photo

photo
Venkatesh.A.S

Wednesday, 27 November 2013

Saturation Sustainability-2 (திகட்டலை தாங்குவது-2)



"இலக்கணம் மாறுதோ ? இலக்கியம் ஆனதோ ?"

"நிழல் நிஜமாகிறது" எனும் திரைப்படத்தில் வரும் ஒரு அருமையான பாடலின் ஆரம்ப வரிகள் இவைகள். 

வாழ்கையில் எல்லாவற்றுக்கும் என்று ஒரு இலக்கணம் இருக்கும். ஆனால் இந்த இலக்கணமே பிழையாகும் போது தான் பிரச்சினைகள் உருவாகின்றன. பிழைகள் எதனால் ஏற்படுகின்றன ?

எதையும் சரியாக புரிந்து கொள்ளாததால் !

சரியாக புரிந்து கொள்ளும் நோக்கம் இல்லாததால் !

தான் செய்வதே சரி என்ற மமதையில் புதிய (தவறான) இலக்கணம் படைக்க நினைப்பதால் ! 

ஒரு கதையை பார்ப்போம் ......

*******
நான் எங்க ஊருல இருக்கும் மருத்துவமனைக்கு எனக்கு தெரிஞ்ச டாக்டரை பார்க்க போய்இருந்தேன். அங்க 35 வயசு மதிக்கத்தக்க பெண் ஒருத்தங்க தன் பிள்ளைகளோட டாக்டரை பார்க்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ரொம்ப கலகலப்பா சிரிச்சு பேசிக்கிட்டு எதோ பிக்னிக் வந்த மாதிரி சந்தோஷமா இருந்தாங்க. அவங்களை பார்க்கும்போது யாருக்கும் எந்த வியாதியும் இருக்குற மாதிரி தெரியலை. எனக்கு என்னன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருந்துச்சு. 
அவங்க போனபின் டாக்டர்கிட்ட அவங்க யாருஎன்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அவங்களை பத்தி தெரிஞ்சுக்கிட்டதால் இப்படியும் ஒரு  உறவாஅந்த உறவால யாருக்கு என்ன லாபம்ன்னு புரியலை. அதேப்போல அந்த உறவு சரியாதவறாஇதன் முடிவு என்னன்னு புரியாம குழம்பியிருக்கேன் .
இப்போ டாக்டர் சொன்னது....
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்துக்கு  காயத்திரி  என்ற 30 வயதான பெண் தற்கொலைக்கு முயன்றுஉறவினர்களினால் அழைத்து வரப்பட்டு உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கும்போது இங்க அழைச்சுக்கிட்டு வந்தாங்க. எப்படியோ போராடி அவங்களை காப்பாத்திட்டோம்.
அவங்க கணவர்கிட்ட பேசும்போது என்ன காரணம்ன்னு விசாரிச்சேன். 

தெரியலை சார். ஏன் இப்படி செஞ்சுகிட்டா-னு புரியலை. 

சரி உங்களுக்குள் உறவு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ?

உண்மையை சொல்லனும்ன்னா எங்களுக்குள் உறவு அந்தளவுக்கு சரியில்லை சார். என்னை கிட்டவே நெருங்க விட மாட்டேங்குறா. அப்படியே இருந்தாலும் ஏதொ மரக்கட்டை போல இருக்கா. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை சார். நீங்க வேணும்ன்னா என்னன்னு கேட்டு சொல்லுங்க சார்ன்னு  சொன்னார்.

இதே பதிலைத்தான் அந்த பொண்ணோட மாமனார், மாமியார், அப்பா அம்மா எல்லாரும் சொன்னாங்க. காயத்திரிக்கு 10வயசுல ஒரு பொண்ணும், 8 வயசுல ஒரு பையனும் இருந்தாங்க. குழந்தைகள் காயத்திரி ஹாஸ்பிட்டலில் இருக்கும் வரை அவங்களை விட்டு நகரல. அந்த பாசமான குழந்தைகளை விட்டுட்டு சாகனும்ன்னு அந்த பொண்ணு எப்படி துணிஞ்சுதுன்னு எனக்கு குழப்பமா இருந்துச்சு. அதனால் அந்த பொண்ணுக்கு கவுன்சிலிங்க் குடுக்க தீர்மானிச்சேன்.

கவுன்சிலிங்க் குடுக்க ஆரம்பிச்சேன். எது கேட்டாலும் அழுகை மட்டுமே பதில். 

”கணவர் கார்ப்பரேட் கம்பெனில கைநிறைய சம்பளம் வாங்குறார். நீங்க பிறந்த வீடும் வசதிக்கும் அன்புக்கும் குறைச்சலில்லாத வீடு. அப்புறம் ஏன் தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க”

அப்பவும் பதிலில்ல. அப்பதான் அவங்க பொண்ணு மாடிப்படிக்கட்டுகளில் இறங்கும்போது கால் தவறி விழுந்து எங்க ஆஸ்பிட்டலயே சேர்த்தாங்க. அப்போ காயத்திரிதான் தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கிட்டங்க. அப்படி பார்த்துக்கிட்டாலும் சில சமயம் தனிமைல அவங்க அழறதை நான் கவனிச்சேன். அப்போதான் எனக்கு ஒண்ணு தோணுச்சு.

