photo

photo
Venkatesh.A.S

Friday 8 November 2013

Life is a Business - Do it with ETHICS (வாழ்க்கை ஒரு வியாபாரம் - செய்திடுங்கள் நன்னெறியுடன்)


ஐ.எஸ்.ஓ சான்றிதழ் 

இன்றைய நவீன தர உலகில் எல்லாமே ஆதாரத்தின் அடிப்படையில் தான் நம்பப்படுகின்றன. ஆதாரங்கள் தான் வழிமுறைகளாகின்றன. மனிதர்கள் வசிப்பதற்கு அடிப்படை தேவைகளான உண்ண உணவு , உடுத்த உடை, இருக்க இடம் இவைகளை பெறுவதற்கு கூட வாடகை ரசீதாக / ஒப்பந்த பத்திரமாக / விற்பனை பதிவாக / மளிகை பொருள் ரசீதாக / ஹோட்டல் ரசீதாக / ஆயத்த ஆடை ரசீதாக ஆதாரமாக பெறுகின்றோம். 

ஆனால் இவைகள் எல்லாம் தரமானது தானா என்கிற கேள்வி எழும் போது இதற்கென்று மற்றுமோர் ஆதாரம் தேவைப்படுகிறது. அது நம் அரசாங்கத்தால் வழங்கப்படும் B.I.S (I.S.I) முத்திரை / சான்றிதழ் இருக்கும். பெரும்பாலும் இது நுகர் பொருளாக (Consumable) இருக்கும். இதை தவிர்த்து வேறு ஒரு சான்றிதழ் .அது "ISO Certification" எனப்படும் ISO-9001:2008 எனவாகவும் / வேறு விதமாகவும் இருக்கும்.

B .I .S [Bureau of Indian Standards] என்பது தரத்தினை நிர்ணயம் செய்யும் அலகு [Unit] என்றால் , ISO என்பது என்ன ?

BIS என்பது ஒரு பொருள் எவ்வாறு இருக்க வேண்டும் , அதன் திறன் [Efficiency] எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை வரையறுத்து அதனடிப்படையில் எழுதப்பட்ட சோதனை விதிமுறைகள் [Testing Guide Lines] எனலாம்.இது நாட்டிற்கு நாடு அவரவர் சூழலுக்கேற்ற வேறுபடலாம். இந்த சோதனையில் தேர்ச்சி பெறும் போது தான் ஒரு பொருள் BIS குறியீட்டு உள்ள அந்தஸ்த்தை பெறும்.

ISO [International Standards Organisation] என்பது சர்வதேச தர நிர்ணய அமைப்பு என்பதாகும். இது பல்வேறு பிரிவுகளை கொண்டது (கீழே காண்க).  உதாரணமாக ISO 9௦௦௦ என்பதில் தரத்தினை தக்க வைத்துக்கொள்ளும் வழிகளை  காணலாம்.


  • 9000 தர மேலாண்மை
  • ஐஎஸ்ஓ 14000 சுற்றுச்சூழல் மேலாண்மை
  • ஐஎஸ்ஓ 3166 நாடு குறியீடுகள்
  • ஐஎஸ்ஓ 26000 சமூக பொறுப்பு
  • ஐஎஸ்ஓ 50001 ஆற்றல் மேலாண்மை
  • ஐஎஸ்ஓ 31000 இடர் மேலாண்மை
  • ஐஎஸ்ஓ 22000 உணவு பாதுகாப்பு மேலாண்மை
  • ஐஎஸ்ஓ 4217 நாணய குறியீடுகள்
  • ஐஎஸ்ஓ 639 மொழி குறியீடுகள்

  • இவைகள் எல்லாம் ஏன் தேவைப்படுகின்றன?

    தொழில் துறையில் மிகவும் போட்டிகள் (Competition) நிறைந்த இவ்வுலகில் , ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளையும் , வழிமுறைகளையும் பின்பற்றுகின்றனர். ஆனால் ஒவ்வொருவர் வழிகளையும் எப்படி சரியென்று ஒப்புக்கொள்வது ? ஒவ்வொருவர் வழிமுறைகளும் எப்படி வெற்றியை நோக்கி செல்கிறது என்று நம்புவது ?

