photo

photo
Venkatesh.A.S

Saturday, 31 August 2013

Discipline of Human Love- Part2


With Love Always! 


As per my view "LOVE" comes for those who seeks a company in order to share the Thoughts, Worries then Feelings. But there should be complete Discipline & clear Limitation on this. Because in this world every  human being have got their right to share the Love to anybody.  


Stages of Love:


I can say there is some stages of love according to the activity. For example, one of the activity of love: sharing Thoughts can be shared with anybody. It is not necessary the person (to whom we share) well known, we just conveying our thoughts to him/her. That is all. This can be 1st stage. 
Example: Sharing opinions on common subjects like Movies, News events, Human Life etc.

Next activity sharing Worries can be shared with somebody only. It is necessary the person (to whom we share) at least well known. Otherwise we will be "Underestimated" by them. This can be 2nd stage. 
Example: Sharing worries on personal things like family members, family environment, family status etc. 

Next activity sharing Feelings can be shared STRICTLY with only ONE. Here the meaning of "Feeling" is related to "Physical activity of Body". It is very very necessary the person (to whom we share) very much well known clearly. Because this activity is highly "Restricted" as this shared to be with "Life Partner" only. 
This can be 3rd & Final stage. 
Example: Sharing feelings on physical body like Touching, Kissing etc. 


Development of Love: 


In this world every thing is developing as "Evolution". As per this, love also develops according to the stage. This is based on the favor response from the other end. The first stage will be developed to go to 2nd stage.
Similarly the 2nd will go to 3rd. The 1st & 2nd have NO HARM. But the 3rd is really "Harmful" as this is related to too personal. Because ANYTHING is interesting until it is REVEALED its shape. 


Observation of Love: 


Traffic of Love: 

(To be continued...) 

Saturday, 24 August 2013

Discipline of Human Love!


With Love Always! 






Love is a "Great feeling" of Humans on Humans! 

In this world "Love" is common for all living things. Because every living thing have their right to love each other. The "Love" is more powerful than anything in the world as this is treated as equal to "Almighty" & Discipline is there for Love especially for Humans. But here the question is " What is the measurement value for love?" , "Is there any tool available for measurement?". 

The people in the world now a days got confused on this. I can say love can be treated as "AIR". The air will be as good as its place of presence. Because love can be felt but can not be seen physically.

As per the title  "Discipline" is to be maintained for love to its longevity!
(To be continued ...)   









Experience is God!


அனுபவம் புதுமை! 



கவியரசர் கண்ணதாசனின் ஆழமான கருத்து கொண்ட அழகான கவிதை இது. இதை நான் ஒரு நாவலில் (பாலகுமாரனின் "பச்சை வயல் மனது" என நினைக்கிறேன்?) கடந்த 25 வருடங்களுக்கு முன்னரேயே படித்தேன். அப்பொழுது எதோ என்னமோ என சிறிது தான் புரிந்தது, ஆனால் நாட்கள் செல்லச்செல்ல நன்றாகவே புரிந்தது. 

என்னை பொறுத்தவரை எல்லாவற்றையும் அனுபவித்து தான் அறியவேண்டும் என்பது இல்லை. சில விஷயங்கள் இதில் சரியாக வராது. 
சிலவற்றை பார்த்து தெரிந்து கொள்ளலாம், சிலவற்றை கேட்டு தெரிந்து கொள்ளலாம், சிலவற்றை அடுத்தவர் அனுபவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு முக்கியமாக நல்லவற்றை ஒப்புக்கொள்ளும் மனம் வேண்டும். அதற்க்கு நம்மில் "அகங்காரம்" கூடாது. 

ஏனெனில் எங்கு "அகங்காரம்" உள்ளதோ அங்கு "நன்மைகள்" உள்ளே வராது. 







Thursday, 22 August 2013

Sacrifice of Mother Alarmelu

தாயார் அலர்மேலு மங்கையின் தியாகம் 


"அவள் ஒரு தொடர்கதை" என்னும் திரைப்படத்தில் வரும் ஒரு அர்த்தமுள்ள பாடல் இது. இங்கு "அவள்" என்பதை கதையின் நாயகியை குறிப்பது அனைவரும் அறிவர். "தொடர்கதை" என்பது ஒரு "முற்று பெறாத" செயலை குறிப்பதும் யாவரும் அறிவர்.
நிறைய பேர் நிறைய காரணங்களுக்காக பணத்தையோ, வசதியையோ, சுகத்தையோ தியாகம் செய்வார்கள். ஆனால் இங்கு கதாநாயகி தன் தங்கைக்காக தன் வாழ்க்கையையே (காதலனையே) தியாகம் செய்கிறாள். அவளுக்கு அவனையே திருமணம் செய்வித்து அவள் தாய்மை அடைந்ததை கொண்டாடும் வேளையில் இந்த அருமையான பாடல் வருகிறது.