காயத்திரியை தனியா அழைச்சு

“நீங்க தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க. நீங்க ஒருவேளை செத்து போய் இருந்தால் இப்போ உங்க பொண்ணை, மகனை  யார் பார்த்துக்குவாங்க. அப்படியே யாராவது பார்த்துக்கிட்டாலும் தாய் போல வருமா?”ன்னு

அவங்க தாய்மை உணர்ச்சியை தூண்டிவிட்டேன். அழுதுக்கிட்டே தன் கதையை சொன்னாங்க.

காயத்ரியின் ஸ்டேட்மெண்ட் 

என் கணவர் சுந்தரத்தை கல்யாணம் பண்ணிக்கும்பொது எந்தவித எதிர்பார்ப்புமில்லாமதான் கட்டிக்கிட்டேன். அவர் முன்னமே வீட்டுக்கு தெரியாம ஒரு பொண்ணு கூட குடித்தனம் பண்ற விஷயம் எனக்கு தெரிய வந்துச்சு. மத்த பெண்களுடன் தொடர்பு இருப்பதும் எனக்கு தெரிய வந்துச்சு. அதனால் அப்பா அம்மா கவுரத்துக்காக ஒட்டாமதான் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். எனக்கு கருத்தரிக்கலை. அதனால, அவரோட மூத்த சம்சாரம் ஒரு பெண்குழந்தையை பெத்து போட்டுட்டு செத்துட்டாங்க. 

அந்த குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுமில்லாம அவருக்கு  சந்தேகம், நான் சந்தோஷமா இருக்குறது பொறுக்காத சாடிஸ்ட் குணம், வெளில எங்கயும் கூட்டி போகாம அடைஞ்சு கிடந்தேன். நான் தத்தெடுத்துக்கிட்ட என் பொண்ணுதான் எனக்கு மிகப்பெரிய ஆறுதல் அவ அன்புலதான் எல்லத்தையும் சகிச்சுக்கிட்டு வாழ பழகிட்டேன்.

எனக்கும் ஒரு பையன் பிறந்தான். அப்போதான் எனக்கு வேலை கிடைச்சது. முதல் நாள் ஜாயின் பண்ணும்போது எல்லார்க்கிட்டயும் பேசுவதுப் போல்தான் தமிழரசன்கிட்டயும் பேச ஆரம்பிச்சேன். மெல்ல மெல்ல எங்களுக்குள் பழக்கம் அதிகமாகி அவங்கவீட்டுக்கும் நானும் எங்க விட்டுக்கும் போய் வரும் அளவுக்கு ஃப்ரெண்ட்சானோம். அவங்கம்மவுக்கு நான் இல்லாம எந்த வேலையும் ஓடாது.

என் கதையை கேட்டவர் எனக்காக பரிதாபப்படுவார். என் புருசனோட குணத்தை கண்டு என்கிட்ட யாருமே ஃப்ரெண்டா இல்லாதப்போ தமிழோட அன்பும் ஆதரவும் எனக்கு இதமா இருந்துச்சு.எங்களுக்குள்ள உடல் ரீதியா எந்த தப்பும் நடக்கலை, ஆனாலும் மனசளவில் நாங்க காதலர்கள் மாதிரி ஆகிட்டோம்.

அப்புறம் கணவன் மனைவிக்குள் கூட அவ்வளவு அன்னியோன்யம் இருக்குமான்னு தெரியலை. அவ்வளவு பாசமா இருந்தோம். நான் தமிழை முழுசா நம்பினேன். அவன் எனக்கே எனக்குன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன்அவங்க வீட்டுல அவனுக்கு பெண் பர்க்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு வருசமா பெண் பார்த்தாங்க. பார்க்கும் பெண்ணையெல்லாம் எதேதோ காரணம் சொல்லி வேண்டாம்னுட்டான். அவன் என்னை மனசுல நினைச்சுக்கிட்டுதான் இப்படியெல்லாம் மறுக்குறான்னு நினைச்சுக்கிட்டேன்..  

அப்போதான் நான்  கல்யாணம் பண்ணிக்க போறேன்னு குண்டை தூக்கி போட்டான். ஏண்டா நான் இல்லாம நீயிருப்பியான்னுலாம் கேட்டேன். ஏதேதோ காரணம் சொல்லி என்னை சமாதானம் படுத்தி  பெண் பார்க்கவும் என்னை கூட்டி போனான். நான் செலக்ட் பன்ற பெண்ணைதான் கட்டுவேன்னு சொல்லி பரிதாபமா நின்னான். அப்புறம் அவன் கல்யாணத்துக்கு சேலை எடுத்து குடுத்தது முதற்கொண்டு ஆரத்தி தட்டு வரை ரெடி பண்ணி கொடுத்த்து வரை நான் தான்.

எல்லாம் செஞ்சும் எனக்கு அவனை விட்டு தர மனசில்லை. அதனால, நான் திருமணத்துக்கு முதல் நாள் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன். எப்படியாவது என் பிள்ளைகளுக்காக என் மனசை மாத்துங்க சார்..

 டாக்டர் சொல்றார்.. 

