photo

photo
Venkatesh.A.S

Saturday, 28 December 2013

Kill the Passion ! (Part-2) மோகத்தைக் கொன்று விடு ! (பகுதி -2)

மோகத்தின் ஆயுள் !  

சென்ற பதிவில் இந்த தலைப்பினில் வந்த கட்டுரையைத் தான் மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகம் பேர் படித்ததை அறிந்து மீண்டும் இதனை சற்று விரிவாக அறிய விரும்பி அதற்கான மற்ற கட்டுரைகளை / பாடல்களை / காணொளிகளை படித்து / கேட்டு / பார்த்து இங்கு சமர்ப்பிக்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் , இங்கு காணும் கட்டுரைகளில் மாறுபட்ட கருத்து உடையவர்கள் மன்னிக்கவும். இவைகளை  நான் எனது அனுபவத்தில் (இணையதளத்தில் / சொந்த வாழ்க்கையில் / மற்றவர் வாழ்க்கையில் / மற்ற ஊடகங்களின் வாயிலாக அறிந்ததை) இருந்து எழுதுகிறேன்.  


இனி ஒரு சுதந்திரம் எனும் அருமையான கதையம்சம் கொண்ட தமிழ் திரைப்படத்தில் வந்த மகா கவி பாரதியின் ஆழமான பொருள் பொதிந்த, சித்ராவின் மென்மையான குரலில் அமைந்த, இந்த கட்டுரையின் தலைப்பினில் ஆரம்பிக்கும் அழகிய பாடலை காணொளியில் கேளுங்கள்.

பொதுவாக "ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் " என்பார்கள். ஆனால் இந்த ஆசையும் மோகமும் நீடிக்கும் காலம் என்பதில் நிறைய கணக்கு உள்ளது. அது கொண்டுள்ள "மையம்" , கொள்பவரின் மனநிலை மற்றும் சிலவற்றை  பொறுத்து இது மாறுபடும்.  

மோகம் பற்றிய இணையத்தில் உள்ள செய்திகளை பாருங்கள் ! 


பார்வை மோகம் (voyerism) என்பது உளவியலில் மோகம் தொடர்பானவற்றைக் குறிக்கிறது. பார்வை மோகமும், காட்சி மோகமும் ஒன்றற்கொன்று தொடர்புடையன. காட்சி மோகம்பிறரைக் கவர்வதற்காக அணிகின்ற ஆடை, அணிகலண்கள் காட்டி மோகத்தைக் குறிக்கும் .ஆனால் அவற்றை விரும்பிக் காமநோக்கத்தோடு காண்பது பார்வை மோகம் எனப்படும்.

இது மோகத்தின் "வேர்" (Root) எனலாம். இங்கு தான் சரி செய்தலை சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். 

காதலியின் பொருள் மோகம் உயிர் இழப்பில் முடிந்தது

சிலர் கடைக்கு சென்றால் எளிதில் வெளியே வர மாட்டார்கள். எவ்வளவு பொருட்களை வாங்கி குவித்தாலும் மனம் நிறைவடையாது. இதுபோன்ற ஒரு சம்பவம் சீனாவின் கிழக்கு மாகாணத்தில் அரங்கேறி கடைசியில் தற்கொலையில் போய் முடிந்தது. தாவோ ஹசியோ(38) என்பவர் தனது காதலியுடன் கடைக்கு சென்றார். சுமார் 5 மணி நேரம் சுற்றித்திரிந்து 2 பேரும் சுமக்க முடியாத அளவிற்கு ஏராளமான பொருட்களை வாங்கினர்.
இதனால் காதலன் வீட்டிற்கு போகலாம் என்றார். ஆனால் காதலியோ, ‘இன்னும் ஒரு கடைக்கு செல்ல வேண்டும். அங்கு ‘ஷூ’வுக்கு சிறப்பு தள்ளுபடி இருக்கிறது’ என்றார். ‘வாழ்நாள் முழுக்க அணிய போதுமான ஷூக்கள் இருக்கிறதே? பிறகு புதிதாக வாங்க வேண்டுமா? என காதலன் கேட்க தகராறு முற்றியது. அதில் மனம் வெறுப்படைந்த காதலன் திடீரென்று வணிக வளாகத்தின் 7–வது மாடியில் இருந்து குதித்து விட்டார். அவசர மருத்துவ குழுவினர் விரைந்து வந்த உதவிய போதிலும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இது தான் மோகத்தின் பரிதாப நிலை எனப்படும் "பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்" எனப்படும் நிலை. ஏனெனில் இந்த மோகம் என்பதே போலி தானே ? அதனால் அதன் ஆயுள் எப்பவுமே கேள்விக்குறிதான். இங்கு காதலியின் பொருள்கள் மீதான மோகம் காதலனின் ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. உண்மையில் இந்த பெண்ணுக்கு தன காதலனின் மேல் உண்மையான அன்பு இருந்திருக்காது. அப்படி இருந்திருந்தால் அவளுக்கு பொருள்களின் மீது இவ்வளவு ஆசை இருந்திருக்காது. இங்கே காதலனின் மனநிலை பார்த்தால் அவனுக்கு தன்னை விட பொருளுக்குத் தானே முக்கியத்துவம் அவளுக்கு இருக்கிறதே என்று ஆழமாக எண்ணம்  தோன்றிடும் போது தீவிர விரக்தி ஏற்பட்டு விடுகிறது.  மோகம் என்பது ஆசையின் உச்ச நிலை என்று வைத்து கொண்டால் அருகிலேயே "விரக்தி நிலையும்" கண்டிப்பாக இருக்கும்.  அது வெளிப்படும் காலமும் அருகிலேயே இருக்கும்.  

மேலும் தொடர்கின்ற செய்திகள் தொடர்பான எனது எண்ணங்களை அவ்வப்போது Update செய்திடுவேன் - கிடைக்கும் நேரம் பொறுத்து. 
  Please keep viewing! 

இந்திய பெண்களின் ஸ்மார்ட்போன் மோகம்..!


இன்று Smartphone பயன்டுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்தவாறு உள்ளது. 