இந்த பாடலின் முடிவில் கலியுக தெய்வமான எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேங்கடவன் வரலாறை குறிப்பிடும் இரு வரிகள் வருகிறது.

"ஐயனுடன் கோவில் கொண்டாள் திருமகளாம் தங்கை! 
அடிவாரம்-தனில் இருந்தாள் அலர்மேலு மங்கை! 
அவன் அன்பு மட்டும் போதும் என்று நின்று விட்டாள் அங்கே!" 

எப்பொழுதெல்லாம் இந்த பாடலை கேட்கும் போது இந்த கடைசி வரிகளை திரும்ப திரும்ப கேட்பேன்.

அன்னை ஜகன்மாதாவான மஹா லக்ஷ்மி தாயாரின் தியாகத்தை என்ன அருமையாக இங்கு கவியரசர் வர்ணிக்கிறார்! அதே சமயத்தில் திரைப்படத்தின் காட்சியையும் சம்மந்த படுத்துகிறார்.

என்னை பொறுத்தவரை திருமலைக்கு சென்றால் ஸ்ரீனிவாசனை பார்கிறோமோ இல்லையோ, தாயாரை பார்ப்பதே பெரும் பாக்கியம் என்பேன்.
காரணம், 
அய்யனின் மேலுள்ள அன்னையின் அன்பு ஈடு இணையற்றது!

அன்னையின் அருளை பெற்றால் அய்யனின்  அருள் தானாகவே கிடைக்கும்!





Friday, 16 August 2013

Lust, Love, Marriage!




காமம், காதல், திருமணம்

ஒரு சுவாரஸ்யமான கதை :

காதல் - திருமணம் - ஞானம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜா செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா."

"ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக்கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரியகாந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரியகாந்தி செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?"

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

மேலே சொல்லப்பட்ட கதையில் காதலை பார்த்தோம், திருமணத்தை பார்த்தோம். ஆனால் "காமம்" - இது இங்கே எப்படி வந்தது? 

மேலே உள்ள கதையிலேயே  ஒரு சிறு மாற்றம் ....பார்ப்போம்.

அதாவது ரோஜாச்செடி என்பது இங்கே "காமத்தை" குறிக்கும் வினையாகும். 

சீடன் மனதில் காமம் குடியிருக்கும் போது ஒன்றை விட ஒன்று அழகாகத்தான்  தெரியும். குருவின் நிபந்தனைப்படி உயரமான செடியை தேடும் போது ஒன்றை  ஒன்று மிஞ்சுவது போல் அவனுக்கு தெரிந்து பின்னர் எதுவுமே உயரமில்லை என தெரியும் போது ஒன்றையும் அவனால் பறிக்க முடியவில்லை. 

இந்த காமம் என்பது அதிகமான சுயநலம் கொண்டது. உடன் பேராசையும் நிறையவே கொண்டது. இந்த நிலைமை வளர்ந்து விட்டால் பின்னர் "விரக்தி "
தான் மிஞ்சும். இன்னும் நிலைமை முற்றி விட்டால் "பைத்தியம்" கூட பிடிக்கும். 

அடுத்தது "காதல்" , இதில் சுயநலம் இருக்காது, பேராசை இருக்காது. ஒன்றை ஒன்று அழகில் மிஞ்சினாலும், தனக்கு உரியதை விட வேறொன்றில் மனது லயிக்காது. "பூரண காதலில் " கட்டுப்பாடு இருக்கும். இதில் சிறிது காமம் இருக்கலாம். 

அதாவது காதலில் காமம் இருக்கலாம், ஆனால் தவறி கூட காமத்தில் காதல் இருக்கவே கூடாது. அது நிலைக்காது. 

இதனால் தான் சீடன் தனக்கு எல்லா பூக்களும் அழகாக தெரிந்தாலும் குருவின்  நிபந்தனைப்படி ஒரு பூவுடன் திருப்தி அடைகிறான். இது தான் உண்மையான காதல்.  இதன் பரிணாம வளர்ச்சி "திருமணம்" எனலாம். 


இப்படி இந்த காமம், காதல், திருமணம் இவற்றை சரியாக புரிந்து கொண்டு விட்டால் "ஞானம்" வந்து விட்டதாக எனலாம். இது தான் ஞானத்தை அடையும்  சரியான பாதை எனலாம்.

முற்றின காமத்தில் கூட "ஞானம்" பிறக்கும்- மிகவும் அரிதாகவே சில பேருக்கு இது நடக்கும். இதற்க்கு இறைவனின் திருவருள் வேண்டும். உதாரணம் தேனினும் இனிய "திருப்புகழ்" பாடிய குமரனின் பூரண அருள் பெற்ற புண்ணியவர் "அருணகிரிநாதர்". 

கதையின் படி காதலை அறிவோம். காமத்தை ஜெயிப்போம். ஞானத்தை பெறுவோம்.  























