18-06-2014
Note: அன்பார்ந்த பார்வையாளர்களுக்கு, இந்த கட்டுரை முடிவு பெரும் காலம் சில குறிப்பிட்ட காரணங்களால் (நிறைய விசயங்களை இன்னும் சேர்த்திட இருப்பதால்) மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி.
மயக்க மில்லா அறுவை சிகிச்சை !
கட்டுரை முற்று பெறும் காலம் (Expected Completion Period) : 60 days (22-06-2014)
"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?"
Note: அன்பார்ந்த பார்வையாளர்களுக்கு, இந்த கட்டுரை முடிவு பெரும் காலம் சில குறிப்பிட்ட காரணங்களால் (நிறைய விசயங்களை இன்னும் சேர்த்திட இருப்பதால்) மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி.
மயக்க மில்லா அறுவை சிகிச்சை !
குறிக்கோள் (Aim) : மனிதர்களின் மனமும் உடலும் மாசடைவதால் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள், அவமானங்கள், மன உளைச்சல்கள் போன்றவற்றை அலசி இவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் / விடுபடவும் வழி காட்டிட.
பயனாளர்கள் (Users) : பாதிக்க பட்ட யாவரும் / பாதிக்கப்பட இருப்பவரும்.
கட்டுரை முற்று பெறும் காலம் (Expected Completion Period) : 60 days (22-06-2014)
**********
"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?"
இந்த வார்த்தையை உலகில் பிறந்த எத்தைனையோ பேர் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் சொல்லியிருப்பார்.
உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும் தத்தம் வாழ்க்கைக்காக / வாழ்வதற்காக கடுமையாக போராடி வருகின்றன - மனிதன் உள்பட.
இந்த போராட்டத்தில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவமாக பெறுகின்றன.
இந்த போராட்ட பயணத்தில் பல பேரின் உடலும் மனமும் (அவரவர் கர்ம வினைக்கேற்ப) எவ்வளவோ மாசு / களங்கப் படுகின்றன. எல்லாவற்றிலும் உள்ளது போல இதிலும் தற்காலிகம் , நிரந்தரம் என இரு பிரிவுகள் உள்ளன.
இதில் குறிப்பிடும் படியான விஷயம் என்னவென்றால், இந்த மாசடைதலில்
ஆரம்ப நிலை (Starting Stage) ,
மத்திய நிலை (Middle Stage),
இறுதி நிலை (Final Stage)
என மேலும் உட்பிரிவுகள் உள்ளன. மேலும் இதிலுள்ள பரிதாபம் என்னவென்றால் சில மாசடைதலில் ஆரம்ப நிலையே தெரியாது. மத்திய நிலை அல்லது இறுதி நிலையில் தான் தெரிய வரும். இந்த சமயத்தில் நாம் எவ்வளவு விழிப்பு கொள்கிறோமோ அவ்வளவு நிவாரணம் (Relief) கிடைக்கும்.
இப்பொழுது உடல் மாசடைதலைப் பார்ப்போம்.
தற்காலிக நிலை :
தலைவலி, ஜுரம், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வயிற்றுப்போக்கு, தும்மல், சீதளம் போன்ற உபாதைகள் ஏதேனும் காரணமாக வந்தாலும் அவற்றின் சக்தியை பொறுத்து சில நாட்கள் இருக்கலாம்.
