photo

photo
Venkatesh.A.S

Monday, 31 March 2014

வகுப்பறை: Astrology: இன்றைய திருமணச் சந்தையில் இளம் பெண்களின...

வகுப்பறை: Astrology: இன்றைய திருமணச் சந்தையில் இளம் பெண்களின...:   Astrology: இன்றைய திருமணச் சந்தையில் இளம் பெண்களின் நிலை! கவியரசர் கண்ணதாசன் 1963ஆம் ஆண்டில் வெளிவந்த புரட்சித்தலைவரின் ஆனந்த ஜோதி தி...

Saturday, 15 March 2014

Astrologer MuruguBalamurugan: பெண்களின் ஜாதகமும் தோஷங்களும்

Astrologer MuruguBalamurugan: பெண்களின் ஜாதகமும் தோஷங்களும்: பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் ஜாதக ரீதியாக எல்லாப் பொருத்தங்களையும் நன்றாக ஆராய்ந்த...

Friday, 14 March 2014

வகுப்பறை: வாழ்க்கை எப்போது மோசமாகும்?

வகுப்பறை: வாழ்க்கை எப்போது மோசமாகும்?: நம்மை நாம் இழக்கும்போது வாழ்க்கை மோசமாகிவிடும். சூழ்நிலைகளுக்கு நாம் உணர்ச்சிவசப்படும்போது வாழ்க்கை துன்பமாகிவிடும் சூழ்நிலைகளில் நம்மை...

Tuesday, 11 March 2014

The Prison (சிறைச்சாலை)


பாவப்பொறி 

The Trap of Sins


வாழ்க்கை ஒரு சிறைச்சாலை! 

இதில் அனுபவம் என்பது தண்டனைக்காலம் ! 

தெளிவு என்பது விடுதலைக்காலம் ! 

- மேலே காணப்படும் வாக்கியம் நம்மில் எத்தனை பேர் ஒப்புக்கொள்வார்களோ தெரியாது. 

இதில் பரிதாபம் என்னவென்றால் "சிறைச்சாலைக்குள் சிறைச்சாலை" போல எத்தனை பேர் , சிறைப்பட்ட வாழ்க்கையில் மேலும் மேலும் சிறைப்படுகிரார்கள் !

அதாவது சிலர் சூழ்நிலையால் சிறைப்படுகிறார்கள்

சிலர் ஆசையால்  சிறைப்படுகிறார்கள்.

சிலர் ஆணவத்தால் சிறைப்படுகிறார்கள்.

சிலர் அறியாமையினால் சிறைப்படுகிறார்கள்.

மொத்தத்தில் பாவப்பொறி யினால் சிறைப்படுகிரார்கள். 

இந்த பாவத்தில் பாவமாக எனப்படுவது "பஞ்சமாபாதகம்" - 

The five heinous sins of killing,lying, stealing, drinking and abusing one'sguru; கொலை, பொய், களவு, மது மாமிசம் , பிறன்மனை நோக்குதல் என்ற ஐவகைக் கொடுஞ்செயல். 

அதாவது தண்டனை ஏற்க வந்த இடத்தில் மேலும் குற்றங்கள் (மேல்கண்ட ) புரிந்து தண்டனைகளை மேலும் கடுமையாக்கிக் கொள்பவர் எத்தனை பேர் ? 

இவற்றிர்க்கெல்லாம் காரணம் என்ன ?

"கர்மா" ஒன்றே ! 

அது சஞ்சித கர்மம் எனப்படும் ஏற்கனவே செய்த பாவங்கள்.

ப்ராப்த கர்மம் எனப்படும் தற்போது செய்யும் பாவங்கள்.

ஆகாம்ய கர்மம் எனப்படும் இனி செய்யப்போகும் பாவங்கள். 

கிறிஸ்தவர்களின் வேதத்தில் "பாவத்தின் சம்பளம் மரணம்" என கூறப்பட்டுள்ளது ! 

சாத்தானுக்கு இடம் கொடாதீர்கள்...

விசுவாசத்தில் பெரிய தலைவர்கள் சிலர், தேவனால் மெய்யாகவே பாவிக்கப்பட்டு, அவருடைய வல்லமையுள்ள நாமத்தில் பலத்த காரியங்களைச் செய்த பின்னரும் எப்படி விபச்சாரத்தில் விழுந்திருப்பார்களென நான் வியந்ததுண்டு. இந்தப் பெரிய தலைவர்கள் குறிப்பாக இந்தப் பாவத்தில் விழுந்தது, சடுதியாக நிகழ்ந்த காரியம் போல் தெரிந்தாலும், அது அப்படியல்ல. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சில இடங்களில் விட்டுக்கொடுப்புக்கு அனுமதித்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். நான் இதை அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.