Sourashtra Parents Responsibility VID 20130815 120304

Kind Attention : Parents & Well Wishers of Sourashtra Community 

There was a "Annual General Meeting of Tamil Nadu Sourashtra Welfare Association- TASWA held in Chennai".  Most Respectable Brother of our community Dr.Shyam Sundar IPS  was invited as "Chief Guest" on day - 15-08-2013. 
Dr.Shyam Sundar has given a wonderful speech on the welfare & awareness of our community to lead in the human society. This is the part of his speech, I would like to request all our community peoples to watch this. Enhance our Life.  

Thursday, 15 August 2013

Maturity versus Humans

Maturity  does  Matter! 



In a human life, the term "MATURITY" plays an important roll which decides the  "CHARACTER " of a person . 

Peoples are thinking that the "AGE"  is relevant to maturity. But I think the age is NOT at all connected to it, as it is purely depends on their Experience with high remembrance. I have come across with many peoples so far my life time, most of them does not care about it. Because they may not aware of the value & its effects. 

In my  opinion, Life is full of "Learning". Maturity comes after learning anything completely. It is very bad to have bitter experiences again & again. This shows that we are NOT realizing our experiences properly. This leads to "IMMATURITY" which is equivalent to "CHEATING" ourselves. 

I can also say "MATURITY" is nothing but "UNDERSTANDING" anything perfectly. There are some attitudes which are against maturity as follows:

1. Sensitiveness: More sensitiveness leads ourselves to go out of self control. The peoples who are having more "SENSITIVITY" will be always seeking better things. This attitude makes them surprise every moment whenever they find better things. This will further make them keep on searching anything endlessly. 
Here we should know that "THERE ARE BETTER TO BETTER THINGS ALWAYS PRESENT". 

2. Egoism: High Ego makes the person foolish  by preventing him to learn good things. This attitude make the peoples to estimate anything wrong. Because High Ego comes with "OVER CONFIDENCE" as they always under estimate the correct things & over estimate the wrong things. 
Here we should know that "THERE SHOULD NOT UNDER ESTIMATE ANYBODY"   
(will continue...) 

Wednesday, 14 August 2013

Essence of Life Ethics




நச்சுப் பொய்கை யட்சனின் கேள்விகளும் யுதிஷ்டிரர் அளித்த மறுமொழிகளும்:

12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி ஏவுகிறார். நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தன் தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்குகிறான். அப்போது "சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்கிறான்.

நகுலனைக் காணாததால் சகாதேவனை தருமர் அனுப்ப அவனுக்கும் அப்பொய்கையருகில் அதே கதிதான். அதே போல அருச்சுனன் மற்றும் பீமனும் மயக்கமடைகின்றனர். இப்போது தருமரே செல்கிறார். அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவரும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார்.

மகாபாரதத்தில் இந்தப் பகுதி மிக பிரசித்தம். யட்சனின் கேள்விகளுக்கு தருமர் அளித்த விடைகளில் வெளிப்படையாக ஒரு அர்த்தம் தெரியும். ஆனால் தத்துவார்த்த முறையில் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அப்பதில்களில் புதைந்து கிடக்கும் பொருளும் தெரியும். ஆனால் அதை அறிய மிகுந்த பாண்டித்யம் தேவைப்படும். தன் போன்றவர்களுக்கு அது கிடையாது என சோ அவர்கள் தான் எழுதியுள்ள "மகாபாரதம் பேசுகிறது" என்னும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதை படித்து இப்பதிவைப் போடும் டோண்டு ராகவன் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? ஆகவே நேரடி விளக்கங்கள் மட்டுமே இங்கே.

யட்சன்: எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான்?
தருமர்: தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான்.

யட்சன்: மனிதன் எவ்வாறு புத்திமானாகிறான்?
தருமர்: பெரியோர்களை அண்டுவதால் மனிதன் புத்திமானாகிறான்.

யட்சன்: பயிரிடுபவர்களுக்கு எது சிறந்தது?
பதில்: பயிரிடுபவர்களுக்கு மழை சிறந்தது.

யட்சன்: செல்வமுள்ளவனாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் எந்த மனிதன் வாழும்போதே உயிரற்றவனாக இருக்கிறான்?
தருமர்: தேவதைகள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் - இவர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதவன்.

யட்சன்: தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது?
தருமர்: ஒரு தாயின் மனம்.

யட்சன்: ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
தருமர்: அவனுடைய தந்தை.

யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?
தருமர்: மனிதனின் மனம்.

யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது?
தருமர்: கவலை.

யட்சன்: தூங்கும்போது கண்களை மூடாமல் இருப்பது எது?
தெருமர்: மீன்.

யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
தருமர்: முட்டை.

யட்சன்: தன்னுடைய வேகத்தினாலேயே வளர்வது எது?
தருமர்: நதி.