என்ன சொல்வதுன்னே தெரியலை.. அவன் முகத்திரையை கிழிச்சாதான் இந்த பொண்ணுக்கு அவன்மேல் இருக்கும் மயக்கம் தெளியும்னு 


”உங்க நல்வாழ்வுக்காய் அவன் கவுன்சிலிங்க் வருவானா?”ன்னு கேட்டேன்

ஏன்ன, இதுப்போல இல்லீகல் காண்டாக்ட்ல இருக்குறவங்க தன் முகத்தை காட்ட மறுப்பாங்க. அதுலயும் அவன் புதுசா கல்யாணம் ஆனவன் தன் எதிர்காலம் பாழாயிடப்போகுதுன்னு அவன் வரமாட்டான். அப்பவே அவன் சுயரூபம் பாதி தெரிஞ்சு போகும்ன்னு பிளான் பண்ணி வரும் செவ்வாய் கிழமை அவனை வரச் சொல்லும்மான்னு சொன்னேன். அவன் வரமாட்டான்ற நம்பிக்கையில்.....,
செவ்வாய் கிழமை..., 

தமிழரசன் ஸ்டெட்மெண்ட்
ஹலோ சார் நான் தான் காயத்திரி சொன்ன தமிழ், அவளோட கவுன்சிலிங்க்காக  என்னை பார்க்கனும்ன்னு சொன்னதாய் சொன்னாள். அதான் வந்தேன். சொல்லுங்க சார், என்னால் என்ன ஹெல்ப் பண்ணனும்ன்னு சொல்லுங்க. காயத்திரிக்காக எது வேண்டுமானாலும் செய்வேன்


சார், அவங்களை முதன்முதலில் எங்க ஆபீசுலதான் பார்த்தேன் சார். அவங்களாவே என்கிட்ட வந்து அறிமுகப்படுத்திக்கிட்டு லொடலொடன்னு பேச ஆரம்பிச்சாங்க. அது மாதிரி பேசுறவங்களை எனக்கு பிடிக்காது. அதனால  எனக்கு அவங்களை பிடிக்காம போச்சு. அப்புறம், அவங்க மத்தவங்க கிட்ட பழகும் விதம் உதவும் குணம் கண்டு எனக்கு அவங்களை பிடிச்சு போச்சு. அவங்க குழந்தைகள் அவங்களோடது  இல்லைன்னும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்ன்னும், அவங்க புருசன்கிட்ட அவங்க படும் பாடு அம்மாக்கிட சொன்னதை கேட்டு அவங்க மேல் பரிதாபம் வந்துச்சு. அந்த பரிதாபம் மெல்ல மெல்ல அன்பா மாறிடுச்சு.

ரெண்டு பேர் வீடும் ஒரே ஏரியா என்பதால் வீட்டுக்கு  ஒண்ணாவே போவோம். வருவோம். ஆபிசுலயும் ஒண்ணாவே சாப்பிடுவோம். அவங்க எல்லார்க்கிட்டயும் சகஜமா பேசுறதால இதை யாரும் தப்பா எடுத்துக்கல. ஆபீஸ் லீவு நாள்ல எங்க வீட்டுலயோ இல்ல அவங்க வீட்டுலயோ ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம். என் அம்மாவுக்கு அவங்க நல்ல ஃப்ரெண்டானாங்க. அவங்க பிள்ளைகள் என்கிட்ட பாசமா ஒட்டிக்கிச்சு.

என் அம்மாவை எவ்வளவு நேசிக்குறேனோ அதே அளவு அவளையும் நேசிச்சேன். அவங்க பிள்ளைங்க மேல ரொம்ப பாசமா இருப்பாங்க.  அதே நேரத்தில் என்னையும் ரொம்ப நேசிக்க ஆரம்பிச்சங்க. என் மேல வெச்ச பாசம் ரொம்ப தீவிரமா மாற ஆகி அவங்க புருசனை தள்ளி வைக்கும் நிலைக்கு வந்துட்டாங்க.

ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா நேசிக்க ஆரம்பிச்சோம். ஒருவர் இல்லாம ஒருத்தர் இருக்க முடியாதுன்ற லெவலுக்கு வந்துட்டோம். காயத்திரிக்கு என் மேல் பொசசிவ்னெஸ் வளர ஆரம்பிசது. யார்கிட்டயாவது ஃப்ரெண்டிலியா பேசினாலும் அவ முகம் மாறுவதை கவனித்தேன். 

அப்போதான் என் வீட்டுல எனக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சாங்க. நிஜமாவே காயத்திரி மனசுல இருந்ததால் எனக்கு எந்த பெண்ணையும் பிடிக்கலை. எல்லாரையும் எதாவது காரணம் சொல்லி  அவாய்ட் பண்ணிட்டேன். அப்புறம்தான் எங்க நிலை புரிய வந்தது. இதே நிலை நீடித்தால் பிள்ளைங்க எதிர்காலம், எங்க ரெண்டு பேர் குடும்ப கவுரவம்லாம் லேட்டாதான் உறைக்க ஆரம்பிச்சது. அவளை என்னோடு கூட்டிக்கிட்டு போறது ஈசி. ஆனால், அவளால் அங்க வந்து பிள்ளைங்க, அவ பெற்றொர்களை பிரிந்தும், என் குடும்பத்தை பிரிந்து நானும் நிம்மதியா வாழ்ந்துட முடியுமா?

இல்லை இதே நிலை நீடித்தால் காய்த்திரியோட எதிர்கால வாழ்க்கை என்னாகும்ன்னு நீண்ட யோசனைக்குப்பின்.., அதிரடியா சில நடவடிக்கைகள் எடுக்கனும்ன்னு முடிவு பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். 
காயத்திரி மனசு என்ன படு படும்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் இதை தவிர எனக்கு வேறு வழி தெரியலை. சார். இப்போ எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இப்பவும் காயத்திரியை நேசிக்கிறேன். எப்பவும் என் தாயை விட என் மனைவியை விட அவளத்தான் நேசிக்குறேன். ஆனால் யதார்த்தம்ன்னு ஒண்ணு இருக்கே. அதனால் என் அன்பை மறைச்சு வெச்சுக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனால், எந்த சூழ்நிலையிலும் காயத்திரியை விட்டு குடுக்க மாட்டேன் நல்ல நண்பனாக என்று சொல்லி முடித்தான்.

