photo

photo
Venkatesh.A.S

Sunday, 15 December 2013

Twelfth House (பன்னிரெண்டாம் வீடு)


எச்சரிக்கை : ஆட்கள் மறைந்துள்ளார்கள் 

"வில் வளைவதும் , புலி பதுங்குவதும் 
பணிவதாக அர்த்தமல்ல"
- இது ஒரு பழமொழி  

ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த வீடு.
 சூரியன் மறைந்ததும் எவருமே அந்தப்பக்கம் செல்ல பயப்படும் ஒரு இடம். திகில் திரைப்படங்கள் பலவற்றில் தவறாது இடம் பெரும் ஒரு இடம்.
அது ஒரு மறைவிடம்.



இது போன்ற இடங்கள் யாருக்கு அடைக்கலம் அளிக்கும் ?
சமூக விரோதிகள் ,
எதற்கும் துணிந்தவர்கள் ,
பாவத்திற்கு துளியும் அஞ்சாதவர்கள் போன்றோர்களுக்கு .

ஏன் இப்படி ?
காரணம் அந்த இடத்தின் அமைப்பு அப்படி.
அதாவது சமூக விரோதிகளின் மனநிலைக்கேற்ற சூழ்நிலை அங்கு நிலவுவதால்.
தீய எண்ணங்களின் அலைவரிசை அங்கு ஓயாமல் உலவி வருவதால்.

ஒருவரது ஜாதக கட்டங்களில் முறையே 3, 6, 8, 12 ஆம் இடங்கள் மறைவு இடங்களாகும்.

மூன்றாம் இடம் என்பது தைரியம் , தீய எண்ணங்கள் , வலது காது , இளைய உடன்பிறப்புகள் , மன திடம் போன்றவற்றை தெரிவிப்பதாகும். 

Third House
Courage, firmness, bad thoughts, breast, ear, especially right ear, prowess, brother or sister - younger one, heroism, mental strength

ஆறாம் இடம் என்பது கடன், காயங்கள், வியாதிகள், எதிரிகள், பாவங்கள், பயம் போன்றவற்றை அறிவிக்கும். 

Sixth HouseDebt, wounds, disease, enemy, sin, a wicked act, fear, humiliation

எட்டாம் இடம் என்பது ஆயுள் , மன உளைச்சல் , அவமானம் , வீழ்த்தப்படுதல் , சோகம் , மரணம் , ஆபத்துகள் போன்றவற்றை குறிக்கும். 

Eighth HouseLife, longevity, mental pain, defeat or insult, sorrow, scandal, ill-repute, death, impurity, obstacle, danger

பன்னிரெண்டாம் இடம் என்பது முக்கியமான இடம் காணாமல் போவது , இழப்புகள், பாவம், சயனம் / சுகம், மறைமுக எதிரிகள், வறுமை, துக்கம், ஆபத்துக்கள் போன்றவற்றை தெரிவிக்கும். 

Twelfth HouseHouse of disappearance, bondage, loss, negation, bed, sin, poverty, penury, loss, decline, misery, left eye, leg, defect

இவைகளில் மூன்றாம் இடம் தவிர மற்ற இடங்கள் மிக முக்கியமானது. 

அதிலும் பன்னிரெண்டாம் இடம் அதிமுக்கியமானது. இந்த இடங்களின்

 பலங்கள் தான் ஒருவரை ஒரு வழி பண்ணும் இடங்களாகும். இந்த

 இடங்களில் பதுங்கி இருக்கும் கிரகங்கள் அந்தந்த இடத்திற்கு தக்கவாறு 

தங்கள் கைவரிசைகளை தங்களது தசா / புக்திகளில் காண்பிப்பார்கள் . 

இவற்றில் பன்னிரெண்டாம் இடம் ஏன் முக்கியமானது எனில் இதன் நேர் 

எதிர் இடம் ஆறாம் இடமாகும் . (ஒரு இடத்திலிருந்து ஆரம்பித்து எண்ணி 

ஏழில் முடியும் இடம் அதன் நேர் எதிர் ஸ்தானமாகும்) பன்னிரெண்டில் 

அமரும் கிரகம் நேர் பார்வையாக ஆறாம் இடத்தை பார்க்கும். 

அது சுப கிரகமானால் ஆறாம் இடம் பலம் பெற்று விடும். அதனால் அந்த 

இடத்தின் தன்மைக்கேற்றபடி கஷ்ட / நஷ்டங்களை நாம் அனுபவிக்க 

நேரிடும். அதே போன்று ஆறாம் வீட்டில் அமரும் கிரகமானது அதன் நேர் 

பார்வையாக பன்னிரெண்டாம் இடத்தை பார்க்கும். அதனால் அதன் பலனும் 

அனுபவிக்க வேண்டியது தான். 

பன்னிரெண்டில் அமரும் கிரகத்தின் தன்மை பொறுத்து அதன் பலனும் 

மாறுபடும் . உதாரணமாக புதன் பன்னிரெண்டில் இருந்து ஒருவர்

 காணாமல் போனால் குழந்தை தனத்தால் போயிருப்பார். அது 

ஏற்கனவே குழந்தையாக 

இருந்தால் யாரவது ஏதேனும் மிட்டாய் , lays chips, வாங்கி 

தருவதாககூறி 

அழைத்து போயிருப்பார். அதுவே நன்கு வளர்ந்தவர்களானால் யாரேனும் 

அவர்களிடம் இல்லாத ஒன்றை தருவதாக கூறி அழைத்து போயிருப்பார். 

இதில் புதன் அமர்ந்த வீடு , புதன் இருக்கும் நட்சத்திர அதிபதி , புதன் அமர்ந்த 

வீட்டின் அதிபதி , புதனின் வீடுகளில் அமர்ந்து இருக்கும் கிரகங்கள் , புதனை 
பார்க்கும் கிரகங்கள் , புதன் வீட்டை பார்க்கும் கிரகங்கள் இவர்களை 

பொறுத்து பலன்களை கூறலாம். 

அப்படி காணாமல் போனவர்களின் கதி போன்றவற்றை அந்தந்த தசா புக்திகளின் கால அளவுகள், நடக்கும் கோள்களின் நிலை போன்றவற்றை பொறுத்து சொல்ல முடியும். 

*******

நேரமின்மையால் புதிய பதிவுகளை எழுத தாமதம் ஏற்படுகிறது. மேலும் யாருக்காவது அவசியம் இருப்பின் , முடிந்தவரை விரைவாக வெளியிடுவேன். 

தொடரும் .....


***பகுதி***


No comments:

Post a Comment