எதிர்பாராத நிலையில் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வீட்டில் சாதாரணமாக வளர்க்கும் கோழி கிளி மைனா புற போன்ற பறவைகளை கனவிலே கண்டால் உங்களுக்கு திறமை இருந்தும் சோம்பேறிகளாக வளம் வருகிறீர்கள் என்று அர்த்தம்.

கழுகு வல்லூறு போன்ற கொடிய இயல்பு படைத்த பறவைகளை பார்த்தால் உங்களை யாரோ கவிழ்த்து  விடுவதற்கு சதி செய்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்த கனவுக்கு இன்னொரு  அர்த்தமும் உண்டு,உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி காரணமாக மற்றவர்களின் வளர்ச்சி கண்டு பொறமை படுவீர்கள்.

நீங்கள் வலை வீசியோ கண்ணி வைத்தோ பறைவைகளை பிடிப்பது போல் கனவு வந்தால் நீங்கள் தேவை இல்லமால் மற்றவர்கள் விசயத்தில் தலை இடுகிறீர்கள் என்று அர்த்தம்.

சிறைப் படுத்தப் பட்ட பறவை தப்பி ஓடுவதுபோல் கனவு வந்தால் உங்கள் மனதில் காரணமில்லாமல் இருந்து வந்த கலக்கமும் குழப்பமும் அகன்று விடும்.

நீங்கள் உடம்பு முழுவதும் மணம் மிக்க சந்தனம் பூசி கொள்வது போல கனவு வந்தால் பெரும் புகழ் அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

குடை ஒன்றை தலைக்கு மேல் பிடிப்பது போல் கனவு வந்தால் நிரந்தரமான பாதுகாப்பான வாழ்க்கை சூழல்
அமைய போகின்றது என்று அர்த்தம்.

உங்களுக்கு அறிமுகம் இல்லாதவரை சந்தித்து உரையாடுவது போன்று கனவு வந்தால் உயர்ந்த நிலை உங்களை வந்தடைய இருக்கிறது என்று அர்த்தம்.
உதாரணமாக விரோதியாக கருதியவர்கள் கூட வலிய வந்து உதவி செய்வார்கள்.

உங்கள் உடலில் உள் காயம் ஏற்பட்டிருப்பதாக கனவு வந்தால் வெளிப்படையா நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ   குறைபாட்டுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் உடலில் நெருப்பு சுட்ட புண் இருப்பது போல் கனவு வந்தால் உங்களிடம் நெருக்கமாக பழகும் ஒருவரே தலை மறைவாக உங்களுக்கு எதிராக செயல் படுகின்றார் என்று அர்த்தம்.


உங்கள் உடலில் இருந்து இரத்தம் பீறிடுவது  போன்று கனவு வந்தால் உங்கள் திறமை மற்றவர்களால் அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு புகழும் பணவருவாயும் கிடைக்க இருக்கிறது என்று அர்த்தம்.

உங்கள் உடலில் காயத்துக்கு கட்டு போட்டு இருப்பதுபோல் கனவு வந்தால் பொருளாதார விசயத்தில் மற்றவர்களால் ஏமாற்ற பட இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

புதிதாக கம்பளம் ஒன்றை கனவில காண நேர்ந்தால் உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருத்தர் மரணம் அடைய கூடும்.
கிழிந்து போன கம்பளம் கனவிலே வந்தால் சூதாட்டம் குதிரைபந்தயம் போன்றவற்றில் பணம் இழப்பு ஏற்படும்.
உங்களுடைய  நிழல் படம் கனவிலே கண்டால்  உங்கள் புகழுக்கு இழுக்கு வர கூடும் .


பெரிய மாளிகை கனவிலே காண நேர்ந்தால் பெரிய மனிதர் தொடர்பு உங்களுக்கு ஏற்படும்.

சிறிய குடிசை ஒன்றை கனவிலே கண்டால் பொருளாதார சிக்கலில் இருந்து விடு படுகிறீர்கள் என்று அர்த்தம்.

மனதிற்கு அச்சமூட்டும் வினோதமான உருவம் உங்கள் கனவிலே வந்தால் இது நாள் வரை இருந்து வந்த சிக்கலும் சங்கடங்களும் கவலைகளும் அகன்று நிம்மதி அடைவீர்கள்.

வாய் விட்டு அழுவது போன்று கனவு வந்தால் தீராத வியாதி ஒன்று தீர்வது ஆகும்.
நீங்கள் யாருக்காவது புத்தி மதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்களிடையே மனக்கசப்பு தோன்றும்.

இரண்டு பேர் சண்டை போட்டு கொண்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை குலையும்.

உங்கள் குடும்பத்தினர் ஒருவரிடம் சண்டை போடுவதாக இருந்தால் உங்கள் குடும்பத்தினர் ஒருவரால் தொந்தரவும் கஷ்டங்களும் உருவாக்கலாம்.