    அதற்காகத்தான் திறமை / அனுபவம் வாய்ந்த வல்லுநர் குழுவால் அமைக்கப்பட்டது தான் பொதுவான இந்த (ISO) வழிமுறைகள். இவைகள் ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும். எவைகள் நேர்த்தியான வழிகள் என்பதை கோடிட்டு (Clause) காண்பிக்க பட்டிருக்கும். இவைகளை கையாள ஒரு ஆலோசகர் (Consultant) வழிகாட்டுதலின் பேரில், அவர் / அவர் குழு நடைமுறைபடுத்தும் கோப்புகளை (Files) பராமரிப்பதன் (Maintain) மூலம் ஒரு உள்தணிக்கை (Internal Audit) மற்றும் வெளி தணிக்கை (External Audit) நடந்த பின்னர் அதன் முடிவின் அடிப்படையில் வழங்கப்படுவது தான் இந்த "ISO" சான்றிதழ். இது ஒவ்வொரு வருடமும் புதுபிக்க (Renewal) படும். வழிகாட்டுதலின் பேரில் ஒரு நிறுவனம் சரியாக செயல்படவில்லை என்று நிரூபிக்க பட்டு விட்டால் இந்த சான்றிதழ் ரத்து (cancel) செய்யப்படும்.  இந்த சான்றிதழை தரும் நிறுவனங்கள் தங்கள் தணிக்கை அதிகாரிகள் (Auditors) கொண்டு ஒரு நிறுவனத்தை சரிபார்த்து அதற்க்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளும்.

    துரதிர்ஷ்டவசமாக எல்லாவற்றையும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே ஒப்புக்கொள்ளும் (வேறு வழியில்லாமல் / வழி தெரியாமல்) தற்போதைய உலகில் இந்த சான்றிதழ் நமக்கு (தொழிலில்) இருந்தால் மதிப்பு சற்று அதிகம். ஏனெனில் நாம் தொழிலில் ஒரு நேர்த்தியான வழிகளை கையாள்கிறோம் என்று மற்றவரால் நம்பப்படுவோம். 

    நான் பல வருடங்களுக்கு முன்பு இந்த சான்றிதழை பெற விரும்பிய ஒரு தொழிலதிபரிடம் கேட்டேன் "இது இருப்பதால் என்ன பயன் ? " என்று. அதற்க்கு அவர் சொன்னார் " நான் அடிக்கடி தொழில் நிமித்தமாக வெளியூர் சென்று விடுவதால் அலுவலகத்தில் உள்ளோர் எப்படி முடிவெடுப்பது / எப்படி செயல்படுவது என்று குழம்புகின்றனர். ஆனால் இந்த ISO வழிகாட்டுதலால் ஒரு நிறுவனம் தாமாகவே செயல்படும். அதனால் எனக்கு நிம்மதி " என்றார். இன்று அவர் 10 வருடங்களாக இந்த சான்றிதழை தக்க வைத்து கொண்டுள்ளார். ஆனால் உண்மையில் அந்த நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பது வேறு விஷயம்.

    தொழிலுக்கும் , தொழில் நிறுவனத்திற்கும் வழி காட்டுதல் (ISO Guide lines) இருப்பது போல மனிதர்களுக்கு என்ன உள்ளது ? 

    Ethics எனப்படும் நன்னெறிகள் தான் அவை.

    இந்த நன்னெறிகள் பொதுவாக எல்லா மதத்தினரின் பிரதான நூல்களில் காணப்படும். அவைகள் முன்னொரு காலத்தில் எழுதப்பட்டதாலும், இப்போதைய நாகரீகம் அதில் கானப்படாததாலும் இன்றைய சூழலில் வாழ்க்கையை எப்படி மேற்கொள்வது என்பதில் பெரும்பாலோனோருக்கு குழப்பம் (Confusion) ஏற்படுகிறது.

