photo

photo
Venkatesh.A.S

Wednesday, 23 April 2014

God comes with Human appearance ! (Eeswaraha Maanushya Roope) மனித உருவில் ஈஸ்வரன் ! (ஈஸ்வரஹா மானுஷ்ய ரூபே)



வாய்ப்புகள் தவறினாலும் வாழ்க்கை தவறக்கூடாது !

முதலில் கீழே உள்ள காணொளியை காண்பதற்கு முன் அதன் கீழே உள்ள
ஒரு கதையை பார்ப்போம்.



கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட பக்திமான் ஒருவர், ஒரு சமயத்தில் ஊரெங்கும் வெள்ளம் பெருகிக்கொண்டிருக்கிற  நேரத்தில் கடவுளையே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்- தன்னை எப்படியாவது வந்து காப்பாற்றச் சொல்லி.

அப்பொழுது அவரது வீட்டு வாசலில் இரு சக்கர வண்டி நிற்கும் சத்தம் கேட்டது. பக்திமான் சற்று எட்டி பார்க்கவே, இரு சக்கர வண்டியில் வந்தவர் இன்னும் சில நேரம்  போனால் வெள்ளம் அதிகமாகிவிடும் அதனால் தன்னுடன் வந்து விடுமாறு அழைத்தார். ஆனால் பக்திமானோ தன்னை கடவுள் தான் நேரில் வந்து காப்பாற்றுவார் என்கிற எண்ணத்தில் வந்தவரை திருப்பி அனுப்பினார்.

சற்று நேரத்தில் வெள்ள நீர் வீட்டிற்குள் வந்து விடவே பக்திமான் முதல் மாடி சென்று அங்கேயும் கடவுளை பிராத்தனை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு நான்கு சக்கர வண்டி அவர் வீட்டருகில் நின்று அவரை அதில் வந்து ஏறி வெள்ளத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுமாறு  ஓட்டுனர் அழைக்கவே பக்திமான் கடவுள் மீதிருந்த நம்பிக்கையில் மீண்டும் மறுத்தார்.

மேலும் வெள்ளம் அதிகமாகி அது முதல் மாடி வரை வந்து விட பக்திமான் மொட்டை மாடிக்குச்சென்றார். அங்கும் கடவுளிடம் தன்னை எப்படியாவது வந்து காப்பாற்ற மன்றாடிக்கொண்டிருந்தார்.அப்பொழுது வானத்தில் ஹெலி காப்டர் வரும் ஓசை கேட்கவே, அதிலிருந்தவர் ஒரு ஒலிபெருக்கியில் (Speaker) ஹெலிகாப்டரிலிருந்து தொங்கும் கயிறு மூலமாக மேலேறி வந்து உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இம்முறையும் அந்த பக்திமான் வாய்ப்பைத்  தவற விட்டார்.

பின்னர் அந்த பக்திமான் வெள்ளத்தில் சிக்கி பசி தாகத்தால் உயிர் விட்டார். அப்போது அவருடைய உயிர் நியாய விசாரணைக்காக கடவுளுடைய நீதி மன்றத்திற்கு சென்றது. அங்கு அந்த பக்திமான் தான் எவ்வளவு வேண்டியும் கடவுள் தன்னைக் காப்பாற்ற வரவில்லை அதனால் தனக்கு இறப்பு ஏற்பட்டதாக மிகவும் ஆத்திரம் கலந்த வருத்தமுடன் சொன்னார்.

அப்பொழுது அங்கு மிகுந்த பிரகாசத்துடன் ஒரு ஒளி (பர ப்ரஹ்மம்) தோன்றி பக்திமானிடம் அவர் சொன்னதை நன்றாக யோசிக்குமாறு சொன்னது. அந்த பக்திமான் அந்த பிரகாசமான ஒளியையே உற்று பார்த்துக்கொண்டிருந்த போது அதில் தன்னைக் காப்பாற்ற இரு சக்கர வாகனத்தில் வந்தவர், நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர், ஹெலிகாப்டரில் வந்தவர் ஆகியோரது உருவத்தைக் கண்டார்.

அப்பொழுது தான் பக்திமானுக்கு உரைத்தது தன்னைக் காக்க மூன்று முறை இறைவன் மூன்று உருவத்தில் மூன்று வாகனத்தில் வந்ததை எண்ணினார். அது அவரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. அப்போது அவர் பரிபூரணமாக இறைவனிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார்.

-இந்த கதை ஒரு வியாபார நோக்கம் கொண்ட பொதுக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன் நான் கேட்டேன்.

இது போன்று நாம் அனுதினமும் படும் துயரத்திலிருந்து கடவுள் நம்மை விடுவிக்க மாட்டாரா என்று மிகவும் ஏங்கி கொண்டிருப்போம். ஆனால் நம்மை விடுவிக்கும் "ஆற்றல்" நமக்கு அருகிலேயே இருக்கும் ஆனால் நாம் அதை அறிந்திருக்க மாட்டோம். காரணம் நம்மை விடுவிக்கும் சக்தி "இப்படி இருக்கும், அப்படி இருக்கும்" என்று ஏதாவது கற்பனை செய்து இருப்போம்.
ஆனால் இறைவனுடைய செயலை யாரும் அறிய முடியாது.

ஆனால் இதை வேறு ஒரு கோணத்தில் பார்த்தால், இறைவன் நம்மை காப்பாற்ற வருவது ஒருபுறம் இருக்கட்டும். அறியாமையிலிருந்து நம்மை விடுவிக்கவும் சில சமயங்களில் இறைவன் ஏதாவது ரூபத்தில் நம்மிடம் வரக்கூடும்.

அது போன்ற நிகழ்வு "பகவான் ஸ்ரீ ஆதி சங்கரர்" வாழ்வில் நடந்ததைப் பார்ப்போம்.


இளம் சங்கரன் காவி உடையில் சிவ சிவ என்று சிவக்க ஜொலிக்க நடந்து வருகிறார்! பெனாரஸ் பட்டில் காவியும், தங்க ருத்திராட்சமும், கட் அவுட்டுகளும் அண்மையில் ஜொலித்ததே! அது போல் அல்ல! :)
சிவந்த தேகத்தில் சிவந்த காவி! தங்கத்தால் ஒளிராது ஞானத்தால் மட்டுமே ஒளிரும் தேகம்!
மெலிந்த உடல்! மெல்லிய பாதம்! படீரென குறுக்கே.....ஒரு பைராகி! so called சண்டாளன்!




சண்டாளன்! ஞானப் பெண்டாளன்!
அழுக்கு உடைகள்! கலைந்த கேசம்! கையில் கோல்! போதாக்குறைக்கு நாலு நாய்கள்!

ஏதோ காசி நகரத்து அகோரி போல-ல்ல இருக்கான்! தான் உண்ணாது, நாய்களுக்குப் பிய்த்து போட்ட படி வருகிறான்! ச்சே...என்ன இது...?
இப்படி ஒருவர், பேருந்தில், நம் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தால்? நம் மனசு முதலில் என்ன சொல்லும்?? ஆனால் ஆன்மீகம்-ன்னா மட்டும் எப்பமே வேறு கோலால் அளப்போம் அல்லவா? :)

சங்கரனும் நாம் செய்வதையே தான் செய்கிறார்! முகம் சுளிக்கிறார்! ஒதுங்கி ஓரமாக நடக்கப் பார்க்கிறார்!
ஆனால் பைராகியோ, ஒட்டினாற் போலத் தான் எதிர் திசையில் நடந்து வருகிறார்! கூடவே இந்த நாய்கள் வேறு, வீதி முழுக்க வட்டமடிப்பது போல் வருகின்றன! ஆச்சார சீலர்கள் போற்றிப் புகழும் சங்கரனுக்கோ தர்ம சங்கடம்! பிரைவேட் செக்யூரிட்டி வைத்து விரட்டும் அளவுக்கெல்லாம் அவர் படோபடானந்தா இல்லை! என்ன செய்வது?