குறிப்பாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை (smartphone users) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அதிலும் பெண்கள் மிகவும் விரும்பி பயன்படுத்துகிறார்கள். அவர்கள் விரும்பி பயன்படுத்தும் ஒரு அலைபேசி , தகவல் தொடர்பு சாதனம் ஒன்று உண்டென்றால் அது ஸ்மார்ட்போன்தான்.  

வகை வகையான ஸ்மார்ட்போன்கள்: 

(Variety of Smartphones)

ஸ்மார்ட் போன்கள் என்றதுமே நமக்கு நினைவுக்கு வரும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக கொண்ட ஸ்மார்ட்போன்கள். 




எளிமையானதும், அதிக வசதிகள் கொண்டதும், லட்சக்கணக்கான இலவச அப்ளிகேஷன்களைப் பெற்றிருப்பதும்தான் ஆண்ட்ராய்ட் போன்கள் பிரபலமாக காரணங்கள். 

தற்பொழுது இந்தியாவில் நூற்றைம்பது கோடி ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. 

அவற்றில் பெண்கள் மட்டும் மூன்றில் ஒரு பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதிகவிலையுள்ள ஆப்பிள் போன்கள் (Apple iPhone) மட்டும் இந்தியாவில் ஆறுமடங்கு அளவிற்கு விற்பனையை அதிகரித்துள்ளது என்றால் குறைந்த விலை பிராண்டட்  மொபைல்களின் விற்பனை எண்ணிக்கை எப்படி இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். 

சாதாரணமான போன்களிலிருந்து அனைவரும் ஸ்மார்ட்போனுக்கு மாறிவருகின்றனர் (from ordinary to android smartphone ) என்பதையே இத்தகவல் அறிக்கைகள் காட்டுகின்றன. குறிப்பாக இந்தியப் பெண்கள் அவர்களின் ரசனைக்கேற்ப புதிய,புதிய மாடல்களில் வெளிவரும் ஸ்மார்ட்போனை அதிகம் விரும்புகின்றனர் என இந்தியாவின் பிரபல ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது. 




ஹேர் எக்ஸ்டென்ஷன் மோகம்

ஹேர் கலரிங் வந்ததும் கருப்பான கூந்தல் மோகம் காணாமல் போனது. இயல்பாக கருகரு கூந்தல் உள்ளவர்கள் கூட, அதை செம்பட்டையாகவும் டார்க் பிரவுன் நிறத்திலும் மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார்கள். கலரிங் பத்திப் பேசறதுக்கு முன்னாடி ஹேர் எக்ஸ்டென்ஷனோட பலன்களைப் பார்த்துடலாம். 

இன்னிக்கு கூந்தலை பராமரிக்க யாருக்கும் நேர அவகாசமோ, பொறுமையோ இருக்குறதில்லை. பல விதமான காரணங்களால் எல்லாருக்கும் முடி கொட்டுது. தலையில் முடி இல்லை என்று கவலைப்படுபவர்களுக்காக இப்போது வரப்பிரசாதமா வந்திருக்கிற சிகிச்சைதான் ஹேர் எக்ஸ்டென்ஷன். 

விக், சவுரி முடி, உபயோகிக்கிறதுல உள்ள நடைமுறை சிக்கல் இதுல கிடையாது. ஏற்கனவே உள்ள முடியோட, செயற்கை முடியை தச்சு விடறது. ஒட்டி விடறது. கிளிப் டைப்ல ஃபிக்ஸ் பண்றதுனு இதுல நிறைய வகைகள் இருக்கு. அவங்கவங்க தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏத்தபடி எதை வேணாலும் தேர்ந்தெடுக்கலாம். 

அழகு நிலையத்திற்கு வந்து ஹேர் எக்ஸ்டென்ஷன் பண்ணிக்கிட்டா போதும். நீங்களா சொன்னாலொழிய யாருக்கும் அது செயற்கை முடிங்கிற விஷயம் தெரியாது. இழுத்தா வராது. திடீர்னு கழண்டு விழுந்துருமோங்கிற பயம் வேண்டாம். சுத்தமாக பராமரித்தால் மட்டும் போதும். 

இதோ ஹேர் எக்ஸ்டென்ஷன் முறையில் பண்றது தான் இந்த லேட்டஸ்ட் கலரிங்கும். ஒரிஜினல் முடியில் கலரிங் பண்ண வேண்டாம்னு நினைக்கிறவங்களுக்கும், பார்ட்டி மாதிரி ஒரு நாள் கூத்துக்கு கலரிங் பண்ண நினைக்கிறவங்களுக்கும் தான் இந்த ஹேர் எக்ஸ்டென்ஷன். 

டிரெஸ்சுக்கு மேட்ச்சா சிகப்பு, நீலம், பச்சை, மஞ்சள், காப்பர், வயலட், பிளான்ட், கோல்ட்னு எல்லா கலரும் இருக்கு. கல்யாணப்பெண்கள் மத்தியில் இதுக்கு மவுசு அதிகம். ஸ்ரெயிட்டனிங் பண்ணின மாதிரி சுருள், சுருளா அலை அலையா எப்படி வேணாலும் பண்ணிக்கலாம்.


அமெரிக்காவில் என்று தணியும் சாமான் வாங்கும் மோகம்?

