photo

photo
Venkatesh.A.S

Tuesday, 19 August 2014

October Attempt (அக்டோபர் முயற்சி)



5 வீடா ? 5 ஆம் வீடா ?




“மணமகன் Software Engineer (மென் பொருள் பொறியாளர்) ஆக இருக்க வேண்டும்.

பையன் வெளிநாட்டில் (அமெரிக்கா, கனடா) வேலை பார்பவராக இருத்தல் நல்லது.

மாப்பிளைக்கு 5 சொந்த வீடு இருக்க 

வேண்டும்.”

-    இவையெல்லாம் ஒரு திருமண அமைப்பாளரின் மணமகளின் சுய குறிப்பு (Bio data) பக்கங்களில் பார்த்தது.
இவையெல்லாம் அவரவர் எதிர்பார்ப்பு என்கிற பெயரில் அவரவர் வாழ்க்கை பாதுகாப்பு (Life Security) பற்றிய கண்ணோட்டத்தைக் காட்டுகிறது.

இதைக்கேட்டால் சில பேர் வசதியாக வாழவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். அதெல்லாம் சரி 

வசதியாக வாழவேண்டும் என்கிற எதிர் பார்ப்பில் தவறில்லை. ஆனால் வசதியாக வாழ நமக்கு கொடுப்பினை உள்ளதா என்று பார்க்க வேண்டும். 

அதற்க்கு முதலில் நாம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதைப்  பார்க்க வேண்டும்? 

ஒரு வேளை மேற்கூறிய மூன்று தகுதியும் நாம் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கு இருந்து விட்டால் வாழ்க்கை சிறக்குமா ? இதற்கு எப்படி பதில் கூற முடியும்.

சில பேர் தனக்கு தெரிந்த சில பேருக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்துள்ளதால் தமக்கும் கிடைக்கும் என்கிற ஒரு நம்பிக்கையில் (அசட்டு) இப்படிப்பட்ட எதிர்பார்ப்பை விரும்புவார்கள்.

மேலும் சில பேர் தங்களுடைய நெருங்கின உறவினர் குடும்பத்தில் இப்படிப்பட்ட தகுதியுடன் பெண்ணோ / மாப்பிளையோ இருப்பதால் தாமும் இதனையே விரும்புவதாக சொல்வார்கள்.

இன்னும் சில பேர் தமக்கு ஏற்கனவே மேற் கூறிய தகுதி இருப்பதால் தமக்கு வாழ்க்கை துணையாக வருபவரும் இதே போன்ற தகுதியுடன் வந்தால் தான் சரியாக இருக்கும் என்று வாக்கு வாதம் செய்வார்கள்.

இதெல்லாம் சரி, ஒரு வேளை இப்படி ஏன் எதிர்பார்க்கக் கூடாது ?

“மணமகன் Reputed Job (கண்ணியமான வேலை) இல்  இருக்க வேண்டும்.

பையன் பாதுகாப்பான இடத்தில் (Secured Place) இல் வேலை பார்ப்பவராக இருத்தல் நல்லது.

மாப்பிளைக்கு 5 ஆம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.”

அதாவது மணமகன் நம் அந்தஸ்துக்கு தக்க படி ஒரு கண்ணியமான (உடுத்தும் உடை அழுக்கு படாத) வேலையில் இருக்க வேண்டும்.

பையன் வேலை பார்க்கும் இடம் எந்த வித தீவிரவாத ஆபத்தும் இல்லாத இடமாக (உதாரணமாக காஷ்மீர் அதை சார்ந்த இடங்கள்),  இயற்கை சீற்றம் அபாயம் இல்லாத இடமாக  (அந்தமான் மற்றும் அதை சார்ந்த இடங்கள்) இருப்பது நல்லது.

மாப்பிளையின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய / புத்திர / நுண்ணறிவு ஸ்தானமான 5 ஆம் இடம் / 5 ஆம் இடத்து அதிபதி பலமாக இருத்தல் வேண்டும்.

இதில் முதல் இரண்டு எதிர்பார்ப்புகள் மாறலாம் / மாற்றலாம்.

ஆனால் 5 ஆம் வீடு மாறக்கூடியதல்லவே ? இதைத்தான் வாங்கி வந்த வரம் என்பார்கள்.

அது மட்டுமல்ல, 5 ஆம் வீடு நன்றாக இருந்தாலும், அதற்க்கு 5 ஆம் வீடான 9 ஆம் வீடும் நன்றாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். 5 ஆம் வீடு கைக்கு எட்டுவதை சொல்வது 9 ஆம் வீடு வாய்க்கு எட்டுவதை சொல்வது. 
















No comments:

Post a Comment