யட்சன்: தன் ஊரை விட்டுப் போகிறவனுக்கு நண்பன் யார்?
தருமர்: அவன் பெற்ற கல்வி.

யட்சன்: வீட்டில் இருப்பவனுக்கு தோழமை தருவது யார்?
தருமர்: அவன் மனைவி.

யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?
தருமர்: நல்ல வைத்தியன்.

யட்சன்: சாகப்போகிற நிலையில் இருப்பவனுக்கு யார் உற்ற தோழன்?
தருமர்: அவன் செய்கிற தருமம்.

யட்சன்:புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?
தருமர்: ஒரு மனிதன் செய்யும் தானத்தில் புகழ் நிலை பெறுகிறது.

யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலைபெறுகிறது?
பதில்: நல்லொழுக்கத்தின் மூலமாக.

யட்சன்: சொர்க்கத்தன்மை எதன் மூலம் நிலைபெறுகிறது?
தருமர்: சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக.

யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?
தருமர்: நோயின்மை.

யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது?
தருமர்: மனத்திருப்தி.

யட்சன்: சிறந்த தருமம் எது?
தருமர்: அஹிம்சை

யட்சன்: எதை அடக்குவதன் மூலம் துயரத்தைத் தவிர்க்க முடியும்?
தருமர்: மனதை அடக்கினால் துயரம் வராது.

யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறான்?
தருமர்: கர்வத்தை விட்ட மனிதன் மற்றவற்களது அன்பைப் பெறுகிறான்.

யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?
தருமர்: கோபத்தை விட்ட மனிதனுக்குத் துன்பம் நேராது.

யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் எனப்படுகிறான்?
தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுகிற மனிதனே, உண்மையில் பொருள் உள்ளவனாகிறான்.

யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?
தருமர்: தர்மத்திற்காக.

யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?
தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.

யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?
தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்காக.

யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.

யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?
தருமர்: கோபம்.

யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?
தருமர்: பேராசை.

யட்சன்: எவன் சாது?
தருமர்: எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருப்பவன்.

யட்சன்: எது தைரியம்?
தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்

யட்சன்: எது சிறந்த ஸ்நானம்?
தருமர்: மனதில் உள்ள அழுக்கைப் போக்குவதே உண்மையான ஸ்நானம்.

யட்சன்: எந்த மனிதன் பண்டிதனாகிறான்?
தருமர்: தர்மங்களை அறிந்து கடைபிடிப்பவனே பண்டிதன்.

யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?
தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.

யட்சன்: எது டம்பம்?
தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.

யட்சன்: ஒன்றுக்கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம் - ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படி நடக்கும்?
தருமர்: அறமும், மனைவியும் இணைந்து செயல்படும்போது, அந்த இல்லத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.

யட்சன்: எந்த மனிதன் அழிவற்ற நரகத்தை அடைவான்?
தருமர்: தானம் கொடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என்று சொல்பவன்; வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.

யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?
தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.

யட்சன்: இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?
தருமர்: மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.

யட்சன்: ஆலோசித்த பிறகே காரியத்தைச் செய்பவன் எதை அடைகிறான்?
தருமர்: வெற்றியை ஆடைகிறான்.

யட்சன்: தர்மத்தில் பற்றுள்ளனவனுக்கு என்ன கிட்டுகிறது?
தருமர்: அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.

யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?
தருமர்: கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.

யட்சன்: எது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி?
தருமர்: உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.

யட்சன்: எது ஆச்சரியம்?
தருமர்: உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்ட்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.

யட்சன்: பின்பற்ற வேண்டிய வழி எது?
தருமர்: வேதங்கள், ஸ்மிருதிகளைக் கற்றறிந்து பின்பற்ற வேண்டிய வழியைக் கண்டு கொள்ளலாம் என்றால், அது அவ்வளவு எளிதாக முடிகிற முயற்சி அல்ல. ஆழ்ந்து கவனிக்காமல் மேலோட்டமாக இவற்றை அறிபவனுக்கு, அவை முரண்பட்டவை போலவே தெரியும். ரிஷிகளின் கருத்துப்படி நடக்கலாம் என்று நினைத்தாலோ, அவர்கள் பற்பல வகைகளில் இந்தப் பிரச்சினையை அணுகுகிறார்கள். ஆக, தர்மத்தை அறிவது சிக்கலாகவே இருந்து வருகிறது. ஆகையால் நமது பெரியோர்கள் சென்ற வழியே நாம் பின்பற்ற வேண்டிய வழி.

யட்சன்: எவன் புருஷன்?
தருமர்: விருப்பு - வெறுப்பு; சுகம் - துக்கம்; நடந்தது - நடக்க இருப்பது; ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்கு சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப்படுகிறான்.

