நொண்டிசாக்கு !
இவ்வுலகில் குறைகள் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. அதே போல பிழைகள் செய்யாதவரும் யாருமே இருக்க முடியாது. ஏனெனில் உலகினில் நாம் பிறப்பதே ஒரு குறை தான். காரணம் நாம் செய்த / செய்யப்போகும் பிழைகள் தான். குறையே இல்லாதவர் பிழை செய்ய முடியாது. பிழையே செய்யாதவரிடம் குறை இருக்க முடியாது.
"வேலுண்டு வினையில்லை" என்னும் திரைப்படத்தில் வரும் அருமையான பாடல் காட்சியை பாருங்கள்.
"கந்தர் சஷ்டி" கவசத்தில் வரும் அருமையான வரிகளை காணுங்கள்.
"எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என் மீது மனம் மகிழ்ந்து அருளி
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்!"
எத்தனை எத்தனையோ குறைகளையும் பிழைகளையும் அடியேன் செய்திருந்தாலும் என்னைப்பெற்றவளான வள்ளியம்மையும், என்னைப் பெற்றவனும் குருவுமான நீயும் பொறுத்துக் கொள்ளவேண்டும்! அது உங்கள் கடமையும் ஆகும்! பிள்ளை என்று அன்பாய் என் மேல் பிரியம் வைத்து, மைந்தன்இவன் என்று என் மேலும் உன் அடியவர்கள் மேலும் மனம் மகிழ்ந்து அருளி, நீயே தஞ்சம் என்று உன்அடியவர்கள் தழைத்து வாழ அருள் செய்வாய்!
பிழைகள் செய்பவர் ஒவ்வொருவரும் ஒரு சாக்கு வைத்திருப்பார்கள். உதாரணமாக தொடர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர், தான் எதோ ஒரு காரணத்தால் தான் இந்த பழக்கத்தில் விழுந்ததாக சொல்லி கொண்டு தன் செயல் ஏதுமில்லை எல்லாம் விதி என்று பழியை எங்காவது போடுவார்.
இது பிழை செய்பவரின் அடங்காத ஆணவத்தை காட்டுகிறது. ஆனால் உண்மையில் "விதி" அதன் பின்னர் தான் தன் வேலையை காட்ட ஆரம்பிக்கும்.
"சிரித்துக்கொண்டே தவறு செய்யும் யாரும்
அழுது கொண்டே தண்டனை பெற நேரும்"
தவறு செய்வபர் எத்தனையோ விதமாக இருக்கலாம். ஆனால் உடன் ஆணவம் இருந்து விட்டால் தவறை தவறியும் கூட ஒப்பு கொள்ள மாட்டார்.
பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் செய்தியை பாருங்கள்:
ஆதாமும் ஏவாளும் தேவனுடைய கட்டளையை மீறினார்கள். தேவ மகிமையை இழந்தார்கள். தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளிந்து கொண்டார்கள். பாவம் தேவனையோ மற்றவர்களையோ நாம் அணுக முடியாதபடிக்கு அவமானத்தை கொண்டு வந்து நம்மை மற்றவர்களை விட்டு ஒளிந்து கொள்ளும் படியான சூழ்நிலையை உண்டாக்குகிறது. தேவன் அங்கே வந்தார். ஆதாமிடத்தில் விசாரித்தார். ஆனால் ஆதாமோ தேவன் மீதும் ஏவாள் மீதும் பழி போட்டார். தேவன் ஏவாளை விசாரித்த போது அவள் சர்ப்பத்தின் மீது பழி போட்டாள். இருவருக்கும் பாவத்தை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. மாறாக சாக்கு போக்குகளை சொல்லி தங்களை சரியானவர்கள் போல காண்பிக்க முயர்ச்சித்தாகள். தேவன் அவர்களுடைய வார்த்தைகளை ஏற்கவில்லை. கடுமையான தண்டனையை பெற்று இன்றளவும் மனிதன் ஒரு ஜாண் வயிற்றிர்க்காக அயராமல் உழைத்து கொண்டே இருக்கிறான். அவனுக்கு இளைப்பாறுதல் இல்லாமல் போயிற்று. இன்றளவும் ஸ்திரீகளும் வேதனையோடேபிள்ளை பெறுகிறார்கள்.
ஆதாம் ஏவாளின் "நொண்டிசாக்கு" மனித குலத்திற்கு சாபத்தை கொண்டு வந்தது.
"பாவத்தை சுட்டிக்காண்பிக்கும் பொழுது தாழ்த்தினால் ஜீவன் தப்பும் ஆனால் தண்டனை உண்டு."