ஆசார்யர் உம்மென்றால், உம் உம் உம் என்னும் சீடர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள் போல! "ஏய்..விலகு விலகு" என்கிறார்கள்!
ஆனால் அச்சச்சோ...பைராகி...இதோ வெகு அருகில் வந்து விட்டான்!

இவர் உடலில் வரும் விபூதி வாசனையை மிஞ்சும் அளவுக்கு, அவன் உடலில் சுடுகாட்டுச் சாம்பல் வாசனை! ஹா ஹா ஹா! ஈசன் பூசுவது என்னவோ சாம்பல் தான்! ஆனால் நாம் பூசுவோமா? இல்லை, பேசுவோம்! :)

கல்விக் கடலான சீடர்கள் எகிறிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்! சங்கரன் கை அமர்த்துகிறார்! "ஹே...கச்ச...கச்ச..." என்று வெறுப்பான குரலில், வேகமாகச் சொல்கிறார்! "ஏய்...விலகு...விலகு..."!

அதென்னமோ தெரியலை, மூத்தவராக இருந்தாலும், தன் நிலைக்கு கீழானவர்களையோ, வேலைக்காரர்களையோ, "ர்" போடாமல், "ன்/ள்" போடுகிறோம் பல பேர்!
நம் ஆதி சங்கரன், "விலகுங்கள்" என்றாவது சொல்லி இருக்கலாம்! ஆனால் "விலகு" என்று தான் அவர் வாயிலும் வந்தது!

எத்தனை ஆன்மீகம் பேசினாலும், வாசிப்பு, சு-வாசிப்பு ஆகா விட்டால் வரும் பிரச்சனை இது தான்! :)





வாயைத் திறந்தார் பைராகி! உலகத்துக்கே படியளப்பவர் எப்படி பேசத் துவங்குவார்? "அன்னம்" என்றே துவங்குகிறார்!
"அன்ன மயாத் அன்ன மயம், அதவா,
சைதன்யம் ஏவ சைதன்யாத்!"
"அன்னம் தின்கிறேன், அன்னம் தின்கிறாய்! உனக்கும் உயிர், எனக்கும் உயிர்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் நீரும் நானும் வேறு வேறா?"

சங்கரன் ஒரு கணம் திகைத்து விட்டார்! என்னாது....பார்க்கறதுக்கு இப்படி இருக்காரு! ஆனா "சைதன்யம்"-ன்னு எல்லாம் பேசறாரே!
நாம் ஒருமையில் விளித்தாலும், அவர் நம்மை, "யதி வர-முனிவரே" என்றல்லவா அழைக்கிறார்! வெட்கம் பிடுங்கித் தின்றது சங்கரனுக்கு!

"ஹே ஆதி சங்கர, எதை விலகு விலகு என்று வெறுப்பு காட்டுகிறீர்! எதை விலக்க வேணும்? என் உடம்பையா? என் ஆத்மாவையா?
எதை விலக்கினால் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்? சொல்லுங்கள்! சொல்லுங்கள்!"

"ஹா...."

"மூச்சுக்கு மூச்சு, அ-த்வைதம் என்கிறீரே! அ-த்வைதம் என்றால் இரண்டு இல்லை என்பது தானே?
இப்போ மட்டும், ஆச்சார சீல ஒன்று, சண்டாளன் ஒன்று - என்று இரண்டாகி விட்டதா உங்கள் தத்துவம்? எங்கே நீர் பேசிய அ-த்வைதம்??"

அவ்ளோ தான்! இடியே இறங்கி விட்டது நம்ம சங்கரனுக்கு! இப்படியொரு எடக்கு மடக்கு கேள்வியை, இது வரை, அவர் எந்த வாத சபையிலும் கேட்டதே இல்லை!
எல்லா வாதங்களுமே தத்துவம், புஸ்தகம் என்ற அளவில் மட்டுமே பார்த்தவருக்கு, முதல் முறையாக, உண்மை உறுத்து வந்து ஊட்டுகிறது!

கையெடுத்து கும்பிடுகிறார் சங்கரன் - சண்டாளனை(ரை)!

வாயில் கிடுகிடு-வென்று, படித்த உண்மையெல்லாம், அருவியாய்க் கொட்டுகிறது! மொத்தம் ஐந்து பாடல்கள் - மனீஷா பஞ்சகம்!

அது என்ன மனீஷா? மனீஷா கொய்ராலா மேலே பாடிய பஞ்சப் பாட்டு-ன்னு நினைச்சிக்காதீக! :)
மனீஷம் = புரிதல், உணர்தல், உறுதி கொள்ளல்! மனீஷா பஞ்சகம் = உறுதிப்பாடு ஐம்பதிகம்!
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

இப்படி ஞான யோகத்திலும், கர்ம அனுஷ்டானங்களிலும் மட்டுமே தோய்ந்திருந்த சங்கரருக்கு அன்று உலகநாதன் சுட்டிய உண்மை சுட்டது!
அ-த்வைதம் என்பது பேச்சு அளவில் நில்லாது, வாழ்வு முறை ஆகிப் போனது!
* இறை-"தத்துவம்" என்னும் தீனியில் மட்டும் திளைக்காது,
* இறை-"அன்பு" என்னும் அமுதம் கண்டு கொண்டான் சங்கரன்!

அகம் பிரம்மாஸ்மி, நேதி நேதி, தத்-த்வம்-அசி என்று பலவாறாகச் சங்கர பாஷ்யம் எழுதிய அதே சங்கரன்......
முதல் முதலாக.....பக்திப் பாடலாக....அதே காசியில்....பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் என்று ஈர மழை பொழியத் தலைப்பட்டான், இந்தச் சங்கரத் தலைவன்!







நன்றி :
https://www.youtube.com/watch?v=OAYY2lDSkfI&feature=youtube_gdata_player

http://madhavipanthal.blogspot.in/2010/04/adisankaramanishapanchakam.html




Monday, 21 April 2014

Contamination How much ? (களங்கம் எவ்வளவு ?)

18-06-2014 
Note: அன்பார்ந்த பார்வையாளர்களுக்கு, இந்த கட்டுரை முடிவு பெரும் காலம் சில குறிப்பிட்ட காரணங்களால் (நிறைய விசயங்களை இன்னும் சேர்த்திட இருப்பதால்) மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது. 
சிரமத்திற்கு மன்னிக்கவும். 
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நன்றி. 

மயக்க மில்லா அறுவை சிகிச்சை !


குறிக்கோள் (Aim)  : மனிதர்களின் மனமும் உடலும் மாசடைவதால் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள், அவமானங்கள், மன உளைச்சல்கள் போன்றவற்றை அலசி இவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் / விடுபடவும் வழி காட்டிட. 

பயனாளர்கள் (Users)  : பாதிக்க பட்ட யாவரும் / பாதிக்கப்பட இருப்பவரும். 

கட்டுரை முற்று பெறும் காலம் (Expected Completion Period) : 60 days (22-06-2014) 

**********

"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?"


இந்த வார்த்தையை உலகில் பிறந்த எத்தைனையோ பேர் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் சொல்லியிருப்பார்.

உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும் தத்தம் வாழ்க்கைக்காக / வாழ்வதற்காக கடுமையாக போராடி வருகின்றன - மனிதன் உள்பட. 
இந்த போராட்டத்தில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவமாக பெறுகின்றன. 

இந்த போராட்ட பயணத்தில் பல பேரின் உடலும் மனமும் (அவரவர் கர்ம வினைக்கேற்ப) எவ்வளவோ மாசு / களங்கப் படுகின்றன.  எல்லாவற்றிலும் உள்ளது போல இதிலும் தற்காலிகம் , நிரந்தரம் என இரு பிரிவுகள் உள்ளன. 

