வீண் டம்பம்
"என்னே
திருவாரூர் பார்ட்டியில கூப்டாக
பொன்னம்மாவரதி பார்ட்டியில கூப்டாக
அவ்வளவு ஏன்?
காரைக்குடி பார்ட்டியில கூட கூப்டாக
அதுக்கெல்லாம் போகாத எங்கிரகம்
இந்த கரக கும்பல்ல மாட்டிகிட்டேன் !"
-இது "கரகாட்டக்காரன்" திரைப்படத்தில் வரும் நகைச்சுவை தொனியில் உள்ள ஒரு வேடிக்கையான வசனம். அதாவது கரகாட்ட குழுவில் தன்னை கவுண்டமணி தரக்குறைவாக எண்ணும் போது கோவை சரளா தன் பெருமையை நிலை நாட்ட தனக்கு வந்த நல்ல சந்தர்ப்பங்களையும் ஆனாலும் தான் இப்போது இருக்கின்ற நிலைமையையும் சொல்லி அதன் பின்னணியில் உள்ள ஒரு காரணத்தை ஒரு வார்த்தையில் சொல்லியிருப்பார்,
அது "கிரகம்" என்பது.
மேற்காணும் காட்சியைக் காண பின்வரும் காணொளி இணைப்பிற்கு செல்லவும்.
https://www.youtube.com/watch?v=f_QgPyoQZM8
இப்படி வாழ்க்கையில் வேடிக்கையான காட்சிகளில் (நேரிலேயோ / திரைப்படங்களிலேயோ) காணும் ஒரு உண்மையை கவனிக்க நான் என்றுமே தவறியதில்லை.
என்னைப்பொறுத்தவரை சில வார்த்தைகளை விளையாட்டாக கூட சொல்லக்கூடாது. அது சொல்பவரின் மனநிலையை காட்டும். திரும்ப திரும்ப ஒரே மாதிரியான வார்த்தைகளை (தற்பெருமையைக் கூறும்) கூறுவதினால் நம்முடைய பெருமை கூடிவிடாது. அதாவது நமக்கு பெருமை கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் நம் கையில் நிச்சயமாக இல்லை என்பேன்.
மேலும் அது போன்ற ஒரு காட்சி அமைப்பு கொண்ட ஒரு பாடலை காணுங்கள் !
இது போன்ற காட்சிகளில் மறைந்துள்ள ஒரு பொருள் என்னவென்றால்
வீண் டம்பம்
என்பது. இப்போது பாடலின் வரிகளை கவனிப்போம்.
ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
சமத்தா இருந்தாக் கொடுப்பேளாம்,
அசடா இருந்தா மறுப்பேளாம்,
ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு
உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு
அசடா இருந்தா மறுப்பேளாம்,
ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு
உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளுங்கிழமையும் போட்டுக்க ஒரு
நகை நட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரிபோட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலிருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு
ஹுக்கும்,
அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா.....
ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
என்னத்த செய்வேள் -
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
என்னத்த செய்வேள் -
ஹாங்
சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -
அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே -
ஆங் பல்ல உடப்பேன்
அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா.....
சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -
அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே -
ஆங் பல்ல உடப்பேன்
அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா.....
மேற்காணும் வரிகளில் சற்று பெரிய வரிகளை நிறைய பேர் வீட்டில் கேட்கலாம். இவைகளெல்லாம் வீண் பேச்சு தான். மேலும் இது போன்ற சலிப்பு பேச்சுகளை பேசுவதால் பயன் ஏதும் விளையப்போவதில்லை. சில பேர் இந்த பேச்சுக்கு பயந்து அன்பளிப்புகளை அள்ளித்தருவார்கள். ( பட்டுப்புடவை, நகை போன்றவை) இவைகள் அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொள்ளும் செயல்களாகும்.
மேலும் இது போன்ற நிகழ்வுகள் "அதீத எதிர்பார்ப்பு"களால் விளைவது. அதாவது "பேராசை" என்று கூட சொல்லலாம்.
கரகாட்டக்காரன் காட்சி கோவை சரளா தான் எப்படியெல்லாம் இதுவரை இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.
எதிர்நீச்சல் காட்சி சௌகார் ஜானகி தான் எப்படியெல்லாம் இனிமேல்
இருக்கலாம் என்று கூறுகிறார்.
ஒருவரது பிறப்பு கோள்களின் அமைப்பு படி,
லக்கினத்தில் ராகு தனியாக அதற்க்கு நேரெதிரில் கேதுவும் தனியாக இருந்து எட்டாம் அதிபதியின் நட்சத்திரத்தின் காலில் நின்று விட்டால். அந்த எட்டாம் அதிபதியும் மறைவு ஸ்தானங்களில் இருந்து விட்டால், சுக்கிரன் நீசம் பெற்று விட்டாலோ / ராகுவின் சாரத்தை பெற்று விட்டாலோ மேற்காணும் நிகழ்சிகள் போல ஒருவரது வீட்டில் நடக்கும் - குறிப்பிட்ட நேரத்தில்.
(மன்னிக்கவும் ...மறுபடியும் தொடர்வேன்)
No comments:
Post a Comment