சின்னஞ்சிறுவர்கள் சண்டை போடுவதாக கனவு வந்தால் நீங்கள் அவசியம் இல்லாத விசயத்தில் தலை இடுவதாக அர்த்தம்.
நீங்கள் யாரையாவது அடிக்க செல்வது போல் கனவு வந்தால் உங்களை பற்றி அதிகம் எண்ணி கொண்டு இருக்கிறீர்கள்  அன்று அர்த்தம் இந்த மனப்பாங்கை மாற்றி கொள்வது அவசியம். 

உங்கள் காதலருடன்  காதலியுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொது முரட்டுக்காளை ஒன்று முட்ட வருவது போல் கனவு வந்தால் உங்கள் காதலுக்கு பெரும் இடையுறு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.

உங்களை யாரோ அடிப்பது போல கனவு வந்தால் உங்கள் திறமமையை விளங்கி கொள்ளாமல் இருந்த ஒருவர் வலிய வந்து உதவி பண்ணுவார்.

இசை நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் ரசிப்பது போல் கனவு வந்தால் பெரிய மனிதர் நட்பு உங்களுக்கு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.

நீங்களே இசை நிகழ்ச்சியில் பாடுவது போல் கனவு வந்தால் பெரும் புகழ் அடைய இருகின்றீர்கள் என்று அர்த்தம்.

பலர் ஒன்று சேர்ந்து பாடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு தெரியாமல் உங்களை கவிழ்க்க  சூழ்ச்சி செய்வதாக அர்த்தம்.
ஒரு புல்லங்குழல் கனவில வந்தால் உங்கள் மனம் உறுதி அற்றது என்று அர்த்தம்
நாதஸ்வரம் கனவிலே வந்தால் உங்களுக்கு தொலைவில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்

மிருதங்கம் தபேலா மேளம் போன்ற தோல் கருவிகள் கண்டால் நீங்கள் முதல் மனிதனாக ஆசை படுகிறீர்கள் என்று அர்த்தம் அந்த ஆசை நிறைவேறும்.

ஒரு இனிமையற்ற சங்கீதம் கனவிலே வந்தால் உங்கள் புகழுக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

ஒரு கைப்பெட்டி சாலையில் கிடக்க கனவு வந்தால் உங்கள் மீது வீண் பழி ஏற்பட வாய்புள்ளது.
யாராவது ஒருவர்  கைபெட்டியை உங்களுக்கு தருவது போல் கனவு வந்தால் உங்களுக்கு எதிர்பாரத உதவி கிடைக்கும்.

ஒரு கைப்பெட்டி திறக்கப்பட்டு  பொருட்கள் சிதறி காணப்பட்டால் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

நல்ல பாம்பு படம் எடுப்பது போல் கனவு வந்தால் கடவுள் அருள் உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம்.
மலைப்பாம்பு கனவிலே வந்தால் உங்கள் தொல்லைகள் பிணிகள் எல்லாம் அகலும் வாய்ப்புள்ளது.
தண்ணிப்பாம்பை   கனவிலே பார்த்தல் உங்களை பயமுறுத்தியே மற்றவர்  காரியம் சாதித்து கொள்வர்.

ஒரு சுண்டெலி ஓடிகொண்டிருபது போல் கனவு வந்தால் உங்கள் முயற்சி தாமதமாக நடை பெற்று  கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்
பெருச்சாளியை  கனவிலே கண்டால் உங்கள் குடும்பத்தில் ஒருவர் நோய்  வாய்பட நேரிடும்.

பெருச்சாளியை நீங்கள் கையாலே எடுப்பது போல் கனவு வந்தால் உங்கள் தொழிலில்  தவறான நடைமுறைகளை கையாளுகிறீர்கள் என்று அர்த்தம்

பெருச்சாளி கடிப்பது போல் கனவு வந்தால் உங்குகு நெருக்கமான உறவினரிடமிருந்து பல தொல்லைகள் வர வாய்ப்புள்ளது.

ஒரு தவளையை கையால் பிடிப்பது போல் கனவு வந்தால் உங்களுடைய அருமையான சந்தர்ப்பம் கை நழுவி போகின்றது என்று அர்த்தம்.
ஒரு தேரையை கனவிலே காண  நேர்ந்தால் உங்கள் விரோதிகள் செய்யும் முயற்சி அவர்களுக்கே பாதகமான  பலன்கிடைக்கும்.

ஒரு தேள் கொட்டி விட்டது போல் கனவு வந்தால் ஒரு பெரிய விபத்திலிருந்து  மீண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

பல்லி ஒன்றை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் பதவி ஆட்டம் காண போகின்றது என்று அர்த்தம்.
முட்செடி ஒன்றை கனவிலே காண நேர்ந்தால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுகிறீர்கள் என்று அர்த்தம்.