நாகேஸ்வரி அண்ணாமலை
பல சந்தர்ப்பங்களில், பல சூழ்நிலைகளில் நான் அமெரிக்க நன்றி தெரிவிக்கும் பண்டிகை (Thanksgiving) பற்றி எழுதியிருக்கிறேன்.  இந்த வருஷம் அதில் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றம் பற்றி இப்போது எழுதுகிறேன்.
இந்தியாவில் பல காரணங்களுக்காக விடிய விடிய விழித்திருந்திருக்கிறோம்.  முதலாவதாக இறைவனைப் பற்றிச் சதாகாலமும் சிந்தித்து அவனைத் தொழுவதற்காக சிவராத்திரி அன்று விழித்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.  அடுத்ததாக தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பெண்கள் இரவெல்லாம் விழித்திருந்து பலகாரங்கள் செய்வார்கள்.  பலகாரங்கள் செய்யும் வேலையை இரவில் முடித்துவிட்டுத் தீபாவளி அன்று பகல் கொஞ்சம் ஓய்வு எடுப்பதோடு சினிமாவுக்குப் போவது போன்ற பொழுதுபோக்குகளிலும் காலம் கழிப்பார்கள்.  அடுத்து பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் இரவெல்லாம் விழித்திருந்து விழுந்து விழுந்து படிப்பார்கள்.  அந்தக் காலத்தில் கிராமங்களில் நாடகங்கள் நடத்தும்போது இரவு முழுவதும் ஊர் ஜனங்கள் விழித்திருந்து அந்த நாடகங்களைப் பார்ப்பார்கள்.
ஆனால் அமெரிக்காவில் இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு சாமான்கள் வாங்குவதற்குப் பலர் இரவு விழித்திருந்திருக்கிறார்கள்.  ஐரோப்பியக் குடியேறிகள் முதன் முதலில் அமெரிக்காவிற்கு வந்தபோது அப்போது அங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்கள் அவர்களை வரவேற்று நிறைய உதவிகள் புரிந்தார்கள்.  ஒரு ஆண்டு கழிந்த பிறகு குடியேறிகள் தாங்கள் புது இடத்தில் உயிர்பிழைத்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்தனர்.  இப்படி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கம் நாளடைவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் பண்டிகையாக வளர்ந்தது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இந்தப் பண்டிகையை நவம்பர் மாதக் கடைசி வியாழனன்று கொண்டாடும் பண்டிகையாக சட்டபூர்வமாக்கினார்.  இருபதாம் நூற்றாண்டில் ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட் நவம்பர் மாத நாலாவது வியாழக் கிழமையன்று அதைக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.  நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாளிலிருந்து கிறிஸ்துமஸுக்கு பரிசுகள் வாங்கும் வழக்கம் இருந்ததால் பரிசுகள் வாங்குவதற்கு நிறைய நாட்கள் இருந்திருக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!.   அப்போதே சாமான்களை வாங்கிக் குவிக்கும் வழக்கம் அமெரிக்கர்களிடம் இருந்திருக்கும்போலும்.
நாளடைவில் நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாள் கிறிஸ்துமஸுக்குப் பரிசுகள் வாங்குவது  எல்லோரும் பின்பற்றும் செயலாக மாறியது.  இதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட வணிக நிறுவனங்கள் அன்று பெரிய அளவில் பொருள்களின் விலையில் தள்ளுபடி கொடுத்து அவற்றை விற்க முற்பட்டார்கள்.  அப்படித் தள்ளுபடி செய்யப்பட்ட சாமான்கள் ஒரு சிலவே கடைகளில் இருக்கும்.  ஆனால் அவற்றை வாங்குவதற்கு வரும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடியில் உள்ள பொருள்கள் தீர்ந்து போய்விட்டாலும் மற்றப் பொருள்களை வாங்குவார்கள்.  இதற்காகவே கடைகளையும் நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாள் அதிகாலையிலேயே திறந்துவிடுவார்கள்.  அந்த வெள்ளிக்கிழமையை  கறுப்பு வெள்ளி (Black Friday) – ‘அதாவது வரவு வரும் நாள்’ – என்று அழைப்பார்கள்.  வணிகர்கள் தங்கள் கணக்குப் புத்தகத்தில் நஷ்டம் வந்தால் சிவப்பு மையில் கோடிடுவார்களாம்.  இந்த வெள்ளியன்று லாபம் அதிகமாக கிடைக்கும் என்பதால் இதைக் கறுப்பு வெள்ளி என்கிறார்கள்.
முதலில் கறுப்பு வெள்ளியன்று காலையில் எட்டு மணிக்குக் கடை திறக்கும் வழக்கத்தை ஆரம்பித்தார்கள்.  இதுவே காலை ஐந்து மணிக்கே திறக்க ஆரம்பிக்கும் பழக்கமாக உருவெடுத்தது.  ஒரு கடை எட்டு மணிக்குத் திறந்தால் அதற்குப் போட்டியான கடை ஏழு மணிக்கே திறக்க ஆரம்பித்து அடுத்த ஆண்டு இன்னொரு கடை ஆறு மணிக்கே திறக்க ஆரம்பித்து, பின் எல்லாக் கடைகளும் காலை ஐந்து மணிக்கே திறக்கும் பழக்கத்தை ஆரம்பித்தன.
வாடிக்கையாளர்களை சாமான்கள் வாங்கக் கடைக்கு வரவழைப்பதில் கடைகளுக்குள் பலத்த போட்டி இருப்பதால் நன்றி தெரிவிக்கும் பண்டிகை அன்றே கடைகளைத் திறக்கும் பழக்கத்தை சில கடைகள் மேற்கொள்ளத் தொடங்கின.  அன்று குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி மூன்று மணியிலிருந்து நொறுக்குத் தீனி சாப்பிட ஆரம்பித்து ஆறு மணிக்கு வான்கோழியோடு கூடிய பெரிய விருந்தை உண்ண ஆரம்பிப்பார்கள்.  மதுபானங்களைத் தாராளமாக அருந்தும் இந்த விருந்து முடிய இரவு வெகு நேரம் ஆகும்.  அதனால் அன்று அத்தியாவசிய சேவைகள் புரியும் மருத்துவமனைகள், போக்குவரத்து போன்றவை தவிர எல்லா நிறுவனங்களுக்கும் விடுமுறை.  இதில் டிபார்ட்மெண்ட் கடைகளும் அடக்கம்.  ஆனால் கடைகளுக்கிடையே போட்டிகள் வலுத்து வருவதால் போன வருடம் வியாழக் கிழமை அன்றே விருந்து முடிந்தும் முடியாமலும் இருக்கும்போதே கடைகளைத் திறந்துவிடும் பழக்கத்தை ஓரிரண்டு கடைகள் ஆரம்பித்தன.
