இத்தாலியின் பசேலிகோட்யூஸ் வில்வேஜ் பகுதியை சேர்ந்தவர் சின்ஜ் குல்பிர் (வயது 37). இந்தியரான இவர் கடந்த 10 வருடங்களாக இத்தாலியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளர். குல்பீரின் மனைவி கவுர் பல்விந்தே (வயது 27). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுர் பல்விந்தே திடீரென மாயமானார். அதனையடுத்து கவுரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.
குல்பிரிடம் கேட்ட போது, தன்னுடன் வாழப் பிடிக்காமல் கவுர் பிரிந்து சென்று விட்டதாக கூறினார். இந்நிலையில், கவுரின் சடலம் அப்பகுதியில் உள்ள நதிக்கரையோரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையினர் சடலத்தை கைபற்றி விசாரணை நடத்தினர். அதில் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், தனது மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டார்.
காவல்துறையில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மனைவி கவுருக்கு இந்திய பாரம்பரிய ஆடைகள் பிடிக்கவில்லை. அவர் ஆபாசமான மேற்கத்திய பாணி உடைகளையே அணிந்தார். அது எனக்கு பிடிக்காததால் பலமுறை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை.
பிடிவாதமாக அதையே அணிந்து வந்தார். இது என் கோபத்தை அதிகரித்தது. அதனால் அவரைக் கொலை செய்தேன் என்று குல்பீர் கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்கம் கெடுக்கும் சாக்லெட் மோகம்!
சிறிய வயதில் சாக்லெட் சாப்பிட்டால், உடலுக்கும் சத்து தான்.ஆனால், அதற்காக சாக்லெட்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், உடலுக்கு தீங்கு தான். இளைய வயதை தாண்டிய பின்னும், சாக்லெட் மோகம் குறையாவிட்டால், குறிப்பாக தூக்கம் கெடும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
காபி, டீ குடித்தால் துக்கம் வராது என்பது தெரிந்த உண்மை. காபின் என்ற ரசாயன கலவை இருப்பதே இதற்கு காரணம். இவற்றில் உள்ளது போல பல மடங்கு காபின் ரசாயனம் , சாக்லெட்டில் உள்ளது. அதனால், சாக்லெட் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக தூக்கமில்லாமல் தவிப்பர். சாதாரண சாக்லெட்டில் ஒன்பது மில்லி கிராம் வரை காபின் இருக்கிறது; சில உயர் ரக சாக்லெட்டில் 30 மில்லி கிராம் வரை உள்ளது. அப்படியானால், தூக்கம் எந்த அளவுக்கு கெடும் என்பதை மதிப்பிட்டுக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சாக்லெட்டில் காபின் சத்துடன், தியோப்ரோமின் என்ற ரசாயனமும் உள் ளது. இது தான் தூக் கத்தை கெடுக்க ஊக்குவிக்கின்றது.
“தூங்கப்போகும் முன், சில மணி நேரம் வரை சாக்லெட், டீ, காபி, குளிர்பானம் குடிக்காமல் இருப்பது நல்லது; அப்போது தான் தூக்கம் நிம்மதியாக வரும்’ என்று தேசிய உறக்க ஆராய்ச்சி பவுண்டேஷன் கூறியுள்ளது. இப்ப புரியுதா, நைட்டுல சாக்லெட் சாப்பிடாதீங்க!
நல்லா தூங்கினா போச்சு ஹாச்ச்ச்…!
“ஹாச்…’ என்று ஒரு முறை தும்மினால் போதும், அடுத்த ஒரு வாரத் துக்கு சளி, சனியாகப்பிடித்துக் கொண்டு விடும். ஜலதோஷம் வந்து விட்டால்போதும், மூக்கே சிவக்கும் அளவுக்கு சிலர் பிழிந்து எடுத்துவிடுவர்; கர்சீப்பை எல்லாம் நனைத்து விடுவர். ஒரு உண்மையை மறந்திருப்பர்; தூங்கி எழுந்தவுடன் ஜலதோஷம் குறைந்திருக்கும். இதை பலர் கவனித்திருக்க மாட்டர். தூக்கம் குறைவாக இருந்தால், அதுவே, ஜலதோஷத்துக்கு நண்பன். ஹாச்ச்ச்…இன்னும் அதிமாகி விடும். நன்றாக தூங்கினால், வெகுவாக குறைந்து விடும். இது தான் அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு.
