photo

photo
Venkatesh.A.S

Monday, 23 September 2013

Beware of shortcuts-1( குறுக்கு வழிகள் ஜாக்கிரதை!)-1


பின்னணி இயக்குனர் -1 


உலகிலுள்ள ஜீவராசிகளை தங்களின் கட்டுக்குள் வைத்து ஒவ்வொருவர் வாழ்க்கையின் பின்னணியில் அவர்களை இயக்கும் நவ நாயகர்கள் வரிசையில் முக்கியமானவர் இவர். 

உண்மையில் வேறு ஒருவர் தான் முதலில் அறிமுகம் பெற வேண்டும். என்ன செய்ய ? சில திரைப்படங்களில் சில பாத்திரங்களை அறிமுகம் செய்யும் போது முதலில் கதாநாயகனை தான் அறிமுகம் செய்வார். பின்னர் கதாநாயகி. கடைசியாக எதிர்நாயகனை (அதாங்க  நம்ம நம்பியார்,M.R.ராதா,பொன்னம்பலம்,பிரகாஷ் ராஜ் பாத்திரங்கள்! ) அறிமுகம் செய்வார்கள். இது கலியுகம் அல்லவா? எல்லாம் எதிர் சுற்றாக தானே இருக்கும் ! அப்படியானால் அது போல ஒருவரை தானே முதலில் அறிமுகம் செய்ய வேண்டும். இதோ காணுங்கள் அவரை .... 




ராகு - பூர்வ புண்ணிய ஆசான் / ஞானகாரகன் 


பார்பதற்க்கே பயமாக இருந்தாலும் சில பேரை இவர் வாழ்க்கையின் உச்சிக்கே கொண்டு போவார். பல பேரை படு குழியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பார். 
உண்மையில் இவருக்கு (கோள்களின் இயற்பியல் தோற்றப்படி) உருவம் இல்லை. சொந்த வீடு இல்லை ஜாதக கட்டங்களில். இருந்தாலும் இவருடைய பராக்கிரமங்கள் சொல்ல வேண்டும் அல்லவா !

ஒருவருக்கு ஜாதகப்படி சுபர் அல்லாது போனால், 

1.கத்தியின்றி ரத்தமின்றி அவரவர் கைகளை கொண்டே    அவரவர்களை கொடூரமாக தண்டிப்பவர். இன்னும் வேறு விதத்தில் சொன்னால் ஒருவரை தனது கையாலேயே மலத்தை சாப்பிட வைத்து அதை இனிப்பு என்று நம்ப செய்பவர். சாப்பிடுபவருக்கு அது மலம் என்று தெரிந்தாலும் துர்நாற்றத்தை மறக்கடிப்பவர். அது எங்கிருந்து வந்தது என்று தெரிந்தாலும் அந்த இடத்தை "இனிப்பகம்"  என்று எண்ண வைப்பவர். (ஒரு உதாரணம் தான் இதன் சாரம் என்னவென்றால் ஒருவருக்கு அவரது எண்ணங்களாலேயே - அது தீய எண்ணம் என்று தெரிந்தும் திரிந்து போக செய்பவர். பொருளின் அதீத உண்மையை உணர்த்தவே சற்று கடுமையாக எழுதி உள்ளேன். உடன்பாடு இல்லாதவர் மன்னிக்கவும்.)

2. தன் தகுதி தெரிய வைக்காமலேயே பேராசை கொள்ள செய்பவர். 

3. எந்த குறுக்கு வழியையும் நேர் வழி என்று நம்பி போக செய்பவர். 

4. நம்பியவரை நயவஞ்சகமாக ஏமாற்ற செய்பவர். 

5. சில நாயகர்களுடன் சேரும் போது அவர் தன்மைப்படி நல்லவராகவோ / தீயவராகவோ மாற செய்பவர். 

6. அன்பு, பாசம் இவைகளை "கிலோ" எவ்வளவு என்று கேட்க  வைப்பவர்.

7. கள்ளத்தனத்தை உண்டாக்குபவர். குறிப்பாக கள்ள காதலில் விழ வைப்பவர்.

8.செய் நன்றியை மொத்தமாக மறக்கடிக்க செய்பவர். 

9. கொடூரமான வார்த்தைகளை பேச செய்பவர். 

10. நிறைய பணத்தை (கஷ்டப்படாமலேயே) குறுகிய காலத்தில் தந்து எதற்கும் உபயோகமில்லாமல் போக செய்பவர். 

11. கடவுள் பக்தி, தர்ம சாஸ்திரத்தில் துளியும் நம்பிக்கை இல்லாது போக செய்பவர் அல்லது மிகவும் நம்பிக்கை உள்ளது போல் நன்றாக நடிக்க செய்பவர்.  

12. சமயத்திற்கு தகுந்தார் போல மிக நன்றாக வேடம் தரிக்க செய்பவர். 

13. மொத்தத்தில் இவரின் பிடியில் உள்ள நேரத்தில் "கஞ்சா" போன்ற போதைக்கு அடிமையானவர் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நடக்க செய்பவர்.  

ஆனால் கடைசி கட்டத்தில் போதையை தெளிய வைத்து அவமானத்தில் ஞானம் பிறக்க செய்பவர் ! 

இதெல்லாம் சரி,  இவரே ஒருவருக்கு சுபராகி விட்டால்....

மேல் கண்ட கெடுதல்கள் எல்லாம் இருக்காது அல்லது  மிகவும் குறைந்து காணப்படும். 

நம்புகிறவர்கள் நம்பலாம்! நம்பாதவர்....ஒரு நாள் நம்ப வேண்டி வரும் !  


No comments:

Post a Comment