இந்த வருடம் இது வரை செய்திருந்த சாதனைகளை எல்லாம் முறியடிப்பது போல் எல்லா கடைகளும் வியாழக் கிழமை இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குத் திறக்கப்பட்டு விடிய விடிய வியாபாரம் செய்துகொண்டிருந்தன.  (ஓரிரண்டு டிபார்ட்மெண்ட் கடைகள் மற்ற நாட்களைப்போல் வியாழன் காலையிலேயே திறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.  அடுத்த வருடம் எல்லாக் கடைகளும் இதைப் பின்பற்றலாம்.)  வாடிக்கையாளர்களும் இரவு முழுவதும் பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.  கடை ஊழியர்களும் அவசர அவசரமாக விருந்தை முடித்துக்கொண்டு கடைக்கு வந்துவிடுகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் கூட மறுநாள் வெள்ளியன்று கடைகளை காலையில் சீக்கிரமே திறந்தாலும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையான வியாழனன்று எல்லா நிறுவனங்களும் மூடியிருக்குமாதலால் எப்போதும் கார்கள் நிறைந்து காணப்படும் அமெரிக்கச் சாலைகள் அன்று ஒரு சில கார்கள் தவிர – இந்தக் கார்களில் செல்லுபவர்களும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையைக் கொண்டாட உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது நண்பர்கள் வீடுகளுக்கோ போய்க்கொண்டிருப்பவர்கள் – வெறிச்சோடிப் போயிருக்கும்.  அன்று வெறிச்சோடிப் போயிருக்கும் இந்த சாலைகளைப் பார்ப்பதற்காகவென்றே நான் கொஞ்ச தூரம் வெளியே செல்வதுண்டு.  ‘இன்று ஒரு நாள் எல்லோரும் வீட்டில் இருந்துகொண்டு சந்தோஷமாக பொழுதைக் கழிக்கிறார்கள்’ என்ற ஒரு நினைப்பே எனக்கு ஒரு வித சந்தோஷத்தைக் கொடுக்கும்.  இனி அதெல்லாம் கிடையாது போலும்.
இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்வதால் அவர்களுடைய பண்டிகைகளுக்கெல்லாம் விடுமுறை உண்டு.  வருடத்தில் இருபது நாட்களாவது விடுமுறை நாட்களாக இருக்கும்.  அமெரிக்காவில் மிகக் குறைந்த நாட்களே விடுமுறை நாட்கள்.  ஈஸ்டர், மே தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், நன்றி தெரிவிக்கும் பண்டிகை நாள், கிருஸ்துமஸ் பண்டிகை நாள் ஆகியவையே.  டிபார்ட்மெண்ட் கடைகள் ஈஸ்டர், நன்றி தெரிவிக்கும் பண்டிகை,கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களுக்கு மட்டும் மூடியிருக்கும்.  மற்ற விடுமுறை தினங்களில் வாடிக்கையாளர்களுக்கு விடுமுறையாதலால் அன்று சாமான்கள் வாங்க வருவார்கள் என்று டிபார்ட்மெண்ட் கடைகள் திறந்திருக்கும்.  ஈஸ்டருக்கு மூடுவதைப் பல கடைகள் ஏற்கனவே நிறுத்திவிட்டன.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரை நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கும் கிறிஸ்துமஸுக்கும் மூடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள்.  இப்போது நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மூடுவதையும் மெதுவாகவிட்டுவிடுவார்கள் போலும்.  எதற்காக?  சாமான்களை வாங்கிக் குவிப்பதற்காக.
சிகாகோவில் பிரபல சாக்கலேட் விற்கும் கடை ஒன்று அன்று இரவு ஒன்பது மணியிலிருந்து மறு நாள் வெள்ளி காலை ஒன்பது மணி வரை தள்ளுபடி விற்பனை செய்தது.  இந்த நேரத்தில் ஒரு துண்டு சாக்கலேட்டின் விலை இருபத்தைந்து காசுகள்.  அந்த நேரத்திற்குப் பிறகு போனால் ஒன்றின் விலை நாற்பது காசுகள்.நூற்றுக் கணக்கில் சாக்கலேட் வாங்கும்போது தள்ளுபடி விற்பனைக்கும் தள்ளுபடி அல்லாத விற்பனைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.  டி.வி. போன்ற விலையுயர்ந்த சாமான்கள் வாங்கினால் நிறையப் பணம் மிச்சம் செய்யலாம்.  இருப்பினும் ஆற அமர விருந்துண்டு, நண்பர்களோடும் உறவினர்களோடும் சேர்ந்து மகிழ்ந்திருக்க வேண்டிய சமயத்தில் இப்படி அடித்துப் பிடித்துக்கொண்டு மால்களுக்குஓடி வர வேண்டுமா?
கம்பெனிகளுக்குள் போட்டி என்பதால் தங்கள் சாமான்களை வாடிக்கையாளர்களை வாங்க வைப்பதற்குப் பல வகையாக விளம்பரம் செய்தனர்.  பிறருக்குக் கொடுப்பதற்குப் பரிசுகள் வாங்குவதற்காக விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த வருஷம் வீட்டிற்கு வேண்டிய சாமான்கள்,தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டியசாமான்கள் ஆகியவற்றைக் கூட தள்ளுபடி விற்பனையில் இடம் பெறச் செய்தார்கள்.  ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று விளம்பரம் செய்து ஒன்றைப் பரிசுக்காக வாங்கினால் இன்னொன்றைத் தங்களுக்காக வாங்கிக்கொள்ளும்படி விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களிடம் பொருள்கள் வாங்கும் வெறியை வளர்த்துவிட்டார்கள்.
ஒரு இருபத்தைந்து வயது வடிக்கையாளர் முதலில் நன்றி தெரிவிக்கும் பண்டிகையன்று இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து கடை கடையாகச் சென்று அறுபது அங்குல டி.வி., ஐபாட்(iPod), குக்கர் என்று சாமான்களாக வாங்கித் தள்ளியிருக்கிறார்.  இதெல்லாம் அவருக்காகவும் அவருடைய மனைவிக்காகவும் மட்டுமே.
இதெல்லாம் போக ஆன்லைனில் பொருள்கள் வாங்கியவர்கள் பட்டியல் வேறு ஒவ்வொரு வருஷமும் கூடிக்கொண்டே போகிறது.  இந்த ஆண்டு இருபது சதவிகிதம் அதிகமாம். இதில் கால் பங்கு செல்போன் மூலம் வாங்கப்பட்டதாம்.
அமெரிக்காவில் தயாராகும் பொருள்களை வாங்குங்கள் என்று ஒரு சாரார் விளம்பரம் செய்கிறார்கள்.  ஆனால் இப்படித் தயாரிக்கப்படும் பொருள்கள் எல்லாம் இவர்கள் ‘designer goods’ என்று அழைக்கும் விலையுயர்ந்த அணிகலன்கள், உடைகள், காலணிகள்.  இவற்றிற்கு அமெரிக்கர்கள் நிறையப் பணம் கொடுக்க வேண்டும்.  மேலும் அமெரிக்காவில் தயாராகும் எந்தப் பொருளுக்கும் வெளிநாடுகளில் தயாராகும் பொருள்களை விட அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.  ஏனெனில் வெளிநாடுகளில் தொழிலாளிகளுக்குக் கொடுக்கும் சம்பளம் அமெரிக்கத் தொழிலாளிகளுக் கொடுக்கும் சம்பளத்தை விட மிகவும் குறைவு.  வளர்ந்துவரும் நாடுகளில் தொழிலாளர்கள் பாதுக்காப்பிற்கு இந்தக் கம்பெனிகள் செய்ய வேண்டியவற்றை அந்தந்த நாட்டு அரசுகள் சரியாகக் கண்காணிப்பதில்லை.  பங்களா தேஷில் போன வருடம் நடந்த ஆயிரம் பேருக்கு மேல் உயிர்களைப் பலிவாங்கிய விபத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் வெளிநாடுகளில் தயாராகும் பொருள்களை பகிஷ்கரிக்கும் எண்ணம் அமெரிக்கர்களுக்கு வந்தபாடில்லை.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் பகுதி இந்த சில்லரை விற்பனையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதாம்.  டிபார்ட்மெண்ட் கடைகளில் நடக்கும் விற்பனை ஒவ்வொரு வருடத்திற்கும் கூடிக்கொண்டே போக வேண்டுமாம்.  அப்போதுதான் அமெரிக்கப் பொருளாதாரம் தொய்வில்லாமல் போய்க்கொண்டிருக்குமாம்.  என்ன பொருளாதாரமோ.  நுகர்வோர்களை உருவாக்கும் அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாலும் முடியவில்லை.  இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.


