photo

photo
Venkatesh.A.S

Monday, 21 July 2014

Nandini - (minus) one Kidney (நந்தினி மைனஸ் ஒரு கிட்னி)



வித்தியாசத்தை உணருங்கள் ! 



முதலில் ஒரு கதையை பார்ப்போம் :
அதற்க்கு முன்னர் சில நாட்களுக்கு முன்னர் நெதர்லாந்தில் இருந்து மலேசியா புறப்பட்டு ரஷ்ய நாட்டு எல்லையில் நடந்த கோர விமான விபத்தில் இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
இந்த கட்டுரை அவர்களுக்கு சமர்ப்பணம்.
 *******
ஒரு விமானம் நிறைய பயணிகளுடன் ஒரு இலக்கை நோக்கி புறப்பட்டது. விமானத்திலிருந்த பெரும்பாலான பயணிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அதிலும் முதன் முதலில் பயணத்தை மேற்கொண்டவர் மனதில் மகிழ்ச்சியும் சற்று என்னவென்று புரியாத துயரமும் காணப்பட்டது.
அப்பொழுது விமானத்திலிருந்த ஒலி பெருக்கி (Speaker Box) பேழையில் ஒரு செய்தி சொல்லப்பட்டது. அதாவது இப்பொழுது விமானம் கிட்டத்தட்ட முப்பதாயிரம் (30000) அடி உயரத்தில் பறந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் அது இறங்க வேண்டிய இடத்தில் தரையிறக்கம் செய்யப்படும் என்றும் கனிவான குரலில் தகவல் கூறப்பட்டது. எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சியும் பொலிவும் காணப்பட்டது.
சில மணி நேரங்கள் கடந்தன. அப்பொழுது மீண்டும் அந்த ஒலி பெருக்கி அலறியது. அதாவது இப்பொழுது விமானம் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் சில மணித்துளிகளில் நாம் தரையிறங்கி விடுவோம் என்பதையும் அதே கனிவான குரல் கூறியது. எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் காணப்பட்டது (வழக்கமாக அடிக்கடி பயணம் மேற்கொள்வோரினைத் தவிர்த்து).
மீண்டும் அடுத்த சில நொடிகளில் அதே குரல் அதே தகவலை சொல்லி எல்லாமே சரியாக உள்ளதாகவும் ஆனால் விமானி இருக்கும் அறைக்குள் எதிர்பாராமல் சில தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாகவும் விமானம் இப்போது அவர்கள் வசம் இருப்பதாகவும் சொல்லி பேச்சை துண்டித்துக்கொண்டது.
இப்பொழுது கிட்டத்தட்ட அனைவரது முகத்திலும் பேரதிர்ச்சி !
காரணம் விமானம் கடத்தப்படுவதால் ! உண்மையான காரணம் இனி இந்த விமானம் எங்கே இறக்கப்படும் / எப்பொழுது இறக்கப்படும் / எந்த நிலையில் இறக்கப்படும் என்பதே !

இப்பொழுது ஏன் எல்லோரும் கவலை கொள்ள வேண்டும் ? 

