நித்ய கண்டம் பூர்ணாயுசு
கடந்த பல வருடங்களுக்கு (20௦௦ வருடம்)முன்னர் நடந்த நிகழ்ச்சி இது :
நான் அப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை நிமித்தமாக குன்னூர் சென்றிருந்தேன். சென்னையிலிருந்து கோவை சென்று பின்னர் அங்கிருந்து வேறு ஒரு நண்பர் ஒருவருடன் அங்கு சென்று இறங்கியபோது இரவு மணி 10 இருக்கும் என நினைக்கிறேன். அது ஏற்கனவே குளிர் பிரதேசமாக இருந்தாலும் டிசம்பர் மாதம் வேறு சேர்ந்து குளிர் வாட்டியது. வெப்பநிலை 7 டிகிரி - 1௦ டிகிரி இருக்கும் என நினைக்கிறேன். நண்பருக்கு தெரிந்த ஒரு தங்கும் விடுதியை நோக்கி நானும் அவரும் சென்று கொண்டிருந்தோம். ஆள் அரவமே இல்லாத ஒரு சாலை அங்கங்கு லேசான வெளிச்சம் எங்கும் அமைதி இடையிடையே வண்டுகள், தவளைகளின் ரீங்காரங்கள். மிகவும் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு அனுபவத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில் தொலைவில் தரையிலிருந்து சில உயரங்களில் வரிசையாக அசையும் உருவங்கள் தெரிந்தன .
என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் , அந்த கடும் குளிரிலும் சிறிது வியர்த்தது. காரணம் அது ஒரு நாய்களின் கூட்டம்!
சுற்றிலும் யாருமே இல்லாத நிலையில் நாங்கள் இருவர் மட்டும், எதிரே அந்த நாய்களின் கூட்டம் (குறைந்தது பத்து இருக்கலாம் ). என்ன செய்யலாம் என்று யோசிக்கவோ அல்லது நம்மை காத்துக்கொள்ள ஏதேனும் ஒரு ஆயுதம் (கற்களோ , மரக்குச்சியோ ஏதேனும் ) இருக்கிறதா என்று பார்க்க தோன்றினாலும் அதற்கும் கால அவகாசம் இல்லை. சரி வருவது வரட்டும் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று மனதை நன்றாக திடப்படுத்திக்கொண்டு மேலே நடந்தோம். "கொர் கொர்" என்னும் கோரசான நாய்களின் முனகல் சத்தம் இப்பொழுது நன்றாக கேட்க ஆரம்பித்தது. குலை நடுங்க வைக்கும் இந்த சத்தம் நம் மன திடத்தை சோதித்தது. மேற்கொண்டு செய்ய நம்மால் எதுவும் இல்லை , ஓடுவதை தவிர. அப்படி ஓடினால் இன்னும் நிலைமை மோசமாகும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இப்பொழுது நமக்கும் அவைகளுக்கும் குறைந்தது பத்து அடி தொலைவு இருக்கும். அப்பொழுது..................
திடீரென்று ஒரு சத்தம் (வேகமாக ஒரு கல் கீழே இலை சருகுகளின் மீது பட்டு விழுந்ததை போன்று) அவ்வளவு தான், அந்த நாய்கள் கூட்டம் இரண்டு பிரிவுகளாக பிரிந்து எங்கள் பக்கவாட்டில் இரண்டு திசைகளாக தலை தெறிக்க ஓடிச்சென்று மறைந்தன. பின்னர் எந்த பயமும் இன்றி நாங்கள் செல்ல வேண்டிய இடம் சென்றோம்.
உலகில் இது போன்ற அனுபவங்கள் எத்தனையோ பேருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
இவைகள் ஏன் நடக்கின்றன ?
எதற்கு நடக்கின்றன ?
எப்படி நடக்கின்றன ?
எப்பொழுது நடக்கின்றன ?
எவ்வாறு நடக்கின்றன ?
இப்படிப்பட்ட / இதற்கு ஒத்த நிகழ்வுகள் எவ்வளவோ உள்ளன. ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் என்று சில நேரங்கள் , நீடிக்கும் அவகாசங்கள் என்று அப்பட்டமாக உள்ளன.
விரிவாக பாப்போம்.......அடுத்த சில பதிவுகளில்.......
No comments:
Post a Comment