 முந்தையது|அடுத்தது 
FILE
ஐபிஎல். கிரிக்கெட்டை முன் வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. கடைசியாக 2009 சூதாட்ட புகாரில் சிக்கி சச்பெண்ட் செய்யப்பட்ட 4 வீரர்கள். இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட 3 பேர் சிக்கியுள்ளமை, ஆகியன ஐபிஎல். என்ற கிரிக்கெட்டின் இமேஜின் மீது கரி பூசினாலும் ரசிகர்களின் பொழுது போக்கு மனோநிலையில் எந்த வித மாறுதலையும் ஏற்படுத்தவில்லை.

சூதாட்டப்புகார் எழுநத, ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட,அன்றே நடைபெற்ற போட்டியில் ஏகப்பட்ட கூட்டம், ரசிகர்களின் சுரணையற்ற ஆரவாரம்! வர்ணனையாளர்கள் வழக்கம்போல் சீரியசாக கிரிக்கெட் பகுப்பாய்வில் ஈடுபட்டது அனைத்தும் மிகவும் அருவருப்பாகவே அமைந்தன. ஆனால் ரசிகர்களுக்கு, மக்களுக்கு? சுரணை மழுங்கடிக்கப்பட்டது.

நேற்றைய சன் ரைசர்ஸ் போட்டியில் ஒரேயொரு ஒல்லியான பதின்ம வயது நபர் ஒருவர் ஸ்ரீசாந்திற்கு எதிராக போஸ்டரைக் காண்பித்தார். பிறகு அவரும் ஆரவாரக் கும்பலுடன் ஐக்கியமானார்.

சன் நியூஸ் சானலில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பாஸ்கி, நானி, பிரசாத் கலந்து கொண்டு உரையாடும் கலகலப்பு நிகழ்ச்சியில் 'ஐபிஎல் சூதாட்டம்' ஸ்பாட் பிக்சிங் என்ற வார்த்தைகூட வெளிவரவில்லை. ஏதேதோ செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கிரிக்கெட்டை சும்மா ஜாலியாக ரசிக்கவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.

முதலில் ஒரு போட்டி பிக்சிங் செய்த போட்டியா, யார் வெற்றி பெறவேண்டும் என்பது முதலிலேயே தீர்மானிக்கப்போட்டியா என்ற இடையூறுகள் இல்லாமல், சந்தேகமற எப்படி ஐயா கிரிக்கெட்டை 'ஜாலியாக எஞ்ஜாய் செய்ய முடியும்?' இது நாணி அவர்களின் கருத்து மட்டுமல்ல. பொதுவாக ரசிகர்களின் பொழுதுபோக்கு வக்ர மோகத்தின் ஒரு தெறிப்பே நாணியின் கருத்தும். இதில் என்ன விமர்சனச் சிந்தனை வந்துவிடப்போகிறது?

பல மக்களின் தலைவிதியைத் தீரமானிக்கும் நாட்டின் தேர்தல்களே ஏதோ ஒரு மிகப்பெரிய தொலைக்காட்சி பொழுது போக்காகவும் இடங்கள், தொகுதிகள் ஆகியவற்றின் வெற்றி எண்ணிக்கை என்ற நம்பர் பித்தும் பிடிக்க வைக்கப்படுகிறது. ஐபிஎல். நம்பர் கேம், தேர்தல் நம்பர் கேம்! அனைத்தையும் தீர்மானிப்பது தொலைக்காட்சி பிம்பம், மைதானத்தில் நேரில் சென்று கிரிக்கெட் வீரர்களை நேரடியாக தரிசனம் செய்யும் ஆளுமை வழிபாட்டு மோகம் இவ்வாறு மக்கள் மனோநிலை இருக்கும்போது சூதாட்டம், ஊழல் என்பது பற்றியெல்லாம் இந்த மந்தைக்கு என்ன பிரக்ஞை வந்து விடப்போகிறது.

