ஒரு நொடி, ஒரு நிமிடம், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம், ஒரு ஜென்மம் !
இந்தப்பகுதியில் வரும் கட்டுரைகளை எனக்கு
அறிமுகமான / அறிமுகமில்லாத எத்தனையோ பேர் படித்திருப்பார்கள் /
படித்துக்கொண்டிருப்பார்கள் / படிக்கப்போக இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு நாள் (6 மாதத்திற்கு முன்னர்) என் மாணவன் ராஜேஷ் என்னிடம் வந்து “சார், இது போன்று என்னென்னமோ எழுதுகிறீர்களே, ஒரு வேளை இவைகளைப்படித்து விட்டு யாரவது தூக்குபோட்டுக் கொண்டு செத்து விட்டால் என்ன ஆவது ?” என்றான். அப்பொழுது நான் அவனது அறியாமையை நினைத்து சிரித்தேன். நான் சொன்னேன் “உலகில் சாவதற்கு எத்தனையோ வழிகள் / காரணங்கள் இருக்கும் போது இதனைப்படித்து விட்டா சாவார்கள்? போடா வேலையைப்பாரடா” என்றேன். அப்பொழுது இன்னொரு மாணவன் சரவணன் எழுந்து தன் மொபைல் போனில் இந்தப்பகுதியை திறந்து மற்ற சக மாணவர்களிடம் “இங்க பாருங்கடா சார் எழுதின ஒரு கட்டுரை “பார்த்தாலே பரவசம்” இன்னாதான் பரவசம்னு ஒண்ணும் தெரியலியே” என்றான். ஒரு நாள் உங்களுக்கே எல்லாமே தெரியும் பாருங்கடா என்றேன். அது தான் நேரம் என்பது.

பொதுவாக எத்தனையோ துன்பங்கள்
ஒருவருக்கு ஏற்பட்டாலும் உயிரை போக்கிக் கொள்வதென்பது மிகவும் வருந்தத் தக்கது.
நடுநிலையில் இருந்து பார்த்தால் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஏனெனில் கர்மத்தால்
ஏற்படும் இந்த வாழ்க்கைத் துன்பங்களை முழுமையாக ஏற்றுக் கழித்தால் தான் இவைகள்
முற்றுப்பெறும். இல்லையெனில் தற்காலிக விடுதலை ஏற்பட்டு பின்னர் உயிரை போக்கிக்
கொண்ட செயலுக்காகவும் சேர்த்து இன்னும் அதிகமான துன்பம் அனுபவிக்க நேரிடும். இது
பேயிடம் இருந்து தப்பித்து பிசாசிடம் மாட்டிக்கொண்ட கதையாகி விடும்.
இவைகள் மனிதர்களது அறியாமையால்
ஏற்படுவதாகும். ஏனெனில் அறியாமை எதையும் செய்யும். யாரை வேண்டுமானாலும் கொல்லும். இதற்க்கு
மானம், சூடு, சொரணை, அசிங்கம், அவமானம், வெட்கம் என்று எதுவுமே இருக்காது. அறியாமை
எவ்வளவுக்கு எவ்வளவு உள்ளதோ மேலே சொல்லப்பட்ட உணர்ச்சிகளும் இருக்கும்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு
சாகும் தருவாயிலும் தன் பிதாவிடம் “இவர்கள் செய்வது இன்னதென்று அறியார்களே, அதனால்
இவர்களை மன்னியும்” என்று தனக்கு துன்பம் இழைத்தவர் குறித்து
மன்றாடினாராம்.
உலகில் அறியாமையைப்போன்ற ஒரு
பரிதாபம் இல்லை.
அறியாதவர்,
அறிந்தவர்,
உணர்ந்தவர்,
தெளிந்தவர்
போன்ற பிரிவுகளில் மனிதர்களைக்
காணலாம்.
அதாவது நெருப்பு சுடும் என்று ஒரு
குழந்தைக்குத் தெரியாது (ஒரு வேளை அதற்க்கு தீயினால் பாதிப்பு
ஏற்பட்டிருக்காதவரை). ஆனால் அதுவே சற்று வளர்ந்த பின்னர் பள்ளிக்குப் போன பின்னர்
அல்லது வேறொருவர் மூலமாகவோ அறிந்து விடும்.