யட்சன்: எவன் செல்வம் மிகுந்தவன்?
தருமர்: ஆசையற்று, அமைதியான மனமும் பெற்று, தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும் மனிதன் எவனோ, அவனே செல்வம் நிறைந்தவன்.

இப்படி தெருமபுத்திரர் கூறிய பதில்களால் திருப்தியுற்ற யட்சன் "யுதிஷ்டிரா! உன் பதில்கள் தெளிவாக உள்ளன. அதற்குப் பரிசாக உன் தம்பிமார்களில் ஒருவரை மட்டும் உயிர்ப்பிக்கிறேன். அவன் யார் என்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது" என்றான்.

தருமர், "நெடிய ஆச்சாமரம் போல வீழ்ந்து கிடக்கும் அழகன் நகுலன் உயிர்பெறட்டும்" எனக் கூறினார். யட்சன் ஆச்சரியமடைந்து, பீமன் அருச்சுனன் ஆகியோரை விட்டு விட்டாயே, உனது அரசைப் பெற அவர்கள் முயற்சி இன்றியமையாததல்லவா"? எனக் கேட்டான்.

தருமர், "யட்சனே, தருமம்தான் முக்கியம். அதற்குத்தான் இறுதி வெற்றி பீமனோ அருச்சுனனனோ அதற்கு முன்னால் ஒன்றுமில்லை. எனது தாயார் குந்தியின் புதல்வனாகிய நான் உயிருடன் உள்ளேன். எனது சிறிய அன்னை மாத்ரியின் பிள்ளை ஒருவனும் பிழைப்பதே தருமம் என" உறுதியாக மறுமொழி கூறினார்.

தருமரது இந்த சொற்களினால் மகிழ்ந்த யட்சன் எல்லோரையுமே உயிர்ப்பித்தான். பிறகு தந்தான் தரும தேவதை என்றும், தனது அம்சமாகிய யுதிஷ்டிரனை பார்த்து சோதிக்கவே வந்ததாகவும் கூறி ஆசியளித்து மறைந்தான்.

மகாபாரதத்தின் வனபர்ர்வத்தின் இக்கடைசி நிகழ்ச்சிகளைப் பற்றி படிப்பவர்களுக்கு நல்ல ஆயுள் கிட்டும் பிறன் பொருளை அபகரிக்கும் அதர்மச் செயல்களில் அவர்தம் மனம் செல்லாது என மகாபாரதம் கூறுகிறது.

நன்றி:
சோ அவர்கள் எழுதிய "மகாபாரதம் பேசுகிறது" மற்றும் ராஜாஜி அவர்கள் எழுதிய "வியாசர் விருந்து".
Like ·  · Follow Post · 5 hours ago near Bangalore, Karnataka

MATURITY OF WISDOM

                                                     ஞானத்தின் மாண்பு


கர்மயோகி விவேகானந்தர் ஒரு நாள் ஒரு மேடைப்பேச்சின் முடிவில் விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார் என்னை மணந்து என்னை போலவே மகனை பெற்று கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை தாயேஎன்றே அழைக்கிறேன் என்று கூறினார்..

இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக்காயப் படுத்தாமல்
மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு.


Sunday, 11 August 2013

POWER OF CHANGING US AS ALMIGHTY

இயேசுவே உம்மை போல் மாற்றுமே
...
அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். - (மத்தேயு 18:27).