காயத்திரிக்கு தீவிர கவுன்சிலிங்க் குடுத்தபின் இப்போ அவங்க தமிழ் மேல் கொண்ட காதல் மறைஞ்சு தூய்மையான நட்பு மட்டுமே இருக்கு. ஆனால், ஒருவருக்காக ஒருவர் வாழும் அன்பும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்தும், ஒருவர் இன்ப துன்பங்களில் அடுத்தவர் பங்கேற்கும் பக்குவமும் வந்து சேர்ந்துடுச்சு.

காயத்திரி வீட்டு நல்லது கெட்டதுகளில் தமிழ் கலந்துக்குறதும் தமிழோட மனைவி சீமந்தத்துக்கு எந்த வித பொறாமையும் இல்லாம ஒரு தோழியா போய் எல்லா வேலையும் முன் நின்று நடத்தி குடுக்க காயத்திரியால் முடியுதுன்னு  இருக்குன்னு சொல்லி முடிச்சார் டாக்டர்.. 

உறவுகள் விசித்திரமானவை.. ஏன் டாக்டர்? தாம்பத்ய வாழ்க்கைல எதனால சலிப்பு வருது.. ? எதனால நிறைய கள்லக்காதல்கள் ஏற்படுது?

மனவியல் நிபுணர்கள் கூற்றுப்படி  80% திருமணங்கள்ல மேரேஜ் ஆகி 4 வருடங்களில் துணை சலித்து விடுமாம்.. சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு துணை தேட இரு பாலினரும் முயல்வாங்களாம்.. 

இதை தடுக்க என்ன வழி டாக்டர்? 

வருடம் இரு முறை மெக்கானிக்கல் லைஃப்ல இருந்து விடு பட்டு தம்பதிகள் டூர் போகனும் ,மன்ம் விட்டு பேசனும்,, ரொமான்ஸ் என்பது லவ் பண்றப்ப மட்டும் இல்ல மேரேஜ்க்கு பிறகும் அது இருக்கு  என்பதை உணரனும்.. 

அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.. 

சில வாரங்கள் கழித்து அவர் வீட்டுக்கு வேறொரு வேலையாக போனேன்.. வீட்டில் அவர் இல்லை.. அவர் மனைவி மட்டும் தான் இருந்தார்.. 

டாக்டர் இல்லையா மேடம்?

ஹூம்.. எங்கே ? எப்போ பாரு.. டியூட்டி ஹாஸ்பிடல்னு அலைஞ்சுட்டே இருக்காரு.. குடும்பத்தை கவனிக்கறதே இல்லை

மேடம், உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?

நான்கு வருடம் தான், ஏன் கேக்கிறீங்க?

சும்மாதான் !                                             

                                  **********

உறவுகள் ஏன் வெறுக்க (திகட்ட) ஆரம்பிக்கின்றன ? இதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம் . 
அடிப்படையில் ஏதேனும் மனக்குறைகள் இருந்தால் இந்த போக்கு ஏற்படலாம். ஆனால் 


மனக்குறை எதற்க்காக என்று பார்க்க வேண்டும். மேலும் அது உண்மையான குறையா 



என்பதை ஆராய வேண்டும் . பொதுவாக ஆசைகள் நிறைவேறாமல் போகும் போது தான் 



நிறைய பேருக்கு சலிப்பு ஏற்படும். எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளிக்கும் போதும் இப்படி 



ஏற்படும். உண்மையில் எல்லா ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் ஒரு வரைமுறைக்குள் 



இருக்க வேண்டும். அதுவும் தகுதிக்கேற்ற ஆசை / எதிர்பார்ப்பு இருந்தால் நல்லது . 



உதாரணமாக இன்றைய சூழலில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் ஒரு 



உடுப்பி ஓட்டலில் காபி சாப்பிட நினைத்தால் அது நியாயமான ஆசை !



உயர்தர சைவ உணவகத்தில் சாப்பிட நினைத்தால் அது பேராசை ! 



நட்சத்திர ஓட்டலில் சாப்பிட நினைத்தால் அது கட்டுக்கடங்கா ஆசை ! 



(இந்த நிலைகள் அவர் இருக்கும் வீடு , குடும்ப சூழ்நிலை , வங்கி கையிருப்பு , தனிப்பட்ட 



சொத்து , வேறுவழிகளில் வருமானம் இவைகள் பொறுத்து ஆசைகளின் தரம் மாறுபடும்.)



எப்படிப்பட்ட ஆசையானாலும் தர்மத்தை சார்ந்த ஆசையாக இருந்தால் மிகவும் நல்லது. 



உதாரணமாக மேலே குறிப்பிட்டவர் தனி மனிதர் என்றால் அவரது ஆசை தர்மத்தை 



சார்ந்ததாக இருக்காது. அதுவே மணமானவர் என்றால் எல்லா ஆசைகளிலும் அவரது 



துணைக்கும் பங்களிக்க வேண்டும். அதுவும் குழந்தைகள் இருந்து விட்டால் இன்னும் ஒரு 

  
படி மேலே செல்ல வேண்டும். அதாவது எல்லாவற்றிலும் குடும்ப உறுப்பினர் எல்லோரும் 


நலம் பெற வேண்டும். அதுதான் உறுதியான பாசத்திற்கு வழி வகுக்கும். எங்கு 



உண்மையான அன்பு ,பாசம் உள்ளதோ அதுவும் எந்த அளவிற்கு உறுதியாக உள்ளதோ 



அந்த அளவிற்கு தீய செயல்கள் அணுகாது .  