இதில் குறிப்பிடும் படியான விஷயம் என்னவென்றால், இந்த மாசடைதலில்

  ஆரம்ப நிலை (Starting Stage) , 
மத்திய நிலை (Middle Stage), 
இறுதி நிலை (Final Stage) 

என மேலும் உட்பிரிவுகள் உள்ளன. மேலும் இதிலுள்ள பரிதாபம் என்னவென்றால் சில மாசடைதலில் ஆரம்ப நிலையே தெரியாது. மத்திய நிலை அல்லது இறுதி நிலையில் தான் தெரிய வரும். இந்த சமயத்தில் நாம் எவ்வளவு விழிப்பு கொள்கிறோமோ அவ்வளவு நிவாரணம் (Relief) கிடைக்கும். 

இப்பொழுது உடல் மாசடைதலைப்  பார்ப்போம்.

தற்காலிக நிலை : 

தலைவலி, ஜுரம், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வயிற்றுப்போக்கு, தும்மல், சீதளம் போன்ற உபாதைகள் ஏதேனும் காரணமாக வந்தாலும் அவற்றின் சக்தியை  பொறுத்து சில நாட்கள்  இருக்கலாம்.

நிரந்தர நிலை :



1. காச நோய் (Tuberculosis) 

File:Tuberculosis-x-ray-1.jpg


  உயிரினங்களின் உடலை தீவிரமாக மாசு படுத்துவதில் இது முக்கியமானது. ஆரம்ப நிலையில் பசியின்மையும், மாலை நேரத்தில் கடும் தலை வலியையும் ஏற்படுத்தும். மத்திய நிலையில் அதிக எடை குறைதலை ஏற்படுத்தி இறுதியில் தீவிரமான பலகீனத்தை ஏற்படுத்தி பாடாய் படுத்தி எடுத்தி விடும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் , ஊட்ட சத்து குறைபாடும் இதற்க்கான காரணமாகும். (மேலே படத்தை காண்க

மேற்காணும் படத்தில் தோன்றுவது காச நோய் முற்றிய நிலையில் உள்ள ஒருவரது X- கதிர் படமாகும். இதில் அம்பு குறி காண்பிக்க பட்டுள்ள பகுதி , மிகுந்த பாதிப்பு உள்ள பகுதியாகும். ஒருவேளை இவர் பிழைத்து விட்டால் நோய் குணமான பின்னர் அவர் உயிரோடிருக்கும் வரை அந்த இடத்தில் மறையாத வடு ஏற்படுத்தி ஏதேனும் ஒரு விதத்தில் அவரை நிரந்தர பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic system), இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம்பாலுறுப்புகள்தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை.
இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது Tubercle bacillus (டியூபர்க்கில் பாசிலசு)அல்லது TUBERCULOSIS (டியூபர்க்குலோசிசு) என்பதன் சுருக்கமாகும். சில மருந்துகள் உதவியால் நோய்த் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை.
இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது. ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது ஒரு ‘மறைநிலையில்' அல்லது துஞ்சுநிலையில் (Latent TB) காணப்படும். அப்படி உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டி நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் அதில் 50 % இற்கு மேலானோர் இறக்கின்றனர்.
நோயைக் கண்டு பிடிக்க நெஞ்சில் X-கதிர் படப்பிடிப்பு, தோலில் செய்யப்படும் டியூபர்க்குலின் (Tuberculin) பரிசோதனை, உடல் நீர்மங்களின்நுண்ணுயிர் வளர்ப்பு மெய்த்தேர்வு (பரிசோதனை) என்பன பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயைக் குணப்படுத்த கூட்டாக பல்வேறுநுண்ணுயிர்கொல்லிகள் இணைத்து, நீண்ட காலத்துக்கு கொடுக்கிறார்கள். ஆனால் தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து நுண்ணுயிர் கொல்லிகளையும் எதிர்க்கும் திறனுள்ள பாக்டீரியா கிளைவகை உருவாகியிருப்பது (Multi Drug Resistance) மிகப் பெரும் சிக்கலாகக் காணப்படுகிறது. இதனால் புதிதாக உருவாகியிருக்கும் நுண்ணுயிர் வகைக்கு மக்கள் நோயெதிர்ப்பாற்றலை இழந்து வருவதால் நோயின் வலிமை (தீவிரம்) அதிகரித்து வருகிறது. உலக நாடுகளெங்கும் உள்ள பல அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலம், இதற்கான தீர்வைக் கண்டு பிடிப்பதில் முனைப்பாக உள்ளனர். 'பி.சி.ஜி' (பா.கா.கு, BCG) எனப்படும் எதிர்ப்பூசி போட்டுக் கொள்வதும் பல நாடுகளில் நடை முறையிலுள்ளது.
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம்மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகத் தூய்நல (சுகாதார) நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக அறியப்படுகிறது[2]. நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது[3] . எய்ட்ஃசு நோயை உருவாக்கும் எச்.ஐ.வி என அழைக்கப்படும் மனித நோயெதிர்ப்புக்குறைபாட்டு வைரசின் (HIV) தாக்கத்திற்குள்ளான நோயாளிகளில் ஏற்படக்கூடிய முக்கியமான இரண்டாவது தொற்றாக (secondary infection) இந்த காசநோயே காணப்படுகிறது[4].
2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, 2003 ஆம் ஆண்டில் 88 இலட்சம் மக்கள் புதிதாக நோய்த் தொற்றுக்குட்பட்டதுடன், 17 இலட்சம் மக்கள் இந்நோயினால் இறந்திருக்கிறார்கள். இந்நோயினால், ஆப்பிரிக்க நாட்டிலேயே மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது. [3][4][5]. வளர்ந்துவரும் நாடுகளில், 2004 ஆம் ஆண்டில், 1.46 கோடிதீவிர (நோய்முதிர்ந்த) நோயாளிகளும், 89 இலட்சம் புதிய நோயாளிகளும், 16 இலட்சம் இறப்புக்களும், அறியப்பட்டன[2]. மேலும் நோயெதிர்ப்பு குறைபாட்டு நோய் (AIDS), உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகளின் பயன்பாடு போன்ற காரணங்களால், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்நோய் பரவி வருகிறது. இந்நோயானது ஆசியஆப்பிரிக்க நாட்டினரில் 80% உம், அமெரிக்காவில் 5-10% உம் காணப்படுகிறது[1].

வகைப்படுத்தல்[தொகு]

தற்போது காசநோய்க்கான சிகிச்சைக்கான பகுப்பு முறையானது, நோயின் தொற்றுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.[5].

குணமாகும் காலம் : 6 மாதம் வரை- சரியான மருந்துகளை சரியான அளவில், நேரத்தில் சாப்பிட்டால்.


2. புற்று நோய் (Cancer) 


 இதுவும் உயிரினங்களின் வாழ்க்கையை புரட்டிபோடுவதில் முக்கிய இடம் வகிக்கிறது.


புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.
தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.
கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?[தொகு]

செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?[தொகு]

புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்
  • புகையிலை பயன்படுத்தக்கூடாது.
  • கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
  • முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.
  • சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.
  • நல் நடத்தை.
  • 40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து,உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?[தொகு]

புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:
  • மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
  • புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
  • குணப்படாத புண்கள்.
  • கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
  • மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
  • தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
  • விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
  • இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
  • பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?[தொகு]

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?[தொகு]

புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.