“நன்றாக எட்டு மணி நேரம் தூங்குவோருக்கு ஜலதோஷம் வருவது அரிதாகவே இருக்கும். தூக்கமில்லாமல் இருப்போருக்கு அடிக்கடி ஜலதோஷம் வர வாய்ப்புள்ளது. தூங்கி விட்டால், ஜலதோஷத்தை பரப்பும் கிருமிகள் ஒடுங்கி விடுகின்றன. அவை குறைந்து விடுவதால் மீண்டும் எழுந்திருக்கும் போது, ஜலதோஷத்தின் வீரியம் குறைந்து விடுகிறது என்றும் நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். உங்களுக்கு ஜலதோஷம் வந்தால் இப்படி முயற்சி பண்ணிப்பாருங்களேன்!
ரெண்டு வயசில் டூத் பிரஷ் தாங்க!
குழந்தை பிறந்தவுடன், ஒரு வயதில் ஆறு பற்கள் முளைத்து விடும். அதன் பின் நாலைந்து மாதங்கள் முளைக்காது. அதன் பின் மற்ற பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். கடைவாய்ப்பற்கள் நான்கு ஒன்றரை வயதில் முளைக்க ஆரம் பித்து, இரண்டு வயதில் தெரியும். எ னினும், பால்பல் விழுந்து, நிரந்தர பற்களுக்கு இடம் அளிக்கும். ஆறு வயதில் ஆரம்பித்த நிரந்தர பற்கள் வளருவது, 12 வயதில் பூர்த்தி அடையும். அறிவுப்பல், அதாவது, 20 வயதுக்கு மேல் முளைக்கும் கடைவாய்ப்பல்லை சொல்வர். அது சிலருக்கு முளைக்காமலும் போகும்.
பற்களை பளீச்…சென வைத்திருப்பதும், பாதுகாப்பாக வைத்திருப்பதும் குழந்தை வயதில் இருந்தே பராமரிப்பதை பொறுத்து தான் அமையும். அதனால் தான், இரண்டு வயதில் இருந்தே பல்தேய்க்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும்;அப்போதே, மிருதுவான டூத் பிரஷ் வாங்கி, பழக்க வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலை, இரவில் பல் துலக்கும் பழக் கம் வந்து விட் டால், எந்த வய திலும் பற்கள் விழவோ, அழுக்கு படியவோ வாய்ப்பே இல்லை. அறுபது வயதிலும் பற்கள் பளீச் தான்.
கங்கை - மஹாபிஷன் மோகம் - பகுதி 96
வைசம்பாயணர் சொன்னார், "இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் முழு உலகத்திற்கும் அதிபதியாக இருந்தான். அவன் உண்மையான வீரத்துடனும், உண்மை நிறைந்த பேச்சுடையவனாகவும் இருந்தான். ஆயிரம் குதிரை வேள்விகளையும் (அஸ்வமேத யாகங்களையும்), நூறு ராஜசூய வேள்விகளையும் செய்து தேவர்கள் தலைவனைத் திருப்திப் படுத்தி சொர்க்கத்தை அடைந்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section96.html#sthash.0QFF5NMU.dpuf