 

   
"மணியோசை என்ன ? இடியோசை என்ன ?
எதுவந்தபோதும் நீ கேட்டதில்லை. 
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் 
நிஜமாக வந்து எனை காக்க கண்டேன். 
நீ எது ? நான் எது ? 
ஏனிந்த சொந்தம், பூர்வஜென்ம பந்தம்."



-கட்டுரையின் ஆரம்பத்தில் காணப்படும் பாடலின் "சரண வரிகள்" இவை. 
"நிழல் நிஜமாகிறது" திரைப்படத்தில் இறுதி கட்டத்தில் வரும் காட்சியில் ஒரு பெண் பாத்திரம் (ஷோபா) தான் விரும்புகிறவரையும், தன்னை விரும்புகிறவரையும் எப்படி புரிந்து கொள்கிறாள் என்பது தான் முக்கிய கதைக் கரு. 
தான் விரும்பியவர் பகட்டானவர், கண்ணியமானவர், செல்வந்தர் என்கிற
நிலையில் அவரிடம் தன்னை இழக்க அதன் பின்னர் அவர் போக்கையும் அந்த நேரத்தில் தன்னை விரும்பியவர் (செவிடன்) போக்கையும் உணர்கிற போது அவள் மனதில் எழும் வரிகளாக இந்த பாடல் அமைந்துள்ளது.  

இப்படி யாருக்கெல்லாம் நடக்கும்? ஏன் நடக்கும்? 

(நேரமின்மையால் தற்பொழுது எழுத இயலவில்லை, தொடர்ந்து காணுங்கள், இதே பக்கத்தை. சிரமத்திற்கு மன்னிக்கவும்.) 





***பகுதி***




Friday, 22 November 2013

Jumanji Life (ஜுமாஞ்சி வாழ்க்கை)


நித்ய கண்டம் பூர்ணாயுசு 


கடந்த பல வருடங்களுக்கு (20௦௦ வருடம்)முன்னர் நடந்த நிகழ்ச்சி இது :

நான் அப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை நிமித்தமாக குன்னூர் சென்றிருந்தேன். சென்னையிலிருந்து கோவை சென்று பின்னர் அங்கிருந்து வேறு ஒரு நண்பர் ஒருவருடன் அங்கு சென்று இறங்கியபோது இரவு மணி 10 இருக்கும் என நினைக்கிறேன். அது ஏற்கனவே குளிர் பிரதேசமாக இருந்தாலும் டிசம்பர் மாதம் வேறு சேர்ந்து குளிர் வாட்டியது. வெப்பநிலை 7 டிகிரி - 1௦ டிகிரி இருக்கும் என நினைக்கிறேன். நண்பருக்கு தெரிந்த ஒரு தங்கும் விடுதியை நோக்கி நானும் அவரும் சென்று கொண்டிருந்தோம். ஆள் அரவமே இல்லாத ஒரு சாலை அங்கங்கு லேசான வெளிச்சம் எங்கும் அமைதி இடையிடையே வண்டுகள், தவளைகளின் ரீங்காரங்கள். மிகவும் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு அனுபவத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில் தொலைவில் தரையிலிருந்து சில உயரங்களில் வரிசையாக அசையும் உருவங்கள் தெரிந்தன .




என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் , அந்த கடும் குளிரிலும் சிறிது வியர்த்தது. காரணம் அது ஒரு நாய்களின் கூட்டம்!

சுற்றிலும் யாருமே இல்லாத நிலையில் நாங்கள் இருவர் மட்டும், எதிரே அந்த நாய்களின் கூட்டம் (குறைந்தது பத்து இருக்கலாம் ). என்ன செய்யலாம் என்று யோசிக்கவோ அல்லது நம்மை காத்துக்கொள்ள ஏதேனும் ஒரு ஆயுதம் (கற்களோ , மரக்குச்சியோ ஏதேனும் ) இருக்கிறதா என்று பார்க்க  தோன்றினாலும் அதற்கும் கால அவகாசம் இல்லை. சரி வருவது வரட்டும் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று மனதை நன்றாக திடப்படுத்திக்கொண்டு மேலே நடந்தோம். "கொர் கொர்" என்னும் கோரசான நாய்களின் முனகல் சத்தம் இப்பொழுது நன்றாக  கேட்க ஆரம்பித்தது. குலை நடுங்க வைக்கும் இந்த சத்தம் நம் மன திடத்தை சோதித்தது. மேற்கொண்டு செய்ய நம்மால் எதுவும் இல்லை , ஓடுவதை தவிர. அப்படி ஓடினால் இன்னும் நிலைமை மோசமாகும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.  இப்பொழுது நமக்கும் அவைகளுக்கும் குறைந்தது பத்து அடி தொலைவு இருக்கும். அப்பொழுது..................

திடீரென்று ஒரு சத்தம் (வேகமாக ஒரு கல் கீழே இலை சருகுகளின் மீது பட்டு விழுந்ததை போன்று) அவ்வளவு தான், அந்த நாய்கள் கூட்டம் இரண்டு பிரிவுகளாக பிரிந்து எங்கள் பக்கவாட்டில் இரண்டு திசைகளாக தலை தெறிக்க  ஓடிச்சென்று மறைந்தன. பின்னர் எந்த பயமும் இன்றி நாங்கள் செல்ல வேண்டிய இடம் சென்றோம்.