ஒரு செல்வந்தர் ஒருவரிடம், ஒரு மனிதன் பத்து இலட்சம் ரூபாய்கள் கடன்பட்டிருந்தான். அந்த செல்வந்தர் தன் கணக்குவழக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தபோது, இந்த மனிதன் அநேக நாட்களாக தனக்கு பணத்தை திரும்ப தரவில்லை என்பது தெரிய வந்தது. உடனே அந்த மனிதனுக்கு அவர் ஆள் விட்டனுப்பி, 'என் பணத்தை கொடுத்து முடி' என்று கட்டளையிட்டார். அவனோ, 'ஐயா, என்னால் முடியவில்லை, நான் எப்படியாவது திருப்பி கொடுக்க முயற்சிக்கிறேன்' என்றான். அப்போது அந்த செலவந்தர், 'உன் மனைவி பிள்ளைகளையும், உன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் விற்றாவது, என் கடனை அடைத்து முடி' என்றார். அப்போது அந்த மனிதன், அந்த செல்வந்தரின் காலில் விழுந்து, 'ஐயா, தயவுசெய்து கொஞ்சகாலம் பொறுத்து கொள்ளும். எப்படியாவது நான் அடைத்து விடுகிறேன். என் மனைவி பிள்ளைகளை விற்று விட்டு, நான் என்ன செய்வது ஐயா' என்று கண்ணீர் விட்டு கதறினான். அதை கேட்ட செல்வந்தர், அவன் மேல் மனதுருகி, 'சரி,போ உன்னை மன்னித்து விட்டேன்' என்று சொல்லி, அவன் அவருக்கு பட்டிருந்த பத்து இலட்ச ரூபாய் கடனையும் அவனுக்கு கொடுக்க வேண்டாம் என்று மன்னித்து விட்டார்.
.
இப்போது சந்தோஷமாய் தன் கடனெல்லாம் அடைக்கப்பட்டு விட்டதே, என மனைவி பிள்ளைகளோடு நான் சந்தோஷமாய் இருப்பேனே என்று எண்ணி கொண்டே வந்து கொண்டிருந்த அவனுக்கு எதிரே, அவனிடம் நூறு ரூபாய் கடன்பட்டிருந்த தன்னுடன் வேலை செய்யும் ஒருவன் வந்து கொண்டிருப்பதை பார்த்தான். அவனிடம், இவன் சென்று, 'நீ என்ன என் கடனை இன்னும் அடைக்காமலிருக்கிறாய், உடனே கொடுத்து முடி' என்று அவன் கழுத்தை நெரிக்க பார்த்தான். கடன் வாங்கியவனோ, 'ஐயா எப்படியாவது நான் கொடுத்து விடுகிறேன்' என்று அவன் கால்களை பற்றி கதறினான். ஆனால், இவனோ, 'உன்னை விட்டால் என் பணத்தை நீ கொடுக்கவே மாட்டாய்' என்று கூறி அவனை போலீஸில் பிடித்து கொடுத்து, 'இவன் என் பணத்தை கொடுத்து முடிக்குமட்டும், அவனை சிறையிலேயே வையுங்கள்' என்று அந்த போலீஸிடம் ஒப்படைத்தான்.
.
அதை நேரில் பார்த்த சிலர், அந்த செல்வந்தரிடம் போய், ' நீர் இந்த மனிதனுக்கு 10,000 இலட்சம் ரூபாய்களை மன்னித்தீரே, ஆனால் இவனோ போய் தனக்கு 100 ரூபாய் கொடுக்க முடியாத ஒரு மனிதனை அடிக்கவும், போலீஸில் பிடித்து கொடுக்கவும் செய்தான்' என்று கூறினர். அதை கேட்ட செல்வந்தருக்கு மிகவும் கோபம் உண்டாகி, அந்த மனிதனை பிடித்து கொண்டு வர சொல்லி, 'நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனை போலீசிடம் 'இவனை அடித்து, எனக்கு என் பணம் கிடைக்கும் வரைக்கும் இவனை சிறையில் வைத்து, எப்படியாவது பணத்தை திரும்ப பெற்று கொடுங்கள்' என்று அவர்களிடம் ஒப்படைத்தார்.
.
இந்த உவமையை தான் நாம் மத்தேயு 18ம் அதிகாரம் 23-34 வரையுள்ள வசனங்களில் பார்க்கிறோம். இதை படிக்கும்போதே, நமக்கு அந்த பத்து இலட்சம் கடன்பட்டிருந்த மனிதன் மேல் கோபம் வருகிறதல்லவா? நம்மில் அநேகரும் அவனை போலத்தான் இருக்கிறோம்.
.