புற்று நோய் வகைகள்[தொகு]

புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலன்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என வழங்குகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் (வைரஸ்) போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.
  • மார்பகப் புற்று நோய்
  • இரத்தப்புற்று நோய்.....இன்னும் பல

இரத்தப்புற்று நோய்[தொகு]

லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய். இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.
அறிகுறிகள்
  • அதிகளவில் இரத்தம் வடிதல்
  • இரத்தசோகை
  • காய்ச்சல், குளிர், இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
  • பலவீனம் மற்றும் சோர்வு
  • பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்
  • பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்
  • நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)
  • ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்
  • காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
  • மூட்டு வலி
  • உள்நார்தசைகள் வீக்கமடைதல்



தோற் புற்றுநோய் அல்லது தோல் புற்றுநோய் என்பது தோலில் உள்ள உயிரணுக்களின் இயல்பை மீறிய வளர்ச்சியும் பெருக்கமும் ஆகும். இது பல்வேறு படிகளில் உள்ளது. மூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படுவதால் அவற்றின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. தோற் புற்றுநோய் தோலின் மேற்பகுதியான மேற் தோலில் ஏற்படுவதால் புற்றுநோய்க்கட்டிகளை அவதானிக்க முடிகின்றது. மற்றைய புற்றுநோய்களைப் போலல்லாது இவற்றை தொடக்க காலத்திலேயே கண்டறிந்து உகந்த சிகிச்சை பெற முடியும், இக்காரணத்தால் இவ்வகைப் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.[1]
தோற்புற்றுநோய் உண்டாக முதன்மையான காரணம் கதிரவனின் புற-ஊதாக்கதிர்கள் தோலில் நீண்டநேரம் வெளிக்காட்டப்படல் ஆகும். நுரையீரல், மார்பக, குடல், சுக்கிலவக புற்றுநோய்களை விட மெலனோமா மற்றும் ஏனைய தோல் புற்றுநோய்கள் பொதுப்படையில் நோக்குகையில் கூடுதலாகக் காணப்படுகின்றன.[1] தோற்புற்றுநோய்களுள் மெலனோமா தீவிரமானதாகும், இதனால் இறக்கும் வீதம் மற்றைய தோற் புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் மிகையாக உள்ளது, எனினும் மெலனோமா குறைவாகவே மக்களிடையே காணப்படுகின்றது. பொதுவாக உண்டாகும் தோல் புற்றுநோய்கள் எனப்படுமிடத்து அவை மெலனோமா அல்லாத தோற் புற்றுநோய்களாகவே உள்ளன. சிலருக்கு பிறப்பில் அல்லது பின்னர் கரிநிறமி உயிரணுக்களால் (melanocyte) தோன்றும் பெரிய பிறப்புப் புள்ளியில் (பெரும் மச்சம்) பிற்காலத்தில் மெலனோமா உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.


வெவ்வேறு விதமான அறிகுறிகளும் உணர்குறிகளும் உள்ளன. தோலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுப் பின்னர் குணமடையாது இருப்பது, தோலில் ஏற்படும் புண்கள், நிறமாற்றம், ஏற்கனவே உள்ள மச்சத்தில் மாறுபாடு ஏற்படுவது போன்றன தோல் புற்றுநோய் எனச் சந்தேகிக்கக்கூடிய அறிகுறிகளாகும். ஏற்கனவே உள்ள மச்சத்தின் ஓரங்கள் ஒழுங்கற்றுப்போவது, அல்லது மச்சம் பெரிதாகிக்கொண்டே போவது என்பன புற்றுநோயின் அடையாளங்களாகும்.



சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்களே தோல் புற்றுநோய்க்கு முதன்மையான காரணமாகும்.எனினும் வேறு சில காரணிகளும் உள்ளன அவை:
  • புகைபிடித்தல்
  • HPV நோய் தொற்றுகள் செதிள்கல புற்றுநோயயை உருவாகலாம்
  • சில மரபணு பிறழ்வு மூலமும் இதுவரலாம்.பிறக்கும் போது 20 மிமீ (3/4") விட பெரிய மறு உள்ளவர்களுக்கு கரிநிறமிப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் உள்ளது..
  • நாள்பட்ட அஆறாத காயங்கள் மூலம் செதிள் உயிரணு புற்றுநோய் உருவாகலாம் .
  • அயனியாக்க கதிர்,சுற்றுச்சூழல்,செயற்கை புற ஊதா கதிர்கள் தாக்கம், வயதாதல் மற்றும் வெளிறிய நிறதோல் ஆகியவும் முக்கிய காரணமாகும்.உலக சுகாதார அமைப்பு இப்போது தோல் புற்றுநோய் அதிகாமாக செயற்கை தோல் பதனிடுதல் படுக்கைகள்களில் வீளை செய்யும் மக்களுக்கு அதிக அளவில் வருவதாக கூறுகிறது.
  • பல நோயெதிர்ப்பு சக்தி தணிப்பு மருந்துகளை பயன்படுத்துவதாலும் தோல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது.உதாரணமாக ஒரு சைக்லோஸ்போரின் என்ற மருந்தின் மூலம் 200 மடங்கும் அசாதியோப்ரின் என்ற மருந்து மூலம் 60 மடங்கு ஆபத்து அதிகரிக்கின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றது.


சூரிய கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்ளுதலே கரிநிறமிப் புற்றுநோய் மற்றும் செதிள்கல புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துகொள்ளும் வழி ஆகும்.தோல் புற்றுநோய் ஆபத்தை குறைக்க உச்சி வேளைகளில் சூரியகுளியலை தவிர்க்கவும், பாதுகாப்பு ஆடை பயன்படுத்தவும், கருப்பு கண்ணாடிகள் மற்றும் தொப்பிகள் அணிந்து செல்லவும் அறிவுறுத்தபடுகிறது.அமெரிக்க முன்னெச்சரிக்கை சேவை பணிக்குழு 9 முதல் 25 வயதுடைய மக்கள் புற ஊதா ஒளிகதிர்கள் படுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. தோல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தால் குறையும். தூள் புற்று நோயை வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற மருந்துகலோ தவிர்க்கும் என்று நம்ப தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்படவில்லை













Thanks : 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D

(தொடரும் ) 


Saturday, 19 April 2014

How much your SB A/C Balance ? (உங்கள் சேமிப்பு கணக்கின் நிலுவை எவ்வளவு ?)



கேடு வரும் பின்னே , மதி கெட்டு வரும் முன்னே ! 







பாடல்: சட்டி சுட்டதடா கை விட்டதடா

குரல்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
திரைப்படம்: ஆலயமணி


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)

நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா


பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா


ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா (2) – மனம்
சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா


எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

கவியரசர்  கைவண்ணத்தில் "ஆலயமணி " திரைப்படத்தில் வெளிவந்த மிகவும் அழுத்தமான பொருள் கொண்ட தத்துவ பாடலைத்தான் மேலே கண்டது. 

பொதுவாகவே நல்ல அனுபவத்தினால் கிடைக்கும் ஞானத்தை விட கசப்பான அனுபவத்தில் கிடைக்கும் ஞானத்தில் தான் மிகவும் ஆழம் இருக்கும். காரணம் கசப்பான நினைவுகள் என்றென்றும் நினைவினில் தோன்றி நம்மை அலைக்கழிக்கும். காலப்போக்கில் நம் மனதினில் நீங்காத வடுவை ஏற்படுத்தும். (இதுவும் ஒருவரின் நேரத்தை பொறுத்து மாறுபடும்)

"ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி" என்பது போல நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் இன்ப / துன்பங்கள் அவரவர் தாங்கும் தன்மையை பொறுத்தே அமைகிறது. துன்பங்களை தாங்குவதற்கு வேண்டுமானால் மனதிடம் வேண்டும் , ஆனால் இன்பத்தை தாங்குவதற்கு என்ன மனதிடம் இருக்க போகிறது என  சிலர் கேட்கலாம்.  

இது குறித்து எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் சில வருடங்களுக்கு முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் அதன் நிருவனருடன் உரையாடிக்கொண்டிருக்கின்ற போது , எங்களுடன் பணி புரிந்த ஒரு வயதான (70 +) மனிதருக்கு நிறுவனத்திலிருந்து நியாயமாக  வரவேண்டிய "கமிஷன்" தொகை பற்றி கேட்டதற்கு அவர் சொன்னார் "ஏனப்பா ! அந்த மனிதருக்கு ஏற்கனவே வயதாகி விட்டது. அவருக்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை அதிகமாகவே இருந்தாலும் அதை கொடுத்து விட்டால் அவரால் தாங்க முடியாமல் ஒருவேளை மாரடைப்பு வந்து அவர் இறந்து விட்டால் என்ன செய்வது ? அதனால் வழக்கம் போல தினமும் / அவ்வப்போது  ஒரு நூறு / இருநூறு / ஐநூறு என சமயத்திற்கு ஏற்றார் போல கொடுத்து அவரை உயிரோடு இருக்க வைக்கலாம் " என தடாலடியாக ஒரு "சமாளிபிகேசன்" பிட்டை போட்டார். இது ஒருவரின் இன்பத்தை தாங்குகின்ற தன்மையை இன்னொருவர்  (தவறாக ) எடை போட்ட சம்பவம்.  