நிரந்தர நிலை :
1. காச நோய் (Tuberculosis)
1. காச நோய் (Tuberculosis)
உயிரினங்களின் உடலை தீவிரமாக மாசு படுத்துவதில் இது முக்கியமானது. ஆரம்ப நிலையில் பசியின்மையும், மாலை நேரத்தில் கடும் தலை வலியையும் ஏற்படுத்தும். மத்திய நிலையில் அதிக எடை குறைதலை ஏற்படுத்தி இறுதியில் தீவிரமான பலகீனத்தை ஏற்படுத்தி பாடாய் படுத்தி எடுத்தி விடும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் , ஊட்ட சத்து குறைபாடும் இதற்க்கான காரணமாகும். (மேலே படத்தை காண்க)
மேற்காணும் படத்தில் தோன்றுவது காச நோய் முற்றிய நிலையில் உள்ள ஒருவரது X- கதிர் படமாகும். இதில் அம்பு குறி காண்பிக்க பட்டுள்ள பகுதி , மிகுந்த பாதிப்பு உள்ள பகுதியாகும். ஒருவேளை இவர் பிழைத்து விட்டால் நோய் குணமான பின்னர் அவர் உயிரோடிருக்கும் வரை அந்த இடத்தில் மறையாத வடு ஏற்படுத்தி ஏதேனும் ஒரு விதத்தில் அவரை நிரந்தர பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic system), இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை.
இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது Tubercle bacillus (டியூபர்க்கில் பாசிலசு)அல்லது TUBERCULOSIS (டியூபர்க்குலோசிசு) என்பதன் சுருக்கமாகும். சில மருந்துகள் உதவியால் நோய்த் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை.
இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது. ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது ஒரு ‘மறைநிலையில்' அல்லது துஞ்சுநிலையில் (Latent TB) காணப்படும். அப்படி உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டி நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் அதில் 50 % இற்கு மேலானோர் இறக்கின்றனர்.
நோயைக் கண்டு பிடிக்க நெஞ்சில் X-கதிர் படப்பிடிப்பு, தோலில் செய்யப்படும் டியூபர்க்குலின் (Tuberculin) பரிசோதனை, உடல் நீர்மங்களின்நுண்ணுயிர் வளர்ப்பு மெய்த்தேர்வு (பரிசோதனை) என்பன பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயைக் குணப்படுத்த கூட்டாக பல்வேறுநுண்ணுயிர்கொல்லிகள் இணைத்து, நீண்ட காலத்துக்கு கொடுக்கிறார்கள். ஆனால் தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து நுண்ணுயிர் கொல்லிகளையும் எதிர்க்கும் திறனுள்ள பாக்டீரியா கிளைவகை உருவாகியிருப்பது (Multi Drug Resistance) மிகப் பெரும் சிக்கலாகக் காணப்படுகிறது. இதனால் புதிதாக உருவாகியிருக்கும் நுண்ணுயிர் வகைக்கு மக்கள் நோயெதிர்ப்பாற்றலை இழந்து வருவதால் நோயின் வலிமை (தீவிரம்) அதிகரித்து வருகிறது. உலக நாடுகளெங்கும் உள்ள பல அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலம், இதற்கான தீர்வைக் கண்டு பிடிப்பதில் முனைப்பாக உள்ளனர். 'பி.சி.ஜி' (பா.கா.கு, BCG) எனப்படும் எதிர்ப்பூசி போட்டுக் கொள்வதும் பல நாடுகளில் நடை முறையிலுள்ளது.
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம்மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகத் தூய்நல (சுகாதார) நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக அறியப்படுகிறது[2]. நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது[3] . எய்ட்ஃசு நோயை உருவாக்கும் எச்.ஐ.வி என அழைக்கப்படும் மனித நோயெதிர்ப்புக்குறைபாட்டு வைரசின் (HIV) தாக்கத்திற்குள்ளான நோயாளிகளில் ஏற்படக்கூடிய முக்கியமான இரண்டாவது தொற்றாக (secondary infection) இந்த காசநோயே காணப்படுகிறது[4].