தேவன் நம்மேல் கிருபையாய் இரங்கி, நாம் செய்த எத்தனையோ பாவங்களை, துரோகங்களை, சாபங்களை, தவறுகளை நாம் அவரை வேண்டி கொண்ட போது, மன்னித்து விட்டார். நாமும் நம் குடும்பமும் பட வேண்டிய பாடுகளிலிருந்து நம்மை விடுதலையாக்கி, தலைமுறை தலைமுறையாய் பட வேண்டிய சாபங்களிலிருந்து விடுதலையாக்கினார். நரக ஆக்கினைக்கு நம்முடைய ஆத்துமாவை தப்புவித்தார். அப்படி அவர் கிருபையாக நமக்கு மன்னித்திருக்க, அவருக்கு நன்றியாய் ஜீவிக்க வேண்டிய நாமோ, நம்முடைய குடும்பத்தில், சபைகளில், நமக்கு விரோதமாக யாராவது குற்றம் செய்து விட்டாலோ, ஒரு வார்த்தை சொல்லி விட்டாலோ போதும், அதை தாங்க முடியாதவர்களாக போய் விடுகிறோம். சிறு சிறு காரியங்களையும் நம்மால் பொறுத்து கொள்ள முடிவதில்லை. அவர்களிடம் வழக்கிட்டு, நான் யார் தெரியுமா? என்று அவர்களை விட்டு வைப்பதில்லை. தேவன் அதை பார்க்கும்போது, என்ன செய்வார்? 'நான் இவனுக்கு அல்லது இவளுக்கு எத்தனை பெரிய பாவங்களை சாபங்களை மன்னித்து விட்டேன், ஆனால் இவனோ, இந்த சிறிய குற்றத்திற்காக, தன் சகோதரன் மேல் இவ்வளவு கொடிய பகையை வெளிப்படுத்துகிறானே' என்று நம்மேல் கோபமடைவரல்லவா?
.
யூதர்களின் வழக்கத்தின்படி, அவர்கள் தங்கள் பகைவர்களை மூன்று முறை மட்டும் மன்னிப்பார்களாம். அதை அறிந்திருந்த அப்போஸ்தலனாகிய பேதுரு, இயேசுவோடு கூட இருந்தபடியால், அவருடைய மன்னிக்கும் தன்மையை அறிந்திருந்தபடியால், இன்னும் நான்கு தடவைகளை கூட்டி, இயேசுவிடம், 'ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ' என்று கேட்டான். அப்போது, மன்னிப்பதில் வள்ளலான அவர், 'ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்' என்று சொல்லி இந்த உவமையை கூறினார்.
.
நாம் மற்றவர்களை எப்போது மன்னிப்போம்? ஒருவர் நமக்கு விரோதமாய் செய்த குற்றத்தை பொறுக்க முடியாமல், நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிட்டு, ஊரெல்லாம் இவன் எனக்கு இப்படி செய்தான் என்று பரப்பிவிட்டு, கடைசியாக மன்னிக்கிறேன் என்று சொல்வோம். ஆனால் இயேசுகிறிஸ்து எப்போது மன்னித்தார் தெரியுமா? தம்மை சிலுவையில் வைத்து, தம் கரங்களை கால்களை ஆணிகளால் அடித்து கொண்டிருந்தபோது, அவரை சிலுவையில் வைத்து அறையும்போது, 'பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என்று தன்னை சித்திரவதை செய்யும் அந்த நேரத்தில் தானே அவர்களை மன்னித்தாரல்லவா? அவருடைய மன்னிக்கும் மனப்பான்மை நமக்கும் வரட்டுமே!
.
அவருடைய பிள்ளைகள் என்று சொல்கிற நாமும் நமக்கு விரோதமாக துரோகம் செய்பவர்களை மன்னிப்போம். தவறு செய்பவர்களை நாமும் மன்னிப்போம். கிறிஸ்துவின் மன்னிக்கும் தன்மை இதை வாசிக்கும்போதே நமக்குள் கடந்து வரட்டும். இதை எழுதும்போதே கிறிஸ்துவின் அன்பையும் மன்னிக்கும் தன்மையையும் நினைத்து கண்ணீர் வடித்து கொண்டே எழுதுகிறேன். நாம் மன்னிக்க மன்னிக்க கர்த்தரின் ஆசீர்வாதம் நம்மேல் இறங்கி கொண்டே இருக்கும். அவருடைய குணாதிசயங்கள் நம்மை மாற்றி கொண்டே இருக்கும். கிறிஸ்துவை போல நாம் மாறும் வரைக்கும் அவர் காட்டிய வழியில் நடப்போமா? நம்முடைய பெரிய பெரிய குற்றங்களை மன்னித்த அவருக்கு முன்பாக நமக்கு விரோதமாக செய்யப்படும் சிறிய சிறிய குற்றங்கள் ஒன்றும் பெரிதானவையே அல்ல, நாமும் மன்னிப்போமா? கிறிஸ்துவின் சாயலாக மாறுவோமா? 