நாணி கூறுவது போல் இன்று இந்தப் பிரச்சனை நாளை வேறொரு பிரச்சனை வந்தால் இதனை மறந்து விடுவார்கள். ஆனால் நாணி இந்தப் போக்கை வேதனை தருவதாகக் கருதுவதில்லை. அது அப்படி என்றால் அப்படித்தான்! அதுதான் வாழ்க்கை, எது எப்படியிருந்தால் என்ன? எவன் செத்தால் என்ன வாழ்ந்தால் என்ன? லைஃப் இச் கோயிங் ஆன்... எனி திங் கோஸ்... என்ற ஒரு விதமான மத்தியதர அல்லது உயர் மத்தியதர கவலையற்ற வாழ்வு கொடுக்கும் அசாத்திய பாதுகாப்பு உணர்விலிருந்து வெளியே வரும் வார்த்தைகள்தான் இந்த லைஃபை எஞ்ஜாய் பண்ணுங்க, கிரிக்கெட்டை எஞ்ஜாய் பண்ணுங்க என்பதெல்லாம்!



ஆபாச உடைகள் மீது மோகம்: மனைவியை கொன்ற கணவர் கைது

தனது பேச்சைக் கேட்காமல், ஆபாசமான உடைகளை அணிந்த மனைவியை கணவர் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.
இத்தாலியின் பசேலிகோட்யூஸ் வில்வேஜ் பகுதியை சேர்ந்தவர் சின்ஜ் குல்பிர் (வயது 37). இந்தியரான இவர் கடந்த 10 வருடங்களாக இத்தாலியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளர். குல்பீரின் மனைவி கவுர் பல்விந்தே (வயது 27). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுர் பல்விந்தே திடீரென மாயமானார். அதனையடுத்து கவுரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.
குல்பிரிடம் கேட்ட போது, தன்னுடன் வாழப் பிடிக்காமல் கவுர் பிரிந்து சென்று விட்டதாக கூறினார். இந்நிலையில், கவுரின் சடலம் அப்பகுதியில் உள்ள நதிக்கரையோரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையினர் சடலத்தை கைபற்றி விசாரணை நடத்தினர். அதில் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், தனது மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டார்.
காவல்துறையில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மனைவி கவுருக்கு இந்திய பாரம்பரிய ஆடைகள் பிடிக்கவில்லை. அவர் ஆபாசமான மேற்கத்திய பாணி உடைகளையே அணிந்தார். அது எனக்கு பிடிக்காததால் பலமுறை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை.
பிடிவாதமாக அதையே அணிந்து வந்தார். இது என் கோபத்தை அதிகரித்தது. அதனால் அவரைக் கொலை செய்தேன் என்று குல்பீர் கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்கம் கெடுக்கும் சாக்லெட் மோகம்!

02/05/2009
தூக்கம் கெடுக்கும் சாக்லெட் மோகம்!