"சுட்டிக்காண்பிக்காமலேயே உணர்வடைந்து அறிக்கை செய்பவர்களுக்கு மன்னிப்பும் உண்டு ஆசிர்வாதமும் உண்டு."
-பரிசுத்த வேதாகமம்
மனிதர்களை ஆட்டுவிக்கும் கிரகங்களில் சனி , ராகு , செவ்வாய் ,கேது இவர்களுக்கு பெரும் பங்கு ஒருவரை தவறு செய்விப்பதில் உண்டு. இவர்கள் பார்வை , இடம் சம்மந்தம் பெற்றால் ஜாதகரது வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கக்கூடும்.
ஏனெனில் சனியை போல ராகு, செவ்வாயை போல கேது பலன் தருவார் என்பார்கள். ஆனால் இவர்கள் மனிதர்களை அவரவர் வினைப்பயன் போல் ஆட்டுவித்து இறுதியில் ஒரு கால கட்டத்தில் பாடம் புகட்டி புத்தியை தருவார்கள்.
கடந்த ஒரு வருடமாக சனியும் , ராகுவும் துலாமில் இணைந்து இருந்ததன் பயனாக சில பல பேர் சொல்லொணா துயரை அனுபவித்தார்கள். இன்று முதல் அவர்களுடன் செவ்வாயும் சேர்ந்து விட்டார். இன்றைய கிரக நிலைகளில் இவர்கள் மூவரும் சேர்ந்து காணப்படுகிறார்கள். ஒரு ஆறுதலாக "துலாம்" ராசி கட்டத்தில் மூவரும் சற்று அதிகமான பாகை வித்தியாசத்தில் காணப்படுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த ராசி எந்த வீடாக வருகிறதோ அந்தந்த வீட்டிற்கு ஏற்றார் போல் அட்சர சுத்தமாக பலன் கிடைக்கும்.
நம்பிக்கை உள்ளவர்கள் விழித்து கொள்ளுங்கள். சநீஸ்வரனையும், சண்முகனையும் ஆராதியுங்கள்.
பின்வரும் வரிகளை இடைவிடாது தியானியுங்கள் :
"தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயார் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவா பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே"
"தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயார் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவா பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே"
- அபிராமி அந்தாதி
கொங்கிவர் பூங்குழலாள் (பாடல் 75)
முதல் வார்த்தையில் பாராட்டிவிட்டு இரண்டாவது வார்த்தையில் சபிப்பதைப் போல் பாடியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் பாடலைப் பாருங்கள். உண்மையில் அந்த சாபமும் வாழ்த்து தான் என்பது கொஞ்சம் நெருங்கிப் பொருளைப் பார்த்தால் புரிகிறது.
தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே
தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் - பிறப்பிறப்பில்லாத அன்னையின் உலகத்தில் கற்பக மரத்தின் நிழலில் வாழுவார்கள்
தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே
தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் - பிறப்பிறப்பில்லாத அன்னையின் உலகத்தில் கற்பக மரத்தின் நிழலில் வாழுவார்கள்
தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை - குற்றம் நிறைந்த பிறவிகள் இன்றியும் பிறவிகள் இல்லாததால் பெற்றெடுக்கும் தாயர் இன்றியும் மண்ணில் மங்கிப் போவாரக்ள் (மீண்டும் பிறக்க மாட்டார்கள்)
மால் வரையும் - மலைக்க வைக்கும் பெரிய மலைகளையும்
பொங்கு உவர் ஆழியும் - அலைகளால் பொங்கும் உவர்ப்புச் சுவை கூடிய கடல்களையும்
ஈரேழ் புவனமும் - பதினான்கு உலகங்களையும்
பூத்த உந்திக் - தன் திருவயிற்றினில் பெற்ற உலக அன்னையாம்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே - தேன் சொரியும் பூக்களை அணிந்த கூந்தலையுடைய அபிராமி அன்னையின் திருமேனியைத் தொழுதவர்களே.
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் தங்குவரே என்று நிறைய இந்தப் பாடல் தங்குவர் என்று தொடங்கியது. இந்தப் பாடல் குறித்தவரே என்று நிறைய அடுத்தப் பாடல் குறித்தேன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.
எதுகை: தங்குவர் - மங்குவர் - பொங்குவர் - கொங்கிவர்
மோனை: தங்குவர் - தாருவின் - தாயர், மங்குவர் - மண்ணில் - மால்வரையும், பொங்குவர் - புவனமும் - பூத்த, கொங்கிவர் - குழலாள் - குறித்தவரே.
நன்றி :
http://abiramibhattar.blogspot.in/search?updated-max=2008-03-09T18:31:00-05:00&max-results=7&start=14&by-date=false
No comments:
Post a Comment