Be aware of OUR WEAKNESS!

விழுந்து போகாதபடி விழித்திருப்போம்
.....
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். - (1பேதுரு 5:8).

சங்கீத புத்தகங்களில் தாவீது ராஜா தேவனோடு எந்த அளவு நெருங்கிய தொடர்புடையவராயிருந்தார் என்பதை நாம் வாசிக்கலாம். எந்த பிரச்சனைகள் வந்தாலும், கர்த்தரிடம் சொல்வார், பின் என் தேவன் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் என்று அவர் மேல் தன் பாரத்தை வைத்து விடுவார். பிரச்சனைகள் தன்னை சூழ்ந்த போதிலும், கர்த்தரை துதிப்பதை அவர் நிறுத்தவேயில்லை. எந்த பெரிய பிரச்சனைகளின் மத்தியிலும் கர்த்தரை துதித்து கொண்டே இருந்தார்.
.
'தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்' - (அப்போஸ்தலர் 13:22) என்று தேவனே சாட்சி சொல்லும்படியாக வாழ்ந்தவர் தாவீது ராஜா! அப்படிப்பட்ட தாவீது ராஜா தன் வாழ்விலும் பாவத்தில் விழுந்து போனார். பெரிய சத்துருவாக எழும்பி நின்ற கோலியாத்தை தன் சிறுவயதில், ஒரே ஒரு கவண்கல்லினால் கொன்ற பராக்கிரமம் மிகுந்த தாவீது, அழகிய பெண்ணாக நின்ற பத்சேபாளின் முன் படுக்கையில் விழுந்து போனார். போரில் படைக்குமுன், தைரியமாக நின்ற தாவீது, படுக்கையில் பத்சேபாளிடம் தோற்று போனார். அவர் அதற்காக தேவனிடம் மன்றாடி பாவ மன்னிப்பு பெற்றாலும், அதற்கேற்ற தண்டனையை அனுபவியாமல், தேவன் அவரை விட்டுவிடவில்லை. அவர் செய்த பாவத்தை அவருடைய பிள்ளைகளும் செய்தார்கள். என்ன ஒரு பரிதாபம்! கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற மனிதன்தான், ஆனாலும் பாவம் என்று வரும்போது, தேவாதி தேவன் பாவத்தை காணாத சுத்த கண்ணர். அவரில் சற்றேனும் இருளில்லை.
.
இந்த சம்பவம் நடந்த நேரத்தில், தாவீது தேவனை துதிக்கவோ, அவரை ஆராதிக்கவோ இல்லை. போருக்கு செல்லாமல், வீட்டில் பால்கனியில் நின்று கொண்டு, தன் கண்களை சுழல விட்டார். அவர் மனம் பெலவீனமாய் இருந்த அந்த நேரத்தில் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிந்து கொண்டிருந்த சாத்தான், அவருடைய பெலவீனத்தை கண்டு கொண்டான். எப்போது அந்த தருணம் வரும் என்று காத்திருந்தவன் போல உடனே அந்த சமயத்தை அவன் மிகவும் அருமையாக பயன்படுத்தி, தாவீதை பாவத்திற்கு உட்பட பண்ணினான். தன்னை எப்போது தாவீது ராஜா காத்து கொள்ளாமல் போனாரோ, தேவன் மேல் இருந்த அன்பு சற்று குறைந்து போனதோ, உடனே பிசாசின் தந்திரங்களுக்கு பலியாகி போனார்.
.
பிரியமானவர்களே, இந்த கடைசி காலங்களில் நாம் விழித்திருந்து, தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் என்று ஏற்கனவே வேதம் நம்மை எச்சரித்திருக்கிறபடியால், நாம் நம்மை தேவனுடைய அன்பில் எப்பொழுதும் வைத்து காத்து கொள்ள வேண்டும். எப்போது நாம் நம் நினைவில், நம் கண்களில் இச்சை கொள்ள ஆரம்பிப்போமோ, அப்போதே பிசாசானவன் அதை பயன்படுத்தி கொள்ள ஆரம்பிப்பான். இலசவமாகவே பாவம் உங்களை தேடி வரும். உங்களை பாவத்தில் விழ வைக்க அவன் தன்னால் இயன்றதை செய்வான்.
.
இந்த கடைசி நாட்களில் இந்த பாவத்தில் விழாதபடி தங்களை காத்து கொள்பவர்கள் வெகு சிலரே. ஊழியக்காரர்களாயிருக்கட்டும், தேவனை அதிகமாய் தேடுகிறவர்களாயிருக்கட்டும், யார் பெலவீனப்பட்டு போகிறார்களோ அவர்களில் ஒருவரையும் பிசாசானவன் விட்டுவைப்பதில்லை. அவன் அதிகமாய் பிடிக்கும்படியாய் தேடி கொண்டிருப்பது தேவனுடைய பிள்ளைகளையே. ஆகையால் ஜாக்கிரதையாய் இருப்போம். பாவத்தில் விழுந்து, அதன் பலனாக தண்டனைகளும் அது மட்டுமல்ல நம் பிள்ளைகளும் அதினால் பாதிக்கப்பட்டு போவார்களானால் நாம் ஏன் அந்த சிறு நேர இன்பத்திற்காக தேவ பிரசன்னத்தை இழக்க வேண்டும்? தேவ மகிமையை இழக்க வேண்டும்? நம்மை காத்து கொள்வோம்.
.
யாரெல்லாம் கர்த்தரை நோக்கி முன்னேறி கொண்டே இருக்கிறார்களோ, எப்போதும் அவரை துதித்து இருதயத்தை காத்து கொள்கிறார்களோ அவர்களிடம் சாத்தானுக்கு வேலை கிடையாது. எப்போது ஒரு தேவ பிள்ளை கர்த்தரை தூரத்தில் வைத்து விட்டு, உலக இன்பத்தில், கவர்ச்சியில் இழுக்கப்படுகிறார்களோ, அவர்களை அவன் குறிவைத்து, பாவத்தில் விழ வைப்பான். நாம் ஒரு இடத்திலும் நில்லாதபடி, தேவனை நோக்கி முன்னேறி கொண்டே இருப்போம். பாவத்தில் விழாதபடி நம் எண்ணங்களை, இருதயத்தை, கண்களை காத்து கொள்வோம். அப்போது தேவன் நாம் பாவத்தில் விழாதபடி காத்து கொள்வார். 
.