    இந்த நன்னெறிகள் எந்த ஒரு உயிருக்கும் / உடைமைக்கும் / சமுதாயத்திற்கும் ஊறு விளைவிக்காமல் இருக்க வேண்டும். இவைகள் நாட்டிற்க்கு நாடு அவரவர் சூழ்நிலைகளை பொருத்தும் மாறலாம். ஒரு நாட்டின் நன்னெறி வேறு நாட்டுடன் ஒப்புக்கொள்ளாமல் போகலாம். ஆனால் உலகில் எத்தனையோ உயிர்கள் இருந்தாலும் "ஆறறிவு" (அதிகபட்ச அறிவு) கொண்ட மனிதனே உயர்ந்தவன் என்பது போல, நம் பாரத தேசத்தில் சொல்லப்பட்டுள்ள நன்னெறிகளை போல உலகில் வேறெங்கும் காணமுடியாது.

    காலத்தின் கோலமாக நம் தேசத்திலும் இந்த நன்னெறிகள் தேய்ந்து கொண்டே வருகின்றன. ஒருவர் நல்லவராவது / தீயவராவது என்பது பிறப்பிலும், வளரும் சூழ்நிலையிலும் , வளர்ப்பவர் நடத்தையிலும் , மனதில் உருவாகும் எண்ணங்களிலும் உள்ளது. 

    இந்த நன்னெறிகளில் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர் ஜாதகம் என்னும் சான்றிதழ் காண்பிக்கும். உலகில் பிறந்த எல்லோரது ஜாதகமும் மிகவும் நல்லது என்றும், மிகவும் தீயது என்றும் இல்லை. நன்மைகள் / தீமைகள் சில பேருக்கு மிகவும் அதிகமாகவும் / குறைந்தும் காணப்படலாம். 

    ******

    Ethics is two things. First, ethics refers to well-founded standards of right and wrong that prescribe what humans ought to do, usually in terms of rights, obligations, benefits to society, fairness, or specific virtues. Ethics, for example, refers to those standards that impose the reasonable obligations to refrain from rape, stealing, murder, assault, slander, and fraud. Ethical standards also include those that enjoin virtues of honesty, compassion, and loyalty. And, ethical standards include standards relating to rights, such as the right to life, the right to freedom from injury, and the right to privacy. Such standards are adequate standards of ethics because they are supported by consistent and well-founded reasons.


    Secondly, ethics refers to the study and development of one's ethical standards. As mentioned above, feelings, laws, and social norms can deviate from what is ethical. So it is necessary to constantly examine one's standards to ensure that they are reasonable and well-founded. Ethics also means, then, the continuous effort of studying our own moral beliefs and our moral conduct, and striving to ensure that we, and the institutions we help to shape, live up to standards that are reasonable and solidly-based.

    *******




    Principles that when followed, promote values such as trust, good behavior, fairness, and/or kindness.

    There is not one consistent set of standards that all companies follow, but each company has the right to develop the standards that are meaningful for their organization. Ethical standards are not always easily enforceable, as they are frequently vaguely defined and somewhat open to interpretation ("Men and women should be treated equally, " or "Treat the customer with respect and kindness."). Others can be more specific, such as "Do not share the customer's private information with anyone outside of the company."


    ஒருவரது சுய ஜாதகத்தில் குருவானவர் (Jupiter) மிகவும் வலுவுடன் நல்ல இடத்தில் (லக்னத்தில்) தனியாக இருந்தால் நல்லது. சுபருடன் (வளர்பிறை சந்திரன் , புதன், சுக்கிரன் ) இவர்களோடு இருந்தால் நன்னெறிகளில் சிறந்தவர் ஆவார். . இதில் இன்னும் சில விதிமுறைகள் உள்ளன.

    தெரிந்து கொள்வோம்.....


    ***Part***


    No comments:

    Post a Comment