மனிதர்கள் அவரவர் சுய நலத்திற்க்காக அடுத்தவரை குறைத்தும் / மிகைத்தும் மதிப்பீடு செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் "இறைவன்" அப்படியல்ல, அவன் ஒரு போதும் ஒருவரை அளவுக்கு மீறி சோதனை செய்வதில்லை. அவனுக்கு எல்லோரையும் பிடிக்கும். சில பேரை சற்று அதிகம் பிடிக்கும் , அப்போது அவரை மிகவும் சோதனைக்கு ஆட்படுத்தி தன்னை உணர்ந்து கொள்ள செய்வான். மற்றவரை அவரவர் சுற்று வரும் வரை கொஞ்சம் விட்டு வைப்பான். 

ஆனால் எவருமே அவர் பார்வையிலிருந்து தப்பவே முடியாது. காரணம் நம் எல்லோரது உடலிலும் கண்ணுக்கு புலப்படாத ஒரு "Transmitter" ஐ  வைத்து அதில் வரும் சமிஞ்ஞை களை வானில் உள்ள "சனி " கிரகத்தில் பதிய வைத்து அவரவர்க்கு ஏற்ற வினைகளை தகுந்த நேரத்தில் அளித்து ஒவ்வொருவரையும் தன் வசம் திருப்பவே எல்லாவற்றையும் செவ்வனே நடத்திக் கொண்டிருக்கிறான்.  

இந்து சமயத்தில் கர்மா என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றால்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு ‘கர்மா’ சென்ற சொல் பயன் படுத்தப்படுகிறது.

ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
- யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.5

கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் ஆகும். அவரவர் கர்மா அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது.

தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது ஊழ்வினை என்று குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் ‘ஊழ்’ (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவோ ‘ஊழ்வினை’ என்ற சொல்லை கையாள்கிறார்.

இந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி.
ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது ஆத்மா முன்பிறவிகளின் மொத்த கர்மாவின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்.
யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6

மறுபிறவியானது ‘பிறப்பு – இறப்பு – மறுபிறப்பு’ எனும் இயற்கையான பிறவிச்சுழலின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.

கர்மாக்கள் மூன்று விதம், நித்யம், நைமித்யம், காம்யம். காம்ய கர்மா என்பது மழை பொழிவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், சுவர்க்கம் போன்ற சுகங்களை அடையவும் ஒன்றை விரும்பி செய்யக் கூடிய கர்மா. நைமித்திக கர்மா சந்திர கிரஹணம், சூர்ய கிரஹணம் போன்ற காலங்களில், சில பாவ பரிஹாரங்களுக்காக செய்யக்கூடிய கர்மாக்கள் நைமித்திக கர்மாக்கள், காம்ய கர்மா பலனை விரும்பி செய்யக்கூடியது. நைமித்திக கர்மா மூலம் பலம் கிடைப்பதும், பாவம் போவதும் உண்டு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் காம்ய கர்மாவை பலனை வரும்பிய போதெல்லாம் செய்யலாம். நைமித்திக கர்மாவை, ஒரு காலம் வரும்போது, ஒரு காரணத்தை வைத்துத்தான் (நிமித்தம்) அந்த கர்மாவை செய்ய வேண்டும்.
நித்ய கர்மா என்பதற்கு பலன் ஒன்றும் கிடையாது. தினந்தோறும் குளிக்கிறோம், அழுக்க போகிறது, சாப்பிடுவதால் வயிறு நிரம்புகிறது. அது போல நித்ய கர்மா செய்வது மனசுக்கு தெளிவு (சித்த சுத்தி) மாத்திரமே பலன். பண்ணினால் மனத்தெளிவு, நித்யகர்மா பண்ணாவிட்டால் மாபெரும் பாவம். ஆகவே விரும்பிய போது பண்ணுவதல்ல நித்யகர்மா. அதுபோல ஒரு காலத்தில், காரணத்தை வைத்து செய்வது அல்ல நித்ய கர்மா. எந்தெந்த நேரத்தில் எந்த கர்மா சொல்லப்பட்டிருக்கிறதோ அதைச் செய்வது நித்ய கர்மா. “சந்த்யா வந்தனம், அக்னி ஹோத்ரம், வேள்விகளை விடாமல் செய்து கடவுள் வழிபாடு செய்வது” இவைகள் தான் நித்யகர்மா.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு கர்மாவும், மூன்றுநிலை அடைகிறது. சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம். இப்போது நமக்கு இந்த பிறவி கிடைத்த உள்ளது. இதில் சில வியாதிகளும், சில சுகங்களும்,துன்பங்களும் கிடைக்கின்றன. இப்போது நாம் இந்த சரீரத்தின் மூலம் அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்கு ப்ராரப்தம் என்ற கர்மா காரணமாகிறது.