2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, 2003 ஆம் ஆண்டில் 88 இலட்சம் மக்கள் புதிதாக நோய்த் தொற்றுக்குட்பட்டதுடன், 17 இலட்சம் மக்கள் இந்நோயினால் இறந்திருக்கிறார்கள். இந்நோயினால், ஆப்பிரிக்க நாட்டிலேயே மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது. [3], [4], [5]. வளர்ந்துவரும் நாடுகளில், 2004 ஆம் ஆண்டில், 1.46 கோடிதீவிர (நோய்முதிர்ந்த) நோயாளிகளும், 89 இலட்சம் புதிய நோயாளிகளும், 16 இலட்சம் இறப்புக்களும், அறியப்பட்டன[2]. மேலும் நோயெதிர்ப்பு குறைபாட்டு நோய் (AIDS), உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகளின் பயன்பாடு போன்ற காரணங்களால், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்நோய் பரவி வருகிறது. இந்நோயானது ஆசிய, ஆப்பிரிக்க நாட்டினரில் 80% உம், அமெரிக்காவில் 5-10% உம் காணப்படுகிறது[1].
வகைப்படுத்தல்[தொகு]
தற்போது காசநோய்க்கான சிகிச்சைக்கான பகுப்பு முறையானது, நோயின் தொற்றுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.[5].
குணமாகும் காலம் : 6 மாதம் வரை- சரியான மருந்துகளை சரியான அளவில், நேரத்தில் சாப்பிட்டால்.
2. புற்று நோய் (Cancer)
இதுவும் உயிரினங்களின் வாழ்க்கையை புரட்டிபோடுவதில் முக்கிய இடம் வகிக்கிறது.
புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.
தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.
கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?[தொகு]
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.
புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?[தொகு]
புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்
- புகையிலை பயன்படுத்தக்கூடாது.
- கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
- முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.
- சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.
- நல் நடத்தை.
- 40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து,உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?[தொகு]
புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:
- மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
- புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
- குணப்படாத புண்கள்.
- கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
- மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
- தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
- விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
- இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
- பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி
புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?[தொகு]
அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.
புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?[தொகு]
புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.
புற்று நோய் வகைகள்[தொகு]
புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலன்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என வழங்குகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் (வைரஸ்) போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.
- மார்பகப் புற்று நோய்
- இரத்தப்புற்று நோய்.....இன்னும் பல
இரத்தப்புற்று நோய்[தொகு]
லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய். இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.
- அறிகுறிகள்
- அதிகளவில் இரத்தம் வடிதல்
- இரத்தசோகை
- காய்ச்சல், குளிர், இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
- பலவீனம் மற்றும் சோர்வு
- பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்
- பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்
- நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)
- ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்
- காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
- மூட்டு வலி
- உள்நார்தசைகள் வீக்கமடைதல்