உலகில் இது போன்ற அனுபவங்கள் எத்தனையோ பேருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

இவைகள் ஏன் நடக்கின்றன ?
எதற்கு நடக்கின்றன ?
எப்படி நடக்கின்றன ?
எப்பொழுது நடக்கின்றன ?
எவ்வாறு நடக்கின்றன ?

இப்படிப்பட்ட / இதற்கு ஒத்த நிகழ்வுகள் எவ்வளவோ உள்ளன. ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் என்று சில நேரங்கள் , நீடிக்கும்  அவகாசங்கள் என்று அப்பட்டமாக உள்ளன.

விரிவாக பாப்போம்.......அடுத்த சில பதிவுகளில்.......

Saturday, 9 November 2013

Life is a Song - Sing flawlessly


Take Care of Settings! 


Settings are important things in life. Each & every gadgets in our life got their own settings which is basically factory setting as default. We have to make our settings as per our thoughts but there should be priorities first. For example, when we buy a brand new mobile phone we may find some difficulties like Hearing volume, Ringtone volume, Screen resolution, Call settings-waiting, divert, barring etc. After coming to know these we may change as per our decision. But we should have priorities according to the importance such as Volumes, Screen resolution, Call waiting/diverting facilities etc. Because being it is a communication device we must give priorities in the same manner. Volumes can be adjusted according to the hearing capability of the user. Similarly Screen brightness can be set as per vision clarity & call waiting can be set as per our principles of attention. 

Other settings like Wall paper, Screen saver, Camera quality, Date , Time etc. are secondary options which can be treated accordingly. 

The essence of this article is comparing life with a song & it should be perfect. We should know how to sing flawlessly as per the meaning basement is the important thing in the life.  



*****

Can I learn to sing flawlessly?

If music is your life and you're so passionate about IT, don't be greedy about being famous. 

Famous people don't plan to be famous. They just continue what they really love and they try 

their best to be one of the bests in their career. Their passion helps them to go through hard 

situations of their career. So the goal is singing and enjoy your life and the goal should not to 

be famous. Taking vocal classes would be the best choice. They will teach you how to use 

different muscles to sing different notes, breathing exercises, practices for voice flexibility, 

music theory and they will show you the way to end up with a good goal which is being a good 

singer. The best way to reach your goals is to go through the right way which is a 

vocal coach. 

*****

A philosophy professor stood before his class with some items on the table in front of him. When the class began, wordlessly he picked up a very large and empty mayonnaise jar and proceeded to fill it with rocks, about 2 inches in diameter.
He then asked the students if the jar was full. They agreed that it was.
So the professor then picked up a box of pebbles and poured them into the jar. He shook the jar lightly. The pebbles, of course, rolled into the open areas between the rocks.
He then asked the students again if the jar was full. They agreed it was.
The professor picked up a box of sand and poured it into the jar. Of course, the sand filled up the remaining open areas of the jar.
He then asked once more if the jar was full. The students responded with a unanimous “Yes.”
“Now,” said the professor, “I want you to recognize that this jar represents your life. The rocks are the important things – your family, your partner, your health, your children – things that if everything else was lost and only they remained, your life would still be full. The pebbles are the other things that matter – like your job, your house, your car. The sand is everything else, the small stuff.”
“If you put the sand into the jar first,” he continued, “there is no room for the pebbles or the rocks. The same goes for your life. If you spend all your time and energy on the small stuff, you will never have room for the things that are important to you. Pay attention to the things that are critical to your happiness. Play with your children. Take your partner out dancing. There will always be time to go to work, clean the house, give a dinner party, or fix the disposal.”
“Take care of the rocks first – the things that really matter. Set your priorities. The rest is just sand.”

*******

The settings of human life is set as per every ones  horoscope as default. 

The family nature is based on 2nd house, 2nd house lord, Planets posited in 2nd house, Planets aspect on 2nd house.

The life partner character is based on 7th house, 7th house lord, Venus, Planets posited in 7th house, Planets aspect on 7th house, Planets accompanied with Venus.

The health is based on 6th house, 6th house lord, Sun,Planets posited in 6th house, Planets aspect on 6th house, Planets accompanied with Sun.

The children is based on 5th house, 5th house lord, Jupiter, Planets posited in 5th house, Planets aspect on 5th house, planets accompanied with Jupiter.

We can make changes some settings as per experts guidance. At the same time we NEVER change some settings as the software does not permit which is equivalent to destiny. 

I sincerely welcome the views & suggestions of the readers of the articles as this would be helpful to enhance quality of writings. Also I request, if anybody needs to know anything about any subject to be presented here please feel free to write. Thanks for bearing your valuable time.  
***Part***

Friday, 8 November 2013

Life is a Business - Do it with ETHICS (வாழ்க்கை ஒரு வியாபாரம் - செய்திடுங்கள் நன்னெறியுடன்)


ஐ.எஸ்.ஓ சான்றிதழ் 

இன்றைய நவீன தர உலகில் எல்லாமே ஆதாரத்தின் அடிப்படையில் தான் நம்பப்படுகின்றன. ஆதாரங்கள் தான் வழிமுறைகளாகின்றன. மனிதர்கள் வசிப்பதற்கு அடிப்படை தேவைகளான உண்ண உணவு , உடுத்த உடை, இருக்க இடம் இவைகளை பெறுவதற்கு கூட வாடகை ரசீதாக / ஒப்பந்த பத்திரமாக / விற்பனை பதிவாக / மளிகை பொருள் ரசீதாக / ஹோட்டல் ரசீதாக / ஆயத்த ஆடை ரசீதாக ஆதாரமாக பெறுகின்றோம். 