விமானம் முந்தைய உயரத்தை விட தாழ்ந்து பறந்து கொண்டிருக்கிறது. இயந்திரத்தில் எந்த பழுதும் இல்லை. எல்லாவற்றையும் விட தகவல் சொல்லும் அதே கனிவான குரலில் எந்த தடுமாற்றமில்லை.
^
^
^
சரியான காரணம் “சூழ்நிலை வித்தியாசம் என்பதே. என்னதான் மற்ற சூழ்நிலைகள் (விமானத்தின் பறக்கும் உயரம், இயந்திரத்தின் நிலை, தகவல் சொல்லும் குரலின் தொனி) மாறாமல் இருந்தாலும் முக்கியமான சூழ்நிலை (இலக்கு – Destination) மாறியதால்.
இன்னும் சரியாக சொன்னால் மற்ற சூழ்நிலைகள் என்பது தற்காலிகமானது. முக்கியமான சூழ்நிலையான “இலக்கு என்பதே நிலையானது. இந்த சூழ்நிலை வித்தியாசத்தை எல்லோரும் சரியாக புரிந்து கொண்டால் வாழ்கையில் பிரச்சினைகள் மிகவும் குறையும்.
இப்படி நடக்கும் என்று விமானம் புறப்படும் முன்னர் அதில் பயணம் செய்ய போவோருக்கு தெரிந்திருந்தால் எவரேனும் அதில் ஏறி இருப்பார்களா (விமானி உட்பட) ? ஆனால் சில பேர் ஏறி இருப்பார்கள், கண்டிப்பாக. அவர்கள் விமானம் கடத்தப்படுவதை அறிவார்கள். ஏனெனில் அவர்கள் தான் அந்த காரியத்தை செய்யப்போகும் துஷ்டர்கள்.
நாம் நினைக்காமல் விட்டாலும் சில சூழ்நிலைகள் நம் வாழ்க்கைப்பாதையில் குறுக்கிடும் போது இந்த சூழ்நிலை வித்தியாசங்களை எதிர் கொள்ள பழகிட வேண்டும்.
உதாரணமாக இந்த சூழ்நிலையில் நாம் ஒருவர் இருந்தால் என்ன செய்யலாம் ?
முதலில் நம்மூர் சினிமாவில் வருவது போல் கழிவறைக்கு செல்வது போல நடித்து அங்கு ஏதேனும் செய்ய முடியுமா என்று பார்ப்பது. அல்லது வீரம் உள்ளதாக நினைத்துக்கொண்டு சில பேர் துஷ்டர்களை தாக்க முயற்சிப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். முதலில் அவர்கள் கடத்தலின் பின்னணியில் உள்ள கோரிக்கைகள் என்ன என்பதை நன்றாக கவனிக்க வேண்டும். நிச்சயமாக அவர்களுக்கு ஒத்துழைப்பது போல கவனமாக நடிக்க வேண்டும். ஏனெனில் இந்த சூழ்நிலை நம் ஒருவர் சம்மந்தப்பட்டதல்ல என்று நன்றாக உணர வேண்டும். இங்கு ஒருவர் செய்யும் ஒரு தவறு இன்னொருவருக்கோ அல்லது அவருக்கே ஆபத்தாக முடியலாம். இந்த கோரிக்கையில் அரசாங்கம் சம்மந்தப்பட்டிருந்தால் நாம் நிச்சயமாக ஏதும் செய்ய இயலாது. அதனால் நாம் பொறுமை காக்க வேண்டும்.

ஒருவேளை அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால்

 எல்லோரும் ஒரு குறையின்றி வெளியே வந்து விடலாமல்லவா ? 


இப்பொழுது இந்த விமானம் பற்றிய ஒரு வித்தியாசத்தை பார்ப்போம். அதாவது இந்த கதையில் வரும் விமான கடத்தலின் நிலைமை வேறு ஆனால் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட நிஜமான விமான விபத்து வேறு. முன்னது வேண்டுமென்றே நடத்தப்படுவது. பின்னது எதிர்பாராமல் நடந்தது. நடந்ததாக சொல்லப்படுவது. முழுவதுமான விசாரணை முடிந்த பின் தான் உண்மை தெரியும். நிகழ்ச்சி எப்படியோ நடந்தது , நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் பல விலை மதிப்பில்லா உயிர்களை பலி வாங்கி காலம் பழி வாங்குகிறது என்பதே நிதர்சனம். என்னை பொறுத்தவரை இந்த கால கட்டத்தில் வான்வெளி கோள்களின் நிலையில் “துலா ராசி மண்டலத்தில் செவ்வாயும் சனியும் சேர்ந்து காணப்படுகிறது – இன்று இவைகள் 3 : 22 டிகிரி வித்தியாசத்தில் உள்ளன. செவ்வாய் சனியை விட வேகமாக சுழல்வதால் அடுத்த மாதம் இந்த (25) தேதியில் இருவரும் 23 : 23 டிகிரியில் இணையும் போது சற்று கவனமுடன் இருக்க வேண்டும். 
சனீஸ்வரன் கர்மகாரகன், இரும்புக்கு அதிபதி, மேற்கு திசையை பார்ப்பவர். செவ்வாய் சகோதாக காரகன், நெருப்பை பிரதிபலிப்பவர், சனீஸ்வரனுக்கு எதிரானவர். இன்றைய சூழ்நிலையில் உச்ச பலம் பெற்ற சனியுடன் செவ்வாய் சேரும்போது இதுபோன்று இரும்பு, நெருப்பு, மேற்கு திசை, ஆபத்துகள் உருவாவது காலத்தின் கர்மம்.  பிறப்பு ஜாதகத்தில் சனி – செவ்வாய் சேர்க்கை பெற்றவர் அதிக பட்ச கவனம் கொள்ள வேண்டும்.
மேலும் மேற்கண்ட விமான விபத்தில் இறந்த அனைவரது ஜாதகமும் கிட்டதட்ட (ஆயுள் பாகத்தில் மட்டும்) ஒரே மாதிரியாகவே இருக்கும்.
ஏனெனில் 
மரணத்திற்கு நல்லவன், கெட்டவன், படித்தவன், பாமரன், பணக்காரன், ஏழை, வயதானவன், வயது குறைந்தவன், ஆண், பெண், உயர்ந்த குலத்தவன், தாழ்ந்த குலத்தவன் போன்ற வித்தியாசங்களெல்லாம் இல்லை. அது ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டும் பார்க்கும். அது (மரணம்) நெருங்குபவன் ஆயுள் பாகத்தை மட்டுமே பார்க்கும். ஆயுள் பாகமென்பது ஒருவரின் ஆயுள் பிரியும் காலம், இடம், பிரிக்கப்படும் நிலை என்பது.

