தாயார் அலர்மேலு மங்கையின் தியாகம்
"அவள் ஒரு தொடர்கதை" என்னும் திரைப்படத்தில் வரும் ஒரு அர்த்தமுள்ள பாடல் இது. இங்கு "அவள்" என்பதை கதையின் நாயகியை குறிப்பது அனைவரும் அறிவர். "தொடர்கதை" என்பது ஒரு "முற்று பெறாத" செயலை குறிப்பதும் யாவரும் அறிவர்.
நிறைய பேர் நிறைய காரணங்களுக்காக பணத்தையோ, வசதியையோ, சுகத்தையோ தியாகம் செய்வார்கள். ஆனால் இங்கு கதாநாயகி தன் தங்கைக்காக தன் வாழ்க்கையையே (காதலனையே) தியாகம் செய்கிறாள். அவளுக்கு அவனையே திருமணம் செய்வித்து அவள் தாய்மை அடைந்ததை கொண்டாடும் வேளையில் இந்த அருமையான பாடல் வருகிறது.
இந்த பாடலின் முடிவில் கலியுக தெய்வமான எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேங்கடவன் வரலாறை குறிப்பிடும் இரு வரிகள் வருகிறது.
"ஐயனுடன் கோவில் கொண்டாள் திருமகளாம் தங்கை!
அடிவாரம்-தனில் இருந்தாள் அலர்மேலு மங்கை!
அவன் அன்பு மட்டும் போதும் என்று நின்று விட்டாள் அங்கே!"
எப்பொழுதெல்லாம் இந்த பாடலை கேட்கும் போது இந்த கடைசி வரிகளை திரும்ப திரும்ப கேட்பேன்.
அன்னை ஜகன்மாதாவான மஹா லக்ஷ்மி தாயாரின் தியாகத்தை என்ன அருமையாக இங்கு கவியரசர் வர்ணிக்கிறார்! அதே சமயத்தில் திரைப்படத்தின் காட்சியையும் சம்மந்த படுத்துகிறார்.
என்னை பொறுத்தவரை திருமலைக்கு சென்றால் ஸ்ரீனிவாசனை பார்கிறோமோ இல்லையோ, தாயாரை பார்ப்பதே பெரும் பாக்கியம் என்பேன்.
காரணம்,
அய்யனின் மேலுள்ள அன்னையின் அன்பு ஈடு இணையற்றது!
அன்னையின் அருளை பெற்றால் அய்யனின் அருள் தானாகவே கிடைக்கும்!
No comments:
Post a Comment