"ஒரு நாள் தேவர்கள் ஒன்றாகக் கூடி பிரம்மனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். பல அரச முனிகளும் மன்னன் மஹாபிஷனும் அந்த இடத்தில் இருந்தனர். ஆறுகளின் அரசி கங்கையும் அங்கே பெரும்பாட்டனை வழிபட வந்திருந்தாள். சந்திரனின் கதிர்களைப் போன்ற அவளது வெண்ணிற ஆடை காற்றின் செயலால் சிறிது அகன்றது. அவளது நிலை வெளிப்பட்ட போது, தேவர்கள் தங்கள் தலையைக் கவிழ்த்துக் கொண்டனர். ஆனால் அரசமுனி மஹாபிஷன் முரட்டுத்தனமாக அந்த ஆறுகளின் அரசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இதன் காரணமாக மன்னன் மஹாபிஷன் பிரம்மனால் சபிக்கப்பட்டான். அவர், "பாவியே, கங்கையைப் பார்த்தவுடன் நீ தன்னிலை மறந்து போனதால், நீ உலகத்தில் மறுபடி பிறப்பாய். ஆனால், நீ மறுபடி மறுபடி இந்த இடங்களுக்கு வந்து போவாய். அவளும், மனிதர்களின் உலகத்தில் பிறந்து, உனக்குத் தீங்கிழைப்பாள். ஆனால் உனக்கு கோபம் மூண்டதும், நீ சாபத்திலிருந்து விடுபடுவாய்." என்று சபித்தார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section96.html#sthash.0QFF5NMU.dpuf
வைசம்பாயணர் தொடர்ந்தார், "மன்னன் மஹாபிஷன் பூமியிலுள்ள எல்லா ஏகாதிபதிகளையும் துறவிகளையும் மனதில் நினைத்துப் பார்த்து, பெரும் வீரம் கொண்ட பிரதீபனுக்கு மகனாகப் பிறக்க விரும்பினான். ஆறுகளின் அரசியும், மன்னன் மஹாபிஷன் உறுதி இழப்பதைப் பார்த்து, அவனை விருப்பத்துடன் நினைத்து, சென்றுவிட்டாள். அப்படி அவள் போகும் வழியில், சொர்க்கத்தில் வசிப்பவர்களான வசுக்களும் அதே பாதையில் வருவதைக் கண்டாள். அவர்கள் அவதியில் இருப்பதைக்கண்ட ஆறுகளின் அரசி, அவர்களிடம், "சொர்க்கத்தில் வசிப்பவர்களே, ஏன் நீங்கள் மனத்தளர்வுற்றவர்களாகக் காணப்படுகிறீர்கள்? எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று கேட்டாள். அதற்கு தேவர்களான வசுக்கள், "ஓ ஆறுகளின் அரசியே, மன்னிக்கத்தகுந்த எங்களது குற்றத்திற்காக, சிறப்புவாய்ந்த வசிஷ்டர் கோபங்கொண்டு எங்களைச் சபித்துவிட்டார். சிறப்புவாய்ந்த முனிவர்களில் முதன்மையான வசிஷ்டர் மாலை வழிபாட்டில் அமர்ந்திருந்தார். அவரை எங்களால் காண முடியவில்லை. இதைஅறியாமல் நாங்கள் அவரைக் கடந்து சென்றோம். ஆகையால், கோபத்தால் அவர் எங்களை மனிதர்களின் மத்தியில் பிறக்கக் கடவீர்கள் என்று சபித்துவிட்டார். பிரம்மனால் உச்சரிக்கப்பட்டவற்றைக் கேட்டு சினங்கொள்ள எங்களுக்கு சக்தி இல்லை. ஆகையால், ஓ நதியே, நீயே மனிதப் பெண்ணாகி வசுக்களான எங்களைப் உனது பிள்ளைகளாக்கிக் கொள். ஓ இனிமையானவளே, எந்த மனித பெண்ணின் கருவுக்குள்ளும் நுழைய நாங்கள் விரும்பவில்லை" என்றனர்.
வசுக்களால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட ஆறுகளின் அரசி, "அப்படியே ஆகட்டும்." என்று சொல்லி, "பூமியிலுள்ள மனிதர்களில் முதன்மையானவர்களில் யாரை நீங்கள் தந்தையாகக் கொள்வீர்கள்?" என்று கேட்டாள்.