ஏனெனில் இப்படியான காரியங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதை என்னுடைய வாழ்க்கையில் கண்டுள்ளேன். அது ஒரு சிறிய காரியம் என்று எண்ணிக்கொண்டு பவுல் அறிவுறுத்தியுள்ள பிரகாரம் நாம் விலகியோடுவதில்லை(2 தீமோ. 2 :22). ஆனால், சாத்தான் இந்தச் சின்ன காரியங்களில் மிகவும் உவகையடைந்து, மிகவும் மோசமானதொன்று நடக்கிறதை நாம் உணராதபடிக்கு அதனை வளர விடுகிறான். இது இப்படி நடக்கக்கூடும் என்று மற்றவர்கள் பிரமிக்கத்தக்க விதமாக குறிப்பிட்ட பாரதூரமான பாவம் நம் வாழ்வில் நடைபெறும் நிலைக்கு மிக விரைவில் நாமே வந்து விடுகிறோம். 

பிசாசுக்கு இடங்கொடாமல் இருங்கள் (எபே. 4 :27) என்று பவுல் எச்சரிக்கை செய்கிறார். நாம் இடம் கொடுத்தால், அவன் எமது வாழ்க்கைக்குள் நுழைந்து, சிறிய காரியங்களை பயன்படுத்தி, அசுத்தத்தை வளரவிட்டு எம்மை அளித்துப்போடுவான். இச் சிறு காரியங்கள், நாம் ஆலோசனை சொல்பவருடனோ அல்லது உதவி செய்பவருடனோ உள்ள உறவு, அதிக நெருக்கம் அடைவதாக இருக்கலாம். இணையதளத்தின் எல்லையிலுள்ள தள பக்கங்களுக்குப் போவதாயுமிருக்கலாம். இது, புத்தகங்களிலோ தொலைக்காட்சியிலோ குறிப்பாக பார்க்கக்கூடாத பகுதிகளை நோக்கி நமது கண்களை செல்ல அனுமதிப்பதாகவும் இருக்கலாம். பலனற்ற சினிமாப் படங்களை பார்ப்பதாகவோ, புத்தகங்களை வாசிப்பதாகவோ இருக்கலாம். இவை சாத்தான் நம்மைப் பொறியில் பிடிக்க ஆரம்பிக்கும் திட்டங்களாக அமையலாம். பவுலின் அறிவுரையோ, இப்படியான காரியங்களுடன் சமரசமாக நடவாமல் 
(விட்டுக்கொடுப்புக்கு இடங்கொடாமல்) பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோட வேண்டும் என்பதாகும்.
(அஜித் பெர்ணான்டோ)
நன்றி : http://www.ceylonchristian.com/2012/08/blog-post_23.html

இந்த பாவங்களின் இருப்பிடங்களை ஒருவர் வாழ்க்கையில் எப்படி அறிவது ? 

ஒருவர் ஜாதகங்களில் மறைவு ஸ்தானங்கள் எனப்படும் 6, 8 , 12 ஆம் இடங்கள்

 மிகவும் பலம் பெற்று விட்டால் பஞ்சமாபாதகத்திற்க்கு ஒருபோதும் 

அஞ்சவே 

மாட்டார்கள். அதிலும் கடைசி ஸ்தானமான 12 இல் தீய கிரகங்கள் , தீய 

கிரகங்களின் நட்சத்திரத்தில் நிற்கும் சுப கிரகங்கள் போன்ற அமைப்பினால் 

அவர்களுக்கு வாழ்க்கை மேலும் மேலும் சிறை போன்ற ஒரு உணர்வு 

ஏற்படும். அதிலும் 12 ஆம் இடத்திற்கும் இரு புறமும் தீய கிரகங்களும் இருந்து 

விட்டால் , பன்னிரெண்டில் அமர்ந்த கிரகத்தின் தசையில் அதனோடு 

சம்மந்தப்பட்ட புக்தியில் உண்மையில் சிறைவாசம் ஏற்படும். கோள் 

சாரத்தில் 

கோள்களின் நிலைமை மோசமானால் வாழ்க்கையும் சேர்ந்து மோசமாகும் 

அதுவும்  ஏன் 

ஏற்படும் , எப்படி ஏற்படும், எப்போது ஏற்படும், எதற்கு ஏற்படும் , எவரால் 

ஏற்படும் என்பதனையும் கை தேர்ந்த நிபுணரால் நிச்சயம் அறிய முடியும். 

பாவங்களை அறிவோம் ! தெளிவு பெறுவோம் !