நல்லதோர் வீணை செய்தே ...
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ !
விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ..உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவா
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ !
மேல்கண்ட தலைப்பில் அருமையான பாடலை பாடிவிட்டுப்போனான் மஹாகவி பாரதி.
மனித குலம் தழைக்க வேண்டி இப்படி பாரதியைப்போல் எத்தனையோ பேர் அவரவர் பாணியில் பாடலாக / கவிதையாக / செய்யுளாக சொல்லி விட்டுச் சென்றார்கள்.
ஆனால் எல்லாமே அவரவர் விருப்பப்படி தான் நடக்கின்றதா ?
அவரவர் ஆசைப்படி தான் நடக்கின்றதா ?
அவரவர் எண்ணப்படி தான் நடக்கின்றதா ?
சில பேர் சொல்வார், எல்லாமே அவரவர் எண்ணம் போல் தான் வாழ்க்கை என்று. ஆனால் அது தான் விதி வழி மதி என்பது.
"உன்னைகேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா ?" என்று கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதினார்.
மிகவும் சிரமமான இந்த கால கட்டத்தில் யாரும் எதுவும் பார்த்த மாத்திரத்தில், கேட்ட நேரத்தில் மாறிவிடுவதில்லை. எதையும் உண்மையாக உணர்தலின் மூலம் தான் தான் வாழ்க்கையை உண்மையாக புரிந்து கொள்ள முடியும்.
இதோ அதுபோன்ற உணர்வில் உள்ள நிறைய பேருக்கு தெரிந்த ஒரு பாடலை காணுங்கள்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
விளக்கம்[தொகு]
மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித உயிர்(சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய்(பத்து) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.
சீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.
தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்)
மேலும் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும், வல்லவர்(பக்தர்) கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை நெஞ்சினில் வைத்து வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
தத்துவம்[தொகு]
சீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை நகைச்சுவைப் பாடலைப் போல வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.
மூலம்[தொகு]
எப்பொழுது ஒருவர் வாழ்க்கையை உணர்ந்து கொள்வார், யாருக்கு எப்படிப்பட்ட ஜாதக அமைப்பு இருந்தால் ஒருவர் வாழ்கையின் இறுதி நிலை சிறக்கும் என்பதை அறிய சில நாட்கள் (2 - 5 நாட்கள்) கழித்து இங்கு வாருங்கள்.
Dated 29-05-2014
ஒருவருக்கு வாழ்க்கையை அதன் உண்மையான கஷ்ட நஷ்டங்களை உணர்த்தி அவரை வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்வழிக்கு கொண்டு செல்லும் பொறுப்பை "திருவாளர்கள்- சனி , ராகு , கேது" இவர்கள் பொறுப்பேற்பார்கள். இவர்கள் முக்கிய இடங்களில் (1, 2, 5, 7, 8, 9,12) இருந்து குருவின் பார்வை பெற்று இருந்தால் அந்தந்த கால கட்டங்களில் ஜாதகரை கரை சேர்ப்பார்கள் - அதிக சேதாரமின்றி.
1 இல் இருக்கும் ராகு அதிக உணர்ச்சி வசப்பட வைப்பார். அதிகம் பொய் சொல்ல வைப்பார். வாழ்க்கைத்துணை மேல் சரியான காரணமின்றி அதிகமான வெறுப்பினை உண்டாக்குவார்.
1 இல் இருக்கும் சனி ஜாதகரை சோம்பேறி ஆக்குவார். 7 இல் இருந்தால் / 7 ஆம் இடம் தொடர்பு இருந்தால், வயதான / வயதான தோற்றம் கொண்ட வாழ்க்கைத்துணையை தருவார். கள்ள தொடர்பை ஏற்படுத்துவார்.
- இவைகள் வேறு அமைப்புகளின் மூலம் மாறுபடலாம். மேலும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நன்றி :
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
No comments:
Post a Comment