வசுக்கள், "பூமியில், பிரதீபனுக்கு மகனாக சந்தனு என்பவன் பிறப்பான், அவன் பார் புகழும் மன்னனாக இருப்பான்." என்றனர். கங்கை, "தேவர்களே, பாவங்களற்ற நீங்கள் தெரிவிப்பதைத் தான் நானும் விரும்பினேன். நான் நிச்சயமாக சந்தனுவிடம் செல்வேன். நீங்கள் இப்போது தெரிவிப்பது போல, இது உங்களின் விருப்பமும் கூட." என்றாள். வசுக்கள், "ஓ மூன்று மார்கமாகப் (ஆகாயம், பூமி (தரை), பாதாளம்) பயணிப்பவளே, நாங்கள் பிறந்தவுடன், எங்களை நீரில் எறிந்துவிடு, அப்படி நீசெய்தால், நாங்கள் பூமியில் வெகு காலம் வாழ வேண்டியதில்லை. ஆகையால் வெகு விரைவாக நாங்கள் மீண்டு விடுவோம்." என்றனர். அதற்கு கங்கை, "நீங்கள் விருப்பப்படுவதை நான் செய்வேன். ஆனால் என்னுடனான அவரது தொடர்பு முழுவதுமாகக் கனியற்று இருக்கக்கூடாது. ஆகையால், ஒரு மகனாவது வாழும்படி அவருக்கு வழங்குங்கள்" என்றாள். வசுக்கள், "எங்கள் ஒவ்வொருவரின் சக்தியில் எட்டில் ஒரு பங்கு சக்தியைச் சேர்த்து, நீ உனது விருப்பத்திற்கேற்றபடியும், அவனதுவிருப்பத்திற்கேற்றபடியும் அடையலாம். ஆனால், அந்த மகன், பூமியில் பிள்ளைகளைப் பெறக்கூடாது.
ஆகையால், நீ பெறும் பெரும் சக்திகள் கொண்ட உனது மைந்தன், புத்திரப் பேறற்று இருக்க வேண்டும்." என்றனர்.
இப்படி வசுக்கள் கங்கையிடம் ஒரு ஏற்பாடு செய்துவிட்டு, சென்றவிட்டனர். அவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்காகக் காத்திருந்தனர்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section96.html#sthash.0QFF5NMU.dpuf
என்று தணியும் இந்த சினிமா மோகம்?
டிசம்பர் 12 தமிழக கூத்தாடி உச்ச நட்சத்திரம் பிறந்தநாள்
டிசம்பர் 11 தன் வயிறை விட தன் சமூகத்தை நேசித்த மகாகவி பாரதி பிறந்தநாள். இந்த பாரதியின் பிறந்தநாளை மறந்த கொண்டாடத இந்த சமூகம் ஒரு கூத்தாடியின் பிறந்தநாளை கொண்டடுவதை என்னெவென்று சொல்வது...
இந்த சமூகநிலையை அன்றே பாரதி பாட்டில் சொன்னார்.
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
விஜய் தொல்லைக்காட்சியில் பிரபலமான நீயா நானாவில் இந்த கூத்தாடிக்கு மக்களை பிடித்ததற்கு காரணம் என்ன என்று ஒரு கூட்டமே உட்கார்ந்து இவர் இப்படி பேசினார் அப்படி பேசினார் சினிமாவில் என்று புகழ்ந்து பிதற்றுகிறார்கள்..... என்னடா கூட்டம் இது.... தான் யாரை கொண்டாட வேண்டும் என்று கூட தெரியாத மிருகக்கூட்டமா நான் வாழும் கூட்டம்?
இத நினைக்கும் நெஞ்சு கூசுகிறது... நாட்டில் எவ்வளவு பிரச்சினை போகிறது...
- கூடங்குளம் அணு உலை என்ற பேராபத்தை தமிழகம் சந்திக்க போராடுகிறது ,
- முல்லை பெரியாறு அணையை கேரளா அரசு இடிக்க திட்டமிடுகிறது
- சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து விவசாயிகளையும் சிறு வணிகர்களையும் அழிக்க மத்திய அரசு முயல்கிறது...
- தமிழக அரசு அத்தியாவசிய பொருள்களின் விலையை ஏற்றி நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மேலும் சுமையை ஏற்றியுள்ளது.
இதுபோல் பல பிரச்சினைகள் நாட்டில் இருக்கும் பொது ஒரு கூத்தாடியின் பிறந்தநாளும் அந்த கூத்தாடியும் முக்கியமா? அல்லது அந்த கூத்தாடிதான் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்துள்ளானா? மாக்களே சிந்தியுங்கள்.. சினிமா என்பது நாம் உழைத்த களைப்பு போக உழைத்த பணத்தில் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு பண்டம் என்பதை ஏன் மக்கள் என்று உணர்வார்கள்? என்று தணியும் இந்த சினிமா மோகம்?
கடைசியாக பாரதியின் வரிகளுடன்...
நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.