கலைக்கோவில்
"நம் காதல் உள்ளம் கலைக்கோவில்
இரு கண்கள் கோவிலுக்கு வாசல்
நமதாசை கோவில் மணியோசை
அதில் அன்பு வண்ண மலர்ப்பூஜை!"
- "நான் உன்னை சேர்ந்த செல்வம்" என்று துவங்கும் "கலைக்கோவில் " என்னும் பழைய திரைப்படத்தில் வரும் வரிகள் இவை .
இப்பாடலை காணொளியில் காண விரும்பினால் பின் வரும் திரையில் காணவும்.
இப்பாடலை காணொளியில் காண விரும்பினால் பின் வரும் திரையில் காணவும்.
கவியரசர் என்ன அருமையாக பாடலில் காதலையும் - கோவிலையும் , கண்களையும் - வாசலையும் , ஆசையையும் - கோவில் மணியோசையையும் , அன்பையும் - வண்ண மலர்களையும் இணைக்கிறார் பாருங்கள்.
இந்த பாடலை நான் சிறு வயதிலிலேயே கேட்டுள்ளேன் , ஓரளவுக்கு அர்த்தங்களையும் உள்வாங்கியுள்ளேன் . தற்பொழுது இந்த பாடலை மறுபடியும் எனக்கு நினைவூட்டிய என் அலுவலக நண்பர் திரு.சபாபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
*********
”காதல் என்பது எது வரை,கல்யாண காலம் வரும் வரை “என்று சொல்கிறது ஒரு திரைப்படப் பாடல்.
காதலித்து மணம் புரிந்தவர்களின் காதல்,கல்யாணத்துடன் முடிந்து விடுமா?
ஒருவேளை பாடல் , யாரையாவது காதலித்துத் திரிவதெல்லாம் ,கல்யாணம் வரைதான்,யாரோ ஒருவரை மணந்தபின்,காதலாவது,கத்தரிக்காயாவது என்று சொல்கிறதா?.
திருமண உறவில் காதல் இல்லாது போய்விடுமா?
காதல் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் இல்லையே!
காதல் என்பது,ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளுதல்,ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்தல்.
இதோ அப்படிப் பட்ட ஒரு காதல்.....
நேற்று இரவு.
மணி ஒன்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது.
வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்து பார்த்தேன்.
எங்கள் குடியிருப்பின் இரவுக் காவல்காரர் நின்று கொண்டிருந்தார்,நெஞ்சை லேசாக அழுத்திப் பிடித்தபடி.முகத்தில்வேதனை.
பதறிப் போய்க் கேட்டேன்”.என்ன பெருமாள்,உடம்பு சரியில்லையா?”
அவர் இல்லை என்று தலையசைத்தவாறே கேட்டார்”குடிக்கக் கொஞ்சம் சுடு தண்ணி குடுங்க சார்”
ஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருந்தது.டம்ளரில் ஊற்றிக் குடிக்கும் சூடாகக் கொடுத்தேன்.
படியில் அமர்ந்து வெந்நீரை அருந்தினார்.தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.புறப்படத் தயாரானார்.
நான் கேட்டேன்”என்ன பெருமாள்,என்ன ஆச்சு?”

சிறிது தயங்கினார்.பின் சொன்னார்”என் சம்சாரம் போன வருஷம் காலமாயிட்டா. இன்னிக்குக் காலையிலேதான் வருஷத்திதி கொடுத்தேன்.இப்போ உட்காந்துக் கிட்டு இருக்கும்போது,அவ நெனைப்பு ரொம்ப அதிகமா வந்து.உடம்பெல்லாம் படபடன்னு வந்துடுச்சு.எல்லாமே ஒரே இருட்டான மாதிரி இருந்திச்சு.அதுதான் சார்”
அவரது வயது 65 என்பது எனக்கு முன்பே தெரியும்.
அவரது வயது 65 என்பது எனக்கு முன்பே தெரியும்.
நான் கேட்டேன்”உங்களுக்கு எந்த வயசிலே கல்யாணமாச்சு?”
“22 வயசிலியே முடிச்சு வைச்சிட்டாங்க சார்”
நான் யோசித்தேன்.42 ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பின் பிரிந்து சென்ற மனைவியை நினத்து,அவளது பிரிவின்தாக்கத்தால்,அவர் உள்ள அளவில்,அதன் காரணமாக உடல் அளவில் பாதிக்கப் படுகிறார் என்றால்,அந்த அன்பு,அவர்களிடை இருந்த நெருக்கம்,அவர்களின் பரஸ்பரப் புரிதல் எத்தனை உயர்வானது?

அது வெறும் அன்பா?மண உறவா?நெருக்கமா?
அதற்கும் மேல்........
இதுதான் காதல்.உண்மைக் காதல்.
அவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்.
இந்தக் காதலுக்கு அவரின் உணர்வுகளே தாஜ் மஹால்!
அவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்.
இந்தக் காதலுக்கு அவரின் உணர்வுகளே தாஜ் மஹால்!
”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.”.....குறள்
(இது ஒரு மீள் பதிவு,,சில சேர்க்கைகளுடன்)
**********
நன்றி :
No comments:
Post a Comment