பந்த பாசம் அன்பு கூட சிறை வாசம் !
நாவுக்கு அடிமை நான் ஆறு வயசிலே!
பூவுக்கு அடிமை பதினாறு வயசிலே!
நோவுக்கு அடிமை தான் பாதி வயசிலே!
சாவுக்கு அடிமை அட நூறு வயசிலே!
அடிமைகளா பொறந்து விட்டோம்!
அத மட்டுந்தான் மறந்து விட்டோம்!
பந்த பாசம் அன்பு கூட சிறைவாசம் தானடா!
- சில தினங்களுக்கு முன்னர் காலை நான் வெளியே தெருவில் சென்று கொண்டிருந்த போது காதால் கேட்ட பாடல் வரிகள்!
இது "மக்கள் என் பக்கம்" என்னும் திரைப்படத்தில் வரும் பாடல் வரிகள்.
என்ன அருமையான சூழ்நிலையில் எழுதப்பட்ட பாடல்! வாழ்க்கையை பற்றி அதில் தன் நிலையை பற்றி ஒருவன் (பாதிக்க பட்டவன்) எவ்வளவு உணர்ந்து பாடுகிறான் பாருங்கள்! அட இன்னும் பல்லவியை பாருங்கள்.
ஆண்டவனை பார்க்கணும்! அவனுக்கு ஊத்தணும்!
அப்ப நான் கேள்வி கேட்கணும்! சர்வேசா!
தலை எழுத்தேந்த மொழியடா?
தப்பி செல்ல எந்த வழியடா ?!
அடடா! என்னமா உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆண்டவனை பார்த்து நேரிடையாக கேள்வி கேட்க முடியாதா? இதில் அவருக்கு ஊற்றி வேறு கேட்க வேண்டுமாம். அதுவும் என்ன கேள்வி "தலைஎழுத்தை பற்றி, அது எழுதியுள்ள மொழி பற்றி". அது தெரிந்து விட்டால் ஊற்றி கொண்டவர்களுக்கே போதை தெளிந்து விடும்!
இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிற்கு அடிமையாக உள்ளனர்.
பணத்திற்கு அடிமை சில பேர் !
பதவிக்கு அடிமை சில பேர் !
புகழுக்கு அடிமை சில பேர் !
பொருளுக்கு அடிமை சில பேர் !
பெண்ணுக்கு அடிமை சில பேர் !
பொன்னுக்கு அடிமை சில பேர் !
ஆசைக்கு அடிமை சில பேர் !
போதைக்கு அடிமை சில பேர் !
மண்ணுக்கு அடிமை சில பேர் !
- இப்படி பலப்பல அடிமைகள் பல பேர். இவர்களில் சில பேர் சில வற்றிற்கு நிரந்தர அடிமைகளாகவும், சில பேர் சிலவற்றிற்கு தற்காலிக அடிமைகளாகவும் இருப்பார்கள்.
இவற்றில் சில அடிமைத்தனம் ஒரு கால கட்டத்தில் தோன்றி மற்றொரு கால கட்டத்தில் மறைந்து விடும்.
எல்லாவற்றிற்கும் ஒரு கால அளவு என்று உள்ளது. அது எவ்வளவு என்பது அவரவர் வினையை பொறுத்தது. எல்லாம் "கோள்களின் கைவரிசைகள்".
எந்தெந்த கோள்கள் என்னென்னன காரணத்திற்க்காக கைவரிசை காட்டுவார்கள் என்பது பற்றி இன்னும் சில தினங்களில் வேறொரு பதிவில் எழுதுவேன்.
இப்போது இப்பாடலின் காணொளியை பாருங்கள் !

No comments:
Post a Comment