இப்போது இந்த சரீரத்தின் மூலம் செய்யக்கூடிய நல்வினை, தீவினைகள், வரும் காலத்தில் பலன் அளிக்கக்கூடியதுமாக, ஆகாமிய என்ற பெயரோடு வருகிறது. இப்படி ஒருபிறவியல்ல ஆகாமிய கார்யங்கள் பல செய்துவிடுகிறோம். இதற்கு பலன் உண்டு. இப்படி ஆகாமிய கார்யங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமைந்து விடுகிறது. இப்படிசேர்ந்த கர்மாக்களுக்கு சஞ்சிதம் என்று பெயர் இப்படி
சஞ்சிதத்திலிருந்து ஒரு பிறவியில் நாம் அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்கு, பிராரப்தம் என்று பெயர் சொல்லுகிறோம். பிராரப்தம் என்று இப்பிறவியில் பல, இன்ப, துன்பங்களை அனுபவிக்கிறோம். இது முற்பிறவிகள் ஒன்றில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு இப்போது பலனளிக்கிறது. முன்பு செய்த நல்வினை, தீவினை தொடர்ந்து பல பிறவிகளில் சுக. துக்கங்களைக் கொடுக்கிறது. இந்த பிறவியில்
அனுபவிக்கிற சுக, துக்கங்களுக்கு மறுபிறவிகளில் செய்த நல்வினை, தீவினையே தவிர இப்பிறிவியில் செய்ததற்கு அல்ல. இதனால் ஆகாமிய கர்மா புதிது, புதிதாக நிறைய பல பிறவிகளில் ஏற்படுகிறது. இப்படி ஒவ்வொரு பிறவியிலும் பலவிதமான நல்வினை தீவினைகள் நிறைய சேர்ந்தாலும், அதே வரிசைப்படி தொடர்ந்து அடுத்த பிறிவியில் பலன் தராது. உதாரணமாக பொருள்களை வாங்குவதற்கு ரேஷன் கார்டுகள் கொடுக்கிறார்கள். அந்த ரேஷன் கார்டில் ஒரு
வரிசை எண் தரப்பட்டிருக்கிறது. அதில் எத்தனை நபர் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. எப்போது ரேஷன் கார்டு வழங்கப்பட்டது என்ற விபரமும் இருக்கும். இத்தனையும் இந்த ரேஷன் கார்டில் இருந்தாலும் ரேஷன் வாங்க செல்பவர்கள், குறிப்பிட்ட வரிசை எண் பிரகாரம் செல்லமாட்டார்கள். யாரக்கு
எப்போது தேவையோ அதற்கு ஏற்றாற்போல் செல்வார்கள்.
அதுபோல நம் முன்வினைகள் என்பதற்கு முற்பிறவியில் என்றோ, முன் செய்த வினை என்றோ இரண்டும் அர்த்தமல்ல, ஏதோ ஒரு பிறவியில் ஏதோ ஒன்று செய்து இருக்கிறோம். அதற்கேற்றபடி அடுத்த பிறவி வருகிறது. அந்த ரேஷன் கார்டில் இத்தனை நபர்கள் என்று எழுதப்பட்டு இருக்கிறது, அதற்கு ஏற்றவாறு பொருள்களை வழங்குகிறார்கள். கூடுதலாக வழங்க மாட்டார்கள். குறைந்த பொருளைப் பெற இரண்டு வழிகள் உண்டு. பொருள்கள் குறைந்த இருந்தாலும், குறைந்து கொடுத்து விடுவார்கள். நம்மிடையே பணம் குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட பொருளை குறைத்து வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு, அதுபோல் நமக்கு இந்த பிறவியில் கூடுதலாக வர வாய்ப்பு கிடையாது. நாம் இந்த பிறவியில் எவ்வளவு அனுபவிக்க வேண்டுமோ அவ்வளவுதான் வர வாய்ப்பு உண்டு. சுக துக்கங்கள் குறைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு, கடவுள் பக்தி, பெரியோர் ஆசிகள் மூலமாக.
உதாரணமாக பெரிய மழை வருகிறது, மழையை நிறுத்த முடியாது, நாமும் வெளியில் செல்ல வேண்டும், மழையிலும் நனையக் கூடாது. இப்படி மழையைத் தடுக்க நாம் என்ன செய்வோம்? உடல் பூராவும் மறைத்து மழைக் கோட்டு அணிந்து கொள்ளுவோம். அப்போது மழை நம்மீது பெய்யும், மழைக் கோட்டு முழுவதும் நனையும். நாம் நனைய மாட்டோம். எப்படி மழையில் நனைந்தாலும், நம்மை காக்கிறதோ, அதுபோல நம் சுக துக்கங்களை குறைத்து காக்கும். ரேஷன் கார்டில் சாமான்கள் பெற்றுக் கொண்டதற்கு குறியிட்டு விடுவார்கள். ஆனால் அதே கார்டை வைத்துக்கொண்டு அடுத்தவாரம் செல்லலாம். அது புதிதாக பொருள் வாங்க உதவுமே தவிர, பழைய சாமான்களுக்கு பயன்படாது. ஏனெனில் ரேஷன் கார்டில் சாமான்கள் பெற்றுக் கொண்டதற்கு குறியிட்டு விடுவார்கள். ஆனால் அதே கார்டை வைத்துக்கொண்டு அடுத்த வாரம் செல்லலாம். அது புதிதாக பொருள் வாங்க உதவுமே தவிர, பழைய சாமான்களுக்கு பயன்படாது. ஏனெனில் ரேஷன் கார்டில் பெறப்பட்ட பொருள் குறிக்கப்பட்டு விடுவதால், அது போல நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வினைகளும், முன்னாடி அனுபவித்த நல்வினை, புதியதை அனுபவிக்க அனுபவிக்க பழையவை தீர்ந்து விடுகின்றன. புதியவை செய்ய அது சேரும். ஆகவே பழையவினை அனுபவிப்பதால் அது அழிந்துவிடும் ஆகவே சுக, துக்கங்களை அனுபவிக்கிறோம் என்றால் பழைய வினைகள் அழிந்து கொண்டு வருகின்றன என்று அர்த்தம். இந்த ரேஷன் கார்டின் விதி ஒரு பொது விதி, சில சமயம் விசேஷ கோட்டாவில் பொருள்கள் வழங்கப்படும். அப்போது பொருட்கள் கூடுதலாக கிடைக்கும். இதே பேலத்தான் அதிக புண்யமோ, பாவமோ, மனிதன் வாழ்க்கையில் அதிக துக்கமோ, நன்மையோ ஏற்பட்டு விடுகின்றன, ஒரு சமயத்தில் பொருட்கள் நிறைந்த விட்டால் ரேஷன் கார்டு தேவையில்லாத நிலை ஏற்படுகிறது. அதுபோலப் பகவான் அருள் பரிபூரணமாக நிறைந்து விட்டால் இந்த நல்வினை, தீவினைப் பயன்கள் அடிபட்டு விடுகின்றன. ஞானமும், ஆனந்தமும் கிட்டிவிடுகிறது.
இப்படியாக ஒரே வினை மூன்று நிலைகள் அடைந்து கடைசியில் ஒரு மனிதப் பிறவியில், பிறவியல்லாத நிலை அடைவதற்கு காரணமாக ஆகிறது.

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ் நாளில் மற்றவர்களிடம் பிரியமாய், சிநேகமாய் இருக்கவேண்டும். அதிலும் முக்கியமாக தனது நண்பனிடம் கஷ்டம் வருங்காலத்தில் அதிக சிநேகமாய் இருக்க வேண்டும். நன்பன் சௌகரியமாய் இருந்த காலத்தில் சிநேகமாய் இருந்து அவனிடம் பல சௌகரியங்கள் அடைவதை காட்டிலும், நண்பனுக்கு ஆபத்து வருங்காலத்தில் யார் காப்பாற்றுகிறானோ, அவனே உண்மையான நண்பன், பால், நெருப்பில் காய்ச்சப்படுகிறது. நன்றாக சூடு ஏறின பிறகு பாலிலுள்ள தண்ணீர் அனைத்தும் நன்றாக சூடு ஏறின பிறகு அப்பொழுது பால் பொங்கி நெருப்பில் பொங்கி வந்து தன்னோடு இணைந்திருந்த நீரை சூடுபடுத்தி நெருப்பு எப்படி இழுத்துக் கொண்டுவிட்டதோ, நாம் மட்டும் எப்படி சூட்டை பொறுத்துக் கொண்டு தனியாக இருப்போம் என்று எண்ணி அந்த நெருப்பிலே பொங்கி வழிகிறது. தண்ணீரை தெளிக்கிறோம், பொங்குதல் அடங்கி
விடுகிறது, தன் நண்பன் தன்னோடு வந்த விட்டான் என்ற எண்ண பொங்குதல் அணைந்து விடுகிறது? இதுபோல் நண்பனின் அபத்து காலத்தில் உதவுவது உண்மையான நண்பனின் லட்சியம். ஒரு மனிதனுடைய வாழ்வில் நல்லோருடைய நட்பு சிறிதாக ஆரம்பித்து பெரிதாக முடியும். தீயோருடைய நட்பு பெரிதாக ஆரம்பித்து சிறிய விஷயத்தில் நட்பு முறிந்து விடும். காலையில் வெயில் தொடரும் பொழுது நம்முடைய நிழல் நம்மை காட்டிலும் பெரிதாக இருக்கும். மத்தியானம் உச்சி வேளையில் அந்த நிழலுக்கு இருப்பிடம் தெரியாது. 2 மணி வெயிலில் சிறிதாக நம்முடைய நிழல் தொடங்கி மாலையில் பெரிதாக வளர்ந்து அப்படியே நின்று விடும். இதுபோலத்தான் துஷ்டர்களுடைய
நட்பும், நல்லவர்களுடைய நட்பும் இருக்கும். அவைகளை நாம் ஆலோசித்து தொடங்கும்போதே பெரிதாக உள்ள நட்பை கண்டு மயங்காமல், சிறிதாக தொடங்கி முறையாகப் பெரிதாக வளரும் நட்பையே மேற்கொள்ளவேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் பாத்திரம் அறிந்து செய்வதன் மூலம் அது விசேஷ பலன் ஆகி விடுகிறது. நம் வாழ்வில் நல்ல அறிவுள்ளவரிடம் பழக வேண்டும். அதனால் பல நற்குணங்கள் நமக்கு கிடைக்கும். அகங்காரம் உள்ளவரிடம் பழகினால், கிட்டத்திலிருந்து பேசினால், எத்தனை கர்வம் என்று நம்மை திட்டுவான். தூரத்திலிருந்து பேசினால் மரியாதை இல்லாமல் தூரத்திலிருந்து பேசுகிறான்
என்றும் பயந்தாங்கொள்ளி என்றும் சொல்லுவான். தைரியமாக பேசினால் அகங்காரம் உள்ளவன் என்று சொல்லுவான். மெதுவாக நிதானமாக பேசினால் பேசத் தெரியாதவன் என்று சொல்லுவான். இரைந்து வேகமாக பேசினால் பேசுவதையே புரியாமல் பேசுகிறான் என்று சொல்லுவான். இப்படிபயாக எந்த காரியம் நாம் செய்தாலும் ஒவ்வொன்றிலும் ஒரு குற்றத்தை கண்டு பிடிப்பான்.