சிறிய வயதில் சாக்லெட் சாப்பிட்டால், உடலுக்கும் சத்து தான்.ஆனால், அதற்காக சாக்லெட்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், உடலுக்கு தீங்கு தான். இளைய வயதை தாண்டிய பின்னும், சாக்லெட் மோகம் குறையாவிட்டால், குறிப்பாக தூக்கம் கெடும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
காபி, டீ குடித்தால் துக்கம் வராது என்பது தெரிந்த உண்மை. காபின் என்ற ரசாயன கலவை இருப்பதே இதற்கு காரணம். இவற்றில் உள்ளது போல பல மடங்கு காபின் ரசாயனம் , சாக்லெட்டில் உள்ளது. அதனால், சாக்லெட் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக தூக்கமில்லாமல் தவிப்பர். சாதாரண சாக்லெட்டில் ஒன்பது மில்லி கிராம் வரை காபின் இருக்கிறது; சில உயர் ரக சாக்லெட்டில் 30 மில்லி கிராம் வரை உள்ளது. அப்படியானால், தூக்கம் எந்த அளவுக்கு கெடும் என்பதை மதிப்பிட்டுக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சாக்லெட்டில் காபின் சத்துடன், தியோப்ரோமின் என்ற ரசாயனமும் உள் ளது. இது தான் தூக் கத்தை கெடுக்க ஊக்குவிக்கின்றது.
“தூங்கப்போகும் முன், சில மணி நேரம் வரை சாக்லெட், டீ, காபி, குளிர்பானம் குடிக்காமல் இருப்பது நல்லது; அப்போது தான் தூக்கம் நிம்மதியாக வரும்’ என்று தேசிய உறக்க ஆராய்ச்சி பவுண்டேஷன் கூறியுள்ளது. இப்ப புரியுதா, நைட்டுல சாக்லெட் சாப்பிடாதீங்க!
நல்லா தூங்கினா போச்சு ஹாச்ச்ச்…!
“ஹாச்…’ என்று ஒரு முறை தும்மினால் போதும், அடுத்த ஒரு வாரத் துக்கு சளி, சனியாகப்பிடித்துக் கொண்டு விடும். ஜலதோஷம் வந்து விட்டால்போதும், மூக்கே சிவக்கும் அளவுக்கு சிலர் பிழிந்து எடுத்துவிடுவர்; கர்சீப்பை எல்லாம் நனைத்து விடுவர். ஒரு உண்மையை மறந்திருப்பர்; தூங்கி எழுந்தவுடன் ஜலதோஷம் குறைந்திருக்கும். இதை பலர் கவனித்திருக்க மாட்டர். தூக்கம் குறைவாக இருந்தால், அதுவே, ஜலதோஷத்துக்கு நண்பன். ஹாச்ச்ச்…இன்னும் அதிமாகி விடும். நன்றாக தூங்கினால், வெகுவாக குறைந்து விடும். இது தான் அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு.
“நன்றாக எட்டு மணி நேரம் தூங்குவோருக்கு ஜலதோஷம் வருவது அரிதாகவே இருக்கும். தூக்கமில்லாமல் இருப்போருக்கு அடிக்கடி ஜலதோஷம் வர வாய்ப்புள்ளது. தூங்கி விட்டால், ஜலதோஷத்தை பரப்பும் கிருமிகள் ஒடுங்கி விடுகின்றன. அவை குறைந்து விடுவதால் மீண்டும் எழுந்திருக்கும் போது, ஜலதோஷத்தின் வீரியம் குறைந்து விடுகிறது என்றும் நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். உங்களுக்கு ஜலதோஷம் வந்தால் இப்படி முயற்சி பண்ணிப்பாருங்களேன்!
ரெண்டு வயசில் டூத் பிரஷ் தாங்க!
குழந்தை பிறந்தவுடன், ஒரு வயதில் ஆறு பற்கள் முளைத்து விடும். அதன் பின் நாலைந்து மாதங்கள் முளைக்காது. அதன் பின் மற்ற பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். கடைவாய்ப்பற்கள் நான்கு ஒன்றரை வயதில் முளைக்க ஆரம் பித்து, இரண்டு வயதில் தெரியும். எ னினும், பால்பல் விழுந்து, நிரந்தர பற்களுக்கு இடம் அளிக்கும். ஆறு வயதில் ஆரம்பித்த நிரந்தர பற்கள் வளருவது, 12 வயதில் பூர்த்தி அடையும். அறிவுப்பல், அதாவது, 20 வயதுக்கு மேல் முளைக்கும் கடைவாய்ப்பல்லை சொல்வர். அது சிலருக்கு முளைக்காமலும் போகும்.
பற்களை பளீச்…சென வைத்திருப்பதும், பாதுகாப்பாக வைத்திருப்பதும் குழந்தை வயதில் இருந்தே பராமரிப்பதை பொறுத்து தான் அமையும். அதனால் தான், இரண்டு வயதில் இருந்தே பல்தேய்க்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும்;அப்போதே, மிருதுவான டூத் பிரஷ் வாங்கி, பழக்க வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலை, இரவில் பல் துலக்கும் பழக் கம் வந்து விட் டால், எந்த வய திலும் பற்கள் விழவோ, அழுக்கு படியவோ வாய்ப்பே இல்லை. அறுபது வயதிலும் பற்கள் பளீச் தான்.
                  கங்கை - மஹாபிஷன் மோகம் - பகுதி 96
வைசம்பாயணர் சொன்னார், "இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் முழு உலகத்திற்கும் அதிபதியாக இருந்தான். அவன் உண்மையான வீரத்துடனும், உண்மை நிறைந்த பேச்சுடையவனாகவும் இருந்தான். ஆயிரம் குதிரை வேள்விகளையும் (அஸ்வமேத யாகங்களையும்), நூறு ராஜசூய வேள்விகளையும் செய்து தேவர்கள் தலைவனைத் திருப்திப் படுத்தி சொர்க்கத்தை அடைந்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section96.html#sthash.0QFF5NMU.dpuf
"ஒரு நாள் தேவர்கள் ஒன்றாகக் கூடி பிரம்மனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். பல அரச முனிகளும் மன்னன் மஹாபிஷனும் அந்த இடத்தில் இருந்தனர். ஆறுகளின் அரசி கங்கையும் அங்கே பெரும்பாட்டனை வழிபட வந்திருந்தாள். சந்திரனின் கதிர்களைப் போன்ற அவளது வெண்ணிற ஆடை காற்றின் செயலால் சிறிது அகன்றது. அவளது நிலை வெளிப்பட்ட போது, தேவர்கள் தங்கள் தலையைக் கவிழ்த்துக் கொண்டனர். ஆனால் அரசமுனி மஹாபிஷன் முரட்டுத்தனமாக அந்த ஆறுகளின் அரசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இதன் காரணமாக மன்னன் மஹாபிஷன் பிரம்மனால் சபிக்கப்பட்டான். அவர், "பாவியே, கங்கையைப் பார்த்தவுடன் நீ தன்னிலை மறந்து போனதால், நீ உலகத்தில் மறுபடி பிறப்பாய். ஆனால், நீ மறுபடி மறுபடி இந்த இடங்களுக்கு வந்து போவாய். அவளும், மனிதர்களின் உலகத்தில் பிறந்து, உனக்குத் தீங்கிழைப்பாள். ஆனால் உனக்கு கோபம் மூண்டதும், நீ சாபத்திலிருந்து விடுபடுவாய்." என்று சபித்தார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section96.html#sthash.0QFF5NMU.dpuf
வைசம்பாயணர் தொடர்ந்தார், "மன்னன் மஹாபிஷன் பூமியிலுள்ள எல்லா ஏகாதிபதிகளையும் துறவிகளையும் மனதில் நினைத்துப் பார்த்துபெரும் வீரம் கொண்ட பிரதீபனுக்கு மகனாகப் பிறக்க விரும்பினான்ஆறுகளின் அரசியும்மன்னன் மஹாபிஷன் உறுதி இழப்பதைப் பார்த்துஅவனை விருப்பத்துடன் நினைத்துசென்றுவிட்டாள்அப்படி அவள் போகும் வழியில்சொர்க்கத்தில் வசிப்பவர்களான வசுக்களும் அதே பாதையில் வருவதைக் கண்டாள்அவர்கள் அவதியில் இருப்பதைக்கண்ட ஆறுகளின் அரசிஅவர்களிடம், "சொர்க்கத்தில் வசிப்பவர்களேஏன் நீங்கள் மனத்தளர்வுற்றவர்களாகக் காணப்படுகிறீர்கள்எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று கேட்டாள்அதற்கு தேவர்களான வசுக்கள், " ஆறுகளின் அரசியேமன்னிக்கத்தகுந்த எங்களது குற்றத்திற்காகசிறப்புவாய்ந்த வசிஷ்டர் கோபங்கொண்டு எங்களைச் சபித்துவிட்டார்சிறப்புவாய்ந்த முனிவர்களில் முதன்மையான வசிஷ்டர் மாலை வழிபாட்டில் அமர்ந்திருந்தார்அவரை எங்களால் காண முடியவில்லைஇதைஅறியாமல் நாங்கள் அவரைக் கடந்து சென்றோம்ஆகையால்கோபத்தால் அவர் எங்களை மனிதர்களின் மத்தியில் பிறக்கக் கடவீர்கள் என்று சபித்துவிட்டார்பிரம்மனால் உச்சரிக்கப்பட்டவற்றைக் கேட்டு சினங்கொள்ள எங்களுக்கு சக்தி இல்லைஆகையால் நதியேநீயே மனிதப் பெண்ணாகி வசுக்களான எங்களைப் உனது பிள்ளைகளாக்கிக் கொள் இனிமையானவளேஎந்த மனித பெண்ணின் கருவுக்குள்ளும் நுழைய நாங்கள் விரும்பவில்லைஎன்றனர்.