ஆனால் இவைகள் எல்லாம் தரமானது தானா என்கிற கேள்வி எழும் போது இதற்கென்று மற்றுமோர் ஆதாரம் தேவைப்படுகிறது. அது நம் அரசாங்கத்தால் வழங்கப்படும் B.I.S (I.S.I) முத்திரை / சான்றிதழ் இருக்கும். பெரும்பாலும் இது நுகர் பொருளாக (Consumable) இருக்கும். இதை தவிர்த்து வேறு ஒரு சான்றிதழ் .அது "ISO Certification" எனப்படும் ISO-9001:2008 எனவாகவும் / வேறு விதமாகவும் இருக்கும்.

B .I .S [Bureau of Indian Standards] என்பது தரத்தினை நிர்ணயம் செய்யும் அலகு [Unit] என்றால் , ISO என்பது என்ன ?

BIS என்பது ஒரு பொருள் எவ்வாறு இருக்க வேண்டும் , அதன் திறன் [Efficiency] எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை வரையறுத்து அதனடிப்படையில் எழுதப்பட்ட சோதனை விதிமுறைகள் [Testing Guide Lines] எனலாம்.இது நாட்டிற்கு நாடு அவரவர் சூழலுக்கேற்ற வேறுபடலாம். இந்த சோதனையில் தேர்ச்சி பெறும் போது தான் ஒரு பொருள் BIS குறியீட்டு உள்ள அந்தஸ்த்தை பெறும்.

ISO [International Standards Organisation] என்பது சர்வதேச தர நிர்ணய அமைப்பு என்பதாகும். இது பல்வேறு பிரிவுகளை கொண்டது (கீழே காண்க).  உதாரணமாக ISO 9௦௦௦ என்பதில் தரத்தினை தக்க வைத்துக்கொள்ளும் வழிகளை  காணலாம்.


  • 9000 தர மேலாண்மை
  • ஐஎஸ்ஓ 14000 சுற்றுச்சூழல் மேலாண்மை
  • ஐஎஸ்ஓ 3166 நாடு குறியீடுகள்
  • ஐஎஸ்ஓ 26000 சமூக பொறுப்பு
  • ஐஎஸ்ஓ 50001 ஆற்றல் மேலாண்மை
  • ஐஎஸ்ஓ 31000 இடர் மேலாண்மை
  • ஐஎஸ்ஓ 22000 உணவு பாதுகாப்பு மேலாண்மை
  • ஐஎஸ்ஓ 4217 நாணய குறியீடுகள்
  • ஐஎஸ்ஓ 639 மொழி குறியீடுகள்

  • இவைகள் எல்லாம் ஏன் தேவைப்படுகின்றன?

    தொழில் துறையில் மிகவும் போட்டிகள் (Competition) நிறைந்த இவ்வுலகில் , ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளையும் , வழிமுறைகளையும் பின்பற்றுகின்றனர். ஆனால் ஒவ்வொருவர் வழிகளையும் எப்படி சரியென்று ஒப்புக்கொள்வது ? ஒவ்வொருவர் வழிமுறைகளும் எப்படி வெற்றியை நோக்கி செல்கிறது என்று நம்புவது ?

    அதற்காகத்தான் திறமை / அனுபவம் வாய்ந்த வல்லுநர் குழுவால் அமைக்கப்பட்டது தான் பொதுவான இந்த (ISO) வழிமுறைகள். இவைகள் ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும். எவைகள் நேர்த்தியான வழிகள் என்பதை கோடிட்டு (Clause) காண்பிக்க பட்டிருக்கும். இவைகளை கையாள ஒரு ஆலோசகர் (Consultant) வழிகாட்டுதலின் பேரில், அவர் / அவர் குழு நடைமுறைபடுத்தும் கோப்புகளை (Files) பராமரிப்பதன் (Maintain) மூலம் ஒரு உள்தணிக்கை (Internal Audit) மற்றும் வெளி தணிக்கை (External Audit) நடந்த பின்னர் அதன் முடிவின் அடிப்படையில் வழங்கப்படுவது தான் இந்த "ISO" சான்றிதழ். இது ஒவ்வொரு வருடமும் புதுபிக்க (Renewal) படும். வழிகாட்டுதலின் பேரில் ஒரு நிறுவனம் சரியாக செயல்படவில்லை என்று நிரூபிக்க பட்டு விட்டால் இந்த சான்றிதழ் ரத்து (cancel) செய்யப்படும்.  இந்த சான்றிதழை தரும் நிறுவனங்கள் தங்கள் தணிக்கை அதிகாரிகள் (Auditors) கொண்டு ஒரு நிறுவனத்தை சரிபார்த்து அதற்க்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளும்.

    துரதிர்ஷ்டவசமாக எல்லாவற்றையும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே ஒப்புக்கொள்ளும் (வேறு வழியில்லாமல் / வழி தெரியாமல்) தற்போதைய உலகில் இந்த சான்றிதழ் நமக்கு (தொழிலில்) இருந்தால் மதிப்பு சற்று அதிகம். ஏனெனில் நாம் தொழிலில் ஒரு நேர்த்தியான வழிகளை கையாள்கிறோம் என்று மற்றவரால் நம்பப்படுவோம். 