அதனால் அகங்காரம் உள்ள மனிதனுடன் பழகுவதைத்தடுப்பது நல்லது. நாயை நாம் வீட்டிலேயே எவ்வளவு பழக்கி வைத்திருந்தாலும் யாராவது உணவு உட்கொள்ளும் பொழுது வாலைக் குழைத்துக் கொண்டுதான் இருக்கும். யானைக்கு சாப்பாடு வேண்டும் என்று நினைக்கும் பொழுது யானைப் பாகன்
கொடுக்கும் பொழுது அது அப்படியே உடனடியாக வாங்கி சாப்பிட்டு விடாது. கம்பிரமாய் கர்ஜனை செய்து கொண்டு ஆலோசித்து நிதானமாய்த்தான் உணவு உட்கொள்ளும். அதுபோல் சாமான்ய மனிதன் ஆசைக்கு அடிமைப்பட்டு எந்தப் பொரளை எங்கே கண்டாலும், அதை அடைவதற்கு அலைந்து திரிந்து பெறுவான். அறிவாளி, தனக்கு வேண்டிய பொருளை தன்னுடைய கௌரவத்திற்கு
குறைவு ஏற்படாத வகையில் அந்தப் பொருளை பெற்று மகிழ்வான்.
அரிவாளினால் சந்தன மரத்தை வெட்டினாலும் வாசனை கொடுக்கும். அதுபோல் தீயவர்கள் நல்லவர்களுக்கு தீயது செய்தாலும், நல்லவர்கள் தீயவர்களுக்கு நல்ல புத்தி வளர முயற்சிப்பார்கள்.

மின் சக்தி ஒரு வீட்டினுள் இருந்து கொண்டு காற்று கொடுப்பது பேனிலும், ஒலி கொடுப்பது ரேடியோவிலும், ஒளி லைட்டிலும், மற்றும் பலவகை பணிகளுக்கு உபயோகமாய் இருக்கிறது. அதுபோல் ஒரே பரம்பொருள் பலவிதப் பணிகள் நாட்டில் நடைபெறுவதற்கு பலவகைகளில் பல பொருள்களில் இயக்கி வைக்கிறார். ஒரே மின் சக்தியால், ஒலி, ஒளி, காற்று முதலியவைகள் நமக்கு
கிடைத்தாலும், ஒளி, ஒலி, காற்றினுடைய நிலையை அதிகரித்துக் கொள்வதும் குறைத்து கொள்வதும் மின் சக்தியில் இல்லை. நம்முடைய கையில் இருக்கின்றது. நம்முடைய கையினால் நமக்கு தேவையான காற்றைக் குறைத்தோ, கூட்டியோ தேவையான அளவுக்கு வைக்கிறோம். அதேபோல பரம்பொருள் இத்தனை பொருட்களை இயக்கினாலும், இயக்குவதை நாம் உபயோகப்படுத்தி கொள்வதற்கு நம்முடைய புத்தியை உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பகுத்தறிவு என்பது அறிந்த உண்மையை விரிந்து தெரிந்து கொள்வது என்று பொருள். இந்தப் பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் அல்ல. பல உயிரினங்களுக்கும் இருக்கின்றன. ஆடு, மாடு, போன்ற பிராணிகள், மற்றும் சில ஜந்தக்களும்கூட, தான் உண்ணக்கூடிய உணவை நல்ல வகையில் உண்ண வேண்டும் என்று அறிந்து கொண்டு உட்கொள்கிறது. விஷ சம்பந்தமான பொருள் இருந்தால் அதை
தன்னுடைய பகுத்தறிவு சிந்தனையினால் அறிந்து கொண்டு ஒதுக்கிவிடுகிறது. அதனால் மனிதன் பொருளின் தன்மையை அறிந்து கொண்டு, நல்லது தீயதை அறிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்வது அல்லாமல் எப்படி நல்ல பொருட்கள், தீய பொருட்கள் வந்தன என்பதை அறிந்த பிறகு அதன்படி நல்ல பொருட்கள், தீய பொருட்கள் செய்வதற்கு தெரிந்து கொண்டவன் ஆகிறான். மற்ற உயிரினங்கள்
ஒதுங்கி விடும்.

மனிதன் ஒதுங்கவும் செய்வான். அவைகளை ஆக்கவும் செய்வான். அவைகளை அழிக்கவும் செய்வான். (அல்லது) விஷப் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து இம்சை செய்யவும் செய்வான். ஆகவே பகுத்தறிவு உயிரினங்களிடம் பொதுவாக இருந்தாலும், செயல்படும் விதம் மாறிவிடுகிறது.
ஆடு, மாடு, நாய் போன்ற பிராணிகள் தன்னுடைய தற்காப்புக்காக, முட்டுவது, கத்துவது, கடிப்பது போன்றவையெல்லாம் செய்யும். அதனால் அதற்கு எந்த விதமான பாவ கணக்கும் கிடையாது. மனிதன் ஆடு, மாடு, நாய் போன்று முட்டுவது, உதைப்பது, கடிப்பது போன்றவை செய்தால் அதற்கு பாபத்தில் கணக்கு உண்டு. மனிதனை தவிர மற்ற எந்தப் பிராணிகள் செய்யும் காரியத்திற்கும் பாவ
புண்ணியங்கள் கணக்கில் வராது. மனிதனுக்கு மாத்திரம் வரும். ஏனென்றால் பகுத்தறிவு விசேஷமாகப் பெற்று இருப்பதினால், ஆகையினாலே மனிதன் செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும் கணக்கு உண்டு.

பொதுவாக வேகம் என்கிற பகுத்தறிவு பலவகைப் படுகிறது. ஆத்மா எது, மற்ற வஸ்துக்கள் என்ன என்று சிந்தனை செய்வது ஒரு விதமான விவேகம். படிப்பின் மூலம் பொருளின் தன்மையை அறிந்து கொள்வது ஒரு விதமான விவேகம் உண்மை பாகம் என்ன என்பதை தெரிந்து கொண்டு செய்வது ஒரு விதமான விவேகம்.ஒரு துணியில் சிம்மத்தின் பொம்மை வரையப்பட்டிருக்கிறது. படித்தவர்கள், பாமரர்கள் குழந்தைகள் அனைவரும் இந்த அழகான சிம்மத்தின் இடத்தை பார்த்து, சிம்மம் கம்பீரமகவும், அழகாகவும் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். ஆனால் நிஜமான சிம்மம் அது அல்ல. வரையப்பட்ட சித்திரத்தை பார்த்து சில குழந்தைகள் பயப்படுகிறார்கள். அறிவாளிகள் கூட அதிசயத்தோடு பார்க்கிறார்கள். அதன்நிலை எப்படியோ அப்படித்தான் இந்த உலக வாழ்வும். துணி ஒன்றுதான், வரையப்பட்ட சிம்மம் கற்பனையானது. பிரம்மம்தான் நிஜமானது. உலகம்
கற்பனையானது.

