photo

photo
Venkatesh.A.S

Tuesday, 10 June 2014

Who am I ? நான் யார் ?


குருபெயர்ச்சியை முன்னிட்டு 
ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கரருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் , இவன் ரொம்ப நல்லவன் ! 

மேல்கண்ட வரிகள்,  நகைச்சுவைக்காக வடிவேலு ஒரு திரைப்படத்தில் தன்னைத்தானே கூறிக்கொள்வார். 

பின்வரும் காணொளி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஹிந்து தர்மம் தழைக்கவும் மக்களை நல்வழி படுத்தவும் நம் பாரத பூமியில் அவதரித்து குறைந்த ஆயுட்காலமே வாழ்ந்தாலும் நிறைந்த வாழ்க்கை தத்துவங்களை நமக்கு அளித்த ஜகத்துக்கே குருவாக விளங்கிய

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் 

தான் சௌதர்ய லஹரியை ( அம்பிகையின் சௌந்தர்யங்களை அழகாக எடுத்துரைக்கும்) இயற்றிய போது அமைந்ததாக இடம் பெற்ற காட்சியை நமக்கு தெளிவாக காண்பிக்கும். 

அந்த பரமேஸ்வரனின் அம்சமாக அவதாரம் செய்த சங்கரரின் வாழ்க்கையில் கூட எவ்வளவோ சோதனைகள், வேதனைகள் ஏற்பட்டன. இவைகள் எல்லாவற்றையும் தாங்கி எதிர்கொண்டு தன்னை உலகுக்கு அடையாளம் காண்பித்தார். 

என்னதான் தனக்கு ஞானம் இருந்தாலும், ஒரு இடத்தில் (காசியில்) கால பைரவராக வந்து தன்னுடைய அஞ்ஞானத்தை தனக்கே உணர்த்தி தெளிந்த ஞானத்தை பெற்று  "மனிஷா பஞ்சகம்" என்னும் ஆழமான பொருள் கொண்ட அருமையான 5 ஸ்லோகங்களை கொண்ட பாட்டினை அளித்தார். 

இந்நிலையில் பின்வரும் பாடலின் இறுதியில் தான் யார் என்பதை நமக்கு உணர்த்துகிறார். அது நமக்கும் கூட பொருந்தும். 

உண்மையில் 

நான் யார் ? 



மேற்காணும் கேள்விக்கு நிறைய பேர் தங்கள் பெயரை சொல்வார்கள் , சில பேர் இன்னாரது மகன் / மகள் என்று சொல்வார்கள். சில பேர் தங்கள் குலம், கோத்திரம் இவைகளை சேர்த்து சொல்வார்கள். மொத்தத்தில் தங்களின் அடையாளத்திற்கான (Identity) ஆதாரத்தை பல விதங்களில் தருவார்கள்.

சில பேர் குணங்களால் தங்களை அடையாளம் காட்டி கொள்வார்கள். உதாரணமாக, தன்னை 
நல்லவன் என்று மெச்சிக்கொள்வார்கள்
                                               வீரன் என  கூறிக்கொள்வார்கள்.
மேதை என புகழ்ந்து கொள்வார்கள். 
கலைஞன் என்று பெருமிதம் கொள்வார்கள். 
ஜாம்பவான் என்று மார் தட்டிக்கொள்வார்கள். 
யோக்கியன் என்றும் பெருமை கொள்வார்கள். 

இதே குணங்களால் ஒருவர் இன்னொருவரை வேறு விதமாக (எதிர்பதமாக) அடையாளம் காட்டுவார்கள் உதாரணமாக, 
கோழை என இகழ்வார்கள்.
மடையன் என்று ஏசுவார்கள்.
பாமரன் என்று பரிகசிப்பார்கள். 
அயோக்கியன் என்றும் விமர்சிப்பார்கள். 

இவையெல்லாம் உண்மையாகுமா ? 
ஒருவேளை உண்மையாகும், ஆனால் நிரந்தரமாகாது. 
உலகில் எதுவும் என்றும் நிரந்தரமாகாது. 

எப்படியெனில்

தன்னை நல்லவன் என்று நினைத்துக்கொண்டால்
வீண் பெருமிதம் உண்டாகும், அதனால் அழிவும் உண்டாகும்.

தன்னை வீரன் என்று நினைத்துக்கொண்டால் 
இறுமாப்பு உண்டாகும், அதனால் அழிவும் உண்டாகும்.

தன்னை கோழை என்று நினைத்துக்கொண்டால் 
தாழ்வு மனப்பான்மை உண்டாகும், அதனால் அழிவும் உண்டாகும்.

தன்னை மேதை  என்று நினைத்துக்கொண்டால் 
தலைக்கனம்  உண்டாகும், அதனால் அழிவும் உண்டாகும்.

தன்னை யோக்கியன்  என்று நினைத்துக்கொண்டால் 
திமிர்  உண்டாகும், அதனால் அழிவும் உண்டாகும்.

தன்னை ஜாம்பவான்  என்று நினைத்துக்கொண்டால் 
பிடிவாதம்  உண்டாகும், அதனால் அழிவும் உண்டாகும்.

அப்படியானால் நான் என்பது என்ன ?

உடலா ? மனமா (ஆத்மா) ? 

மேலே காணும் காணொளியில் இதற்கான விடை கிடைத்திருக்கும். 

உண்மையில் உடலானது பௌதீக பொருட்களால் ஆனது, அது பஞ்ச பூதம் எனும் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் எனவாகும்.

அதனால் நான் இவ் உடலல்ல,
நான் நெருப்பல்ல,
நான் நீரல்ல,
நான் நிலமல்ல,
நான் காற்றல்ல,
நான் ஆகாயமல்ல. 

நான் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் - சிவம் என்பதே ! 


நன்றி :
https://www.youtube.com/watch?v=xaXrWgYH6zE&feature=youtube_gdata_player

No comments:

Post a Comment