    நான் பல வருடங்களுக்கு முன்பு இந்த சான்றிதழை பெற விரும்பிய ஒரு தொழிலதிபரிடம் கேட்டேன் "இது இருப்பதால் என்ன பயன் ? " என்று. அதற்க்கு அவர் சொன்னார் " நான் அடிக்கடி தொழில் நிமித்தமாக வெளியூர் சென்று விடுவதால் அலுவலகத்தில் உள்ளோர் எப்படி முடிவெடுப்பது / எப்படி செயல்படுவது என்று குழம்புகின்றனர். ஆனால் இந்த ISO வழிகாட்டுதலால் ஒரு நிறுவனம் தாமாகவே செயல்படும். அதனால் எனக்கு நிம்மதி " என்றார். இன்று அவர் 10 வருடங்களாக இந்த சான்றிதழை தக்க வைத்து கொண்டுள்ளார். ஆனால் உண்மையில் அந்த நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பது வேறு விஷயம்.

    தொழிலுக்கும் , தொழில் நிறுவனத்திற்கும் வழி காட்டுதல் (ISO Guide lines) இருப்பது போல மனிதர்களுக்கு என்ன உள்ளது ? 

    Ethics எனப்படும் நன்னெறிகள் தான் அவை.

    இந்த நன்னெறிகள் பொதுவாக எல்லா மதத்தினரின் பிரதான நூல்களில் காணப்படும். அவைகள் முன்னொரு காலத்தில் எழுதப்பட்டதாலும், இப்போதைய நாகரீகம் அதில் கானப்படாததாலும் இன்றைய சூழலில் வாழ்க்கையை எப்படி மேற்கொள்வது என்பதில் பெரும்பாலோனோருக்கு குழப்பம் (Confusion) ஏற்படுகிறது.

    இந்த நன்னெறிகள் எந்த ஒரு உயிருக்கும் / உடைமைக்கும் / சமுதாயத்திற்கும் ஊறு விளைவிக்காமல் இருக்க வேண்டும். இவைகள் நாட்டிற்க்கு நாடு அவரவர் சூழ்நிலைகளை பொருத்தும் மாறலாம். ஒரு நாட்டின் நன்னெறி வேறு நாட்டுடன் ஒப்புக்கொள்ளாமல் போகலாம். ஆனால் உலகில் எத்தனையோ உயிர்கள் இருந்தாலும் "ஆறறிவு" (அதிகபட்ச அறிவு) கொண்ட மனிதனே உயர்ந்தவன் என்பது போல, நம் பாரத தேசத்தில் சொல்லப்பட்டுள்ள நன்னெறிகளை போல உலகில் வேறெங்கும் காணமுடியாது.

    காலத்தின் கோலமாக நம் தேசத்திலும் இந்த நன்னெறிகள் தேய்ந்து கொண்டே வருகின்றன. ஒருவர் நல்லவராவது / தீயவராவது என்பது பிறப்பிலும், வளரும் சூழ்நிலையிலும் , வளர்ப்பவர் நடத்தையிலும் , மனதில் உருவாகும் எண்ணங்களிலும் உள்ளது. 

    இந்த நன்னெறிகளில் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர் ஜாதகம் என்னும் சான்றிதழ் காண்பிக்கும். உலகில் பிறந்த எல்லோரது ஜாதகமும் மிகவும் நல்லது என்றும், மிகவும் தீயது என்றும் இல்லை. நன்மைகள் / தீமைகள் சில பேருக்கு மிகவும் அதிகமாகவும் / குறைந்தும் காணப்படலாம். 

    ******

    Ethics is two things. First, ethics refers to well-founded standards of right and wrong that prescribe what humans ought to do, usually in terms of rights, obligations, benefits to society, fairness, or specific virtues. Ethics, for example, refers to those standards that impose the reasonable obligations to refrain from rape, stealing, murder, assault, slander, and fraud. Ethical standards also include those that enjoin virtues of honesty, compassion, and loyalty. And, ethical standards include standards relating to rights, such as the right to life, the right to freedom from injury, and the right to privacy. Such standards are adequate standards of ethics because they are supported by consistent and well-founded reasons.


    Secondly, ethics refers to the study and development of one's ethical standards. As mentioned above, feelings, laws, and social norms can deviate from what is ethical. So it is necessary to constantly examine one's standards to ensure that they are reasonable and well-founded. Ethics also means, then, the continuous effort of studying our own moral beliefs and our moral conduct, and striving to ensure that we, and the institutions we help to shape, live up to standards that are reasonable and solidly-based.

    *******




    Principles that when followed, promote values such as trust, good behavior, fairness, and/or kindness.

    There is not one consistent set of standards that all companies follow, but each company has the right to develop the standards that are meaningful for their organization. Ethical standards are not always easily enforceable, as they are frequently vaguely defined and somewhat open to interpretation ("Men and women should be treated equally, " or "Treat the customer with respect and kindness."). Others can be more specific, such as "Do not share the customer's private information with anyone outside of the company."


    ஒருவரது சுய ஜாதகத்தில் குருவானவர் (Jupiter) மிகவும் வலுவுடன் நல்ல இடத்தில் (லக்னத்தில்) தனியாக இருந்தால் நல்லது. சுபருடன் (வளர்பிறை சந்திரன் , புதன், சுக்கிரன் ) இவர்களோடு இருந்தால் நன்னெறிகளில் சிறந்தவர் ஆவார். . இதில் இன்னும் சில விதிமுறைகள் உள்ளன.

    தெரிந்து கொள்வோம்.....


    ***Part***