ஒரு மனிதனுடைய நிழல் காலை வேளையில் நீண்டதாக இருக்கிறது. உடல் இல்லாமல் நிழல் இல்லை,. ஆனால் உடல் 4 அடி இருந்தாலும் நிழல் 10 அடி இருக்கும். உச்சி வேளையில் 1/2 அடியிலும் இருக்கும். அதுபோல் பிரம்மத்தை ஆதாரமாகக் கொண்ட, மாயை பெய்கிறது என்னும் நிழல் வளர்கிறது. நிழல் அசுத்தமான இடத்தில் இருந்தாலும் அதனால் உடலுக்கு எந்தவிதமான அசுத்தமும்
ஏற்படுவதில்லை. அதுபோல் பிரம்மத்தை ஆதாரமாய் கொண்டு உலக காரியங்களுக்கு எத்தனை புண்யபாவங்கள் செய்து கொண்டாலும், மாயைக்கு ஆதாரமான பரமாத்மாவை பாதிக்காது. உடலை காட்டிலும் தனியாக நிழலை இல்லை. ஆனாலும் நிழல் பல நிலை அடைகிறது. கூடுதல், குறைத்தல் பிறரால் மிதிக்கப் படுதல், போன்ற பல நிலை அடைகின்றன. இதனால் உடலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. அதுபோல்தான் மாயை மூலமாக பிரம்மத்திற்கு எந்தவித பாதிபபும் ஏற்படாது. நிழல் பல பொருள் மீது விழும் உடல் மீது எப்போதும் தன் நிழல் விழாது. அதுபோல் மாயை பல பொருள், சிருஷ்டி, ஸம்ஹாரம் போன்ற பல பணிகள் செய்யும். ஆனால் மாயை கட்டாயமாக பிரம்மத்தில் விழாது.ஒரு நாடகம் நடைபெறுகிறது. பல ஜனங்கள் இருக்கிறார்கள். நாடகம் நடக்கும் பொழுது குறைந்து இருந்தால் பார்ப்பவர்கள் நாடகத்தை பார்ப்பார்கள். அது போல் உலகத்தின் உள்ள பொருள் எல்லாம் மாயையின் நாடகம். நாடகம்தான் என்று தெரிந்து கொள்வதற்கு விவேக சக்தி, ஒலி இல்லாததனால், உலக நாடகத்தை பொய்யாக பார்ததுக் கொண்டிருக்கிறார்கள். நாடகத்தில் நடக்கும் பாத்திரங்களை
பார்த்த சாமானிய பாமர மக்கள் நிஜமாக அப்படி இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். நாடகத்தில் நடித்தவர்கள் நாடகம் முடிந்தவுடன் இயற்கையாக வரகிறார்கள். வந்தவுடன் பேசி மகிழ்கிறார்கள். நாடகங்களைப் பார்த்தவர்கள் எல்லாம், இவர்கள் இத்தனை நேரம் நடித்தது உண்மை நடிப்பு போல் நடித்தார்கள் என்று பாராட்டி பேசுவார்கள். அது போல் அறிவாளிகள், அநுபவசாலிகள், உலகம் உலகிலுள்ள எல்லாம் மாயை நாடகம் என்று நினைப்பது கூட உண்மையான பரம்பொருள் ஒன்றுதான். மற்றவைகள் எல்லாம் தோற்றம் என்பதை உணர்ந்து கொண்டு ஊரோடு பொதுமக்களோடு பேரறிவோடு வாழ்வார்கள்.

தாமரை இலையில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அந்த தண்ணீர் நிலைத்து நிற்காமல் ஓடி போய்விடுகிறது. இரண்டு முத்துகள் தாம் நிற்கிறது. அதே போல்தான் அறிவாளிகள், அநுபவசாலிகள் வாழ்க்கையில் அறியாமையில் முழுகாமல் முத்துபோல முக்தர்களாக விளங்குவார்கள். நாடகம் நடப்பதற்கு முன்பு அங்கு ஒளி விளக்கு இருக்கும். நடக்கும்போது ஒளிவிளக்கு இருந்து கொண்டே
இருக்கும். மத்தியில் ஒளி விளக்கு வந்து போகும் அதே போல் பரம்பொருளான ஜோதி, ஒளி முற்காலத்தில் எப்போதும் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற நிலையில் அதற்கு அப்பாற்பட்ட நிலையிலும் ஒரேவிதமான ஒளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும்.

வானில் உலவும் கிரகங்களில் ஒருவருக்கு இன்பத்தை தருவதில் முறையே சுக்கிரன் (Venus), குருபகவான் (Jupiter), வளர்பிறை சந்திரன் (Moon), பாவிகளோடு சேராத புதன் (Mercury) இவர்கள் தான் வருவார்கள். இது அவரவர் பெறும் வலிமையை பொறுத்து ஒருவரை கட்டுக்குள் இருப்பதும் / இல்லாமல் போவதுமாக செய்வார்கள். 

ஆனால் சனி, ராகு, கேது இவர்கள் அப்படியல்ல ! அவர்கள் திட்டம் சற்று கடினமாகவும் புரிந்து கொள்ளவே முடியாத தாகவும் இருக்கும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பாடம் புகட்டும் விதம் மிகவும் கடினமாக இருக்கும். 

எவரையும் மிக எளிதாக பாவத்தில் விழ வைத்து வேடிக்கை பார்த்து பின்னர் திருத்து வார்கள். திருந்த வைப்பார்கள். சில பேரை சில நாளில் திருத்துவார் . சில பேரை பல நாளில் திருத்துவார். அதற்க்கு அவர்கள்  கையாளும் யுக்தி என்ன தெரியுமா ? 

மனிதர்களுக்கே உரியதான "பகுத்தறிவில்" தங்கள் கைவரிசையை காண்பித்து ஒருவரது புத்தியை மழுங்கடித்து பாவங்களை செய்ய வைத்து பின்னர் விமோசனம் தருவார்கள். (இதுவும் ஒவ்வொருவர் விதியை பொறுத்து தான் அமையும்)

பொதுவாகவே எல்லோரும் இன்பம் நீடித்திருக்கவே விரும்புவார்.  அது எத்தகையான இன்பமாக இருந்தாலும் சரி. அதாவது தர்மத்திற்கு ஏற்ற / எதிரான என இரு வகைப்படுத்தலாம். உதாரணமாக சில பேருக்கு நியாமாக உழைத்து வரும் சரியான  வருவாயில் இன்பம் இருக்கும், சில பேருக்கு நியாயமற்ற வழியில் உழைத்து வரும் தவறான வருவாயில் தான் இன்பம் இருக்கும். காரணம் நியாயமற்ற (தர்மத்திற்கு எதிரான) வழியில் வரும் தொகை அதிகமாக இருப்பதாலும் , அதனால் தங்கள் ஆடம்பர தேவைகளை பூர்த்தி அடைவதாலும் இந்த மனநிலை ஏற்படக்கூடும். 

சரி இந்த மனநிலை எப்போது மாறும் ? பொதுவாகவே உயிரினங்களுக்கு மனநிலை எப்போதுமே ஒன்றாகவே இருப்பதில்லை, காரணம் உயிர்களின் மனநிலைக்கு காரணமான "சந்திரனின்" சுழற்சி தான்.  இது 2-1/2 நாளுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசிக்கட்டத்தை கடக்கும். 

இந்த சந்திரன் ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சுப பலன் தர இயலாததாக அமைந்து, பாவ  கிரகங்கள் 4, 5, 8 ஆம் இடத்தில் இருந்து, மற்ற சுப கிரகங்கள் வேறு பல விதங்களால் பாதிக்க பட்டு இருந்தால் "நிம்மதி" என்பது இருக்காது. 

இத்தகைய துன்பங்களெல்லாம் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும். அது ஒருவரின் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் இடத்தை பொறுத்து மாறுபடும். அது நம்முடைய "Bank Balance" போன்றது. அதில் நிறைய நிலுவை நாம் வைத்திருந்தால் இன்பம் நீடித்திருக்கும். துன்பம் நீடிக்காது. 

அதற்க்கு தான் கொடுத்து வைத்தவர் என்று சொல்வார். 


நன்றி : 

https://kaakitham.wordpress.com/2009/09/19/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/

http://www.shivajothidanilayam.com/blog/?cat=14