சரி இப்பொழுது முக்கிய தலைப்புக்கு வருவோம் ! 



ஆம்,  பாரதியின் கருத்து மிக்க பாடலின் பல்லவி இது. இந்த தலைப்பை தாங்கி வெளிவந்த பாலச்சந்தரின் அருமையான காவியம் இது.

சுஹாசினியின் கதா பாத்திரத்தின் பெயர் தான் "நந்தினி". 

உண்மையில் போற்றுதற்குரிய செவிலியர் பணியில் இருக்கும் நந்தினி விதியால் ஒருவனை மணந்து தன் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு பின்னர் அவனையும் துறந்து  எத்தனையோ அவஸ்தையில் வாழ்க்கையை கடக்கும் இந்த நந்தினிக்கு  மீண்டும் விதி வசத்தால் மற்றொரு துணை இவரை நாடி வருகிறது.

பல நிகழ்ச்சிகளுக்குப்பின் இருவரும் திருமணத்தால் இணைந்திட முடிவு செய்திடும் போது காலத்தின் கோலத்தால் முன்னவனுக்கு (முதல் கணவனுக்கு) உடல் நலம் குன்றியதால் தன் சிறுநீரகம் (கிட்னி ) தந்து அவனை காப்பாற்றி அதே சமயத்தில் அவனது தகப்பனாரிடம் (மாமனாரிடம்) ஒரு நிலைமையில் தான் வாங்கியிருந்த ஒரு லட்சம் ரூபாயை அதற்க்கு ஈடாக நேர் கணக்கு செய்வார்.

அதன் பின்னர் இரண்டாமவனை பார்க்கும் போது அவனது கடினமான வார்த்தையான "முதல் கணவன் சொன்னதற்காக ஒரு கிட்னியை தந்த நீ மற்றொரு நாள் மீண்டும் அவன் சொன்னான் என்பதற்காக ஒரு முறை அவனிடம் செல்வாயா ?" என்பதை மனதை உறுதியுடன் வைத்து தாங்குகிறாள். .

பின்னர் அவன் தன் தவறை உணர்ந்து பழைய படி நந்தினியை ஏற்றுகொள்வதாக கூற  அதற்க்கு சுகாசினி சொல்லும் வசனம் தான்
"நந்தினி மைனஸ் ஒரு கிட்னி"  

பின்னர் சராசரி மனிதனாக இருந்த அவனையும் துறந்து தன் பாதை நோக்கி தொடர்கிறாள். 

அதாவது தற்போதைய தன் நிலையை எவ்வளவு தெளிவாக விளக்குகிறாள் பாருங்கள்.

இது தான் இந்தக்கட்டுரையின் உப தலைப்பான "வித்தியாசத்தை உணர்வது"

இந்த கட்டுரையின் பொருள் என்னவென்றால் வாழ்கையில் எத்தனையோ சூழ்நிலை வித்தியாசங்கள் ஏற்பட்டாலும் தன் நிலை மாறவே கூடாது என்பதே. 

நன்றி - வாசித்த அனைவருக்கும். 

Sunday, 13 July 2014

Thiruvaroor Troop Called...(திருவாரூர் பார்ட்டியில கூப்டாக)


வீண் டம்பம்

"என்னே 
திருவாரூர் பார்ட்டியில கூப்டாக 
பொன்னம்மாவரதி பார்ட்டியில கூப்டாக 
அவ்வளவு ஏன்? 
காரைக்குடி பார்ட்டியில கூட கூப்டாக 
அதுக்கெல்லாம் போகாத எங்கிரகம்
இந்த கரக கும்பல்ல மாட்டிகிட்டேன் !"

