photo

photo
Venkatesh.A.S

Saturday, 21 September 2013

Beware of Short-Cuts! (குறுக்கு வழிகள் ஜாக்கிரதை!)


குறுக்கு வழியும் சவக்குழியும்!  



தற்போதைய உலகில் எல்லோருக்கும் இருக்கும் நெருக்கடியில் "குறுக்கு வழி" என்றாலே சற்று இதமாக இருக்கும்.

1. உதாரணமாக தெருவில் சில இடங்களில் ஒரு வழி பாதையில் சென்றால் சற்று தொலைவும் நேரமும் அதிகமாகும் என்பதால் ஏதேனும் குறுக்கு வழியை அதுவும் போக்குவரத்து காவலர் இல்லாத நேரமாக பார்த்து சிலர் செல்வார் !  

2.சிலர் பரீட்சை நேரத்தில் கேள்வித்தாள் கிடைக்குமா என யோசிப்பார் ! 

3.சிலர் உடல் நலம் குறையும் போது மருத்துவரிடம் செல்லாமல் நேராக மருந்து கடைக்கே சென்று மருந்தை வாங்குவார் ! 

4.ரேசன் கடையிலோ, ரயில் வண்டி பயண சீட்டு வாங்குமிடத்திலோ நீண்ட வரிசையாய் இருந்தால் சிலர் முன்னால் இருக்கும் யாரையாவது உதவி கேட்பார் !

5.ரயில் நிலையத்திற்கு மாடிப்படி ஏறி செல்லாமல் சிலர் இருப்பு பாதை வழியாக  நேரே நடைமேடைக்கு செல்ல முயர்ச்சிப்பார் ! 

6.ஏற்ற வேலைக்கு போனால் வருமானம் போதவில்லையே  என நினைத்து ஏதேனும் லாட்டரி, கள்ள வழியில் நிறைய பணம் கிடைக்குமா என பேராசை படுவார் ! 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ! 

ஆனால் மேல் கண்ட குறுக்கு வழிகள் மிகவும் சாதாரணமானதாக தோன்றும். சில பேர் இதெல்லாம் சகஜம் தானே என்று நினைப்பார். ஆனால் இந்த வழிகளை சில வகைப்படுத்தலாம். 

ஒன்று வெளியில் தெரிபவை. இரண்டு வெளியில் தெரியாதவை. 

போக்குவரத்து விதிகளை மீறுவது, மருந்தை நேரிடையாக  வாங்குவது, ரேசன் கடையில் முந்தி செல்வது, இருப்பு பாதையை கடப்பது இவைகள் வெளியே தெரிபவை. ஆனால் கேள்வித்தாள் பெறுவது, கள்ள வழியில் பணம் பெறுவது இவைகள் வெளியே தெரியாதவை . அதாவது தெரியாமல் பார்த்து கொள்வார் !

எப்படி இருந்தாலும் இரண்டு வழிகளுமே குறுக்கு வழிகள் தான். ஆனால் இவைகளில் நாம் அலட்சியம் காட்டினால், அவைகள் நம்மை லட்சியம் செய்து நம்மில்  சில பேரை சில சமயங்களில் மீளா துயரங்களில் ஆழ்த்திவிடும்.   

இந்த சிறிய விஷயங்கள் எப்படி நம்மை துயரத்தில் ஆழ்த்தும் என்று சில பேர் நினைக்கலாம் ! அங்கு தான் விஷயமே உள்ளது ! "எறும்பு ஊற கல்லும் தேயும்" அது போல "எண்ணங்கள் ஊற கண்ணியம் மாறும்" அதாவது நல்ல எண்ணங்கள் ஒருவரை உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும். அதே போல தீய எண்ணங்கள் கண்ணியத்தை பாழ் படுத்தும். 

இவைகள் எல்லாம் சில பேருக்கு ஏன் நடக்கிறது? என்று சில பேர் நினைப்பது எனக்கு புரிகிறது. 

எல்லாம் திருவாளர்கள் நவ கிரகங்களின் கைவரிசை !  (ச்...ச்...உச்... கொட்டுபவர்கள் தயவு செய்து  வேறு பக்கங்களுக்கு சென்று விடுங்கள். இதே கிரகங்கள் உங்கள் பகுத்தறிவை இப்பொழுது ஏளனம் செய்கிறது என்பேன்)  

இந்த நாயகர்கள் தான் உலகில் நடக்கும் மெகா மெகா நிஜ சீரியல் கதைகளின் பின்னணி இயக்குனர்கள் ! கதாசிரியர்கள் எல்லா மனிதர்களுமே, தங்கள் கர்மாவினால் வாழ்க்கை "Ring Tone" செட் செய்து கொண்டவர்கள் ! பின்னணி இயக்குனர்கள் ஒவ்வொருவர் "ரிங் டோனை" அறிந்து அதற்க்கு ஏற்றாற்போல் அவர்களை ஆட வைப்பவர்கள். சில பேர் ரிங் டோன் ரம்மியமாக இருக்கும், சில பேருடையது நாராசமாக இருக்கும். ஆனால் அவரவர்க்கு அவர்கள் டோன் தான் உசத்தியாக இருக்கும். அது அவரவர் எண்ணம், நடத்தை மற்றும் சொந்த வாழ்க்கையை பொறுத்தது! 

எல்லாம் சரி! இந்த குறுக்கு வழி(லி)களின் நாயகன் யார்? 

ஹிந்து மதத்தில் ஒரு கதையை "Flash back" செய்து பாருங்கள்! 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும் போது வெளிப்பட்ட அமுதத்தை கலசத்தை  எம்பெருமான் பரந்தாமன் மோகினி வேடம் கொண்டு ஏந்தி வந்து தேவர்களுக்கு மாத்திரம் வழங்குவதை கண்டுபிடித்த அசுரன் ஒருவன் தேவர்களில் ஒருவராக வேடம் பூண்டு கள்ளத்தனமாக (குறுக்கு வழியில்) சிறிது அருந்திட அதை கண்ட பரந்தாமன் அசுரனை நொடிப்பொழுதில் தன் சக்கரத்தால் தலையை வெட்டிட அமுதம் உண்ட காரணத்தால் அசுரனின் உயிர் பிரியாமல் இருக்க அவனுக்கு பாம்பின் தலை மற்றும் உடல்  பொருத்தி அவனுக்கும் (அவர்களுக்கு) நற்கதி அளித்தான் இறைவன். 

இது தான் குறுக்கு வழி நாயகனின் (நாயகர்கள்) முன் கதை.  இப்பொழுது புரிந்திருக்கும் யார் இவர்கள் என்று. மிகவும் வலிமை வாய்ந்த இவர்களின் கைவரிசைகள் என்ன என்று பார்ப்போம் ! 

(தொடரும் ) 

No comments:

Post a Comment