தோற் புற்றுநோய் அல்லது தோல் புற்றுநோய் என்பது தோலில் உள்ள உயிரணுக்களின் இயல்பை மீறிய வளர்ச்சியும் பெருக்கமும் ஆகும். இது பல்வேறு படிகளில் உள்ளது. மூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படுவதால் அவற்றின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. தோற் புற்றுநோய் தோலின் மேற்பகுதியான மேற் தோலில் ஏற்படுவதால் புற்றுநோய்க்கட்டிகளை அவதானிக்க முடிகின்றது. மற்றைய புற்றுநோய்களைப் போலல்லாது இவற்றை தொடக்க காலத்திலேயே கண்டறிந்து உகந்த சிகிச்சை பெற முடியும், இக்காரணத்தால் இவ்வகைப் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.[1]
தோற்புற்றுநோய் உண்டாக முதன்மையான காரணம் கதிரவனின் புற-ஊதாக்கதிர்கள் தோலில் நீண்டநேரம் வெளிக்காட்டப்படல் ஆகும். நுரையீரல், மார்பக, குடல், சுக்கிலவக புற்றுநோய்களை விட மெலனோமா மற்றும் ஏனைய தோல் புற்றுநோய்கள் பொதுப்படையில் நோக்குகையில் கூடுதலாகக் காணப்படுகின்றன.[1] தோற்புற்றுநோய்களுள் மெலனோமா தீவிரமானதாகும், இதனால் இறக்கும் வீதம் மற்றைய தோற் புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் மிகையாக உள்ளது, எனினும் மெலனோமா குறைவாகவே மக்களிடையே காணப்படுகின்றது. பொதுவாக உண்டாகும் தோல் புற்றுநோய்கள் எனப்படுமிடத்து அவை மெலனோமா அல்லாத தோற் புற்றுநோய்களாகவே உள்ளன. சிலருக்கு பிறப்பில் அல்லது பின்னர் கரிநிறமி உயிரணுக்களால் (melanocyte) தோன்றும் பெரிய பிறப்புப் புள்ளியில் (பெரும் மச்சம்) பிற்காலத்தில் மெலனோமா உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
வெவ்வேறு விதமான அறிகுறிகளும் உணர்குறிகளும் உள்ளன. தோலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுப் பின்னர் குணமடையாது இருப்பது, தோலில் ஏற்படும் புண்கள், நிறமாற்றம், ஏற்கனவே உள்ள மச்சத்தில் மாறுபாடு ஏற்படுவது போன்றன தோல் புற்றுநோய் எனச் சந்தேகிக்கக்கூடிய அறிகுறிகளாகும். ஏற்கனவே உள்ள மச்சத்தின் ஓரங்கள் ஒழுங்கற்றுப்போவது, அல்லது மச்சம் பெரிதாகிக்கொண்டே போவது என்பன புற்றுநோயின் அடையாளங்களாகும்.
சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்களே தோல் புற்றுநோய்க்கு முதன்மையான காரணமாகும்.எனினும் வேறு சில காரணிகளும் உள்ளன அவை:
- புகைபிடித்தல்
- HPV நோய் தொற்றுகள் செதிள்கல புற்றுநோயயை உருவாகலாம்
- சில மரபணு பிறழ்வு மூலமும் இதுவரலாம்.பிறக்கும் போது 20 மிமீ (3/4") விட பெரிய மறு உள்ளவர்களுக்கு கரிநிறமிப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் உள்ளது..
- நாள்பட்ட அஆறாத காயங்கள் மூலம் செதிள் உயிரணு புற்றுநோய் உருவாகலாம் .
- அயனியாக்க கதிர்,சுற்றுச்சூழல்,செயற்கை புற ஊதா கதிர்கள் தாக்கம், வயதாதல் மற்றும் வெளிறிய நிறதோல் ஆகியவும் முக்கிய காரணமாகும்.உலக சுகாதார அமைப்பு இப்போது தோல் புற்றுநோய் அதிகாமாக செயற்கை தோல் பதனிடுதல் படுக்கைகள்களில் வீளை செய்யும் மக்களுக்கு அதிக அளவில் வருவதாக கூறுகிறது.
- பல நோயெதிர்ப்பு சக்தி தணிப்பு மருந்துகளை பயன்படுத்துவதாலும் தோல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது.உதாரணமாக ஒரு சைக்லோஸ்போரின் என்ற மருந்தின் மூலம் 200 மடங்கும் அசாதியோப்ரின் என்ற மருந்து மூலம் 60 மடங்கு ஆபத்து அதிகரிக்கின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றது.
சூரிய கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்ளுதலே கரிநிறமிப் புற்றுநோய் மற்றும் செதிள்கல புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துகொள்ளும் வழி ஆகும்.தோல் புற்றுநோய் ஆபத்தை குறைக்க உச்சி வேளைகளில் சூரியகுளியலை தவிர்க்கவும், பாதுகாப்பு ஆடை பயன்படுத்தவும், கருப்பு கண்ணாடிகள் மற்றும் தொப்பிகள் அணிந்து செல்லவும் அறிவுறுத்தபடுகிறது.அமெரிக்க முன்னெச்சரிக்கை சேவை பணிக்குழு 9 முதல் 25 வயதுடைய மக்கள் புற ஊதா ஒளிகதிர்கள் படுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. தோல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தால் குறையும். தூள் புற்று நோயை வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற மருந்துகலோ தவிர்க்கும் என்று நம்ப தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்படவில்லை
Thanks :
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D
(தொடரும் )
No comments:
Post a Comment