கள்ள உள்ளத்தின் தர்மங்கள் !
"கீழ்வானம் சிவக்கும்" என்னும் திரைப்படத்தில் வரும் இந்த பாடல், அய்யன் முருகனை பற்றியும் சில மனிதர்களை பற்றியும் இணைத்து என்னே அருமையாக அமைக்க பட்டிருப்பதை பாருங்கள்.
என்னென்ன சொல்கின்றார்! என்னென்ன செய்கின்றார்!
சில உள்ளத்துக்குள் கள்ளம் வைப்பதுன் வேலையா?
வேலைய் யா இது உன் வேலையா ?
தர்மத்தை கடைப்பிடிக்கும் கண் மருத்துவராக வரும் நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் சோதனையாய் ஒருவர் (குருடன்) பழியுணர்ச்சி உடன் வர அதற்க்கான காரணம் தன் மகன் தான் என்று அறியும் நடிகர் திலகம், இதனை தன அன்பு மருமகளாக வரும் சரிதா விடம் மறைத்து, தர்மத்தையும் கடைப்பிடித்து இறுதியில் குருடனுக்கு கண் தருகிறார்.
நடிகர் திலகம் ஏதோ பெரிய தவறு செய்வதாக நினைத்து அவரை எப்பொழுதும் சந்தேகத்துடன் பார்த்து அவரையே சுற்றி வரும் சரிதாவுக்கும் நடிகர் திலகத்துக்கும் இடையே நடக்கும் நிகழ்சிகள் மிகவும் உணர்சிபூர்வமானவை.
நடிகர் திலகத்தின் கள்ளத்தனம், மிகவும் நல்லத்தனம்! தர்மத்தனமும் கூட!
தவறை ஒருவர் செய்கிறார். அதற்க்கு ஒருவர் பலி ஆகிறார். சம்மந்த பட்டவர் பழி வாங்க நினைக்கிறார். அதற்க்கு ஒருவர் துணை செய்ய நினைக்கிறார். இறுதியில் இதை எல்லாவற்றையும் அறிய நினைத்த நல்லவர் உயிரை விடுகிறார், விதி வசத்தால். தவறு செய்தவர் மன்னிக்க படுகிறார். (விதி வசத்தால் ) பழி வாங்க நினைத்தவர் திருந்தி விடுகிறார் - காலத்தின் கோலத்தால் . என்ன அருமையான கதை & கதா பாத்திர பின்னல்!
No comments:
Post a Comment