வசுக்களால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட ஆறுகளின் அரசி, "அப்படியே ஆகட்டும்." என்று சொல்லி, "பூமியிலுள்ள மனிதர்களில் முதன்மையானவர்களில் யாரை நீங்கள் தந்தையாகக் கொள்வீர்கள்?" என்று கேட்டாள்.



வசுக்கள், "பூமியில்பிரதீபனுக்கு மகனாக சந்தனு என்பவன் பிறப்பான்அவன்  பார் புகழும் மன்னனாக இருப்பான்." என்றனர்கங்கை, "தேவர்களேபாவங்களற்ற நீங்கள் தெரிவிப்பதைத் தான் நானும் விரும்பினேன்நான் நிச்சயமாக சந்தனுவிடம் செல்வேன்நீங்கள் இப்போது தெரிவிப்பது போலஇது உங்களின் விருப்பமும் கூட." என்றாள்வசுக்கள், " மூன்று மார்கமாகப் (ஆகாயம்பூமி (தரை), பாதாளம்பயணிப்பவளேநாங்கள் பிறந்தவுடன்எங்களை நீரில் எறிந்துவிடுஅப்படி நீசெய்தால்நாங்கள் பூமியில் வெகு காலம் வாழ வேண்டியதில்லைஆகையால் வெகு விரைவாக நாங்கள் மீண்டு விடுவோம்." என்றனர்அதற்கு கங்கை, "நீங்கள் விருப்பப்படுவதை நான் செய்வேன்ஆனால் என்னுடனான அவரது தொடர்பு முழுவதுமாகக் கனியற்று இருக்கக்கூடாதுஆகையால்ஒரு மகனாவது வாழும்படி அவருக்கு வழங்குங்கள்என்றாள்வசுக்கள், "எங்கள் ஒவ்வொருவரின் சக்தியில் எட்டில் ஒரு பங்கு சக்தியைச் சேர்த்துநீ உனது விருப்பத்திற்கேற்றபடியும்அவனதுவிருப்பத்திற்கேற்றபடியும் அடையலாம்ஆனால்அந்த மகன்பூமியில் பிள்ளைகளைப் பெறக்கூடாது.



ஆகையால்நீ பெறும் பெரும் சக்திகள் கொண்ட உனது மைந்தன்புத்திரப் பேறற்று இருக்க வேண்டும்." என்றனர்.


இப்படி வசுக்கள் கங்கையிடம் ஒரு ஏற்பாடு செய்துவிட்டுசென்றவிட்டனர்அவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்காகக் காத்திருந்தனர்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section96.html#sthash.0QFF5NMU.dpuf

என்று தணியும் இந்த சினிமா மோகம்?


டிசம்பர் 12 தமிழக கூத்தாடி உச்ச நட்சத்திரம் பிறந்தநாள் 
டிசம்பர் 11 தன் வயிறை விட தன் சமூகத்தை நேசித்த மகாகவி பாரதி பிறந்தநாள். இந்த பாரதியின் பிறந்தநாளை மறந்த கொண்டாடத இந்த சமூகம் ஒரு கூத்தாடியின் பிறந்தநாளை கொண்டடுவதை என்னெவென்று சொல்வது...

இந்த சமூகநிலையை அன்றே பாரதி பாட்டில் சொன்னார்.
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?

விஜய் தொல்லைக்காட்சியில் பிரபலமான நீயா நானாவில் இந்த கூத்தாடிக்கு மக்களை பிடித்ததற்கு காரணம் என்ன என்று ஒரு கூட்டமே உட்கார்ந்து இவர் இப்படி பேசினார் அப்படி பேசினார் சினிமாவில் என்று புகழ்ந்து பிதற்றுகிறார்கள்..... என்னடா கூட்டம் இது.... தான் யாரை கொண்டாட வேண்டும் என்று கூட தெரியாத மிருகக்கூட்டமா நான் வாழும் கூட்டம்?

இத நினைக்கும் நெஞ்சு கூசுகிறது... நாட்டில் எவ்வளவு பிரச்சினை போகிறது... 
  • கூடங்குளம் அணு உலை என்ற பேராபத்தை தமிழகம் சந்திக்க போராடுகிறது ,
  • முல்லை பெரியாறு அணையை கேரளா அரசு இடிக்க திட்டமிடுகிறது 
  • சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து விவசாயிகளையும் சிறு வணிகர்களையும் அழிக்க மத்திய அரசு முயல்கிறது...
  • தமிழக அரசு அத்தியாவசிய பொருள்களின் விலையை ஏற்றி நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மேலும் சுமையை ஏற்றியுள்ளது.
இதுபோல் பல பிரச்சினைகள் நாட்டில் இருக்கும் பொது ஒரு கூத்தாடியின் பிறந்தநாளும் அந்த கூத்தாடியும் முக்கியமா? அல்லது அந்த கூத்தாடிதான் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்துள்ளானா? மாக்களே சிந்தியுங்கள்.. சினிமா என்பது நாம் உழைத்த களைப்பு போக உழைத்த பணத்தில் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு பண்டம் என்பதை ஏன் மக்கள் என்று உணர்வார்கள்? என்று தணியும் இந்த சினிமா மோகம்?

கடைசியாக பாரதியின் வரிகளுடன்...

நெஞ்சு பொறுக்கு திலையே - இதை 
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே, 
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன் 
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் 
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் 
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் 
துஞ்சி மடிகின் றாரே - இவர் 
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.


நன்றி : 










No comments:

Post a Comment