-இது "கரகாட்டக்காரன்" திரைப்படத்தில் வரும் நகைச்சுவை தொனியில் உள்ள ஒரு  வேடிக்கையான வசனம். அதாவது கரகாட்ட குழுவில் தன்னை கவுண்டமணி தரக்குறைவாக எண்ணும் போது கோவை சரளா தன் பெருமையை  நிலை நாட்ட தனக்கு வந்த நல்ல சந்தர்ப்பங்களையும் ஆனாலும் தான் இப்போது இருக்கின்ற நிலைமையையும் சொல்லி அதன் பின்னணியில் உள்ள ஒரு காரணத்தை ஒரு வார்த்தையில் சொல்லியிருப்பார், 
அது "கிரகம்" என்பது.
மேற்காணும் காட்சியைக் காண பின்வரும் காணொளி இணைப்பிற்கு செல்லவும். 

https://www.youtube.com/watch?v=f_QgPyoQZM8

இப்படி வாழ்க்கையில் வேடிக்கையான காட்சிகளில் (நேரிலேயோ / திரைப்படங்களிலேயோ) காணும் ஒரு உண்மையை கவனிக்க நான் என்றுமே தவறியதில்லை. 
என்னைப்பொறுத்தவரை சில வார்த்தைகளை விளையாட்டாக கூட சொல்லக்கூடாது. அது சொல்பவரின் மனநிலையை காட்டும். திரும்ப திரும்ப ஒரே மாதிரியான வார்த்தைகளை (தற்பெருமையைக் கூறும்) கூறுவதினால் நம்முடைய பெருமை கூடிவிடாது. அதாவது நமக்கு பெருமை கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் நம் கையில் நிச்சயமாக இல்லை என்பேன். 

மேலும் அது போன்ற ஒரு காட்சி அமைப்பு கொண்ட ஒரு பாடலை காணுங்கள் ! 


இது போன்ற காட்சிகளில் மறைந்துள்ள ஒரு பொருள் என்னவென்றால்  

வீண் டம்பம் 

என்பது. இப்போது பாடலின் வரிகளை கவனிப்போம். 

ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
சமத்தா இருந்தாக் கொடுப்பேளாம், 
அசடா இருந்தா மறுப்பேளாம்,
ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?

அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா


அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு

உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு 

என்னத்தைக் கண்டா பட்டு

பட்டு கிட்டு பேரைச்சொல்ல 

பொறந்திருக்கே ஒரு லட்டு

நாளுங்கிழமையும் போட்டுக்க ஒரு 

நகை நட்டுண்டா நேக்கு

எட்டுக்கல்லு பேசரிபோட்டா 

எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலிருந்தா ஆப்பையிலே வரும் 

தெரியாதோடி நோக்கு

எப்போ இருந்தது இப்போ வரதுக்கு 

எதுக்கெடுத்தாலும் சாக்கு 
ஹுக்கும்,            

அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா.....

ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
என்னத்த செய்வேள்
ஹாங் 
சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -

அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே - 

ஆங் பல்ல உடப்பேன் 
அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா.....

மேற்காணும் வரிகளில் சற்று பெரிய வரிகளை நிறைய பேர் வீட்டில் கேட்கலாம். இவைகளெல்லாம் வீண் பேச்சு தான். மேலும் இது போன்ற சலிப்பு பேச்சுகளை பேசுவதால் பயன் ஏதும் விளையப்போவதில்லை. சில பேர் இந்த பேச்சுக்கு பயந்து அன்பளிப்புகளை அள்ளித்தருவார்கள். ( பட்டுப்புடவை, நகை போன்றவை)  இவைகள் அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொள்ளும் செயல்களாகும்.  

மேலும் இது போன்ற நிகழ்வுகள் "அதீத எதிர்பார்ப்பு"களால் விளைவது. அதாவது "பேராசை" என்று கூட சொல்லலாம். 

கரகாட்டக்காரன் காட்சி கோவை சரளா தான் எப்படியெல்லாம் இதுவரை இருந்திருக்கலாம் என்று கூறுகிறார். 

எதிர்நீச்சல் காட்சி சௌகார் ஜானகி தான் எப்படியெல்லாம் இனிமேல் 
இருக்கலாம் என்று கூறுகிறார். 

ஒருவரது பிறப்பு கோள்களின் அமைப்பு படி, 
லக்கினத்தில் ராகு தனியாக அதற்க்கு நேரெதிரில் கேதுவும் தனியாக இருந்து எட்டாம் அதிபதியின் நட்சத்திரத்தின் காலில் நின்று விட்டால். அந்த எட்டாம் அதிபதியும் மறைவு ஸ்தானங்களில் இருந்து விட்டால், சுக்கிரன் நீசம் பெற்று விட்டாலோ / ராகுவின் சாரத்தை பெற்று விட்டாலோ மேற்காணும் நிகழ்சிகள் போல ஒருவரது வீட்டில் நடக்கும் - குறிப்பிட்ட நேரத்தில். 

(மன்னிக்கவும் ...மறுபடியும் தொடர்வேன்)