மலர்செடிகள் பூந்தோட்டம்  கனவிலே வந்தால்  உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய போகின்றது என்று அர்த்தம்.

மருதாணி கனவிலே கண்டால் உங்கள் உடல் நலம் சீராகும்.

துளசி செடி கனவிலே கண்டால் உங்கள் துன்பம் எல்லாம் கடவுள் ஆசீர்வாதத்தால் பறந்தோடும்.

தானிய மணிகளை எலி கொறிப்பது போல் கனவு வந்தால் உங்கள் வீட்டிலோ வியாபாரத்திலோ  சில்லறை திருட்டுகள் போய் கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.

பாத்திரம் நிறைய எள் இருப்பது போல் கனவு வந்தால் செலவு ஏற்படும், மனசஞ்சலமும் உண்டாகும்.

சுமங்கலி பெண் விளக்கு ஏற்றுவது போல் கனவு வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடை பெற உள்ளது என்று அர்த்தம்

நீங்கள் குதிரையின் மீது சவாரி செய்வது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை  முன்னேற்றம் ஏற்பட போகின்றது என்று  அர்த்தம்.

ஒரு கழுதையின் மீது சவாரி செய்தால் உங்கள் தகுதிக்கு குறைவானவர்களிடம் நட்பு வைத்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்

குலுங்க குலுங்க சிரித்து கொண்டு இருக்கும் குழந்தையை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் வாழ்கையில் பணவரவு உயரும்.வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஒரு குழந்தை அழுது கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் திட்டத்தில் எதோ குழப்பம் இருக்கின்றது என்று அர்த்தம்.

ஒரு குழந்தை அழுகும் மண்ணும் படிந்து காணப்பட்டால் உங்கள் நல்ல வாய்ப்பை பயன் படுத்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள்  என்று அர்த்தம்.
குழந்தையை தாய் நீராட்டுவது போல் கனவு வந்தால் உங்கள் கடன் எல்லாம் வசூல் ஆகும்.

தொட்டிலில் குழந்தை உறங்கி கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை நிம்மதியும் சந்தோசமும் நிறைந்ததாக  அமையும்.

ஒரு சிறைச்சாலை கனவிலே  காண நேர்ந்தால் உங்கள் மீது யாரோ வழக்கு தொடர இருகின்றார்கள் என்று அர்த்தம்

சிறைச்சாலைக்குள் யாரோ அடைக்கப்பட்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக தவறு செய்து விட்டு மறைக்கப் பார்கிறீர்கள் 

நீங்களே  சிறைச்சாலைக்குள் அடைக்கப் பட்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் மீது தொடரப்பட்டு இருக்கும் வழக்குகளில் இருந்து விடுதலை ஆவீர்கள்.

உங்கள் கைகளில் விலங்கு மாட்டபடுவது போல் கனவு வந்தால் அளவுக்கதிகமாக ஊதாரித்தனமாக செலவு செய்கிறீர்கள் என்று அர்த்தம்.பல லட்சங்களை இழக்க வேண்டி வரும்.
இதற்கு இன்னுமொரு அர்த்தமும் உண்டு.
அளவுக்கு அதிகமான சிக்கனம் கடைபிடிக்கிறீர்கள் என்றும் அர்த்தம்.

ஒரு காவல் நிலையம் கனவிலே வந்தால் சட்ட சிக்கலில் l  மாட்ட போகிறீர்கள் என்று அர்த்தம்

கப்பலில் பயணம் செய்து கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்கையில் அபாயகரமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.

மூடப்பட்டு இருக்கும் கதவை கனவிலே பார்த்தல் உங்கள் தொழிலில் இடையுறாக இருந்தவர் விலகுகிறார் என்று அர்த்தம்

திறந்த கதவு மூடப்படும் கனவு வந்தால் உங்கள் தொழிலில் மறை முக எதிர்ப்பு கிளம்புகின்றது என்று அர்த்தம்.

பெரிய  புத்தகம் ஒன்றை படிப்பது போல் கனவு வந்தால் இல்லற நாட்டம் குறைந்து ஆன்மீக பிரச்சாரம் செய்ய போகின்றீர்கள் 

ஒரு மண்டை ஓடு கனவிலே வந்தால் உங்கள் முயற்சி வெற்றி அடைய போகின்றது.
ஒரு புற்றை கனவிலே காண நேர்ந்தால் நீங்கள் ஏமாற்றப் பட உள்ளீர்கள் 

இடி மழை கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பண செலவு ஏற்படும்.

யாரோ உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் உங்களுக்கு யாரோ துர்போதனை செய்கிறார்கள் என்று அர்த்தம்.


****************

****பகுதி**** :

நன்றி : http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=11243.0