ஆனால் அக்குழந்தைக்கு அறியும் வயது வந்து
விட்ட பின்னர் ஏதோ ஒரு சூழ்நிலையில் அதற்க்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டால் அது
அப்பொழுது உணர்ந்த தாகிவிடும். விதி வசத்தால் அக்குழந்தைக்கு மீண்டும் மீண்டும் தீக்காயம் ஏற்பட்டால் அது
அப்பொழுது தெளிந்ததாகி விடும்.
மனிதர்களது வாழ்க்கை முறை “ஒரு
நொடி, ஒரு நிமிடம், ஒரு மணி, ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம், ஒரு
ஜென்மம்”
என்கிற விதத்தில் எல்லாமே மாறிப்போகும்.
இதைபடிக்கும் போது புரிவது போல் இருந்தாலும்
நிறையப் பேருக்கு முழுமையாகப் புரியாது.
அதாவது எல்லாமே அறிந்தால் உணர்தவர்களாக
இருக்க வேண்டும். பின்னர் தெளிந்தவர்களாக வேண்டும். இது தான் வாழ்கையில் உண்மையான
முன்னேற்றம் என்பது. உயிரின் வளர்ச்சி என்பது.
ஒரு நொடியின் அருமை, அந்த ஒரு
நொடியில் விபத்தில் சிக்கி உடல் / மனம் ஊனமானவரிடம் கேட்டால் தெரியும்.
ஒரு நிமிடத்தின் அருமை, அந்த ஒரு
நிமிடத்தில் முக்கியமான பயணத்தில் ஒரு பேருந்தையோ / ரயிலையோ / விமானத்தையோ தவற
விட்டவருக்குத் தெரியும்.
ஒரு மணி நேரத்தின் அருமை, அந்த ஒரு
மணி நேரத்தில் முக்கியமான பரிட்சையில் தவறான விடை எழுதியவருக்குத் தான் தெரியும்.
ஒரு வாரத்தின் அருமை, அந்த ஒரு
வாரத்தில் முக்கியமான செய்திகளை திரட்ட முடியாத பட்சத்தில் ஒரு வார இதழ் ஆசிரியருக்குத் தான் தெரியும்.
ஒரு மாதத்தின் அருமை, அந்த ஒரு மாத
விடுமுறையில் அயல் நாட்டிலிருந்து வர முடியாமல் போகும் போது அந்த நபருக்குத்
தெரியும்.
ஒரு வருடத்தின் அருமை, அந்த ஒரு
வருடத்தில் கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி தோல்வியடைந்த ஒருவருக்குத் தான்
தெரியும்.
ஒரு ஜென்மத்தின் அருமை, அந்த
ஜென்மத்தில் அறியாமையினால் பல தவறுகள் செய்து உடலும் / மனமும் சேர்ந்து சோர்ந்து
போகிற நேரத்தில் அத்துன்பத்தை அனுபவிக்கும் உயிருக்குத் தெரியும்.
கோள்களின் கதிர்வீச்சுப்படி குருவும், புதனும் ஒருவரது ஜெனன காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தால்
(அதற்க்கு மாறாக ராகுவின் சாரத்தில் இருப்பது, ராகுவின் சம்மந்தம் பெறுவது, ராகுவோடு இணைந்திருப்பது, நான்காம் ஐந்தாம் அதிபதிகள் ராகுவின் சம்மந்தம் பெறுவது மற்றும் சில அறிகுறியுடன்)
எல்லாவற்றையும் நன்றாக அறிந்து கொள்ளலாம், பின்னர் உணர்ந்து கொள்ளலாம்.
அப்படியில்லை என்றால், மேல்கண்ட அறிகுறியுடன் காணப்பட்டால் குரு மற்றும் புதன் தசா / புக்திகளில் மிகவும் எச்சரிக்கை தேவை. இல்லையெனில் ஒரு நொடி, ஒரு நிமிடம், ஒரு நாள், ஒரு வாரம் , ஒரு வருடம் என்று ஒரு ஜென்மம் வீணாகும்.

No comments:
Post a Comment